Monday, May 31, 2021

சியோனிஸ்டுகள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டிய நேரம்

Time for Zionists to Go Back to Europe, America

Esmail Qaani


இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தங்கள் வீடுகளை மீட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) குத்ஸ் படையின் தலைவர் ஜெனரல் இஸ்மாயில் கானி சனிக்கிழமை தெரிவித்தார்.

இனிமேல், பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு எதிர்ப்பின் செய்தி என்னவென்றால், ‘உங்கள் திட்டங்கள் முழு பாலஸ்தீனத்தின் நிர்வாகத்துக்காக இருக்க வேண்டும்’ என்பதாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, சியோனிச ஆட்சி இந்த நிலம் இனி தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும், ”என்று ஜெனரல் கானி கூறினார்.

"ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் விற்ற வீடுகளுக்கு மீண்டும் சென்று உங்கள் சொந்த வீடுகளை வாங்குமாறு அனைத்து சியோனிஸ்டுகளுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்."

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சி மே 10 அன்று காசாவுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ஜெருசலேம் அல்-குத்ஸின் ஷேக் ஜார்ரா அருகிலுள்ள பல பாலஸ்தீனிய குடும்பங்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்ற திட்டமிட்டு அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் வழிபாட்டாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

முன் ஒருபோதும் இல்லாதவாறு காசாவிலிருந்து ராக்கெட்டுகள் மழையாய் கொட்டியது. இதனை இஸ்ரேல் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. வரலாற்றில் முதல் முறையாக சியோனிச ஆட்சி மே 21 அன்று ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை அறிவித்தது, பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்களும் எகிப்திய மத்தியஸ்தத்துடன் ஏற்றுக்கொண்டன.

"பாலஸ்தீனிய எதிர்ப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது, முதல் நாளிலிருந்தே, சியோனிச ஆட்சி இடைத்தரகர்கள் ஊடாக போரை நிறுத்துமாறு கேட்டு, பாலஸ்தீனியருக்கு அழுத்தம் கொடுக்குமாறு கெஞ்சியது," என்று கானி கூறினார்.

இம்முறை பாலஸ்தீனிய எதிர்ப்பு குழுக்களே முன் நிபந்தனைகளை வகுத்தது, இஸ்ரேலுக்கான அனைத்து கோரிக்கைகளையும் ஆணையிடும் வரை அவை விடவில்லை.

"இஸ்ரேலின் கெஞ்சலும் பாலஸ்தீனியர்கள் கை ஓங்கியிருந்ததும் ஊடகங்களில் வெளிவராததால் இது உங்களுக்கு சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கலாம். இதுவே சக்தி, வலிமை மற்றும் எதிர்ப்பின் சரியான வரையறையின் அடையாளமும் இஸ்ரேலுக்கு புரியும் மொழியுமாகும், என்று கானி தெரிவித்தார்.

https://kayhan.ir/en/news/90764/time-for-zionists-to-go-back-to-europe-america

ஐரோப்பாவில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டு, அகதிகளாக வந்தோரே பலஸ்தீனை அபகரித்துள்ள இன்றைய யூதர்களாகும். அவர்களுக்கென ஐரோப்பாவில் ஒரு நாட்டை அமைத்துக் கொடுப்பதே நியாயமாகும்.

ஐரோப்பாவில் யூதர்கள் சொல்லொனாத் துயரங்களுக்கு முகம் கொடுத்த போது, Gas chamber களில் கொல்லப்பட்ட போது பாலஸ்தீன அரபிகள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள், அரவணைத்தார்கள்.

காலப்போக்கில், ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கணக்கில் என்று வந்தவர்கள் இலட்சக்கணக்காக, மில்லியன் கணக்காக என்று மாறியது. அடைக்கலம் ஆக்கிரமிப்பாக மாறியது; அடைக்கலம் கொடுத்தவர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர் சொந்த நாட்டிலும் அதற்கு வெளியிலும் அகதிகளாக்கப்பட்டார்கள்.

அகதிகளைக் கூட சும்மா விட்டார்களா...? கொடுமை..... கொடுமை.

சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்காகப் போராடும் மக்களுக்குக் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது.

'60 வயது இஸ்ரேல் உலக வரைப்படைத்தில் இருந்து அழிக்கப்படும்' என்று ஈரானிய ஜனாதிபதி சொன்னதற்கு முழு ஐரோப்பாவும் கொதித்து எழுந்தது; ஆயிரம் வருடத்துக்குமேல் உலக வரைப்படத்தில் இருந்த பாலஸ்தீன் எங்கே என்று கேட்பதற்கு நாதியில்லை.

 

Sunday, May 23, 2021

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது

Message to the Palestinian nation for their victory over the Zionist regime

இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி 2021 மே 21 அன்று விடுத்த செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு: ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய தேசத்திற்கு எதிரான 12 நாள் போரில் ஹமாஸ் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த சித்தி விடுக்கப்படுகிறது.

அளவற்ற வற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய  அல்லாஹ்வின் திரு நாமத்தால்.

