Achievements of women after the Islamic Revolution
ஆடை களைதல் தான் பெண் உரிமை என்பது போன்ற ஒரு மாயையை மேலை
நாடுகளும் அவற்றின் தயவில் இயங்கும் ஊடகங்களும் பெரும் பிரச்சாரம் ஒன்றை
முடுக்கிவிட்டுள்ள ஒரு காலகட்டத்தில், பெண்மைக்கு உண்மையான
மதிப்பளிக்கும் சில முஸ்லிம் நாடுகள் இன்னும் உலகில் இருக்கவே செய்கின்றன.
பெண்ணுரிமை பற்றி பேசும் பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூட
உண்மையில் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கத்தான் போராடுகின்றனரா என்ற சந்தேகம்
இருந்துகொண்டே இருக்கிறது.
பெண் உரிமைகளில் வன்முறை, அடிமைத்தனம்
மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான உரிமையும் கல்வி கற்கும் உரிமை; சொத்துரிமை; வாக்களிக்கும் உரிமை; கௌரவமாக வாழும் உரிமை மற்றும் நியாயமான மற்றும் சமமான
ஊதியம் பெறும் உரிமை போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளன. இவற்றையெல்லாம்
விட்டுவிட்டு, எங்கோ ஒரு நாட்டில் ஒரு யுவதி ஹிஜாப் எனும் (உடலின் முக்கிய
பாகங்களை மறைக்கும்) ஆடையை கழட்டி எறிவது அவளது தனியுரிமை என்றும், அவ்வாறான செயலை தடுக்கும் சட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளை
விமர்சித்து, அவற்றுடன் ஊடக போர் புரிவது நியாயமல்ல.
ஆண்கள் கழுத்தில் இருந்து கால்வரை ஆடை அணிவதை கண்ணியமென
கருதும் இவர்கள் பெண்கள் தம் ஆடைகளைக் குறைத்து, உடல் அங்கங்களை
அதிகமாக வெளிக்காட்டும் ஆடை அணிவதே நாகரீகம் என்று உலக மாந்தரை மூளை சலவை செய்து
வைத்துள்ளனர்.
சில முஸ்லிம் நாடுகளில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பொதுவெளியில் அரைகுறை ஆடை அணிவது தடையாகும்...
ஆகவே, பெண் உரிமை, பெண் சுதந்திரம் பற்றி குரல் எழுப்புவோர், மேலை நாடுகளின் பிரச்சாரங்களுக்கு ஆளாகாமல், திறந்த மனத்துடன் விடயங்களை அணுக வேண்டியது தார்மீக கடமையாகும்.
ஈரானின் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தலைமைத்துவம் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு "கல்வி", "சுகாதாரம்", "வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்முனைவு", "ஊடகம்", "விளையாட்டு", "முடிவெடுத்தல்"
ஆகிய துறைகளில் மற்றும் "சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் நெருக்கடிகள் மேலாண்மை துறைகளில் "ஈரானிய
பெண்களின் சாதனைகள்” குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்வித் துறையில், ஈரானிய பல்கலைக்கழகங்களில்
கற்போரில் 60% க்கும் அதிகமானோர் பெண்களாவர்; ஆசிரிய உறுப்பினர்களில் பெண்களின் பங்கு 33.3 சதவீதத்துக்கும் அதிகமாகவும். மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகங்களில் 34 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் மற்ற எல்லா துறைகளிலு
படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 56 சதவீதம்
அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய
ஆண்டுகளில், பல்கலைக்கழகங்களில்
அனுமதிக்கப்படும் ஈரானிய இளம் பெண்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஈரானியப் பெண்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர்களில்
60 சதவீதத்திற்கும்
அதிகமானவர்கள். இஸ்லாமிய குடியரசிற்கு இது ஒரு ஆச்சரியமான வளர்ச்சி.
