Israel must realize its true capacities before threatening to attack nuclear sites: Iran's nuclear chief
ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி, ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக இஸ்ரேலிய ஆட்சியை ககுமையாக எச்சரித்துள்ளார், தெஹ்ரானை அச்சுறுத்துவதற்கு முன் டெல் அவிவ் அதன் மோசமான நிலையை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
சனிக்கிழமையன்று (27/11/2021) யேமனின் அல்-மசிரா தொலைக்காட்சி நெட்வொர்க்குடன் பேசிய எஸ்லாமி, ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தல்களுக்கு முன் இஸ்ரேலிய ஆட்சி கண்ணாடி முன் நின்று அதன் திறன்களைச் சரிபார்க்க வேண்டும் என்றார்.
முன்னதாக, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், சேனல் 12 வெளியிட்ட ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஈரானிய அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு ஐந்து பில்லியன் ஷேக்கல்கள் ($1.5 பில்லியன்) வரவு செலவுத் திட்டத்தில் ஒடுக்குவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்று தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி கடுமையாக எச்சரித்தார். அத்தகைய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டால் தெஹ்ரானின் "அதிர்ச்சியூட்டும்" பதிலடிக்கு பிறகு ஏற்படும் பாரிய அழிவை சீர்செய்ய பன்மடங்கு செலவுசெய்ய வேண்டியிருக்கும் என்பதை இஸ்ரேல் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஈரானுக்கு எதிரான அட்டூழியங்களுக்காக 1.5 பில்லியன் டாலர் பட்ஜெட்டை ஒதுக்குவதற்குப் பதிலாக, ஈரானின் அதிர்ச்சியூட்டும் பதிலடியால் ஏற்படப்போகும் சேதத்தை சரிசெய்ய பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை ஒதுக்குவதில் சியோனிச ஆட்சி கவனம் செலுத்த வேண்டும்” என்று அக்டோபர் 24 அன்று ஷம்கானி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஈரானை தாக்கும் திட்டங்களை முடுக்கிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுக்கள், சியோனிச ஆட்சிக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் விழும் மரண அடியாகவே அமையும் ஈரானின் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படாத வண்ணம் இஸ்ரேலிய ஆட்சி அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது மற்றும் தீவிர இராணுவ அணுசக்தி திட்டத்தை தொடர்கிறது. இஸ்ரேல் IAEA இன்ஸ்பெக்டர்களை அதன் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதிப்பதில்லை மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (NPT) அல்லது அதன் அணு ஆயுதங்கள் தொடர்பான வேறு எந்த ஒப்பந்தத்திலும் சேர தெடர்ந்து மறுத்து வருகிறது. அதாவது ஒரு மாஃபியா முதலாளி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக பிரசாரம் செய்வது போலவே அணுவாயுத பரம்பல் தொடர்பாக இஸ்ரேல் நடந்துகொள்கிறது.
இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டத்தைக் கையாள்வதில் மேற்கத்திய நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக ஈரான் பலமுறை விமர்சித்துள்ளது, அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் அணு ஆயுத சூன்ய பிராந்தியமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தை நிறுவுவதைத் தொடர்ந்தும் தடுக்கின்றன என்று ஈரான் குற்றம்சாட்டுகிறது.
அதன் தேசிய மூலோபாயத்திற்கு இணங்க, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள முற்படவில்லை, முயலவும் இல்லை, நாடு எப்போதும் தரநிலைகளின்படி மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கட்டமைப்பிற்குள் முழுமையாக செயல்படுகிறது என்பதை இஸ்லாமி வலியுறுத்தினார். .
ஈரானின் அணுசக்தித் தளங்களில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பரிசோதனை நடைமுறைகளிலும் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் விலகல் எதுவும் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்று ஈரானிய அணுசக்தி தலைவர் வலியுறுத்தினார்.