சக்திவாய்ந்த, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு எனது வாழ்த்துக்கள். தைரியமாகவும் வைராக்கியத்துடனும் போராடிய பாலஸ்தீனிய இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக  வீரத்துடன் போராடிய காஸா மக்களுக்கும் ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள அனைத்து ஜிஹாதிய மற்றும் அரசியல் குழுக்களுக்கும் வாழ்த்துக்கள்.

அவனுடைய உதவிகளை வழங்கியதற்காகவும், பாலஸ்தீனிய போராளிகளுக்கு அவன் அளித்த கௌரவத்திற்காகவும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இந்த போராட்டத்தில் துயரமடைந்தவர்களின் இதயங்களுக்கு பொறுமையையும் மன அமைதியையும் அளிக்கும்படி, தியாகிகள் மீது இறைவன் அவனுடைய அருளையும்  மகிழ்ச்சியான செய்திகளையும் வழங்குவதோடு காயமடைந்தவர்களை விரைவில் முழுமையாக குணப்படுத்துவதற்கும் நான் கருணை மிகு அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். கிரிமினல் சியோனிச ஆட்சிக்கு எதிரான இந்த வெற்றிக்காகவும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சோதனை பாலஸ்தீனிய மக்களை கௌரவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் அது சக்தியற்றது என்பதை காட்டுமிராண்டித்தனமான, ஓநாய் போன்ற எதிரி உணர்ந்துள்ளது.

இந்த சோதனையானது குத்ஸுக்கும் மேற்குக் கரைக்கும் காஸாவுக்கும் மற்றும் பாலஸ்தீனிய முகாம்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பே எதிர்கால தீர்வு என்பதை பாலஸ்தீனியர்களுக்கு உணர்த்தியுள்ளது.

கடந்த 12 நாட்களாக, சியோனிச வன்முறை ஆட்சி, பலஸ்தீனர்களுக்கு எதிராக, குறிப்பாக காஸாவில், பாரிய அநியாயங்களை செய்து வந்தது. பாலஸ்தீனியர்களின் ஒருங்கிணைந்த எழுச்சியை எதிர்கொள்ள அதனால் முடியாது என்பதையும் சியோனிஸ்ட்டுகளின் வெட்கமற்ற முட்டாள்தனமான நடத்தைகள் உலகின் பொதுக் கருத்தை அவர்களுக்கு எதிராகத் தூண்டுகிறது என்பதையும் அவர்கள் இப்போது நன்கு உணர்ந்திருப்பார்.

தமக்கும் தம்மை ஆதரிக்கும் மேற்கத்திய அரசாங்கங்களுக்கும், குறிப்பாக அநியாயக்கார அமெரிக்காவிற்கும் அவர்கள் தொடர்ச்சியாக செய்துவந்த குற்றங்களின் காரணமாக அவர்கள்மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது. சமாதானத்திற்கான அவர்களின் இப்போதைய கோரிக்கையும் சியோனிஸ்டுகளின் தோல்வியையே குறிக்கிறது. சியோனிஸ்டுகள் தோல்வியை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அநியாயக்கார ஆட்சி இன்னும் பலவீனமடையும்.

பாலஸ்தீனிய இளைஞர்களின் தயார்நிலை, மதிப்புமிக்க ஜிஹாதிய குழுக்கள் அவர்களது வல்லமையைக் காண்பித்தல் மற்றும் அதிகாரத்தின் கூறுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு பாலஸ்தீனத்தை நாளுக்கு நாள் வலுவடையச் செய்யும், மேலும் அது ஆக்கிரமிக்கும் எதிரியை பலவீனமடையச்செய்து, வெறுக்கத்தக்கதாகவும் மாற்றும்.

மோதல்களைத் தொடங்குவதற்கும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான நேரம் பாலஸ்தீனத்தின் ஜிகாதிய குழுக்களின் மற்றும் அரசியல் தலைவர்களின் விவேகத்தைப் பொறுத்தது. ஆனால் எப்போதும் தயார் நிலை மற்றும் களத்தில் ஒரு சக்திவாய்ந்த இருப்பைப் பராமரிப்பதை நிறுத்தாது தொடரவேண்டும். அநியாயக்கார ஆட்சியின் ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற கூலிப்படையினரை எதிர்ப்பதில் ஷேக் ஜர்ராவின் அனுபவம் பாலஸ்தீனத்தின் தைரியமான மக்களுக்கு ஒரு நிரந்தர செயல் திட்டமாக மாற வேண்டும். இதனை சிறப்பாக மேற்கொண்ட ஷேக் ஜார்ராவின் வீரம் மிக்க இளைஞர்களை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

பாலஸ்தீனிய பிரச்சினையை பொறுத்தவரை இஸ்லாமிய உலகம் முழுவதற்குமே தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புகள் மற்றும் மதக் கடமைகள் உள்ளன. அரசியல் பொது அறிவும் ஆளும் அனுபவமும் இந்த மதக் கட்டளையை வலியுறுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்து உள்ளன.

