Sunday, July 31, 2022

அடக்குமுறைக்கு எதிரான உச்சமட்ட போராட்டமே முஹர்ரம் புகட்டும் பாடம்

The Immortal Message of Muharram


- மூலம்: செய்யத் அலி ஷாபாஸ்

உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய சோகத்தின் நினைவுகளுடன் முஹர்ரம் மாதம் மீண்டும் ஒருமுறை வந்துவிட்டது. எதிர்காலத்தில் இது போன்ற இதுபோன்ற தியாக சம்பவத்தை காண முடியாது.

6 மாத சிறுவனின் செங் குருதி, கூர் வாள்களை வெற்றி கொண்ட மாதம் இது. ஒவ்வொரு ஆண்டும், மனித மனசாட்சியை உலுக்கி, மதம் மற்றும் சமூகத்தின் மீதான மனிதகுலத்தின் கடமைகளை நினைவூட்டும் மாதம் இது.

முஹர்ரம் முதல் நாள் கொண்டாட்டத்திற்குரிய நாள் அல்ல, ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரனின் மகத்தான தியாகத்தை மறக்கடிக்கும் விதத்தில், துரதிர்ஷ்டவசமாக சில அரபு/முஸ்லிம் நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் எனும் புனிதமான இடம்பெயர்வு முஹர்ரம் தினத்தன்று நிகழ்ந்த ஒன்றல்ல, மாறாக, ஹிஜ்ரத் இடம்பெற்றது ரபி அல்-அவ்வல் மாத ஆரம்பத்தில். புத்தாண்டு என்று அழைக்கப்படுவதைக் காரணம் காட்டி இத்தினத்ததை கொண்டாடுகின்றனர்.

இத்தகைய கொண்டாட்டங்கள் ஜாஹிலிய்யா காலங்களில் இடம்பெற்ற நடைமுறைகளை ஒத்ததே தவிர வேறில்லை. எனவே இத்தகைய அற்பத்தனமான கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும், அஹ்ல் அல்-பைத்துகளின் போதனை மற்றும் புனித இரத்தத்தால் போஷிக்கப்பட்ட இஸ்லாத்தின் சாரத்திலிருந்து முஸ்லிம்களை தூர விலக்குவதற்கான சதிகளே தவிர வேறில்லை.

ஆண் / பெண் கலப்பு நடனம், மது அருந்துதல் போன்ற கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. தக்ஃபிரி பயங்கரவாதிகள் மற்றும் பிற வழிகெட்ட குழுக்கள் செய்வது போல், முஸ்லிம்கள் சக முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது ஜாஹிலிய்யத்தாகும்; நிச்சயமாக காருண்ய தூதர் இதை நமக்குக் கற்றுத்தரவில்லை.

முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் நிலை தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலம் ஆகும். இவற்றைப் பற்றி சிந்திக்க சிறந்த வழி, இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலா தியாகிகளுக்கான நினைவுச் சடங்குகள் ஆகும், இது உண்மையில் நபியின் “சுன்னா” (நடைமுறை) மற்றும் “சீரா” ( நடத்தை)..

இவ்வாறு, முஹர்ரம் மாதம் நமது கண்களை ஈரமாக்குகிறது, நம் இதயங்களை துக்கத்தில் ஆழ்த்துகிறது மற்றும் நமது சமூகங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது, கர்பலாவின் அழியாத தியாகி இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை யஸீதின் சட்டவிரோத ஆட்சியை நிராகரிக்கிறது. இஸ்லாம் மற்றும் அனைத்து மனிதாபிமான விழுமியங்களையும் பாதுகாப்பதற்காகத் துணிச்சலுடன் போராடிய தனது நண்பர்கள், அவரது சகோதரர்கள், அவரது உறவினர்கள், அவரது மருமகன்கள் ஆகியோர் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தனர். நடப்பது என்னவென்று அறியாது சிரித்து விளையாடிக்கொண்டிருந்த பச்சை பாலகன்களான அலி அக்பர் மற்றும் 6-மாத குழந்தை அலி அஸ்கர் ஆகியோரையும் யஸீதின் படையில் இருந்த பொல்லாத பாவிகள் குறிவைத்துக் கொன்றனர்.

மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தனக்கு எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்யும் ஒருவனில் கைகளில் விட்டுவிட்டு, மேம்போக்கான வழிபாட்டு முறைகளில் மட்டும் ஈடுபடுவது சன்மார்க்கம் எதிர்பார்க்கும் ஒன்றல்ல. அதேபோல், இறை சட்டத்தை புறக்கணிப்பது மற்றும் தவறான ஒருவனின் விசித்திரமான யோசனைகளுக்கு ஆட்சேபனையின்றி கட்டுப்படுவது என்பது தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இவ்வாறான கண்மூடித்தனமாக பின்பற்றுதல் தான் மக்களின் தலைவிதியை சமூக அநீதி நிலைக்கு நழுவ அனுமதிக்கிறது, மேலும் இதுவே யஸீத் போன்ற சண்டாளர்கள் உருவாவதற்கான இடமாக உள்ளது.

இதுவே முஹர்ரம் மாதத்தின் எழுச்சியூட்டும் செய்தியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் தொடக்கத்தில் இமாம் ஹுசைனின் (அலை) இரத்தம் புதியதாக மாறுகிறது, ஈராக்கில் உள்ள கர்பலாவை நோக்கி விசுவாசிகளின் இதயங்கள் திரும்புகின்றன, தியாகிகளின் ஒன்றுகூடலின் போது கொடிய உமையாக்களின் பாசாங்குத்தனம் அவர்களுக்குக் காட்டப்பட்டது. அங்கே அரபிகளின் உண்மையான ஜாஹிலி நிறங்கள் தெளிவாக வெளிப்பட்டன.

இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தைக் கெடுக்க முயற்சிக்கும் பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியை உலுக்கிய மாதமே முஹர்ரம். இஸ்லாத்தின் சமத்துவச் சட்டங்களுடன் இந்த நவ யஸீதிகளுக்கு நடைமுறையில் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் இந்த தக்பீரி ISIS மற்றும் அதுபோன்ற குழுக்களின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் இது தெளிவாகிறது.

இஸ்லாம் என்பது அதன் உயிரோட்டத்துடன் புனித குர்ஆனின் போதனைகளை முற்றுமுழுதாக கடைபிடிப்பது, மேலும் நபி (ஸல்) அவர்களின்  அஹ்ல் அல்-பைத் மீது அன்பு, பாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும் இஸ்லாம் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான எதிர்ப்பையும், இமாம் ஹுசைன் (அலை) கற்பித்தபடி மனிதாபிமான விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகத்திற்குத் தயாராக இருப்பதையும் குறிக்கிறது.

இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும். ஒடுக்குமுறை மற்றும் ஊழல் சக்திகளுக்கு எதிராக மனிதகுலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தகுதியான முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் தனது இன்னுயிரை அர்ப்பணித்தார்.

முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு, சக மனிதர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் வ யஸீதுகள், முஹர்ரம் வருகையை பண்டிகைத் தினமாக கொண்டாடி, மனித குலத்தின் பரம விரோதிகளான சட்ட விரோதமான சியோனிச அமைப்பு மற்றும் தற்போதைய உலகின் பிரச்சினைகள் பலவற்றுக்கு காரணமான அமெரிக்க ஆட்சி போன்றவற்றுடன் வெளிப்படையாக உறவுகொண்டுள்ள இவர்களுக்கு கேடுதான்.

உண்மையான அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்கள் இமாம் ஹுசைன் (அலை) அவர்களுக்கு உயர் கௌரவம் வழங்கும் போது, நமது ஷியா அல்லாத முஸ்லிம் சகோதரர்களின் பல ஆதாரபூர்வமான பதிவுகளைக் கொண்ட  நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது படி, அவர் சிறப்புகளை கொண்டாடி, அவரைக் கொன்றவர்களை சபிக்கும்போது, போலி முல்லாக்கள், ஷைத்தானிய ஃபத்வாக்களால் முஸ்லிம்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள், மொத்தத்தில் அவர்கள் சுன்னிகளாக நடிப்போரே அன்றி வேறில்லை.

இவ்வாறு இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியும் முஹர்ரம் மாத ஞாபகார்த்த சடங்குகளும் மனிதகுலத்தின் பாரம்பரியம் ஆகும். ஆகவே கர்பலாவின் அழியாத உயர் நோக்கத்தின் முக்கியத்துவத்தை மனிதகுலம் உணராத வரை நீதி ஒருபோதும் உணரப்பட மாட்டாது.

https://kayhan.ir/en/news/105251/the-immortal-message-of-muharram

Wednesday, July 27, 2022

இது தான் அமெரிக்காவுக்கு விழும் மரண அடியாக இருக்கப்போகிறது.

 Dollar must be removed from global transactions

உலகளாவிய பரிவர்த்தனைகளில் இருந்து டாலர் அகற்றப்பட வேண்டும்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது பரிவாரங்கள் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் கமேனியை இன்று மதியம், ஜூலை 19, 2022 அன்று சந்தித்தனர். ஜனாதிபதி ரைசியும் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய தலைவர் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டும். மேற்குலகின் ஏமாற்றும் கொள்கைகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், "ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் ஆழ்ந்த நன்மை பயக்கும்" என்று அவர் கூறினார்.

ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் பரஸ்பர ஒத்துழைப்பை தொடர்ந்து அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உலக நிகழ்வுகள் காட்டுகின்றன என்று இமாம் கமேனி வலியுறுத்தினார், மேலும், “எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பின்பற்றப்பட வேண்டும். மற்றும் இறுதிவரை செயல்படுத்தப்பட வேண்டும்", என்றார்.

ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை சிலாகித்துப் பேசிய இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், குறிப்பாக மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இன்றியமையாதது மற்றும் நன்மை பயக்கக்கூடியது என்றும் குறிப்பிட்டார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமையை தொட்டுகாட்டி, “போர் என்பது ஒரு அழிவை ஏற்படுத்தக்கூடிய கடுமையான ஒன்று, சாதாரண மக்கள் போர்களால் பாதிக்கப்படுவதை இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் விரும்புவதில்லை. இருப்பினும், உக்ரைன் பிரச்சினையில், ரஷ்யா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மறுபக்கம் போரைத் தொடங்கியிருக்கும்.

ஒரு வலுவான, சுதந்திரமான ரஷ்யா இருப்பதை மேற்கு நாடுகள் எதிர்க்கின்றன என்று புரட்சித் தலைவர் வலியுறுத்தினார். நேட்டோவை ஒரு ஆபத்தான நிறுவனம் என்றும் அவர் விவரித்தார் மேலும், “நேட்டோவிற்கு வழி திறக்கப்பட்டால், அது வரம்புகளை மதிக்காது. இது உக்ரைனில் நிறுத்தப்படாவிட்டால், அது பின்னர் கிரிமியாவிலும் இதேபோன்ற போரைத் தொடங்கியிருக்கும்.

நிச்சயமாக, இன்று அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முன்பை விட பலவீனமாகிவிட்டன என்று விளக்கிய இமாம் கமேனி, பெரும் சிரத்தையெடுத்து பணத்தையும் செலவழித்த போதிலும், நமது பிராந்தியத்தில் - சிரியா, ஈராக், லெபனான் மற்றும் பாலஸ்தீனம் உட்பட - அவர்களின் கொள்கைகளின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது", என்றார்.

சிரிய பிரச்சினை மிகவும் முக்கியமானது என்று விவரித்த இமாம் கமேனி, ஈரானின் நிலைப்பாடு சிரியா மீதான இராணுவத் தாக்குதலுக்கு எதிரானது என்றும், அத்தகைய நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், “சிரியாவில் மற்றொரு முக்கியமான பிரச்சினை, யூப்ரடீஸின் கிழக்கே உள்ள வளமான, எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளை அமெரிக்கர்கள் அபகரித்துள்ளனர். அவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிராந்திய பிரச்சினைகளில் சியோனிச ஆட்சியின் தலையீட்டை இஸ்லாமிய புரட்சியின் தலைவர் கடுமையாக கண்டித்தார், மேலும் சியோனிஸ்டுகளுக்கு எதிரான ரஷ்ய ஜனாதிபதியின் சமீபத்திய நிலைப்பாட்டை அவர் பாராட்டினார்.

"ஈரான்-ஆர்மேனியா எல்லையை மூடுவதற்கு வழிவகுக்கும் கொள்கைகள் அல்லது திட்டங்களை இஸ்லாமிய குடியரசு பொறுத்துக்கொள்ளாது" என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை இரு நாடுகளுக்கும் பெரிதும், ஆழமாகப் பலனளிப்பதாக புரட்சித் தலைவர் குறிப்பிட்டார். திரு. புடினை நோக்கி “நீங்களும் எங்கள் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுப்பவர்கள் மற்றும் அதைப் பின்பற்றுபவர்கள். எனவே, இந்த காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உச்சத்தை எட்ட வேண்டும்” என்றார்.

ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ரஷ்ட்-அஸ்டாரா ரயில் பாதையைத் தொடங்குவதன் அவசியம் குறித்து ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கைகளுடன் தனது உடன்பாட்டை வெளிப்படுத்திய இமாம் கமேனி, இது வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதையை பூரணப்படுத்தி முடிக்க உதவும் என்றும் இரு நாடுகளுக்கும் சாதகமாக இருக்கும் என்றும் கூறினார்.

