“The most complete gift of God is a life based on knowledge”.
விசுவாசிகளின் தளபதியும், இறையச்சமுடையோரின் தலைவருமான “ஞானத்தின் நுழைவாயில்”
இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமக்கு வழங்கிய ஞானத்தின் சிகரங்களில்
இதுவும் ஒன்றாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம்) அவர்களால் அலீ (அலை) அவர்கள் குறித்து வழங்கிய அடைமொழிகளில்
இதுவும் ஒன்றாகும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்
தனது கலீபாவின் தகுதியைப் பற்றி மற்றொரு பிரபலமான ஹதீஸில் இவ்வாறு வெளிப்படுத்தினார்:
"நான் அறிவின் பட்டணம் மற்றும் அலி அதன் நுழைவாயில்; இந்த பட்டணத்தில் நுழைய விரும்புபவர் நுழைவாயில் ஊடாக
வரவேண்டும்".
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் சொன்ன எதுவும் பிழைப்பதில்லை, அவர் தனது மனோ இச்சையின் படி பேசுவதுமில்லை, சூரா நஜ்மின் முதல் சில
வசனங்கள் சொல்வது போல் அவருடைய வார்த்தைகள் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை
(வஹீ) ஆகும்.
இவ்வாறு, வரலாறு முழுவதும், சர்வவல்லமையுள்ள இறைவனின்
கொடையான அறிவைத் தேடுவதில் தங்கள் வாழ்க்கையைக் கழித்தவர்கள், ஞானத்தின் நகரத்திற்குள்
சரியான முறையில்,
அதாவது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய அதன் நுழைவாயில் வழியாக நுழைவதை ஒரு குறிக்கோளாகக்
கொண்டனர்.
இஸ்லாத்தின் புனித தீர்க்கதரிசியின்
கூற்றுப்படி, இமாம் அலி (அலை) உண்மையை
அங்கீகரிப்பதற்கான அளவுகோலாகும்.
அமீருல் முஃமினீன் இமாம்
அலி (அலை) அவர்களின் பாத்திரம் பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை விதிவிலக்கானது. அவர் கஅபாவிற்குள் பிறந்தார்
- அதற்கு முன்னும் சரி, அதற்கு பின்னும் சரி இவ்வாறு நிகழவில்லை - மேலும் அவர்
மஸ்ஜிதில் தொழுகையின் போது வீரமரணம் அடைந்தார்.
அமீருல் முஃமினீன் அலி
(அலை) அவர்கள் (பிறப்பு - இறப்பு) இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஜிஹாத், இறைவனுக்காக பொறுமை காத்தல், அறிவு மற்றும் நுண்ணறிவைப் பெறுதல் மற்றும் இறை திருப்தியின்
பாதையில் நகர்தல் ஆகியவற்றில் தனது எல்லா நேரத்தையும் கழித்தார்.
அவரது குழந்தைப் பருவத்தின்
ஆரம்பத்தில், அலி இப்னு அபி தாலிப்
(அலை) அவர்களை பராமரிக்கும் பொறுப்பு நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் அபிதாலிபின் வீட்டிலிருந்து அவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களுக்கு ஆறு வயதுதான்.
இறை நம்பிக்கையாளர்களின் தளபதி (அலை) அவர்கள் சிறுவயதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் கல்வி கற்றவர். அவர் தனது சிறுவயதிலேயே நபிகள் நாயகம் (ஸல்) மீது தனது நம்பிக்கையை
அறிவித்தார். அவர் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக பிரார்த்தனை செய்தார். அவர் நபி (ஸல்)
அவர்களுடன் ஒன்றாக ஜிஹாதில் ஈடுபட்டார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக தியாகம் செய்தார்.
அவர் தனது வாழ்நாளில், புனித நபி (ஸல்) அவர்கள்
மறைவதற்கு முன்னும் பின்னும் நீதி வழங்கவும்,
இஸ்லாத்தை மேம்படுத்தவும், இஸ்லாத்தைப் பாதுகாக்கவும்
தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.
நபி (ஸல்) அவர்களின்
கண்ணோட்டத்தில், உண்மை மற்றும் நீதிக்கான
அளவுகோல் விசுவாசிகளின் தளபதி அமீருல் முஃமினீன் அலி (அலை) (அலை) ஆவார். ஷியா மற்றும்
சன்னி முஸ்லிம்கள் புனித நபியை மேற்கோள் காட்டி, "அலி உண்மையுடன் இருக்கிறார், உண்மை அலியுடன் உள்ளது.