பாலஸ்தீனிய தேசத்தை இராணுவ மற்றும் நிதித் துறைகளில் ஆதரிக்க முஸ்லிம் அரசாங்கங்கள் ஆர்வத்துடன் களத்தில் இறங்க வேண்டும் - இது கடந்த காலத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது - மற்றும் காஸாவில் உள்ள அடித்தள கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பி  இடிபாடுகளை சரிசெய்ய உதவ முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகள் இந்த அழைப்புக்கு ஆதரவாக இருத்தல் வேண்டும். தங்கள் அரசாங்கங்களை இந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் வலியுறுத்த வேண்டும். தங்களால் இயன்றவரை நிதி மற்றும் அரசியல் ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு இந்த நாடுகளுக்கு உள்ளது.

மற்றொரு முக்கியமான பொறுப்பு என்னவென்றால், பயங்கரவாத, இரத்தவெறி கொண்ட சியோனிச ஆட்சி அதன் குற்றச்செயலுக்கு தண்டனை பெறும் விஷயத்தைத் தொடர வேண்டும். கடந்த 12 நாட்களில் பாலஸ்தீனிய குழந்தைகளை, பெண்களை மற்றும் முதியோரை படுகொலை செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்படாமல் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதை உலகில் மனசாட்சியுள்ள அனைத்து மக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நெதன்யாகு மற்றும் ஆக்கிரமிப்பு ஆட்சியின் முகவர்கள் அனைவரையும் விசாரிக்க சுயாதீனமான சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வேண்டும் மற்றும் அவர்கள் தண்டனைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் சக்தியைக்கொண்டு இது நிச்சயம் நடக்கும்

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

https://english.khamenei.ir/news/8502/Message-to-the-Palestinian-nation-for-their-victory-over-the 

Wednesday, May 19, 2021

யுத்தத்தின் வலி என்னவென்று இஸ்ரேலுக்கு இப்போது புரிந்திருக்கும்

 Israel now understands the pain of war


பயந்துபோன எனது 6 வயது மகனைப் பார்த்துக்கொண்டு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன், அவன்  காதுகளுக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு, இஸ்ரேலின் குண்டுவெடிப்பின் சத்தங்களைத் தடுக்க முயற்சிக்கிறார், எனது இரண்டு மகள்கள், 13 மற்றும் 10 வயது மற்றும் எனது மனைவி அதிர்ச்சியினால் உறைந்துபோயுள்ளனர். இந்த முகங்கள் இப்போது எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரியாத கவலையைக் காட்டுகின்றன. எனது இரண்டு மூத்த மகன்கள், 16 மற்றும் 15, திகைத்து, அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் காசா பகுதியில் முந்தைய மூன்று தாக்குதல்களின் நினைவுகளையும், நாங்கள் இழந்த குடும்ப உறுப்பினர்களையும் நினைவுபடுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். காஸா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினதும் உணர்வுகள் இவை.


பாலஸ்தீனியர்களான நாங்கள் பல தசாப்தங்களாக அவமானம், அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்களுடனேயே வாழ்ந்து வருகிறோம். 1948 இல், நாங்கள் எங்கள் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம்; 600 க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன; பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நிலைக்குழையப்பட்டனர் . கிட்டத்தட்ட எட்டு இலட்சம் பேர் உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர்.

இந்த அநியாயம் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன்னாலேயே நடந்தது. எங்கள் அசல் தாயகத்தின் ஐந்தில் ஒரு ஒரு பகுதியை ஒரு இறையாண்மை கொண்ட அரசாக எங்களுக்கு தருவதாக வாக்குறுதியளித்தனர். இரு மாநிலம் என்ற தீர்வை, வேறு வழியின்றி, பாலஸ்தீனியர்கள் 1990 களில் நம்பினர்.


இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வாக்குறுதியளிக்கப்பட்ட பாலஸ்தீன மாநிலத்தின் இன்றைய நிலைமைகளைப் பார்க்கிறோம், பாலஸ்தீனிய வீடுகளின் இடிபாடுகளில் கட்டப்பட்ட குடியேற்றங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான யூத குடியேற்றவாசிகளால் மேற்குக் கரை என்று பிரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம், நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீன மக்கள் நரகத்தில் வாழ்கின்றனர். இந்த நிலையை உருவாக்கியோர் யார்?

காஸா பகுதி 14 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகையின் கீழ் இருப்பதையே காண்கிறோம், இங்கு சகல அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது; அது மட்டுமல்லாமல், சனநெருக்கமான இந்த சிறிய பகுதியில் மூன்று பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது, அழித்தது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிழக்கு ஜெருசலம், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் புனிதமான தலமாகும்.அங்குள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, ஆக்கிரமித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

ஒரு வாரத்திற்கு முன்பு, பாலஸ்தீனிய குடும்பங்களின் அதிகமான வீடுகளை கைப்பற்ற முயன்ற இஸ்ரேலிய குடியேறிகள் ஷேக் ஜர்ராவைத் தாக்கத் தொடங்கினர். எல்லோரும் அதைப் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் யாரும் தலையிடவில்லை.

புனிதமான ரமலான் மாத மாலை ஒன்றில், (முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலமான) அல்-அக்ஸாவில் பிரார்த்தனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன வழிபாட்டாளர்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு செய்தது. இதன்போது இஸ்ரேல் அதன் இராணுவ சக்தியை மிருகத்தனமாக பயன்படுத்துவதை அனைவரும் பார்த்கொண்டு இருந்தார்கள். அதைத் தடுத்த நிறுத்த எவரும் முன்வரவில்லை.

