Backing Palestine is top foreign policy priority: Velayati
There will be no Zionist rule in the next 25 years
1981-1997 வரை வெளியுறவு அமைச்சராக இருந்த வெலாயத்தி, ஈரான் இஸ்லாமிய குடியரசு பாலஸ்தீனியர்களுக்கு சொல்லாலும் செயலாலும் தொடர்ந்து ஆதரவளிக்கும்
என்று குறிப்பிட்டார்.
அலி அக்பர் வெலாயத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பலஸ்தீன் தொடர்பான வெபினாரில்
உரையாற்றும் போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் "ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கைகளில் பாலஸ்தீன் பிரச்சினை மிக முக்கியமான
மற்றும் முன்னுரிமை பெற்ற ஒன்றாகும்" என்று சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு
உலக இஸ்லாமிய விழிப்புணர்வு மன்றம் நடத்திய வெபினாரில் வெலாயத்தி கூறினார்.
“அரசியல் மற்றும் இராஜதந்திர
அரங்குகளில் மட்டுமல்லாமல்,
உண்மையான செயற்பாட்டு ரீதியான மற்றும் [இஸ்ரேல்] எதிர்ப்பிலும் ஈரான் தனது பாலஸ்தீனிய
சகோதரர்களுடன் அதே உணர்வை பகிர்ந்து கொள்கிறது, [ஜெருசலேம்] அல்-குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை ஈரான்
பாலஸ்தீன தேசத்துடனும் எதிர்ப்புக் குழுக்களுடனும் உறுதியாக நிற்கும்" என்று தலைவரின் ஆலோசகரான வெலாயத்தி குறிப்பிட்டார்.
“இன்று, சியோனிச ஆட்சிக்கு எதிராக
பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் போராட்டக் 'களத்தில்' பயன்படுத்தப்படும் பாதுகாப்பு
உத்திகள் காரணமாக,
இந்த ஆக்கிரமிப்பாளர்களின்
முயற்சி எதிர்கொள்ளப்படுகிறது; உள்ளே இருந்தும் கடுமையான
சவால்கள் விடுக்கப்படுகின்றன" என்றும் அவர் கூறினார்.
லெபனான் மற்றும் காஸா பகுதிக்கு எதிரான போர்களில் சியோனிச ஆட்சி சந்தித்த தோல்விகள்
மற்றும் சிரியாவில் அதன் தோல்வி ஆகியவை “அடுத்த 25 ஆண்டுகளில் சியோனிச ஆட்சி இருக்காது" என்ற இஸ்லாமிய புரட்சியின் தலைவரின் கணிப்பை தெளிவாக நிரூபிக்கின்றன என்று அவர்
குறிப்பிட்டார்,
"இந்த நூற்றாண்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்) Deal of the Century ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனவெறி சியோனிச ஆட்சியுடன் சில அரபு நாடுகள் உறவுகளை
இயல்பாக்குவதானது தேசத்துரோகச் செயலாகும்”, என்று அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில்
அபரிமிதமான மக்கள் தெரிவித்திருந்திருந்தனர் என்று வெலாயத்தி கூறினார்.
இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது என்பது "நீறு பூத்த நெருப்பு போன்றது"
என்றும், இன்னும் கொஞ்ச காலத்தில்
அந்த நாடுகளில் உள்ள மக்களது பரவலான எதிர்ப்பை அவை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
"மனித வரலாறு ஒருபோதும் கண்டிராத,
சியோனிச குற்றவாளிகளால்
மேற்கொள்ளப்படும் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் நீண்ட வன்முறை ஆக்கிரமிபை நாங்கள்
இப்போது கண்டுக்கொண்டு இருக்கிறோம்,” என்று வெலாயத்தி சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு
எதிரான பாலஸ்தீனிய குழுக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தையும் உறுதியையும் வெலாயத்தி
வெகுவாகப் பாராட்டினார், இந்த போராட்டங்கள் இறுதியாக
நிச்சயமாக வெற்றியைத் தரும் என்றும் "ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் விடுதலையை
எதிர்காலத்தில் நிச்சயம் நாம் காண்போம்" என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினத்தை குறிக்கும் உரையில், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கமேனி, அமெரிக்காவின் உதவியுடன்,
ஒரு சில அரபு நாடுகள்
சியானிஸ்ட்டுகளுடன் உறவை சீராக்கியதானது இஸ்ரேலிய ஆட்சியின் வீழ்ச்சியின் மற்றொரு அறிகுறியாகும்
என்றும் "ஆக்கிரமிப்பின் முதல்
நாளிலிருந்து, சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை
ஒரு பயங்கரவாத தளமாக மாற்றினர். இஸ்ரேல் ஒரு நாடு அல்ல, மாறாக அது பாலஸ்தீனிய தேசத்திற்கும் பிற முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான பயங்கரவாத
முகாம்" என்று கூறியதையும் வெலாயத்தி ஞாபகப்படுத்தினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினது தரகு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக
2020
செப்டம்பரில், இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆகும். அதன் பிறகு இந்த ஒப்பந்தத்தில் பஹ்ரைன் கையெழுத்திட்டது, அதைத் தொடர்ந்து மொராக்கோ
மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சியோனிஸ்டுகளுடன் உறவை சீராக்கின. இது உலக முஸ்லிம்
மக்களின் சீற்றத்தைத் தூண்டின.
உலகளாவிய விமர்சனங்களை மீறி,
டிரம்ப் அமெரிக்க தூதரகத்தை
டெல் அவிவிலிருந்து ஜெருசலம் அல்-குத்ஸுக்கு டிசம்பர் 2017 இல் இடமாற்றம் செய்தார், ஆக்கிரமிக்கப்பட்ட புனித நகரமான ஜெரூசலத்தை
இஸ்ரேலின் "தலைநகரம்" என்று அழைத்தார்,.
ட்ரம்பின் வெளிப்படையான இந்த ஆதரவால் துணிந்து, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ட்ரம்ப் பதவியில் இருந்த காலத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தில் புதிய குடியேற்ற அலகுகளை நிர்மாணிப்பது உட்பட மிகவும் கண்டிக்கப்பட்ட அதன் கொள்கைகளை இஸ்ரேல் முன்னெடுத்தது.
குறிப்பிட்ட வெபினாரில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும்
நாசர் அபு ஷெரீப்
உரையாற்றுகையில் சில அரபு ஆட்சிகள் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது, தற்போதைய கட்டத்தில்
முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தான பிரச்சினை என்று விவரித்தார்.
யெமன் நாட்டின் தலைமை முப்தி ஷம்ஸ் அல்-தின் முஹம்மது ஷரஃப் அல்-தின், The Yemeni Grand Mufti the scholar Shams al-Din Sharaf al-Din உரையாற்றுகையில் சியோனிச ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்கியதற்காக சில அரபு ஆட்சிகளைக் கண்டித்தது மட்டுமல்லாமல், பாலஸ்தீனம் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது அதை விடுவிக்கும் பொறுப்பு எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ளது என்று குறிப்பிட்டார்.
மார்ச் 2015
முதல் சவுதி தலைமையிலான
கூட்டு ராணுவம் தமது நாட்டிற்கு எதிராக முழுமையான போர் ஒன்றைத் தொடுத்து, முற்றுகையிட்டு இருக்கும்
நிலையிலும், பாலஸ்தீனிய விடுதலைக்கான
யெமன் மக்களின் முழுமையான ஆதரவை முப்தி மீண்டும் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் துணைத் தலைவர் முகமது அல் ஹிந்தி உரையாற்றுகையில் சியோனிஸ்டுகளுடன் உறவுகளை இயல்பாக்கிய அந்த அரபு ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து அரபு மக்களும் இறுதியாக கிளர்ச்சி செய்வர் என்று கூறினார். இஸ்ரேல் ஒரு நாடு அல்ல, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிரதேசங்களை அபகரித்து ஆளும் குற்றவாளிக் கும்பல்கள் என்பதை வலியுறுத்தினார்.
