'Israel to be lost for another 2,000 years': Israeli Ret. Gen. says
ByAl Mayadeen English
Source: Israeli Media
இஸ்ரேலிய இராணுவ விவகார நிபுணரும் மேஜர் ஜெனரலுமான (ஓய்வு) யிட்சாக் பிரிக், நெதன்யாகு அரசாங்கம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை மீண்டும் வற்புறுத்தி வருவதாகவும், அது அதன் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
காஸா மீது நடந்து
கொண்டிருக்கும் போருக்கு இடையே, இஸ்ரேலிய சமூகத்திற்குள்ளேயே இருந்து வரும் குரல்கள்
ஒரு மோசமான நிலைமை பற்றி எச்சரித்துள்ளன, அவை மோதல்கள் தொடர்வதற்கு எதிரான குரல்களாகும், தொடர் மோதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் அஸ்திவாரங்களை அரிப்பிற்கு பங்களிப்பு
செய்கின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
விமர்சகர்கள் மற்றும்
முக்கிய இஸ்ரேலிய குரல்கள், அரசாங்கமும் இராணுவமும் தங்கள் சொந்த அரசியல் மற்றும்
இராணுவ நலன்களுக்காக மோதலை நீட்டிப்பதற்காக பொய்களை அள்ளி வீசுவதாக குற்றம்
சாட்டியுள்ளனர். இராணுவ சாதனைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய வாக்குறுதிகள் பற்றி
பிரச்சாரம் செய்யப்படும் கதையாடல்கள், நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பதற்கு பதிலாக காலத்தை பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பனித்திரை என்று
அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
"அவர்கள் [அரசாங்கமும்
இராணுவமும்] தங்கள் அரசியல் மற்றும் இராணுவ நீட்சிக்கான நேரத்தைப் பெறுவதற்காகவும், முடிந்தவரை தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி வழியைத் தேடுவதற்காகவும்
ஒவ்வொரு அரசியல் மற்றும் இராணுவ மட்டத்திலும் பொய்களை பரப்புகிறார்கள்; இது ஒரு அப்பட்டமான பொய் என்பதை பெரும்பான்மையான மக்கள்
அறிந்துவைத்துள்ளனர்" என்று இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் (ஓய்வு) யிட்சாக் பிரிக் மாரிவ்
(Maariv) இஸ்ரேலிய
செய்தித்தாளில் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
மோதலைத் தொடர்வதன் விளைவுகள் உடனடி இராணுவ இலக்குகளுக்கும் அப்பால்
விரிவடைகின்றன என்று பிரிக் வாதிடுகிறார். பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இஸ்ரேலிய சமூகத்தின்
கட்டமைப்பு நொறுங்கி
வருவதால், சமூக
சிதைவு குறித்து அவர் எச்சரித்தார்.
"நாம் உணர்ச்சியற்றவர்களாக, அலட்சியமானவர்களாக, அக்கறையற்றவர்களாக, இயந்திரங்களைப் போல செயல்படுபவர்களாக மாறிவிட்டோம்" என்று இஸ்ரேலிய இராணுவ விவகார நிபுணர் வலியுறுத்தினார். "இப்போது காஸா பகுதியில் சண்டையை நிறுத்துவதன் மூலம் மட்டுமே அரசின் வீழ்ச்சியைத் தடுக்க முடியும்."
மேலும், ஒரு
மூலோபாய மறுமதிப்பீட்டிற்கு அழைப்பு விடுத்த அவர், இஸ்ரேலிய தலைவர்கள் குறுகிய அரசியல் நிகழ்ச்சி
நிரல்களுக்கு பதிலாக தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார், அதே
நேரத்தில் பொருளாதார ஸ்திரமின்மை, சுருங்கி வரும் சர்வதேச உறவுகள் மற்றும் நீடித்த மோதலால் அதிகரித்துள்ள
சமூகப் பிளவுகள் போன்ற அடித்தளத்தில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.
"நாம் ஓய்வு எடுக்க வேண்டும், கடத்தப்பட்டவர்களை
திருப்பி அனுப்ப வேண்டும், இந்த புவியியல் இடத்தில் நமது உயிர்பிழைப்புக்கு ஒரு
உண்மையான உயிர்வாழ்வியல் அச்சுறுத்தலாக இருக்கும் பெரியளவிலான பிராந்திய போருக்கு
இராணுவத்தை தயார் செய்ய வேண்டும், குறிக்கோள்
அற்ற நிலையில் தொடரும் காஸா போர், அரசை
மேலும் சிதைப்பதற்கான பாதையாகும்." என்று பிரிக் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
"காஸா பகுதியில் இதுவரை
நாம் அடைந்த இராணுவ சாதனைகள் எதுவும் கிடையாது. காஸாவில் நாம் எவ்வளவு அதிகமாக
சண்டையிடுகிறோமோ, அவ்வளவு ஆழமாக நாம் சேற்றில் மூழ்கிவிடுவோம்," என்று அவர் மேலும் கூறினார். "ரஃபாவில் நான்கு
பட்டாலியன்களை அழித்தோம் என்பதும், "ஹமாஸை முற்றிலுமாக பலவீனப்படுத்தினோம்"
என்பதும் இஸ்ரேலின் போர்களின் வரலாற்றில் மிகப்பெரிய பொய்யாகும், இந்த பொய்யை அவர்கள் [அரசாங்கமும் இராணுவமும்] எங்களுக்கு விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்."