ஷேக் ஜர்ரா மற்றும் புனித அல்-அக்ஸா வளாகத்தின் இஸ்ரேல் மேற்கொண்ட வன்முறைக் காட்சிகள் வரலாற்று பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாமல், உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பாலஸ்தீனியர்களின் உள்ளங்களில்  நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச்செய்துள்ளன.


இந்த சம்பவங்கள் எம்மை பொறுமையின் எல்லையைக் கடக்கச் செய்தன. அக்கா, ஜாஃபா, நஸரத் மற்றும் மேற்குக் கரையில் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம், ஜெரூஸலத்தில் நடந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டன. யுத்தத்தின் வலி என்னவென்று இஸ்ரேலுக்கு இப்போது புரிந்திருக்கும்.

டாக்டர் யாசர் அபு ஜமீ

https://www.counterpunch.org/2021/05/17/this-must-end/


Tuesday, May 18, 2021

டாக்டர் அபூஸர் இப்ராஹிமி துர்க்கமானின் உருக்கமான கோரிக்கை

Dr. Abuzar Ebrahimi Torkaman's message to the worlds religious leaders:


கண்ணியத்துக்குரிய மததலைவர்களே, மரியாதைக்குரிய சிந்தனையாளர்களே மற்றும் உலகின் சுதந்திரத்தை மதிக்கும் மக்களாகிய உங்களுக்கும் சத்தியத்தில் நாட்டம் கொண்டோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சந்தேகத்திற்கு இடமின்றி, எல்லா மனிதர்களும் அமைதி மற்றும் சமாதானச் சூழலில் வாழ வேண்டும் என்பது சர்வவல்லமையுள்ள இறைவனின் விருப்பம்; அது ஒரு தெய்வீக ஆசீர்வாதமுமாகும், இந்த இறை நாட்டம், துரதிர்ஷ்டவசமாக, சில அடக்குமுறை மற்றும் அநியாயம் புரிவோரால் மீறப்படுகிறது.

இந்த நாட்களில், சியோனிச ஆட்சி மீண்டும் அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் இரத்தத்தை சிந்துவதில் ஈடுபட்டுள்ளது என்பதை நாம்  கண்டுகொண்டு இருக்கிறோம். ஆச்சரியப்படும் விதமாக, இது ஒரு கொடூரமான செயல் என்று கூறும் நபர்களின் கண்களுக்கு முன்னாலேயே இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் காவலர்கள் என்று கூறிக்கொள்வோர் இந்த கொடூரமான குற்றங்களைக் கண்டும் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்கள்.

இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயல் உலக அமைதியை  நேசிக்கும் அனைத்து மக்களின் ஆத்மாக்களையும் காயப்படுத்தியுள்ளது. இந்த வெட்கக்கேடான செயலை எதிர்கொள்வதில் உலக மதத் தலைவர்கள் அலட்சியமாகவும் அமைதியாகவும் இருக்க மாட்டார்கள் என்றும் மிக அடிப்படையான மத போதனைகளுக்கு இணங்க, ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும், நடந்துகொண்டிருக்கும் இந்த குற்றச்செயலினால் எரியும் நெருப்பை அணைப்பதிலும் பயனுள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்.

அப்பாவி பொதுமக்கள் மீதான இந்த அப்பட்டமான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதை பார்த்துக்கொண்டு எந்தவொரு சுதந்திர மனிதனும் அமைதியாக இருக்க முடியாது. மேலும் இதனைத் தடுக்குமுகமாக மதத் தலைவர்கள் மற்றும் கலாச்சார பிரமுகர்களிடமிருந்து பன்மடங்கு  முயற்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை சொல்ல வேண்டியியதில்லை, மக்களது சுதந்திரத்தைக் காப்பது அவர்களது ஆளுமைப் பண்புடன் இணைந்த சிறப்பியல்பாகும்.

இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவரான கண்ணியத்துக்குரிய ஆயதுல்லா கமேனி அவர்கள் கூறியது போல, பாலஸ்தீனத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தி, பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டுமானால், தவறாக ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த பிரதேசங்களுக்கு பாலஸ்தீன அகதிகள் திரும்புவதன் மூலமும் அவர்களின் - யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் - கூட்டு முடிவிலும் அதன் நிர்வாகம் அவர்கள் கையில் ஒப்படைப்பதால்  மட்டுமே சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, பல்வேறு மதங்களிடையே அதிக புரிதலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்காக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கொள்கை வகுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, நான் அனைத்து மதத் தலைவர்களையும் கலாச்சார பிரமுகர்களையும் அழைக்கிறேன் பல மாபெரும் தீர்க்கதரிசிகளின் பிறப்பிடமாகவும் தோற்றத்தலமாகவும் இருக்கும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை கடுமையாக கண்டிப்பதுடன் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்த முக்கியமான விஷயத்தில் எங்களுக்கு உதவ சர்வவல்லமையுள்ள இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

டாக்டர் அபூஸர் இப்ராஹிமி துர்க்கமன்

ஈரான் இஸ்லாமிய குடியரசின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் உரையாடலுக்கான  கொள்கை வகுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்

===========

In the name of God, the Most Beneficent, the Most Merciful

Honorable Religions, Dignitaries, Respected Thinkers, and Free People of the World

My sincere greetings to you and all the truth-seekers.