மேற்குலகின் ஏமாற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வைக் காட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் “அமெரிக்கர்கள் (ஆட்சியாளர்கள்) ஆக்கிரமிப்பு மற்றும் ஏமாற்றுக்காரர்கள். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்று அவர்கள் அமெரிக்க கொள்கைகளால் ஏமாற்றப்பட்டது. நிச்சயமாக, உங்கள் ஆட்சிக் காலத்தில் ரஷ்யா தனது சுதந்திரத்தை பாதுகாத்துள்ளது, என்றார்.

டாலருக்குப் பதிலாக தேசிய நாணயங்களுக்கு மாற்றுவது மற்றும் மற்ற நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான கொள்கையை தலைவர் தொட்டுகாட்டி, "உலகளாவிய பரிவர்த்தனைகளில் இருந்து டாலர் படிப்படியாக அகற்றப்பட வேண்டும், மேலும் இது காலப்போக்கில் சாத்தியமாகும்" என்றும் கூறினார்.

 

அமெரிக்க சேவகர்கள் என்று முத்திரை குத்தப்பட்டிருந்த அரபு நாடுகள் கூட டொலரை புறக்கணித்து ரியால், ரூபல், யுவான், திர்ஹம் என்று மாற தொடங்கி இருப்பதும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் உறவுகளை வளர்க்க தொடங்கியிருப்பதும் உலக அரசியல் அரங்கில் பேசுபொருளாக ஆகியுள்ளது.

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இங்கு உரையாற்றுகையில் உக்ரைனின் நிலைமை குறித்துப் பேசினார், “யாரும் போரை ஆதரிப்பதில்லை, சாதாரண மக்களின் மரணம் ஒரு பெரிய சோகம். எவ்வாறாயினும், மேற்குலகின் தீய நடவடிக்கைகளை தடுப்பதற்கு பதிலளிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான வேறுபாடுகளின் காரணங்கள் மற்றும் வேர்களை ரஷ்ய ஜனாதிபதி பட்டியலிட்டார். குறிப்பாக உக்ரேனில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி  ரஷ்யாவை நோக்கி முன்னேறுவதைத் தடுப்பதற்காகவும் முந்தைய வாக்குறுதிகளை மீறி நேட்டோவை விரிவுபடுத்தும் கொள்கை உட்பட சமீபத்திய ஆண்டுகளில் மேற்கு மற்றும் அமெரிக்கா எடுத்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எம்மை இந்த நிலைக்குத் தள்ளின. மேலும், “சில ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் உக்ரைன் உறுப்புரிமையை எதிர்ப்பதாகவும், ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் அதற்கு சம்மதித்ததாகவும் கூறியுள்ளனர். இது அவர்களின் அதிகாரமின்மை மற்றும் சுதந்திரமின்மையையே எடுத்துக்காட்டுகிறது".

ஜெனரல் சுலைமானியின் தியாகம் அமெரிக்காவின் வில்லத்தனத்திற்கு மற்றொரு உதாரணம் என்று விளாடிமிர் புடின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் அவர் தனது அறிக்கைகளில், “இந்தத் தடைகள் மேற்கத்திய நாடுகளுக்கு பாதகமாகவே அமையும், மேலும் அவை எண்ணெய் விலை உயர்வு, உணவு நெருக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வழிவகுக்கும்."

மற்ற நாடுகளை கொள்ளையடிப்பதற்கும் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் டாலரை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாணயத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு இது காரணமாய் அமையும், நிச்சயமாக இது அவர்களுக்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தும் என்று அவர் கூறினார், மேலும் இது மற்ற நாடுகளை மற்ற நாணயங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும். மேலும், அவர் விளக்கினார், "ரஷ்யாவும் ஈரானும் தங்கள் சொந்த நாட்டு நாணயங்களை தங்கள் உறவுகளில் பயன்படுத்த புதிய முறைகளை வகுத்து வருகின்றன."

காகசஸ் தொடர்பான இஸ்லாமியப் புரட்சித் தலைவரின் கருத்துக்களுடன் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தீய ரஷ்ய அதிபர் வடக்கு சிரியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிர்ப்பு உட்பட, சிரியா விவகாரத்தில் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் நிலைப்பாடுகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் இணக்கமானவை என்று ரஷ்ய ஜனாதிபதி கூறினார். "யூப்ரடீஸின் கிழக்கே உள்ள பகுதி சிரிய இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதாகத் தெரிவித்த ரஷ்ய அதிபர்  “சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக ஈரானும் ரஷ்யாவும் இணைந்து போராடி வருகின்றன. இராணுவத் துறையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அளவை அதிகரிக்க முயற்சிப்போம், மேலும் சீனாவுடனான முத்தரப்பு ஒத்துழைப்பையும், ராணுவ ஒத்துழைப்பையும் அதிகரிக்க முயற்சிப்போம், என்று கூறினார்.

