Saudi Arabia Drowning in Yemen - Ambassador
அரேபிய
தீபகற்ப வறிய, பலம் குன்றிய நாடான யெமனுக்கு எதிராக சவூதி அரேபியா தொடங்கிய பேரழிவுகரமான யுத்தத்தின் எந்த
நோக்கங்களையும் அது அடையத் தவறியதால் அதிலிருந்து வெளிவர வழி தெரியாது விழிபிதுங்கி தவிக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யேமன் மீது படையெடுப்பை கட்டவிழ்த்த போது சவுதிகள் பல உள்நாட்டு மற்றும் பிராந்திய இலக்குகளை அடைவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுவந்ததாக ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான யெமனிய தூதுவர் இப்ராஹிம் முஹம்மது அல்-தைலமி ஒரு பிரத்யேக நேர்காணலில் கூறினார்.
சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் - எம்.பி.எஸ் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் ஏமனுக்கு எதிரான இராணுவ பிரச்சாரத்தின் சூத்திரதாரி என்று கருதப்படுகிறது - ஆரம்பத்தில் "பிராந்தியத்தில் அமெரிக்க திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பிரதான முகவராக மாறுவதற்கும் பிராந்திய நிறுவனங்களை எதிர்கொள்வதற்கும் தனது நாட்டை ஒரு பிராந்திய சக்தியாக மாற்றுவதற்கும் திட்டமிட்டிருந்தார்" என்று அவர் கூறினார்.
"இருப்பினும், யேமனில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றம் சவுதிகளுக்கு ஒரு பிராந்திய சக்தியாகவும், அப்பகுதியில் அமெரிக்க-சியோனிச திட்டத்திற்கான முகவராகவும் மாறுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது, அவரது திட்டம் நிறைவேறியிருந்தால் அனைத்து மட்டங்களிலும் சியோனிச எதிரியுடன் உறவுகளை ஏற்படுத்த வழிவகுத்திருக்கும்", என்று அவர் கூறினார்.
அன்ஸாருல்லாஹ் போராளிகளின் பதில் தாக்குதல் இந்தளவு மூர்க்கமாகவும் தீர்க்கமாகவும் இருக்கும் என்று சவூதி ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
"அவர்கள் ஒரு சில வாரங்களில் அல்லது ஒன்று முதல் இரண்டு மாதங்களில் விரைவான வெற்றியை அடைய முடியும் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில், சவூதி அரேபியா யேமனில் தத்தளித்து மூழ்கி வருகிறது," என்றும் அவர் கூறினார்.
"அரேபியர்களின் பாதுகாப்பை காரணம்காட்டி, ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அதன் சாத்தானிய தந்திரோபாயங்களைப் கொண்டு பயமுறுத்திய போதிலும் அல்லது தனது இராணுவ பலத்தை காட்டுவதற்கும் எம்மீது படையெடுத்து பாதுகாப்பு வெற்றிகளைப் பெற முடியும் என்ற படத்தைக் காட்ட முயற்சித்த போதிலும், இன்று அது யேமனில் இருந்து புறமுதுகு காட்டி ஓடுகிறது, ஏனெனில் எம்மை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அது இழந்துவிட்டது."
"யேமனைப் பிளவுபடுத்துவதும், அதன் மக்களிடையே தேசத் துரோகத்தைத் தூண்டிவிடுவதும்" என்ற அதன் முக்கிய நோக்கத்தை அடைய சவூதி இராச்சியம் தவறிவிட்டது என்றாலும் யேமன் தேசம் இவர்களது இந்த ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்கொள்கிறது,"என்றும் யேமன் தூதர் மேலும் கூறினார்.
சவுதியின் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு ஐக்கிய அமேரிக்கா, பிரித்தானிய மற்றும் இஸ்ரேல் ஆகியன உடந்தை என்பதை அவை சவுதிக்கு வழங்கிவரும் நவீன ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் உளவுத்தகவல்கள் ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி குறிப்பிட்டார்.
யேமனில் உள்ள மனிதாபிமான நிலைமையை "கல்லறை" என்று விவரித தைலமி, சுதந்திரம் விரும்பும் அனைத்து மக்களுக்கும் சவுதிகளையும், எமிரேட்டுகள், அமெரிக்கர்கள், சியோனிஸ்டுகள் மற்றும் பிரிட்டிஷ் உட்பட அவர்களின் ஆதரவாளர்களையும் பொறுப்புக்கூற குரல் எழுப்ப வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.
றஸூலுல்லாஹ்வின் ஆசீர்வாதத்தைப் பெற்ற யேமென் நாட்டின் மீது தாக்குதலை நடத்துவதற்கு வூதி அரேபியா நியாயமான எவ்வித காரணத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் ரபு மன்சூர் ஹாடியின் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து அன்சாருல்லாவை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டு சவூதி அரேபியாவும் அதன் பல பிராந்திய நட்பு நாடுகளும் 2015 மார்ச் மாதம் பிராந்தியத்திலேயே வறிய நாடான யேமனுக்கு எதிராக பேரழிவு தரும் யுத்தத்தைத் தொடங்கின.
பல மேற்கத்திய நாடுகள், குறிப்பாக யு.எஸ்., பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும், ரியாத் ஆட்சிக்கு நவீன அழிவு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட மற்றும் உளவுத்துறை உதவிகளை வழங்குவதால் நடந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு அவையும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள Armed Conflict Location and Event Data Project (ACLED) என்ற ஒரு இலாப நோக்கற்ற மோதல்-ஆராய்ச்சி அமைப்பு, சவுதி தலைமையிலான போர் ஜனவரி 2016 முதல் 60,000 க்கும் மேற்பட்ட யேமன்களின் உயிரைக் கொன்றுள்ளதாக மதிப்பிடுகிறது.
இந்த யுத்தம் யேமென் நாட்டின் உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள், பாடசாலைகள் பள்ளிவாசல்கள் மற்றும் தொழிற்சாலைகளை போன்றவற்றிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 24 மில்லியனுக்கும் அதிகமான யேமனிகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா. கூறுகிறது.
சவுதியின்
இந்த ஈனச் செயலுக்கு எதிராக, நீதி நியாயத்தை
மதிக்கும் அனைத்து மக்களும் குரல் எழுப்பவேண்டும்.