Undoubtedly, it is God Almighty’s wish that all human beings should live in an atmosphere of peace and tranquility; a divine blessing that is, unfortunately, being violated by some people who are depriving others of blessing through oppression and crime.

We are, these days, being witness that the usurper Zionist regime is once again engaged in shedding the blood of innocent children, women, and civilians, and surprisingly, this cruel act is being carried out before the eyes of those who claim to be the champions of democracy and human rights and have yet remained silent vis-à-vis these atrocious crimes.

This human crime has wounded the souls of all the peace-loving people of the world, who for sure, expect that world religious leaders would not remain indifferent and silent in the face of this shameful act, and take effective action, in accordance with the most fundamental religious teachings, in defending the oppressed and extinguishing the blazing fire of this ongoing crime.

No free human being can remain silent in the face of blatant oppression and persecution, and it goes without saying that expectations from religious leaders and cultural personalities whose personality trait, characteristic and social status is earmarked with “freedom” are manifold.

It should be remembered that, as very rightly stated by the Supreme Leader of the Islamic Revolution, Ayatollah Khamenei, the establishment of lasting peace and security in Palestine will be possible only with the return of Palestinian refugees to the wrongly occupied territories and the collective decision of all its inhabitants - Jews, Christians, and Muslims - with regard to its administration and nothing else.

Therefore, as the Chairman of the Policy-Making and Coordination Council of the Interreligious Dialogue of the Islamic Republic of Iran, which has been working for years to promote greater understanding and cooperation among different religions, I call upon all religious leaders and cultural personalities to strongly condemn these barbaric crimes that are mercilessly going on in Palestine, the birthplace and origin of many great divine prophets, and take appropriate steps in fulfilling the religious and human duty that has been vested on them.

We pray to God Almighty to help us with regard to this important matter.

Dr. Abouzar Ebrahimi Torkaman

Chairman of the Policy-Making and Coordination Council of the Interreligious Dialogue of the Islamic Republic of Iran

 


Sunday, May 16, 2021

சியோனிஸ்ட்டுகளின் மிருகத்தனம் - கண்டிப்போம்

The Statement of the Center for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and Relations Organization on the Current Events in Palestine (Jerusalem and Gaza)

பாலஸ்தீனத்தில் (ஜெருசலம் மற்றும் காஸா) தற்போது இடம்பெற்றுவரும்  நிகழ்வுகள் குறித்த இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில்  உரையாடலுக்கான மையம் விடுத்த றிக்கை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் நாமத்தால்

கடந்த பல நாட்களாக பாலஸ்தீனிய நிலத்தில் புனிதத்தலங்களில் சியோனிஸ்ட்டுகள் மேற்கொண்டுவரும் மிருகத்தனமான படுகொலை, இரத்தக்களரி மற்றும் பேரழிவு அதிகரிப்பு மானுட உலகம் மீண்டும் கண்டுகொண்டு இருக்கிறது, 

இது வன்முறையாளர்களான சியோனிச தீவிரவாதிகளால் அல்-அக்ஸா புனித மஸ்ஜிதை (முஸ்லிம்களின் முதல் கிப்லா) இழிவுபடுத்தி, களங்கம் ஏற்படுத்தியதில் இருந்து தொடங்கியது  மிராஜ் (இஸ்லாமிய புனித நபி அவர்களின் இரவு பயணம் மற்றும் அவரது வான்  ஏற்றம்) பயணம் மேற்கொண்ட புனித மஸ்ஜித் மற்றும் குப்பத் அல்-சக்ரா (Dome of the Rock) மீதான தாக்குதல்கள் ஈத் அல்-பித்ர் கொண்டாட்டங்களின் போதும் தொடர்ந்தது.

சந்தேகத்திற்கு இடமின்றி, ஆபிரகாமிய மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பைத்துல் முகத்தஸ் அமைந்துள்ள இடமும் அதை சூழவுள்ள பிரதேசமும் போன்று உலகில் வேறு எந்த இடமும் முக்கியத்துவம் பெறவில்லை. மேலும் உலகின் ஏகத்துவ மதங்களை பின்பற்றும் அனைத்து மக்களும் மற்றும் சுதந்திரத்தை நாடும் அனைத்து மக்களும் இந்த புனித நகரத்தின் தலைவிதி மற்றும் அது இருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் குறித்து அக்கறை கொண்டுள்ளனர்.

பாலஸ்தீனத்துள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு மாத உண்ணாவிரதத்தின் உச்சத்தை குறிக்கும் ஈத் நாளில் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது சியோனிச ஆட்சியாளர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டனர், முற்றுகையிடப்பட்ட காஸாவில்  கொடூரமான முறையில்  குண்டுவீசி . தீர்க்கதரிசிகளின் நகரமான குத்ஸின் வீதிகளை இரத்தக்காடாக மாற்றினர். பாலஸ்தீனிய முஸ்லிம்களின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது தொடர்ந்தது. இந்தச்செயல் தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் கைகளை மீண்டும் கறைபடுத்தியது.