https://english.khamenei.ir/news/9089/Dollar-must-be-removed-from-global-transactions

Monday, July 25, 2022

கண்டோவன் கிராமம்: பாறை கட்டிடக்கலை கொண்ட அற்புதமான கிராமம்

 Kandovan Village: A Village with Wonderful Rocky Architecture

கண்டோவன் என்பது ஈரானின் தப்ரிஸ் நகருக்கு அருகில், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஒரு அசாதாரண பழமையான கிராமமாகும். குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழைமையான இக்கிராமத்தில் 670 மக்களே வசிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகை அள்ளி வழங்கும் இக்கிராமத்தில் பாறைகளுக்குள் செதுக்கப்பட்ட வீடுகள் பார்ப்போரை வேறோர் உலகத்துக்கே அழைத்துச் செல்லும்.

கண்டோவன் கிராமம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வலுவான மவுண்ட் சஹாண்ட் வெடிப்பிலிருந்து எரிமலை எச்சங்களால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள சில வீடுகள் 700 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தம் கைகளால் குடைந்தும் செதுக்கியம் ஆனவை என்று நம்பப்படுகிறது.

இந்த இடம் வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள சபாலன் மலைத் தொடர் பகுதியில், சுல்தான் டாகி மலை அமைந்துள்ள ஒரு வியக்கத்தக்க கிராமம். கண்டோவன் கிராமம் அதன் அற்புதமான பாறை கட்டிடக்கலைக்கு பிரபலமானது,

இந்த கட்டிடக்கலை அனைத்து விதிகளையும் மீறும், கிராமத்தின் புதிராக தெரிகிறது மற்றும் பயணிகள் பொதுவாக அதன் நம்பமுடியாத சரிவுகள் மற்றும் சீரற்ற பாதைகளால் வசீகரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் அங்கு ஒரு ஹோட்டல் கட்டப்பட்டது, இந்த கிராமத்தின் இயல்பு நிலை மாறாத பாணியில் கட்டி, இணைக்கப்பட்டது. இந்த "ராக்கி ஹோட்டல்" (Rocky Hotel) மிகவும் வசதியான வாழ்க்கை இடங்களுடன் அழகான குகை உட்புறங்களைக் கொண்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் குன்றின் வீடுகளின் சமையலறைகள், அரங்குகள் மற்றும் வாழும் அறைகள் போன்ற ஒவ்வொன்றையும் கல்லால் செதுக்கி அறைகளுக்கு ஜன்னல்களை உருவாக்கி பின்னர் வண்ணமயமான கண்ணாடிகளால் அலங்கரித்துள்ளனர்.

கண்டோவன் கிராமம் மட்டுமே இன்றும் பயன்பாட்டில் உள்ள ஒரே குகை கிராமம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியர்களின் படையெடுப்பிலிருந்து சஹந்த் மலைகளின் சரிவுகளுக்கு தப்பிய கண்டோவன் மக்களின் குறிப்பிடத்தக்க தனித்துவமான கதையைச் சொல்கிறது. படையெடுப்பிலிருந்து தப்புவதற்காக மலைகளின் ஓரத்தில் வீடுகளை செதுக்கி இந்த புதிய நிலத்தில் குடியேறினர்.

துருக்கியின் கப்படோசியா மற்றும் கொலராடோவில் உள்ள அமெரிக்காவின் மனிடூ கிளிஃப் குடியிருப்புகளில் இதே போன்ற கட்டமைப்புகளைக் கொண்ட மற்ற இரண்டு கிராமங்கள் உள்ளன. இருப்பினும், இந்த இரண்டு கிராமங்களும் இனி வாழ்வதற்குப் பயன்பாட்டில் இல்லை, என்பதால் கந்தோவனத்தை உலகின் ஒரே குன்றின் கிராமமாக விட்டுச் செல்கின்றன.

ஈரானில் உள்ள மேமண்ட் கிராமம், மென்மையான பாறையில் செதுக்கப்பட்ட குகை குடியிருப்புகள் கொண்ட மற்றொரு பள்ளத்தாக்கு ஆகும். இந்த கிராமத்தில் சஹந்த் மலைத்தொடரில் எரிமலை வெடித்ததால் உருவாக்கப்பட்ட கூர்மையான பிரமிடு பாறைகள் அவற்றின் ஒழுங்கற்ற மேற்பரப்பில் துளைகளுடன் உள்ளன.

பாறைகள் ஹைவ் வடிவ செல்களைக் கொண்டுள்ளன, அவை கரன் என்றும் அழைக்கப்படுகின்றன. புவியியல் ஆய்வுகள் பாறைகளின் வயது 700 முதல் 1500 ஆண்டுகள் வரை காட்டுகின்றன.

