Arab leaders stabbed in the back of Palestinian brothers
டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட, "ஆபிரகாம் ஒப்பந்தங்கள்" என்று அழைக்கப்படும் இஸ்ரேலுக்கும் அரபு உலகிற்கும் இடையிலான உறவுகளின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.
இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் சூடான் மற்றும் மொராக்கோ போன்ற சில அரபு நாடுகள் இஸ்ரேலிய ஆட்சியுடனான தங்கள் உறவுகளை இயல்பாக்கியுள்ளன அல்லது குறைந்தபட்சம் அதற்கு அண்மித்துள்ளன, இது தங்கள் பாலஸ்தீனிய சகோதரர்களின் முதுகில் குத்தும் செயலாகும்.
சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, டெல் அவிவ் உடனான உறவுகளை இன்னும் வெளிப்படையாக இயல்பாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் இஸ்ரேலுடனான அதன் சிறப்பு உறவுகள் மறுக்க முடியாதவை.
ஆனால் இந்த அரபு எதேச்சதிகாரிகள் பாலஸ்தீனிய போராட்டத்தை காட்டிக் கொடுத்ததற்கு ஈடாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுடனான நட்பில் இருந்து என்ன பலன் அடைந்துள்ளனர்?
இஸ்ரேலும் அதன் புதிய நண்பர்களும்
இந்த இயல்பாக்கல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அரபு நாடுகளின் நோக்கம், வாஷிங்டன் அதன் பிராந்தியக் கொள்கைகளை இயக்குவதற்கு அல்லது குறைந்தபட்சம் நிர்வகிப்பதற்கு மிகவும் செல்வாக்கு மிக்க அழுத்த குழுவாக தாம் இருக்கலாம் என்பதாகும்.
இந்த ஆட்சியாளர்களில் பலர் உண்மையில் தாங்கள் ஆளும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை என்பதால், எந்த அடிமட்டப் புரட்சியிலிருந்தும் தங்களைக் காப்பாற்றக்கூடிய, தங்கள் இருப்புக்கான முக்கிய உத்தரவாதமாக அமெரிக்காவை அவர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவோம் என்ற கற்பனையான பாதுகாப்பு தவிர அந்த ஆட்சிகளுக்கு வேறு என்ன பலன் கிடைக்கப்போகிறது...?
இவர்களது அச்ச உணர்வை நன்றாக புரிந்துகொண்ட இஸ்ரேல், நீங்கள் காங்கிரஸில் உள்ள அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அல்லது அமெரிக்க அரசாங்கத்துடன், - அது ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியாக இருந்தாலும் சரி, - டெல் அவிவ் வழியாகவே உறவு கொள்ள வேண்டும் என்ற கருத்தை திணித்தது.
யெமன் அன்ஸாருல்லாஹ்வின் இராணுவ தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் தடுமாறும் சவூதி அரேபியா அதன் ஏவுகணை அமைப்புகளை வலுப்படுத்த அமெரிக்க ஆயுதங்களை கோருகிறது.
சவூதி இராச்சியம் அதன் தெற்கு அண்டை நாடுகளின் பதில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக தனது மண்ணைப் பாதுகாக்க முடியவில்லை என்பதால் சவூதி அரேபியா அதனது ஏவுகணை இடைமறிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான உதவியை அமெரிக்காவை நாடியுள்ளது என்று ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இஸ்ரேல் உறவு
எடுத்துக்காட்டாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாடு போன்ற, டெல் அவிவ் உடன் இணைக்கப்பட்ட, சில செல்வாக்குமிக்க அமைப்புகளுடன் உறவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாட்டின் தலைவர் எமிரேட்ஸின் ஆட்சியாளருக்கு புகழாரம் சூட்டினார்.
ஸ்டீபன் கிரீன்பெர்க் கூறுகையில், "ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சகிப்புத்தன்மை, பன்மைத்துவம், அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு நாட்டை நான் கண்டேன், அதே நேரத்தில் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை அது எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்த்துப் போராடும் உறுதியையும் கண்டேன்" என்று குறிப்பிட்டார்.
தங்கள் சொந்த மக்கள் நலன் பற்றி கவலைப்படாத குறிப்பிட்ட ஆட்சிகளுடன் வியாபார தொடர்பை ஏற்படுத்த விரும்பும் உயரடுக்கு இஸ்ரேலியர்களுக்கு நிச்சயமாக இது மிகவும் பயனளிக்கும் அம்சம் என்பது உண்மையே.
ஆனால் பெரும்பான்மையான அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்த அரபு-இஸ்ரேல் உறவு சாதாரணமயமாக்கலைப் பயனளிக்கும் ஒன்றாக ஒருபோதும் கருதவில்லை என்பதை நிச்சயமாக கூற முடியும்.
சவுதி அரேபிய மன்னர் சல்மான், கத்தார் மீது படையெடுப்பதற்கு அனுமதி கோரி டொனால்ட் டிரம்பை தொடர்புகொண்டார்
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாரை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார தடைக்கு உள்ளாக்கியிருந்தன. ஆரம்ப நாட்களில், அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை என்று அறிந்த இந்த அரசுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவியுடன் அண்டை நாடான கத்தாரை தாக்கி முற்றுகையிட சவூதி தலைமையில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது.
உறவுகள் இயல்பாக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க காங்கிரஸுக்கும் அமெரிக்காவின் நிர்வாகக் கிளைக்கும் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை ஆதரிக்கும் AIPAC அல்லது அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு F-35 போர் விமானங்களை அபுதாபிக்கு வழங்குவதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொண்டது.
ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பிறகு, மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க புதிய நிர்வாகத்தை இஸ்ரேல் வற்புறுத்தியத்தில் ஆச்சரியமில்லை.
இந்த ஆட்சிகளின், அனைத்து மனித உரிமைகள் உரிமை மீறல் மற்றும் சம உரிமைகள், தனிமனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம், மற்றும் அப்பாவி மக்களை அவர்களது கருத்துக்காக சிறையில் அடைத்தல் போன்ற அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் மட்டுமல்ல, அமெரிக்க ஊடகங்களும் தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன.
அதாவது, பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் அப்பட்டமாக மீறுகின்றன, ஆனால் முக்கிய அமெரிக்க செய்தி ஊடகங்களில் அவற்றை பார்க்க முடியாது, நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அல்லது CNN, NBC, CBS, போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த மீறல்கள் பற்றி பேசுவதில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேல் ஆட்சியுடனான உறவுகளை "இயல்புபடுத்துதல்": மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல், பல ஆண்டுகளாக பரஸ்பர இரகசிய தொடர்பு கொண்டுள்ளதால், உறவுகளை "சாதாரணமாக்குதல்" என்ற போர்வையில் தங்கள் உறவை பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முஸ்லிம் உலக லீக் பிரதிநிதிகள் குழு ஒன்று போலந்தில் உள்ள ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு அமெரிக்க யூதக் குழுவின் பிரதிநிதிகளுடன் அரிய விஜயம் ஒன்றை மேற்கொண்டது, இந்த விஜயத்திற்கான நிதியை சவூதி அரேபியா வழங்கியிருந்தது.
"இந்தக் கொடூரமான குற்றங்களால் நானும் இஸ்லாமியத் தலைவர்களான
எனது சகாக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க
விரும்புகிறேன்."
- முகமது பின் அப்துல் கரீம் இசா, தலைவர், முஸ்லிம் உலக லீக்
இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில், முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாடு நியூயார்க் நகரில் இடம்பெற்றது, அதில் பஹ்ரைன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன் நோக்கம் யூத முதலீட்டை கவருவது, சுற்றுலாவை ஊக்குவிப்பது மற்றும் இரானோபோபியாவை (ஈரான் எதிர்ப்பு) பிரசாரங்களை) முடுக்கிவிடுவதும் ஆகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் சில காலமாக தொடர்பில் இருந்துவருகின்றன.
பல ஆரவாரங்களுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இஸ்ரேலும் வர்த்தகம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் நீண்டகால தொடர்பு இருந்தபோதிலும், சமீபத்தில் தான் தங்கள் உறவுகளை இயல்பாக்கியுள்ளது போன்று காட்டிக்கொள்கின்றன. உண்மையில் இந்த அரபு நாடுகளினதும் இஸ்ரேலினதும் ஒரே நோக்கம் ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்.
சவூதி இராச்சியம் இன்னும் ‘ஆபிரகாம் உடன்படிக்கை’யில் சேரவில்லை என்றாலும், ரியாத் மற்றும் டெல் அவிவ் பரஸ்பரம் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன என்பதும், இஸ்ரேல் சவூதி ராஜ்யத்தை கவர்ந்து ஈர்க்கும் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டாது என்பதும் ஒரு திறந்த ரகசியம்.
ஜமால் கஷோகியின் கொலைக்குப் பிறகு, அந்த நேரத்தில் இஸ்ரேல் திட்டத்தின் CEO ஜோஷ் பிளாக், சவுதி பட்டத்து இளவரசரின் பெயரை காப்பாற்றுவதற்காக, "கஷோகி ஒரு தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூட்டாளி, அவர் ஒசாமா பின்லேடன் மற்றும் தாயெஷுக்கு நெருக்கமானவர்" என்று ட்வீட் செய்து கசோக்ஜி கொல்லப்பட்டதை நியாப்படுத்தினார்.
இஸ்ரேலுடனான தொடர்புகளை ஏற்படுத்த எந்தவொரு உறவிலும் இயல்பு நிலை என்று அங்கு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.
எனவே இவர்களுக்கு இடையில் உறவு எப்போதும் இருந்தது, இஸ்ரேலின் பாதுகாப்பே இந்த ஆட்சிகளின் பாதுகாப்பு.
கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தன்னை ஒரு செல்வம் கொழிக்கும் ஆடம்பர பூமியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்து வருகிறது, அதேநேரம் உலகம் முழுவதிலுமிருந்து பலரை இந்தப் பகுதிக்கு கவர்ந்து வருகிறது, சர்வதேச பிரபலங்களுக்கு 10 வருட புதுப்பிக்கத்தக்க வதிவிட விசா வழங்குகிறது.
ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட அரேபிய நாடுகள், பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவதற்காக எடுத்த முடிவு என்று தங்கள் முடிவை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் அவர்களின் நெருங்கிய உறவுகள், வைத்திருப்பதானது உள்நாட்டில் மனித உரிமை மீறல்களைத் தொடர்வதற்கு அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும், அதே நேரத்தில் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் குறிப்பிட்ட உரிமை மீறல்களை கண்டுகொள்ளவே மாட்டா என்பதாகும்.
https://www.presstv.ir/Detail/2021/10/28/669459/Abraham-Accords-Arab-Israeli-ties-normalization
No comments:
Post a Comment