சியோனிச ஆட்சி மற்றும் ஜெருசலம் ஆக்கிரமிப்பாளரால் ஏற்பட்ட கொடூரமான மற்றும் மிருகத்தனமான குற்றங்களும் பேரழிவுகளும் முஸ்லிம்கள் மற்றும் உலகின் அனைத்து ஏகத்துவ மதங்களை பின்பற்றும் மற்றும் சுதந்திரத்தை நாடும் மக்களின் கவலை, துக்கம் மற்றும் கோபத்தை அதிகரித்துள்ளன என்பது வெளிப்படையானது.

பாலஸ்தீனத்தில் இஸ்லாம் மற்றும் பிற ஆபிரகாமிய மதங்களின் புனிதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதன் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், ஒடுக்கப்பட்ட குறிப்பாக புனித குத்ஸ் மற்றும் காஸா வாழ் பாலஸ்தீனிய முஸ்லிம்களுடன் அனுதாபத்தை பகிர்ந்துகொள்கிறோம்,

இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில்  உரையாடலுக்கான மையம், உலகின் அனைத்து மத மற்றும் கலாச்சார சமூகங்களுக்கும் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் குற்றங்களை கண்டித்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் ஆதரவை வழங்குவதன் மூலம் தங்கள் மத மற்றும் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

இது அடக்குமுறையை ஒழிப்பதிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதிலும் சந்தேகமின்றி, எல்லாம் வல்ல இறைவனின் திருப்தி உள்ளது எனபதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் உரையாடலுக்கான மையம்

15 May 2021

============

The Statement of the Center for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and Relations Organization on the Current Events in Palestine (Jerusalem and Gaza)

In the Name of God, the Most Beneficent, the Most Merciful

The human world has been once again witnessing the escalation of brutal massacre, bloodshed, and devastation in the holy and wounded Palestinian Land in the past several days, which began following the desecration of the Al-Aqsa Mosque - the first Qibla of the Muslims - and the Qubbat al-Ṣakhra (Dome of the Rock) and the point of the Mi’raj (the Night Journey of the Holy Prophet of Islam from Mecca to Al-Aqsa Mosque and his celestial ascension to the skies) by the violent Zionist extremists during the Eid al-Fitr celebrations.

Undoubtedly, no city in the world is of so much interest to the followers of Abrahamic religions as Bayt al-Muqaddas, and all monotheists and free people of the world are concerned about the fate of this holy city and the blessed land in which it is located.

The usurper rulers of oppressed Palestine, respond to the rightful protests of the Palestinian Muslims during the day of Eid, which marks the culmination of a month of fasting, with the brutal bombardment of the besieged city of Gaza. And the streets of Quds, the city of the divine prophets, has now become an ocean of blood, staining again the hands of the ones who murdered those very prophets.

It is obvious that the heinous and atrocious crimes committed and the catastrophes caused by the Zionist regime and the occupier of Jerusalem, are increasingly adding to the concern, sorrows, and anger of Muslims and all the pious and free people of the world.

While expressing its deep sorrow and grief over the insults against the sanctities of Islam and other Abrahamic religions in Palestine, and expressing sympathy with the oppressed Palestinian Muslims, especially the ones living in the Holy Quds and Gaza, the Center for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and Relations Organization, appeals to all religious and cultural communities of the world to fulfill their religious and humanitarian duties by condemning the crimes taking place in Palestine and extending their support to the oppressed.

It goes without saying and there can be no doubt, that the pleasure of God Almighty and peace in human conscience lies in eliminating oppression and providing justice for the oppressed.

Center for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and Relations Organization

15 May 2021



Friday, May 14, 2021

“அடுத்த 25 ஆண்டுகளில் சியோனிச ஆட்சி இருக்காது”

 Backing Palestine is top foreign policy priority: Velayati

There will be no Zionist rule in the next 25 years


1981-1997 வரை வெளியுறவு அமைச்சராக இருந்த வெலாயத்தி, ஈரான் இஸ்லாமிய குடியரசு பாலஸ்தீனியர்களுக்கு சொல்லாலும் செயலாலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டார்.

அலி அக்பர் வெலாயத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பலஸ்தீன் தொடர்பான வெபினாரில் உரையாற்றும் போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் "ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கைகளில் பாலஸ்தீன் பிரச்சினை மிக முக்கியமான மற்றும் முன்னுரிமை பெற்ற ஒன்றாகும்" என்று சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு உலக இஸ்லாமிய விழிப்புணர்வு மன்றம் நடத்திய வெபினாரில் வெலாயத்தி கூறினார்.

