Israel now understands the pain of war
பயந்துபோன எனது 6 வயது மகனைப் பார்த்துக்கொண்டு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன், அவன் காதுகளுக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு, இஸ்ரேலின் குண்டுவெடிப்பின் சத்தங்களைத் தடுக்க முயற்சிக்கிறார், எனது இரண்டு மகள்கள், 13 மற்றும் 10 வயது மற்றும் எனது மனைவி அதிர்ச்சியினால் உறைந்துபோயுள்ளனர். இந்த முகங்கள் இப்போது எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரியாத கவலையைக் காட்டுகின்றன. எனது இரண்டு மூத்த மகன்கள், 16 மற்றும் 15, திகைத்து, அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் காசா பகுதியில் முந்தைய மூன்று தாக்குதல்களின் நினைவுகளையும், நாங்கள் இழந்த குடும்ப உறுப்பினர்களையும் நினைவுபடுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். காஸா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினதும் உணர்வுகள் இவை.
இந்த அநியாயம் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன்னாலேயே நடந்தது. எங்கள் அசல் தாயகத்தின் ஐந்தில் ஒரு ஒரு பகுதியை ஒரு இறையாண்மை கொண்ட அரசாக எங்களுக்கு தருவதாக வாக்குறுதியளித்தனர். இரு மாநிலம் என்ற தீர்வை, வேறு வழியின்றி, பாலஸ்தீனியர்கள் 1990 களில் நம்பினர்.
காஸா பகுதி 14 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகையின் கீழ் இருப்பதையே காண்கிறோம், இங்கு சகல அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது; அது மட்டுமல்லாமல், சனநெருக்கமான இந்த சிறிய பகுதியில் மூன்று பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது, அழித்தது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிழக்கு ஜெருசலம், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் புனிதமான தலமாகும்.அங்குள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, ஆக்கிரமித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.
ஒரு வாரத்திற்கு முன்பு, பாலஸ்தீனிய குடும்பங்களின் அதிகமான வீடுகளை கைப்பற்ற முயன்ற இஸ்ரேலிய குடியேறிகள் ஷேக் ஜர்ராவைத் தாக்கத் தொடங்கினர். எல்லோரும் அதைப் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் யாரும் தலையிடவில்லை.
புனிதமான ரமலான் மாத மாலை ஒன்றில், (முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலமான) அல்-அக்ஸாவில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன வழிபாட்டாளர்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு செய்தது. இதன்போது இஸ்ரேல் அதன் இராணுவ சக்தியை மிருகத்தனமாக பயன்படுத்துவதை அனைவரும் பார்த்கொண்டு இருந்தார்கள். அதைத் தடுத்த நிறுத்த எவரும் முன்வரவில்லை.
ஷேக் ஜர்ரா மற்றும் புனித அல்-அக்ஸா வளாகத்தின் இஸ்ரேல் மேற்கொண்ட வன்முறைக் காட்சிகள் வரலாற்று பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாமல், உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பாலஸ்தீனியர்களின் உள்ளங்களில் நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச்செய்துள்ளன.
டாக்டர் யாசர் அபு ஜமீ
https://www.counterpunch.org/2021/05/17/this-must-end/
No comments:
Post a Comment