"நாம் இப்போது படுபாதாளத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம், நமது தலைவர்கள் பரப்பி வரும் போலி செய்திகளை நாம்
தொடர்ந்து நம்பினால், அது மீட்சிக்கான வழியாக இருக்கப்போவதில்லை, மேலும் இன்னும் 2,000
ஆண்டுகளுக்கு நாம் பிராந்தியத்தை இழக்க நேரிடும்" என்று பிரிக்
வலியுறுத்தினார்.
"[பிரதம மந்திரி] பீபி [நெத்தன்யாகு], காண்ட்ஸ் (Gantz) மற்றும் ஹெர்ஜோக் ஹலேவி (Herzog Halevi) ஆகியோரின் ஒரு பொறுப்பற்ற முடிவு ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பற்றவைக்கும். அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலை அழிவின் விளிம்பிற்குத் தள்ளிய பகுத்தறிவற்ற மக்களின் கட்டுப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம், மேலும் இஸ்ரேலின் மூன்றாவது அழிவை ஏற்படுத்தக்கூடும். இந்த குழு இஸ்ரேலிய குடிமக்களின் இழப்பில் நெருப்புடன் விளையாடுகிறது."
தோற்கும்
போர்
ஜேம்ஸ் எம். டோர்சி(James M. Dorsey)யின் கூற்றுப்படி, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் எண்ணற்ற போராட்டங்கள் இரண்டு
வகையாகும்: பாரிய அளவில் ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் அவரது அரசாங்கத்தைத்
தக்கவைத்துக் கொள்வது மற்றும் பொதுமக்களின் கருத்துக்கமைய அவர் காஸா தரையில்
ஏற்கனவே இழந்த போரை தொடர்வது, அதற்கான காரணமாக இருக்கலாம்.
யூரேசியா ரிவியூ(in EurasiaReview)வில் பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமையை டோர்சி(Dorsey)
பகுப்பாய்வு செய்கிறார், அமெரிக்கா வாக்கெடுப்பில் இருந்து விலகியதன் மூலம் காஸாவில்
உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலை
அனுமதித்ததானது, 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சமீபத்தில் சந்தித்த அதன்
மிகப்பெரிய இராஜதந்திர அவமானமாகும் என்று விபரித்தார்.
முன்னதாக இதேபோன்ற மூன்று
தீர்மானங்களை வீட்டோ தடுப்பதிகாரம் மூலம் தடுத்திருந்த போதிலும், அக்டோபர் 7 க்குப் பின்னர் முதல் தடவையாக வாஷிங்டன் காஸா பகுதியில் உடனடி
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க சபையை அனுமதித்தது.
இஸ்ரேலிய வெளியுறவு
அமைச்சகத்தின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் அலோன் லீல் (Alon Liel), ஐரோப்பிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள்
போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததானது இஸ்ரேலுக்கு விழுந்த ஒரு
"கடுமையான அடி" என்று தனது உணர்வை வெளிப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து, நெத்தனியாகு வாஷிங்டனுக்கான இஸ்ரேலிய பிரதிநிதிகள் குழுவின் பயணத்தை இரத்து
செய்தார், ஹமாஸுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்காகவே அவ்வாறு செய்ததாகக் கூறினார்.
"தூதுக்குழுவை அனுப்புவதில்லை என்ற எனது முடிவு ஹமாஸுக்கு ஒரு செய்தியாக
இருந்தது.
இஸ்ரேலுக்கான முன்னாள்
அமெரிக்க தூதரும் அமெரிக்க மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தையாளருமான
மார்ட்டின் இண்டிக் Martin Indyk குறிப்பிடுகையில், நெத்தனியாகுவின்
வீடு தீப்பற்றி எரிகிறது, அவர் அமெரிக்காவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
என்று நெத்தனியாகுவுக்கு உணர்த்துவதற்காகவே அமெரிக்கா அதன் வீட்டோ அதிகாரத்தை
பயன்படுத்தாது விட்டது என்பதில் "எந்த சந்தேகமும்" இல்லை என்றார்.
மேற்குக் கரையில் சமீபத்திய
மோதல்கள் மற்றும் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களால் காஸாவில் தொடர்ந்து வளர்ந்து வரும்
போர்கள் குறித்தும் டோர்சி வெளிச்சம் போட்டுக் காட்டுகையில், குண்டுவீச்சு
இன்று முடிவுக்கு வந்தாலும் கூட "இஸ்ரேல்" இரு பகுதிகளிலும் ஒரு
கிளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று குறிப்பிடுகிறார்.
ஹமாஸை தோற்கடிக்க இயலாமை, "காஸாவில்
சட்டம் ஒழுங்கை பராமரிக்க இஸ்ரேலின் இயலாமை அல்லது விருப்பமின்மை", UNRWA ஐ அதன் அரசியல் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் மற்றும்
"தடையற்ற மனிதாபிமான பொருட்கள் பிராந்தியத்திற்குள் நுழைவதை அனுமதிக்க
மறுப்பது" போன்றன காரணமாகும் என்று ஆசிரியர் வாதிடுகிறார்.
இது, "ஹமாஸின் நெகிழ்திறன்" மற்றும் இஸ்ரேலிய படையினர் பின்வாங்கிய
பகுதிகளுக்கு அவர்கள் திரும்புவதற்கான திறனை வலுப்படுத்துகிறது என்று அவர்
நம்புவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
No comments:
Post a Comment