Wednesday, December 30, 2020

COVID-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்து ஈரான் வியக்கத்தக்க சாதனை

Iran's amazing achievement in finding vaccine for COVID-19

ஈரான் அதன் தடுப்பூசியின் மனித பரிசோதனையைத் தொடங்குகிறது. இஸ்லாமிய குடியரசில் உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் முதல் கட்டத்தை ஈரான் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது, தொற்றுநோய்க்கான மருத்துவ கருவிகளை அணுகுவதையே தடுத்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தடைக்கு மத்தியில் ஈரான் இந்த சாதனையை எட்டியுள்ளது, வியக்கத்தக்கது.

"ஈரானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசி மூன்று நபர்களுக்கு செலுத்துவதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது".


கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் பாதிக்கப்பட்ட 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட 55,000 உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளிலிருந்து உணவு மற்றும் மருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சர்வதேச வங்கிகள் ஈரான் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனைகளை மறுக்கின்றன.

ஜனாதிபதி ஹசன் ரூஹானி சனிக்கிழமை, அமெரிக்க வங்கிகள் மூலம் தெஹ்ரான் மருந்துகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வாஷிங்டன் கோரியதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பணத்தை அமெரிக்காகைப்பற்றும் என்று அஞ்சுவதாகவும் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை வெளியீட்டில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சுகாதார அமைச்சர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பான ஈரானிய துணைத் தலைவர் முன்னிலையில் ஊசி போடுவதைக் காட்டும் படங்களை IRIB  ஒளிபரப்பியது.

அரசுக்கு சொந்தமான மருந்து குழுமத்தின் ஒரு பகுதியான ஷிஃபா பார்மட் தயாரித்த இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த மூவரும் EIKO கூட்டு நிறுவனத்தின் தலைவரின் மகள் உட்பட மூன்று தன்னார்வலர்களான இரண்டு உயர் அதிகாரிகள் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பரக்கத் மருந்துக் குழுவின் தலைவரின் மகள் தய்யிபா மொக்பர் "விஞ்ஞான செயல்முறையில் நாடு சரியான வழியில் முன்னேறியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கூறினார். "இதன் முடிவு எங்கள் மக்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார்.



கோவிரன் (COVIRAN) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, போலியோ நோய்த்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரசாயனங்களால் பலவீனப்படுத்தப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஒரு கொரோனா வைரஸால் இது தயாரிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி இரண்டு வார இடைவெளியில் இரண்டு அளவுகளில் "56 தன்னார்வலர்களுக்கு" வழங்கப்படும் என்று இந்த தடுப்பூசியை உருவாக்கும் நிறுவனத்தின் பொறுப்புவாய்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி ஐரிப் நியூஸ் தெரிவித்தது. இரண்டாவது ஊசி ஏற்றப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று அது கூறியுள்ளது.

"அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ஈரானில் 1.5 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பரக்கத் மருந்துக் குழுவின் தலைவர் முஹம்மது மொக்பர் கூறினார்.

நாட்டின் ராசி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட மற்றொரு ஈரானிய தடுப்பூசி, "மிக விரைவில் எதிர்காலத்தில் மனித சோதனைகளைத் தொடங்க" அங்கீகாரத்தைப் பெறும் "என்று சுகாதார அமைச்சர் சயீத் நமகி கூறினார்.

பிப்ரவரியில் மனித தன்னார்வலர்களில் பரிசோதனைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது தடுப்பூசியை தயாரிக்க ஈரான் ஒரு "வெளிநாட்டு நாடு" உடன் ஒத்துழைக்கிறது என்று ரூஹானி கூறியுள்ளார்.

COVID-19 க்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கும் எட்டு தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) வின் அங்கீகாரத்துக்காக உலகளவில் முன்வைக்கப்பட்டுள்ள 48 நம்பிக்கைக்குரிய வேட்பாளர் தடுப்பூசிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று தெஹ்ரான் கடந்த மாதம் கூறியது.