இரகசிய அணு ஆயுதத் திட்டத்தைக் கொண்டுள்ள இஸ்ரேல், அதன் அணுமின் நிலையங்களை ஆய்வு செய்வதை அனுமதிக்காது என்று தொடர்ந்து கூறிவருக்கறது. ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் மிரட்டிவருகிறது. . கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை இஸ்ரேல் படுகொலை செய்து, ஈரானிய அணு ஆயுத தளங்களில் நாசவேலைகளை எந்தத் நடத்தியது. சர்வதேச இதற்காக இஸ்ரேலை தண்டிக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை.
மேலும், டெல் அவிவ் ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான வியன்னா பேச்சுக்களை தடம் புரளச்செய்ய முற்படுகிறது.
ஈரானும் ஆறு உலக சக்திகளும் வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் அதன் அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை உலகிற்கு உறுதிப்படுத்த 2015 இல் கையெழுத்திட்டன, இது அதிகாரப்பூர்வமாக கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என அழைக்கப்படுகிறது, இருப்பினும், இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான "அதிகபட்ச அழுத்தம்" கொடுக்க வேண்டும் என்பதற்காக 2018 இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினர்.
அணுசக்தி ஒப்பந்தத்துடன் ஈரானின் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு 15 அறிக்கைகளில் சரிபார்த்து தெரிவித்திருக்கையில் அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகியது,
ஈரானிய அணு விஞ்ஞானியைக் கொலை செய்வதன் மூலம் இஸ்லாமியப் புரட்சிக்கு ஒரு அடியைத் தங்களால் தர முடியும் என்று திமிர்பிடித்த சக்திகள் நினைத்தன், ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதிர்மறையானவை மற்றும் ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டத்தை பலவீனப்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல், அதன் வலுப்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.என்று மற்றொரு இடத்தில் எஸ்லாமி கூறினார்.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், கடந்த ஆண்டு ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை படுகொலை செய்ய ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட "ரோபோ கொலைக்கருவி" பயன்படுத்தியதாக அமெரிக்க NYT ஊடக அறிக்கை கூறுகிறது.
AEOI தலைவர் மேலும் கூறுகையில், JCPOA உடன் கையெழுத்திட்ட பிற நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை, இது ஈரானுக்கு எதிரான எதிர்மறையான ஊடகப் பிரச்சாரத்தின் காரணத்தை விளக்குகிறது என்றார்.
ஈரான் மற்றும் P4+1 குழு நாடுகளுக்கு இடையே ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் JCPOA இன் படி மற்ற கட்சிகள் தங்கள் உறுதிமொழிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தும் என்றும் அணுசக்தி பிரச்சினைகளுடன் எந்த தொடர்பும் இருக்காது என்றும் எஸ்லாமி வலியுறுத்தினார்.
ஈரான் மற்றும் பி4+1 - பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதர்கள் ஏழாவது சுற்று விவாதத்தை வியன்னாவில் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் ஜனாதிபதித் தேர்தல் நிமித்தம் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன. அதன் பின்னர், புதிய ஈரானிய நிர்வாகம், முந்தைய நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற ஆறு சுற்று விவாதங்களின் விவரங்களை ஆய்வு செய்து வருகிறது.
வெள்ளிக்கிழமையன்று, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெலுடன் தொலைபேசி அழைப்பில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், அமெரிக்கா மீண்டும் ஒருதலைப்பட்சமாக ஜேசிபிஓஏவை விட்டு வெளியேறாது என்பதற்கு "தீவிரமான மற்றும் போதுமான" உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றார்.
வியன்னா பேச்சுவார்த்தையில் பங்கேற்பாளர்கள் JCPOA இன் படி தங்கள் கடமைகளுக்கு முழு இணக்கத்திற்குத் திரும்பினால் மட்டுமே "நல்ல மற்றும் உடனடி உடன்பாட்டை" எட்ட முடியும் என்றும் அமீர்-அப்துல்லாஹியன் கூறினார்.