அரசியல் மற்றும் இராஜதந்திர அரங்குகளில் மட்டுமல்லாமல், உண்மையான செயற்பாட்டு ரீதியான மற்றும் [இஸ்ரேல்] எதிர்ப்பிலும் ஈரான் தனது பாலஸ்தீனிய சகோதரர்களுடன் அதே உணர்வை பகிர்ந்து கொள்கிறது, [ஜெருசலேம்] அல்-குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை ஈரான் பாலஸ்தீன தேசத்துடனும் எதிர்ப்புக் குழுக்களுடனும் உறுதியாக நிற்கும்" என்று தலைவரின் ஆலோசகரான வெலாயத்தி குறிப்பிட்டார்.

இன்று, சியோனிச ஆட்சிக்கு எதிராக பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் போராட்டக் 'களத்தில்' பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உத்திகள் காரணமாக, இந்த ஆக்கிரமிப்பாளர்களின் முயற்சி எதிர்கொள்ளப்படுகிறது; உள்ளே இருந்தும் கடுமையான சவால்கள் விடுக்கப்படுகின்றன" என்றும் அவர் கூறினார்.

லெபனான் மற்றும் காஸா பகுதிக்கு எதிரான போர்களில் சியோனிச ஆட்சி சந்தித்த தோல்விகள் மற்றும் சிரியாவில் அதன் தோல்வி ஆகியவை அடுத்த 25 ஆண்டுகளில் சியோனிச ஆட்சி இருக்காது" என்ற இஸ்லாமிய புரட்சியின் தலைவரின் கணிப்பை தெளிவாக நிரூபிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்,

"இந்த நூற்றாண்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்) Deal of the Century ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனவெறி சியோனிச ஆட்சியுடன் சில அரபு நாடுகள் உறவுகளை இயல்பாக்குவதானது தேசத்துரோகச் செயலாகும், என்று அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் அபரிமிதமான மக்கள் தெரிவித்திருந்திருந்தனர் என்று வெலாயத்தி கூறினார்.

இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது என்பது "நீறு பூத்த நெருப்பு போன்றது" என்றும், இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நாடுகளில் உள்ள மக்களது பரவலான எதிர்ப்பை அவை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

"மனித வரலாறு ஒருபோதும் கண்டிராத, சியோனிச குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் நீண்ட வன்முறை ஆக்கிரமிபை நாங்கள் இப்போது கண்டுக்கொண்டு இருக்கிறோம்,” என்று வெலாயத்தி சுட்டிக்காட்டினார்.

இருந்தாலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனிய குழுக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தையும் உறுதியையும் வெலாயத்தி வெகுவாகப் பாராட்டினார், இந்த போராட்டங்கள் இறுதியாக நிச்சயமாக வெற்றியைத் தரும் என்றும் "ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் விடுதலையை எதிர்காலத்தில் நிச்சயம் நாம் காண்போம்" என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினத்தை குறிக்கும் உரையில், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கமேனி, அமெரிக்காவின் உதவியுடன், ஒரு சில அரபு நாடுகள் சியானிஸ்ட்டுகளுடன் உறவை சீராக்கியதானது இஸ்ரேலிய ஆட்சியின் வீழ்ச்சியின் மற்றொரு அறிகுறியாகும் என்றும் "ஆக்கிரமிப்பின் முதல் நாளிலிருந்து, சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை ஒரு பயங்கரவாத தளமாக மாற்றினர். இஸ்ரேல் ஒரு நாடு அல்ல, மாறாக அது பாலஸ்தீனிய தேசத்திற்கும் பிற முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான பயங்கரவாத முகாம்" என்று கூறியதையும் வெலாயத்தி ஞாபகப்படுத்தினார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினது தரகு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2020 செப்டம்பரில், இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். அதன் பிறகு இந்த ஒப்பந்தத்தில் பஹ்ரைன் கையெழுத்திட்டது, அதைத் தொடர்ந்து மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சியோனிஸ்டுகளுடன் உறவை சீராக்கின. இது உலக முஸ்லிம் மக்களின் சீற்றத்தைத் தூண்டின.

உலகளாவிய விமர்சனங்களை மீறி, டிரம்ப் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலம் அல்-குத்ஸுக்கு டிசம்பர் 2017 இல் இடமாற்றம் செய்தார், ஆக்கிரமிக்கப்பட்ட புனித நகரமான ஜெரூசலத்தை இஸ்ரேலின் "தலைநகரம்" என்று அழைத்தார்,.

ட்ரம்பின் வெளிப்படையான இந்த ஆதரவால் துணிந்து, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ட்ரம்ப் பதவியில் இருந்த காலத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தில் புதிய குடியேற்ற அலகுகளை நிர்மாணிப்பது உட்பட மிகவும் கண்டிக்கப்பட்ட அதன் கொள்கைகளை இஸ்ரேல் முன்னெடுத்தது.

குறிப்பிட்ட வெபினாரில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாசர் அபு ஷெரீப் உரையாற்றுகையில் சில அரபு ஆட்சிகள் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது, தற்போதைய கட்டத்தில் முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தான பிரச்சினை என்று விவரித்தார்.