"உலகில் (வேறு இடங்களில்) உற்பத்தி செய்யப்படும் பல தடுப்பூசிகளை விட உள்நாட்டு தடுப்பூசி (COVID-19 க்கு) சிறந்தது என்பதை நாங்கள் எதிர்காலத்தில் நிரூபிப்போம்" என்று சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமகி ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


தடுப்பூசி உற்பத்தியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அனுபவமுள்ளது

தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட, சுகாதார அமைச்சர், ஈரானில் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு ஊசி போடப்படுவது இதுவே முதல் முறை என்று நினைத்துவிடாதீர்கள், நாங்கள் 1920 இல் தடுப்பூசி தயாரித்துள்ளோம்; ஆசியாவில் முதன்முதலில் தடுப்பூசிகளைத் தயாரித்தவர்களாக நாங்கள் இருந்தோம், உலகின் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று கூறினார்.


இமாம் கோமெய்னியின் ஆணையை நிறைவேற்றுவதற்கான தலைமையகத்தின் தலைவரான முகமது மொக்பர், அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு மேலதிகமாக, மேலும் ஆறு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. "அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மாதத்திற்கு 1.5 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்," என்றார்.

இதற்கிடையில், இந்த தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் வலியுறுத்தினார். "தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முடிவு செய்தால், எப்போது வேண்டுமானாலும் தேவையான சர்வதேச சான்றிதழ்களைப் பெறுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.tehrantimes.com/news/456338/Iran-tests-first-homegrown-coronavirus-vaccine

 

 

Thursday, December 24, 2020

ஈரானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

 Christmas in Iran

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகையாகும்.

ஈரானில் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்றாகும். அவர்களின் மத விதிகளின்படி தமது வாழ்க்கையையே அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.  கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் ஆர்மீனிய மரபுவழி ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பின்பற்றும் ஆர்மீனியர்கள் அல்லது கிழக்கின் அசிரிய தேவாலயத்தைப் பின்பற்றும் அசீரியர்கள். ஆவர் .ஆர்மீனியர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள், அவர்கள் எபிபானியையும் (Epiphany), மற்ற கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இருப்பினும், இந்த பண்டிகை நிகழ்வின் அரவணைப்பும், அழகும் ஆண்டின் கடைசி மாதத்தில் குளிர்காலத்தின் உறையும் குளிரையும் பொருட்படுத்தாது அடுத்த மாதம் ஜனவரி 6 ஆம் திகதி வரை அனைவரையும் ஈர்த்துவிடும்.

இத்தினத்தை குறிக்குமுகமாக கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மிகவும் உற்சாகமாக கழிப்பர். கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வர்.

கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் பச்சை, பொன் மற்றும் சிவப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் எங்கும் காணலாம். தெருக்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதே நேரத்தில், பொதுவாகவே ஈரானியர்கள் இத்தகைய பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஈரானின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 1% க்கும் குறைவானவர்கள் என்றாலும், மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பு ரீதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முஸ்லிம்களுடன் ஒருபோதும் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவர்களது மதத்தைப் பின்பற்ற பூரண உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பல கிறிஸ்த்தவ தேவாலயங்கள் அரச செலவில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய கிறிஸ்தவர்கள் ஆர்மீனியர்களும் அசீரியர்களும் ஆவர். அவர்களின் சனத்தொகை 5 இலட்சத்துக்கு சற்று அதிகம். ஆர்மீனியர்கள் மற்றும் அசீரியர்களின் வழித்தோன்றல்கள். இவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பறந்து வாழ்ந்தாலும் கணிசமானோர் தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபாஹான் போன்ற நகரங்களின் சுற்றுப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

மத்திய கிழக்கில் ஈரான் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது, ஈரானிய மக்கள் கிறிஸ்தவர்களையும் அவர்களின் மதத்தையும் மிகவும் மதித்து கண்ணியப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் நண்பர்களையும் அயலவர்களையும் மகிழ்விப்பதில் அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தெஹ்ரானின் வீதிகள் பலவும் அலங்கரித்து காணப்படும்.

ஈரானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பிரமாண்டமான ஹோட்டல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது என்று நினைக்க வேண்டாம். தலைநகரம் முழுவதும் கடைகளின் சிறிய மற்றும் பெரிய அளவிலான அலங்கார காட்சிப் பெட்டிகளுக்குப் பின்னால் உள்ள வார்ப்பு விளக்குகளால் நீங்கள் மயக்கப்படுவீர்கள். அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அவற்றின் சிவப்பு மற்றும் பச்சை ரிப்பன்களைக் கொண்டு சிறிய பொன் நிற பந்துகள் உங்கள் கண்களில் மின்னும். மிகவும் பிரபலமான ஷாப்பிங் மையங்களில், குறிப்பாக தெஹ்ரான், சாண்டா கிளாஸ் (Santa Claus) அல்லது பாபா நோயல் (பாரசீக மக்கள் அவரை அழைப்பது Bābā Noel) போல உள்ளவர்கள் உங்களை பிரதான நுழைவாயிலில் வரவேற்பார்கள்.

நீங்கள் தெஹ்ரானின் கிறிஸ்தவ சுற்றுப்புறங்களில் தெருக்களில் உலாவும்போது, கிறிஸ்துமஸ் மரங்களையும் அதன் அடையாள அலங்காரங்களையும் வாங்குவதில் மக்கள் மும்முரமாக இருப்பதைக் காண்பீர்கள்.

மற்ற நகரங்களும், கிறிஸ்துமஸுக்கான அவர்களின் கொண்டாட்டங்களும் (தெஹ்ரானில் நீங்கள் காணும் வண்ணம் வண்ணமயமாகவும் கண்களைக் கவரும் விதமாகவும் இல்லாவிட்டாலும்) குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஈரானிய-ஆர்மீனியர்கள் வாழும் தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபாஹானின் ஜோல்பா சுற்றுப்புற பிரதேசங்களிலும் காண்பீர்கள்.

கிறிஸ்தவ சுற்றுப்புறங்கள் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் கிறிஸ்துமஸின் நிறத்துடன் வண்ணமயமாக்கப்படுகின்றன, மேலும் கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதற்காக மக்கள் தங்கள் இதயங்களையும் ஆன்மாவையும் தயார் செய்ய தங்கள் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்.

ஈரானில் கிறிஸ்தவ மக்கள் டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து பால், முட்டை மற்றும் இறைச்சியைத் தவிர்க்கும் விரதமிருப்பர். இந்த விரதத்திற்குப் பிறகு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 அன்று புனித தேவாலயத்தில் ஒன்றுகூடி விசேட ஆராதனைகளில் ஈடுபடுவர். அதன் பிறகு ஒரு ஆடம்பரமான விருந்தைக் ஏற்பாடு செய்வர். இவ்விருந்தில் ஹரிசா எனப்படும் வறுத்த சுவையான வான்கோழி பரிமாறப்படுகிறது.

ஈரானில் கிறிஸ்துமஸ் பருவத்தை செலவிடுவது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். இந்த நாட்டின் கிறிஸ்தவ சிறுபான்மையினரால் மட்டுமே கொண்டாடப்படும் நிகழ்விற்காக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவதைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்..

எனவே, நீங்கள் இந்த கிறிஸ்துமஸை வேறு விதமாகவும், வெவ்வேறு கலாச்சார பின்னணியை கொண்டமக்களுடன் கொண்டாட விரும்புகின்றீர்கள் என்றால், ஈரான் ஒரு சிறந்த தேர்வாகும்.

https://www.visitouriran.com/blog/christmas-in-iran/

 

 

Sunday, December 20, 2020

யால்டா எனும் "நீண்ட இரவு" பாரசீக பண்டிகை

 (Shab e Yalda)

ஈரானில் பண்டிகைகளுக்குப் பஞ்சமே கிடையாது. இஸ்லாமிய மார்க்கப் பண்டிகைகள், இஸ்லாத்துடன் சம்பந்தம் இல்லாத, தொன்றுதொட்டு வந்த பாரம்பரிய, கலாசார பண்டிகைகள் என்று அனைத்தும், இன்றளவிலும் பேணப்பட்டு வருகின்றன.