நாட்டின் பெண்களுக்கு கல்வி என்பது ஒரு வலுவான சமூக மதிப்பைக் கொண்டுள்ளது என்று
நிபுணர்கள் கூறுகின்றனர், அவர்கள் அதிக சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரு
வழியாகவும் அதை கருதுகின்றனர்.
ஈரானின்
பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை, நாட்டின்
பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் ஏற்கனவே கணிசமான மாற்றத்தைக்
கொண்டு வந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஈரானியப் பெண்கள்
பல்கலைக்கழகப் படிப்பை வீட்டை விட்டு சுதந்திரமாக வெளியே செல்வதற்கும், தொழில்முயற்சிகளில்
ஈடுபடுவதற்கும் அதிக சுதந்திரம் மற்றும் சமூக மரியாதையைப் பெறுவதற்கும் ஒரு
வழியாகப் பயன்படுத்துகின்றனர்.
பாரிஸை தளமாகக்
கொண்ட சமூக அறிவியல் பேராசிரியரான டாக்டர்
பெய்வந்தி ஈரானின் கல்வி முறை தொடர்பான சிக்கல்களைப் பின்தொடர்பவராக
இருக்கின்றார். ரேடியோ பர்தாவுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரானின்
எதிர்காலத்தை வடிவமைப்பதில் பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே பெண்களின் வலுவான இருப்பு
குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று கூறினார்.
"கடந்த தசாப்தத்தில் ஈரானிய பெண்களின் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றம் ஒரு சமூக நிகழ்வாக கருதப்பட வேண்டும், ஏனென்றால் சமூக உறவுகள், தொழிலாளர் சந்தை மற்றும் சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களின் நிலை ஆகியவற்றிற்கான அதன் தாக்கங்கள் ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிக மிக முக்கியமானவை." என்று டாக்டர் பெய்வந்தி கூறினார்.
1979 இஸ்லாமிய புரட்சி
மற்றும் நாட்டின் கல்வி நிறுவனங்களின் இஸ்லாமியமயமாக்கலுக்குப் பிறகுதான்
பாரம்பரிய அல்லது பழமைவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கல்வியைத் தொடர்வதற்கான
வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர், என்றும் அவர்
தெரிவித்தார். "புரட்சிக்கு முன்பே தங்கள் பெண்களை
பள்ளிக்கு அனுப்பிய நவீன நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் [புரட்சிக்குப் பிறகும்]
அதைத் தொடர்ந்தன. புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் இப்போது நாம் காணும் முன்னேற்றத்தின் ஒரு
பகுதியாக கருதப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். "இதற்கு முன் தங்கள் பெண்களை படிக்க
அனுப்பாத பாரம்பரிய குடும்பங்கள் - ஆசிரியர்கள் ஆண்களாக இருந்ததால் அல்லது
பள்ளிக்கூடம் இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணாக செயல்பட்டதனால் - பள்ளிக்கூடங்களை
இஸ்லாமியமயமாக்கியதில் இருந்து மிகப்பெரிய நன்மையை பெண்கள் பெற்றுக்கொண்டனர்” என்று கூறினார்.
வளர்ந்து வரும்
பெண் பல்கலைக்கழக பட்டதாரிகளின் எண்ணிக்கை ஈரானின் தொழிலாளர் சந்தையில் ஏற்கனவே
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல
துறைகளில் நுழைந்துள்ளனர். வணிக உலகிலும் பெண்கள் போட்டிபோட்டுக்கொண்டு வியத்தகு
அளவில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தற்போது உத்தியோகங்களில் 10 சதவிகிதம் இடம்பிடித்து உள்ளனர். ஆனால் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களில் 60 சதவிகிதம் பெண்களாக இருப்பதன் காரணமாக, தொழில் பெறும் பெண்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வரலாற்று மாற்றம் என்கிறார் டாக்டர் பெய்வந்தி. "புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், வேலை செய்த பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது, அந்த பெண் அலுவலக ஊழியர்கள் மற்றும் செயலாளர்களுக்கு பதிலாக, ஈரானிய பெண்கள் தொழிற்சாலை பொறியாளர்களாகவும் நிபுணர்களாகவும் மாறி வருகிறார்கள்," என்று அவர் கூறினார். "எனவே உண்மையில், ஈரானின் தொழிலாளர் சந்தை ஆண்களுக்கு மாற்றீடாக பெண் நிபுணர்களின் வருகையை எதிர்கொள்கிறது, மேலும் ஆண்-சார்ந்த கட்டமைப்புடைய ஈரானிய சமூகத்தில், இது ஒரு பெரிய மாற்றமாகும். ஈரானில் இப்போது பெண் நிபுணர்கள், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், அதிகரித்துள்ளனர்.”