வடமேற்கு ஈரானில் உள்ள கண்டோவன் என்ற பாறை கிராமம் (தப்ரிஸில் சுமார் ஒரு மணிநேர பயணம்) கப்படோசியாவின் மிகவும் பழமையான, குறைவான சன நெரிசல் கொண்ட பகுதியாக குறிப்பிடப்படுகிறது... மற்றும் சிறந்த தளமாக கருதப்படுகிறது.

இந்த குகை வீடுகளுக்குள் பார்வையிட பயணங்களை பதிவு செய்யலாம். உலகில் வேறு எங்கும் நீங்கள் காண முடியாத, வாங்க முடியாத  இனிப்புகள், நினைவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தேயிலை ஆகியவற்றை நீங்கள் வாங்கக்கூடியதாய் இருக்கும்; உள்ளூர்வாசிகள் உங்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பர்.

"கண்டோவன்" என்றால் தேன் கூடு என்று பொருள். கண்டோவன் குகை கிராமத்தின் வளைந்து நெளிந்து பாதையில் ஏறும் எந்த பயணியும் அந்த கிராமத்திற்கு மிகப்பொருத்தமான பெயரையே வைத்துள்ளார்கள் என்று வியப்பார்கள்.

ஒரு குகை கிராமத்தின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று உணர்வதற்கு கண்டோவினில் சில நாட்கள் அரியதொரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்பது நிச்சயம். பல குகை வீடுகள் பார்வையாளர்களுக்கு வாடகைக்கு கிடைக்கின்றன. இரண்டு மீட்டர் தடிமன் கொண்ட சுவர்கள் கோடையில் குளிர்ச்சியான காற்றைப் பாய்ச்சுவதற்கும், குளிர்காலத்தில் சூடான காற்றைப் தக்கவைக்கவும், நேர்த்தியான முறையில் அமைந்துள்ளன. ஆண்டின் எந்த நேரத்திலும் காண்டோவன் குகை வீட்டில் தங்குவதற்கும் காலநிலை ஏற்றதாக இருக்கும்.

கண்டோவன் குளிர்காலம் நீண்டதாய் இருக்கும், இது கிராமத்தை வெப்பமான மற்றும் குளிர்ந்த காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடியதாக அமையப்பெற்றுள்ளது. மேலும் எதிரிகளின் படையெடுப்பிலிருந்து தற்காப்பு தங்குமிடமாக மாற்றுகிறது. பொதுவாக, இந்தக் குகை வீடுகளில் பெரும்பாலானவை இரண்டு தளங்களைக் கொண்டிருக்கின்றன, சில சமயங்களில், உள்ளே இருந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று மற்றும் நான்கு தளங்களும் உள்ளன.

கிராமப்புற மக்கள் இந்த பாறைகளுக்குள் குடியிருப்பு பயன்பாட்டிற்காக வீடு, வீட்டு வரம்பு, கிடங்கு மற்றும் பட்டறை ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர். பல மாடி வீடுகள் மற்றும் படிக்கட்டுகள் பொதுவாக ஒவ்வொரு தளத்தையும் மற்றொரு தளத்துடன் இணைக்கும் நோக்கத்தில் உள்ளன. கிராமத்தில் பொது குளியல், பள்ளி, ஆலை, மசூதி என அனைத்து வசதிகளும் உள்ளன.

பயணிகளைக் கவரும் அருகிலுள்ள இடங்கள்

கண்டோவன் வீடுகளின் தனித்துவமான கட்டிடக்கலை மட்டுமல்ல. புவியியல் அம்சங்கள் காரணமாக, நோய்களைக் குணப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படும் பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. அழகிய பசுமையான பள்ளத்தாக்குகளில் நடைபயணம் மற்றும் இனிமையான வானிலை, அன்பான மக்களைப் பார்ப்பது, அற்புதமான சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது, சுத்தமான, ருசியான ஆர்கானிக் தேன் மற்றும் நாம் வாழ்க்கையில் கண்டிராத பழங்களை ருசிப்பதற்கு ஈரானின் வடமேற்கில் உள்ள கண்டோவன் ஒரு தகுதியான சுற்றுலாத் தலமாக உள்ளது. தப்ரிஸ் நகர் செல்வதாயின், கண்டிப்பாக தவறவிடக்கூடாத இடம் கண்டோவன் ஆகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.