யெமன் நாட்டின் தலைமை முப்தி ஷம்ஸ் அல்-தின் முஹம்மது ஷரஃப் அல்-தின், The Yemeni Grand Mufti the scholar Shams al-Din Sharaf al-Din உரையாற்றுகையில் சியோனிச ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்கியதற்காக சில அரபு ஆட்சிகளைக் கண்டித்தது மட்டுமல்லாமல், பாலஸ்தீனம் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது அதை விடுவிக்கும் பொறுப்பு எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மார்ச் 2015 முதல் சவுதி தலைமையிலான கூட்டு ராணுவம் தமது நாட்டிற்கு எதிராக முழுமையான போர் ஒன்றைத் தொடுத்து, முற்றுகையிட்டு இருக்கும் நிலையிலும், பாலஸ்தீனிய விடுதலைக்கான யெமன் மக்களின் முழுமையான ஆதரவை முப்தி மீண்டும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் துணைத் தலைவர் முகமது அல் ஹிந்தி உரையாற்றுகையில் சியோனிஸ்டுகளுடன் உறவுகளை இயல்பாக்கிய அந்த அரபு ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து அரபு மக்களும் இறுதியாக கிளர்ச்சி செய்வர் என்று கூறினார். இஸ்ரேல் ஒரு நாடு அல்ல, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிரதேசங்களை அபகரித்து ஆளும் குற்றவாளிக் கும்பல்கள் என்பதை வலியுறுத்தினார்.

பாலஸ்தீனிய இஸ்லாமிக் ரிஸிஸ்டண்ட்  இயக்கத்தின் பிரதிநிதி காலித் அல்- கத்தூமி Khaled al- Qaddumi, தனது அறிக்கையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான அதன் தொடர்ச்சியாக ஆதரவுக்காக ஈரானிய அரசாங்கத்தையும் மக்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

கத்தூமி தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படைகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. ஷேக் ஜர்ரா உட்பட ஜெருசலேம் அல்-குத்ஸில் உள்ள பாலஸ்தீனிய குடும்பங்களை தங்கள் மூதாதையர் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயன்றுவருகின்றன, கிழக்கு அல்-குத்ஸின் ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் உள்ள பாலஸ்தீனிய வீடுகளை படைகள் தாக்கிய ஆத்திரமூட்டல்கள் இன்னும் ஆபத்தான திருப்பத்தை எடுத்தன. இதற்கு நாம் பதிலடி லொடுத்து வருகின்றோம் என்றார்.

ஜெருசலேம் அல்-குத்ஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய பிரதேசங்களை யூதமயமாக்கும் திட்டத்திற்கு சியோனிஸ்ட் ஆட்சியை கத்தூமி கண்டித்தார்.அல்-அக்ஸா மஸ்ஜிதை இழிவுபடுத்துவதன் மூலமும், பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களைக் கொல்வதன் மூலமும் இஸ்ரேல் அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுவதையும் விடுவிப்பதற்கும்  பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடவும் முஸ்லிம்களின் தீர்க்கமான நிலைப்பாட்டுக்காக கத்தூமி அழைப்பு விடுத்தார்.

புனித ரமழான் மாதத்தின் தொடக்கத்திலிருந்து, இஸ்ரேலிய படைகளும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அச்சுறுத்தும் விதமாக நகரத்தில் சுற்றித் திரிந்து வருகின்றனர், பாலஸ்தீன எதிர்ப்பு கோஷங்களை எழுப்புகிறார்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் கூடி தங்கள் மதக் கடமைகளைச் செய்வதைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய ஆட்சி அல்-குத்ஸின் பழைய நகரத்தின் பாப் அல்-அமூத் (டமாஸ்கஸ் கேட்) ஐ மூடியதானது, பாலஸ்தீனியர்களை மேலும் கோபப்படுத்தியது.

பாலஸ்தீனிய இன்திபாதா ஆதரவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான் உரையாற்றுகையில் பழைய நகரமான ஜெருசலம் அல்-குத்ஸில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீதான இஸ்ரேலிய வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் கட்டாயம் இந்த "பயங்கரவாத மற்றும் போலி" டெல் அவிவ் ஆட்சியின் குற்றங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அல்-குத்ஸ் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜித் பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு இஸ்லாமிய பாராளுமன்றங்களை, குறிப்பாக இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடாளுமன்றங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


சியோனிச ஆட்சியின் படைகள் அல்-அக்ஸா மஸ்ஜிதின் கதவுகளை மூடி பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களைத் தாக்கியதாக செய்தி வட்டாரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டன.அறிக்கையின்படி
, அல்-அக்ஸா மஸ்ஜிதின் முற்றத்திற்குள் சியோனிச ஆட்சியின் படைகள் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான  அடக்குமுறை இஸ்ரேலின் வழக்கமாகிவிட்டது. ஜெருசலத்தில் இருந்து முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்ற கடும் முயற்சில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் Rupert Colville வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் இந்த செயல் "பலவந்தமான இடப்பெயர்ச்சி அபாயத்திற்கு வழிவகுக்கும் மேலும் அது போர்க்குற்றங்களுக்கு காரணமாக அமையலாம், ஆகவே இஸ்ரேல் இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

https://www.tehrantimes.com/news/460811/Backing-Palestine-is-top-foreign-policy-priority-Velayati

தூது சார்பாக அபிமானிகள் அனைவருக்கும் 

ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்

ஈத் முபாரக்