டெஹ்ரானில்
வெளியிடப்படும் கல்வி மற்றும் கலாச்சார இதழான "லோஹ்" இன் நிர்வாக
ஆசிரியர் முகமது காயித், பல ஈரானிய
பெண்கள், முன்னர் ஆண்கள்
ஆதிக்கம் செலுத்திய உயர் தொழில்முறை பதவிகளுக்கு உயர்ந்து வருவதாக கூறுகிறார். "ஈரானில், அலுவலகம் அல்லது வங்கியின் தலைமைப் பொறுப்பில்
இருக்கும் பெண்கள் - பெரும்பாலும் ஆண்களாக இருக்கும் தங்களுக்குக் கீழ்
பணிபுரிபவர்களை நிர்வகிக்கக்கூடிய நிலையில் இருப்பது ஒரு பொதுவான காட்சியாகி
மாறி வருகிறது," என்று அவர் கூறினார்.
ஈரானின் குடும்ப
அமைப்புகளிலும் இப்போது மாற்றத்தை உணர முடிகிறது. சமீபத்திய ஆண்டுகளில், சராசரி திருமண
வயது உயர்ந்துள்ளது மற்றும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. பல்கலைக்கழகக்
கல்வியைத் தொடரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் நேரடி விளைவாக இந்த
மாற்றங்களை பெய்வந்தி கருதுகிறார். "கடந்த
தசாப்தத்தில், ஈரானில் உள்ள அனைத்து மக்கள்தொகை
குறிகாட்டிகளும் பெண்களுக்கான மேம்பட்ட நிலைமைகளின் திசையில் வேகமாக மாறிவிட்டன," என்று அவர் கூறினார். "குடும்பங்கள் சிறியவை, பெண்கள் திருமணத்திற்கு அவசரப்படுவதில்லை, உயர்கல்வி பெற்ற
பெண்களுக்கு அதிக சமூக கடமைகள் உள்ளன."
மேலும், கல்வியறிவு விகிதம் 99.3 சதவீதத்தை எட்டியதால், பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே
கல்வியறிவின்மை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
95 சதவீதத்திற்கும்
அதிகமான பிறப்புகள் மகளிர் மகப்பேறியல் மருத்துவ நிபுணர்களால்
நிறைவேற்றப்படுகியது. நாட்டில் உள்ள ஒவ்வொரு 100,000 பெண்களுக்கும்
பயிற்றப்பட்ட 60 மருத்துவச்சிகள் மற்றும் 2.8 மகப்பேறு
மருத்துவர்கள் உள்ளனர்.
அதிகாரம் மற்றும்
முடிவெடுக்கும் பதவிகளில்,
நாட்டின் அரசாங்க
மேலாளர்களில் 25.2 சதவீதம் பேர்
உயர், நடுத்தர பதவி
மற்றும் அடிப்படை நிர்வாக நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்களாக உள்ளனர்.
நாட்டில் 1,121 பெண்கள்
நீதிபதிகளாக பணிபுரிகின்றனர், நாடாளுமன்ற அங்கத்தவர்களாக 16 பெண்கள் உள்ளனர். பல பெண்கள்
ராஜதந்திரிகளாகவும் பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர். ஈரானின் இராஜதந்திரியாக ஐ.நா.வில் ஸஹ்ரா எர்ஷாதி பணியாற்றுகின்றார்.
தாஹா முஸம்மில்