அவற்றில் ஒன்றுதான் யால்டா இரவு (Shab e Yalda) பண்டிகையாகும்.  இதனை "நாற்பதாவது இரவு" (Shab e Chelleh) என்றும் கூறுவர்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 20-21 இரவு அதிநீண்ட இரவாக இருக்கும் இந்த இரவை குடும்ப அங்கத்தவர்கள் ஒன்று கூடி, குதூகலிக்கும் இரவாக, இஸ்லாத்தின் வருகைக்கு முன்னிருந்தே பாரசீக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவ்விரவில் தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகள் அனைத்து இந்த பண்டிகைக்காக விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

உலகெங்கிலும் உள்ள பாரசீக மக்கள் - அவர்கள் நாடுகடந்தவர்களாக இருந்த போதும் - இவ்விரவுக்காக ஆவலுடன் காத்திட்டிருப்பர்.

யால்டா இரவு என்றால் என்ன?

யால்டா என்றால் பிறப்பு என்பதை குறிக்கும். யால்டா இரவு ஒரு அழகான பண்டைய ஈரானிய கொண்டாட்டம் ஆகும்.

இது இலையுதிர் காலத்தின் கடைசி இரவு, குளிர்காலத்தை வரவேற்கும் இரவு. இது வருடத்தின் மிக நீட இரவாக இருப்பதால், அந்த விசேடத்தை அடிப்படையாக வைத்து ஈரானியர்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் பெரும்பாலான பாரசீக மக்கள் சோரோஸ்த்ரிய மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர் என்பது அறிந்த விடயம்.  அப்போதிருந்தே இந்த கொண்டாட்டம் இருந்து வருகிறது.

இந்த இரவு தீய சக்திகளின் ஆதிக்கம் கொண்ட இரவாகவும், பிரிவு, தனிமை மற்றும் காத்திருப்பு ஆகியவற்றை உருவாக்கும் இரவாகவும் அதேவேளை இருளை ஒளி வெற்றிகொள்ளும் தினமாகவும் பண்டைய பாரசீகர்களால் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதை பழங்கால கவிதைகளினூடாக அறிய முடிகிறது.

இந்தப் நீண்ட இரவு பண்டிகையை ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற மற்ற நாடுகளில் உள்ள மக்களும் மதவேறுபாடின்றி கொண்டாடுகின்றனர்.

யால்டா ஈரானில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது...?

இவ்விரவில் பாரசீக மாக்கள் நீண்ட நேரம் விழித்திருந்து உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி குதூகலிப்பர்.

அவர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான, குறிப்பாக தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்று வருடத்தின் நீண்ட இரவை  அவர்களுடன் சிரிப்பு, விருந்து, கவிதை  என்று  மகிழ்ச்சியாக கழிப்பர்.

மாலை முழுவதும் மகாகவி  ஹஃபீஸ் இன் கவிதைகள் வரிகள் மணம் வீசிக் கொண்டிருக்கும்.

மூத்த குடும்ப உறுப்பினர்களின் மனங்களை குளிரச்செய்து அவர்களை சந்தோசப்படுத்துவதாலும் அவர்களது ஆசீர்வாதத்தாலும் குளிர்கால நோய்கள் தாக்காது என்பது அவர்களது நம்பிக்கை.

இவ்விருந்தில் பழங்களுக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக மாதுளையும் தர்பூசணியும் இல்லாது இப்பண்டிகையே இல்லையெனலாம்.

ஈரானிய மக்களின் வாழ்க்கையில் மகா கவி ஹாபிஸின் கவிதைகளுக்கு முக்கிய இடமுண்டு.