பாலஸ்தீனிய இஸ்லாமிக் ரிஸிஸ்டண்ட் இயக்கத்தின் பிரதிநிதி காலித் அல்- கத்தூமி Khaled al- Qaddumi, தனது அறிக்கையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான அதன் தொடர்ச்சியாக ஆதரவுக்காக ஈரானிய அரசாங்கத்தையும் மக்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
கத்தூமி தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படைகள் வன்முறையில்
ஈடுபட்டு வருகின்றன. ஷேக் ஜர்ரா உட்பட ஜெருசலேம் அல்-குத்ஸில் உள்ள பாலஸ்தீனிய குடும்பங்களை
தங்கள் மூதாதையர் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயன்றுவருகின்றன, கிழக்கு அல்-குத்ஸின் ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் உள்ள பாலஸ்தீனிய வீடுகளை படைகள்
தாக்கிய ஆத்திரமூட்டல்கள் இன்னும் ஆபத்தான திருப்பத்தை எடுத்தன. இதற்கு நாம் பதிலடி
லொடுத்து வருகின்றோம் என்றார்.
ஜெருசலேம் அல்-குத்ஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய
பிரதேசங்களை யூதமயமாக்கும் திட்டத்திற்கு சியோனிஸ்ட் ஆட்சியை கத்தூமி கண்டித்தார். “அல்-அக்ஸா மஸ்ஜிதை இழிவுபடுத்துவதன்
மூலமும், பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களைக்
கொல்வதன் மூலமும் இஸ்ரேல் அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுவதையும் விடுவிப்பதற்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பிற்கு
எதிராகவும் போராடவும் முஸ்லிம்களின் தீர்க்கமான நிலைப்பாட்டுக்காக கத்தூமி அழைப்பு
விடுத்தார்.
புனித ரமழான் மாதத்தின் தொடக்கத்திலிருந்து, இஸ்ரேலிய படைகளும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அச்சுறுத்தும் விதமாக நகரத்தில்
சுற்றித் திரிந்து வருகின்றனர்,
பாலஸ்தீன எதிர்ப்பு கோஷங்களை
எழுப்புகிறார்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் கூடி தங்கள் மதக் கடமைகளைச் செய்வதைத் தடுக்க
முயற்சிக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில்,
இஸ்ரேலிய ஆட்சி அல்-குத்ஸின்
பழைய நகரத்தின் பாப் அல்-அமூத் (டமாஸ்கஸ் கேட்) ஐ மூடியதானது, பாலஸ்தீனியர்களை மேலும் கோபப்படுத்தியது.
பாலஸ்தீனிய இன்திபாதா ஆதரவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான் உரையாற்றுகையில் பழைய நகரமான ஜெருசலம் அல்-குத்ஸில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீதான இஸ்ரேலிய வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் கட்டாயம் இந்த "பயங்கரவாத மற்றும் போலி" டெல் அவிவ் ஆட்சியின் குற்றங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அல்-குத்ஸ் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜித் பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு
இஸ்லாமிய பாராளுமன்றங்களை,
குறிப்பாக இஸ்லாமிய மற்றும்
ஆசிய நாடாளுமன்றங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சியோனிச ஆட்சியின் படைகள் அல்-அக்ஸா மஸ்ஜிதின் கதவுகளை மூடி பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களைத் தாக்கியதாக செய்தி வட்டாரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டன.அறிக்கையின்படி, அல்-அக்ஸா மஸ்ஜிதின் முற்றத்திற்குள் சியோனிச ஆட்சியின் படைகள் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.
ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் பாலஸ்தீனர்களுக்கு
எதிரான அடக்குமுறை இஸ்ரேலின் வழக்கமாகிவிட்டது. ஜெருசலத்தில் இருந்து
முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்ற கடும் முயற்சில் ஈடுபட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் Rupert Colville வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் இந்த செயல் "பலவந்தமான இடப்பெயர்ச்சி அபாயத்திற்கு வழிவகுக்கும் மேலும் அது போர்க்குற்றங்களுக்கு காரணமாக அமையலாம், ஆகவே இஸ்ரேல் இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
https://www.tehrantimes.com/news/460811/Backing-Palestine-is-top-foreign-policy-priority-Velayati
தூது சார்பாக அபிமானிகள் அனைவருக்கும்
ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்
No comments:
Post a Comment