உண்மை அவர் எங்கிருந்தாலும் அவரைச் சுற்றி வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசுவாசிகளின் தளபதி
(அலை) அவர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருந்தது.
இமாம் அலி (அலை) அவர்கள்
இறைவனின் முன் வைத்திருக்கும் உயர்ந்த அந்தஸ்து அவரது தன்னலமற்ற முயற்சி மற்றும் பக்தியின்
காரணமாகும்... இமாம் அலி (அலை) மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டிருந்த
பாசத்தைப் பற்றி சன்னி முஸ்லிம்கள் மேற்கோள் காட்டிய மரபுகளில் சில முக்கிய விடயங்கள்
உள்ளன. இந்த விடயங்கள் அனைத்து முஸ்லிம்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.
சுன்னி முஸ்லிம்களின்
ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சுனன் அல்-திர்மிதியில், உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்:
"எல்லா மனிதர்களிலும், புனித நபியை விட அலிக்கு
பிரியமானவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை." மற்றொரு ஹதீஸில், ஹன்பலி சிந்தனைப் பள்ளியின் ஃபிக்ஹ் நிறுவனர் அஹ்மத்
இப்னு ஹன்பல் (ரஹ்) - அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கூறியதாக மேற்கோள் காட்டுகிறார்:
"ஒருமுறை புனித நபி இறைவனிடம் பிரார்த்தனை செய்து இவ்வாறு கூறினார்: "மூஸா
(அலை) கேட்டது போலவே. அவரது கடமைகளில் அவருக்கு உதவ ஒரு மந்திரியை நீ நியமிக்க வேண்டும், மேலும் அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களை எனது மந்திரியாகவும், எனது கடமைகளுக்கு எனக்கு உதவுபவராகவும் நியமிக்கும்படி
வேண்டுகிறேன்".
நமக்கான படிப்பினைகளும்
அர்த்தங்களும் நிறைந்த அமீருல் முஃமினீன் (அலை) அவரது வாழ்க்கையில், அவரது நிகழ்ச்சி நிரலில்
எதை முக்கியப்படுத்தினார் என்பதை இப்போது நாம் கவனிக்க வேண்டும்.
ஒன்று அவரது வாழ்க்கை
முறையின் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றாகக் கூறப்படும் நீதி. மற்றது அடக்குமுறையாளர்களிடம்
கடுமையாய் இருப்பது, ஒடுக்கப்பட்டவர்களிடம்
அனுதாபம் காட்டுவது, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப்
பெற உதவுவது போன்ற குணாதிசயங்கள் பல பகுதிகளில் தெளிவாகக் காணப்படுகின்றன - நஹ்ஜ் அல்-பலாகா.
விசுவாசிகளின் தளபதி
(அலை) அவர்களின் இந்த அர்த்தமுள்ள கருத்துக்களில் கவனம் செலுத்துங்கள்... இமாம் அலி
(அலை) அவர்களின் கருத்துப்படி, உலகம் - உலக உடைமைகள்
என்ற பொருளில் - முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவையும் கைவிடப்பட வேண்டியவையும்
ஆகும்.
உலகத்தை நோக்கி, "போய் வேறொருவனை ஏமாற்று!" என்று முழக்கமிட்டார்
அமீருல் முஃமினீன் (அலை) அவர்கள். உலக ஆசைகள் மற்றும் வாழ்க்கையின் பொருள் அழகு அவரை
ஏமாற்ற முடியாது என்று அர்த்தப்பட்டும் விதத்திலேயே அவர் அவரை விட்டு சென்று ஏமாற்ற
மற்றொருவரை கண்டுபிடிக்க கூறினார்.
அமீருல் முஃமினீன் அலி (அலை) என்ற மகத்துவம் மிக்க மனிதருக்கு மரியாதை காட்டுவது ஷியாக்களுக்கு அல்லது மற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய தனிப்பட்டது தனிப்பட்ட அல்ல. மாறாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து விடுதலை பெற்ற மக்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒன்று. முஸ்லிம்கள் அல்லாத அந்த ஆளுமைகள் கூட இந்த மகத்துவமிக்க மனிதருக்கு மரியாதை காட்டுவதை நீங்கள் காணலாம். அவரைப் பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்கள், கவிதைகள் எழுதுகிறார்கள். அனைத்து இஸ்லாமியர்களும், அனைத்து இஸ்லாமியப் பிரிவினரும் தங்கள் முழு மனதுடன் நேசிக்கும் மற்றும் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமை அந்த உன்னத மனிதர்.