ஒருவர் மனதில் ஒன்றை நினைத்து, ஹபீஸின் கவிதை புத்தகத்தின் ஒரு புத்தகத்தைத் திறந்து, அவர்கள் பார்க்கும் முதல் கவிதையானது, நினைத்ததை எவ்வாறு  நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அறிவுரையாக, அதன் விளக்கமாக இருக்கும் என்பது சிலரது நம்பிக்கை.

ஆகவே யால்டா இரவில் ஒன்று கூடியுள்ள ஒவொருவரும்  ஏதாவது ஒன்றை மனதில் நினைத்து, ஹாபிஸின் கவிதை புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து, அதிலுள்ள முதல் கவிதையினை மூத்த ஒருவரைக் கொண்டு சத்தமாக வாசிக்கச் சொல்வர்.

வேறு நாடுகளில் குடியேறியுள்ள ஈரானியர்கள் ஒன்று கூடி  அவர்களது குடும்பங்களுடன் ஈரானில் தாங்கள் செய்த அதே விஷயங்களை குடியேறியுள்ள நாடுகளில் செய்வர்.

 


யால்டா இரவு அவர்களுக்கு மறக்க முடியாததாக ஒன்றாக இருக்கிறது.

Friday, December 18, 2020

தியாக கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு தேசத்தை எவராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது

Iran's missile programme is non-negotiable, says Rouhani

"தெஹ்ரானின் ஏவுகணைத் திட்டம், பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல என்பதை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் நன்கு அறிவார்", என்று ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி திங்களன்று கூறினார்.

பைடனின் வெற்றியானது அமரிக்க்காவை 2015 இல் ஈரான் உலக வல்லரசுகளுடன் எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பை ஏற்படடுத்தியுள்ளது, மேலும் ஈரானின் அணுசக்தி பணிகள், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையலாம்.

ஆனால் தெஹ்ரான் தற்காப்புக்காக ஈடுபட்டுள்ள தனது ஏவுகணைத் திட்டத்தை நிறுத்தவோ அல்லது அதன் பிராந்தியக் கொள்கையை மாற்றவோ முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டது, அதற்கு பதிலாக அமெரிக்காவே அதன் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்பினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட சட்டவிரோத பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

"ஏவுகணை பிரச்சினையை (அணுசக்தி பேச்சுவார்த்தையில்) சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் பல மாதங்களாக முயன்றது, (இது அவ்வொப்பந்தத்திற்குள் அடங்கியிராத விடயம் என்பதால்) ஈரானினால் நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி டிரம்ப் அறியாதிருந்திருக்கலாம், ஆனால் பைடன் இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை நன்கு அறிவார் ”என்று தெஹ்ரானில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ரூஹானி கூறினார்.

"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கு நாங்கள் மற்றொரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று ட்ரம்ப் கூறுவதைப் போன்று பைடன் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை" என்று ரூஹானி கூறினார்.

மத்திய கிழக்கில் ஈரான் மிகப்பெரிய ஏவுகணைத் சக்திகளில் ஒன்றாகும், அமெரிக்காவாகட்டும் அல்லது பிற எதிரி நாடுகளாகட்டும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வல்லமை கொண்ட ஒரு நாடுமாகும் என்பதை எதிரிகள் நன்றாக அறிவர். மத்தியகிழக்கில் தமது ஆதிக்கம் குறைந்துவருவதை இவர்களால் சகிக்க முடியவில்லை. ஆகவே ஈரானின் இந்த ஏவுகணை வல்லமையை இல்லாதொழிக்க, அத்துறையில் அதன் வளர்ச்சியைத் தடுக்க - பிராந்தியத்தில் உள்ள அடிமை அரபு ராஜ்ஜியங்களுடன் இணைந்து - அத்தனை முயற்சிகளையும் எடுக்கின்றனர்.

https://www.reuters.com/article/us-iran-nuclear-usa/irans-missile-programme-is-non-negotiable-says-rouhani-idUSKBN28O1KI 

நாளுக்கு நாள் பலம்பெற்றுவரும் ஈரானின் தற்காப்பு ஏவுகணை திட்டம் “எதிரிகளின் கண்களில் ஒரு முள்ளாக குத்திக்கொண்டு இருக்கிறது” என்று பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹாத்தமி கூறினார்.