Wednesday, July 20, 2022

ஈரானை ராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் துணிவோ வலிமையோ இஸ்ரேலுக்கு இல்லை

 Israel has neither the courage nor the strength to confront Iran militarily

தெஹ்ரானைத் தளமாகக் கொண்ட அரபு மொழி அல்-ஆலம் நியூஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில், ஈரானுக்கு எதிரான சமீபத்திய சியோனிச ஆட்சியின் அச்சுறுத்தல்கள் "உளவியல் போர்" மட்டுமே என்றும், ஈரானை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் தைரியமும் வலிமையும் சியோனிச ஆட்சிக்கு இல்லை என்றும் கூறினார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, ஈரானை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் தைரியமும் வலிமையும் சியோனிச இஸ்ரேலிய ஆட்சிக்கு இல்லை என்றும், எந்தத் தவறுக்கும் ஈரானின் பதிலடி பேரழிவை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய ஆட்சியின் எந்த முட்டாள்தனமான நடவடிக்கைக்கும் ஈரானின் பதில் பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் மேற்கு ஆசியப் பிராந்தியத்திற்கான விஜயம் ஈரானுக்கு எதிரான இராணுவக் கூட்டணியை உருவாக்கத் தவறிவிட்டது, ஏனெனில் பிராந்திய நாடுகள் அமெரிக்காவை நம்பவில்லை, என்றார்.

கடந்த பல தசாப்தமாகவே ஈரானை தாக்கப்போவதாக இஸ்ரேல் வாய்ச்சவடால் விட்டு வருகிறது, அதனது ஒரு சிறு நடவடிக்கையும் தற்கொலைக்கு சமனாகும் என்பதை அது அறியும்.

https://en.mehrnews.com/news/189236/Israel-not-dare-unable-to-face-Iran-militarily-FM-spokesman

இது இவ்வாறிருக்க,

மூத்த ஈரானிய தூதரக அதிகாரி கமல் கர்ராஸி, சியோனிச ஆட்சியுடன் தங்கள் உறவுகளை இயல்பாக்கியுள்ள நாடுகள் தொடர்பாக தனது மறைமுகமான குறிப்பில், எந்தவொரு அண்டை நாட்டிலிருந்தும் ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் இஸ்லாமிய குடியரசு தகுந்த பதிலளிக்கும் என்று கூறினார்.

ஈரானின் வெளிநாட்டு உறவுகளுக்கான மூலோபாய கவுன்சிலின் தலைவர் கமல் கர்ராஸி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அல் ஜசீரா செய்தி நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்தார்.

அண்டை நாடுகளில் இருந்து நமது பாதுகாப்பை குறிவைக்கும் பட்சத்தில், அந்த நாடுகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் மற்றும் இஸ்ரேலுக்கு நேரடியான பதில் கொடுக்கப்படும்,” என்று எச்சரித்தார்.

அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்பதாக தெஹ்ரான் வலியுறுத்தியுள்ளது, அதே நேரத்தில் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கும் மற்றும் ஆக்கிரமிப்பு சியோனிச ஆட்சியை பிராந்தியத்தில் காலூன்ற அனுமதிக்கும் நாடுகள், பலஸ்தீன் தொடர்பாக அவற்றின் துரோகத்தை தெளிவுபடுத்துகின்றன. மேலுமவர்களின் இந்த செயல் பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையைக் உருவாக்குகிறது.

எவ்வாறாயினும், சியோனிச ஆட்சி பலவீனமான கட்டத்தில் இருப்பதாகவும், ஆட்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஆதரவு, அதை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவர உதவப்போவதில்லை என்றும் கர்ராஸி கூறினார்.

"எங்கள் முக்கிய மற்றும் உணர்திறன் வசதிகள் குறிவைக்கப்பட்டால்" ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறனை வெளிப்படுத்தும் திறனை ஈரான் கொண்டுள்ளது, மேலும் விரிவான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளதாக கர்ராஸி கூறினார்.

நேர்காணலின் போது, முன்னாள் வெளியுறவு அமைச்சர் கர்ராஸி, சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து, கத்தார் மற்றும் பிற முக்கியமான நாடுகள் பங்கேற்கும் பிராந்திய பேச்சுவார்த்தைகளுக்கு தெஹ்ரான் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

பிராந்திய நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கத்தார் முக்கியமான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக தெஹ்ரான் தனது முழு தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூத்த இராஜதந்திரியின் கூற்றுப்படி, பிராந்திய நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு, பிராந்திய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மற்றும் மோதல்களுக்கு தீர்வு காண ஒரு பிராந்திய உரையாடல் மன்றத்தை உருவாக்குவதாகும்.

ஈரானுடன் நட்புறவின் கரம் நீட்டுவது குறித்து சவூதி அதிகாரிகளின் சமீபத்திய கருத்துக்களையும் கர்ராஸி வரவேற்றார், இருதரப்பு உறவுகளை இயல்புநிலைக்கு மீட்டெடுப்பதற்காக தெஹ்ரான் ரியாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்றார்.

ஈரானும் சவூதி அரேபியாவும் பிராந்தியத்தில் இரண்டு முக்கியமான நாடுகள் என்றும், அவை தமக்குள்ள உள்ள வேறுபாடுகளைத் தீர்ப்பது மேற்கு ஆசியாவில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.


சவூதியின் முக்கிய ஷியா உலமா ஷேக் நிம்ர் பகீர் அல்-நிம்ரை தூக்கிலிட்டதால் ஆத்திரமடைந்த ஈரானிய எதிர்ப்பாளர்கள் தெஹ்ரானில் உள்ள அதன் தூதரகத்தை தாக்கியதை அடுத்து, சவூதி அரேபியா ஜனவரி 2016 இல் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது.

ரியாத் 2020 ஆம் ஆண்டு வரை தெஹ்ரான் மீதான அதன் வெளிப்படையான மோதல் வெளியுறவுக் கொள்கையை மாற்றவில்லை.  அதன் பிறகு அது இருதரப்பு உறவுகளை சரிசெய்வதற்கான விருப்பத்தைக் காட்டத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 2021 முதல், பலம்வாய்ந்த இரண்டு பிராந்திய நாடுகளுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஈராக்கிய ஏற்பாட்டில் இடம்பெற்றது.

ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே பிராந்திய பதட்டத்தை தணிக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப தனது நாடு தொடர்ந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


"சவுதி-ஈரான் நல்லிணக்கத்திற்கு ஈராக் பங்களித்தது, மற்றும் நடத்தப்பட்ட பல அமர்வுகள் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன, மேலும் ஒரு பாரிய நல்லுறவு ஏற்பட்டது,” என்று ஈராக் பிரதமர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டுகளையும் கர்ராஸி நிராகரித்தார், யுரேனியம் செறிவூட்டலின் அளவை 20 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரிப்பது போன்ற தொழில்நுட்ப திறன்களை இஸ்லாமிய குடியரசு கொண்டுள்ளது.

"எங்கள் ஏவுகணைத் திட்டம் மற்றும் நமது பிராந்தியக் கொள்கைகள்" விட்டுக்கொடுப்பு பற்றி பேசுவதற்கான சாத்தியக்கூறுகளை கர்ராஸி நிராகரித்தார், இரண்டு விஷயங்களில் எமது நிலை மிக தெளிவானது. அதில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் எதிரிக்கு அடிபணிவதைக் குறிக்கும் என்று கூறினார்.

2015 ஈரான் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் குறித்து குறிப்பிடுகையில், இஸ்லாமிய குடியரசை நோக்கிய விரோதமான அமெரிக்கக் கொள்கைகள் காரணமாக அவநம்பிக்கையின் அடர்ந்த சுவரின் வெளிச்சத்தில் வாஷிங்டனுடன் நேரடி உரையாடலை நடத்துவது கடினம் என்றார்.

அதிகாரப்பூர்வமாக கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என அழைக்கப்படும் ஒப்பந்தம் மீட்டெடுக்கப்பட்டால், ஈரான் ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்து மதிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும், "இது சாத்தியமான உடன்படிக்கையைத் தடுக்கிறது" என்றும் அவர் கூறினார்.

ஜேசிபிஓஏ புத்துயிர் பெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தகர்த்தெறியும் முயற்சியில் ஈரானும் அமெரிக்காவும் கடந்த மாத இறுதியில் கத்தார் தலைநகர் தோஹாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியஸ்தத்தில் இரண்டு நாட்கள் மறைமுக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்தன.

பேச்சுவார்த்தையின் முடிவில், ஈரான் மற்றும் மத்தியஸ்தம் வகிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியம், "பாதையின் தொடர்ச்சி மற்றும் பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டம் பற்றி" அவர்களுடன் தொடர்பில் இருப்போம் என்று கூறினார்.


தெஹ்ரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தக் கொள்கை என்று அழைக்கப்படுவதைத் அமெரிக்கா திரும்பப் பெற மறுத்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஏழு சுற்று முடிவில்லாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தோஹாவில் பேச்சுக்கள் நடந்தன. அதன் சட்டவிரோத பொருளாதார தடை கொள்கையை அமேரிக்கா கைவிடாத வரை, இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிட்டும் என்று நம்ப முடியவில்லை.

https://kayhan.ir/en/news/104855/iran-has-drilled-hitting-zionists-deep-inside-occupied-lands