"ஆனால் [எங்கள்] ஜிஹாத் எனும் தியாக கலாச்சாரம் [ஈரானின்] முதலிடத்தில் உள்ளது, மேலும் தியாக கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு தேசத்தை (எவராலும்) ஆதிக்கம் செலுத்த முடியாது" என்று பிரிகேடியர் ஜெனரல் ஹாத்தமி செவ்வாயன்று கூறினார்.

தற்காப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் வரவு செலவுத் திட்டம் இவ்வாண்டில் 256 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஈரானிய உயர்மட்ட விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்ட பின்னர், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இரண்டு முக்கியமான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தி வைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் வலியறுத்திக் கூறினார்.

"முதலாவதாக, இந்த படுபாதக செயலுக்கு பதிலடி கொடுப்பதன் மூலம் குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை வழங்குவது, இரண்டாவதாக, தியாகி ஃஃபக்ரிசாதேயின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைப் முன்னெடுத்துச் செல்வது" என்று ஜெனரல் கூறினார்.

ஈரானின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான ஃபக்ரிசாதே கடந்த நவம்பர் 27 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் ஈரானிய அணு விஞ்ஞானிகளுக்கு எதிராக பல படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்ட இஸ்ரேல் மீது ஈரானிய அதிகாரிகள் விரல் நீட்டினார். வெளியுறவு அமைச்சர் முஹம்மத் ஜவாத் ஸரீஃப் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட அதே தினம் "இஸ்ரேலிய பங்கு பற்றிய தீவிர அறிகுறிகளுடன்" இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். அப்போதிருந்து, பல ஈரானிய அதிகாரிகள் இந்த கொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று உறுதியளித்துள்ளனர்.

விஞ்ஞான ஆராய்ச்சி செயல்பாட்டை சீர்குலைப்பதும், நவீன தொழில்நுட்பத் துறையில் இஸ்லாமிய குடியரசின் முன்னேற்றத்தின் வேகத்தை தடுப்பதும் எதிரிகளின்  நோக்கம் ஆகும் என்றும் ஹாத்தமி குறிப்பிட்டார்.

"வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் நவீன ஆயுத தொழில்நுட்பத்தில் எங்களது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிரிகள் நன்கு அறிவர், எனவே, இந்த கொலை நடவடிக்கையால் எமது மக்களின் மன உறுதியை பலவீனப்படுத்தலாம் எனவும் ஈரானின் பாதுகாப்பையும் சக்தியையும் குறைக்க முடியும் என்றும் அவர்கள் கனவு காண்கின்றனர், அது ஒருபோது நடவாது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் அனைவரும் தியாகி ஃஃபக்ரிசாதேயின் பாதையைத் தொடர உறுதி கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஃபக்ரிசாதேவின் படுகொலைக்கு பழிவாங்கிய தீருவோம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஹாத்தமி சூளுரைத்திருந்தார். “"நாங்கள் இறுதிவரை குற்றவாளிகளைப் பின்தொடர்வோம், எமது இமாமின் (அயதுல்லா அலி கமேனி) உத்தரவைப் பின்பற்றுவோம்," என்று அவர் கூறினார்.

இஸ்லாமிய குடியரசு எப்போதுமே "சிரியா மற்றும் ஈராக்கில் செய்ததைப் போலவே, அரசாங்கங்கள் மற்றும் அந்த நாடுகளின் ஆயுதப் படைகளுடன் இணைந்து செயல்பட்டது போல் பயங்கரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடும்" என்று பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளையும் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்தார்.

https://www.tehrantimes.com/news/455810/Iran-s-missile-program-a-thorn-in-eyes-of-enemies-says-defense