Monday, December 27, 2021

முஸ்லிம் நாடுகளை வதைக்கும் சவூதி அரேபியா...!

Despotism Defeats Democracy


பணக்கார அரபு சர்வாதிகாரத்திற்கு பணமில்லா ஜனநாயகம் பரிதாபகரமாக பணிந்தது.

இன்றைய உலகில், மக்களை ஏமாற்றுவதற்காக, வார்த்தை ஜாலம் புரியும் சந்தேகத்திற்கு இடமில்லாத பல சர்வாதிகாரிகள் கூட ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்வது ஒரு ஃபேஷனாகிவிட்டது.

அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சியினரோ அல்லது எதிர்கட்சியினரோ எந்த ஜனநாயக அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பிறப்புரிமை மற்றும் ஜனநாயகத்தைக் கோரும் மக்களைக் கொன்று குவிக்கும் வெறித்தனமான சர்வாதிகாரிகளை இவ்விரு தரப்பினரும் தீவிரமாக ஆதரிக்கின்றனர், எனினும் ஒடுக்கும் சர்வாதிகார ஆய்ச்சியாளர்களை ஜனநாயகவாதிகளாக காட்டி, பெருமை காட்டுவதில் மட்டும் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை.

மக்களை அடக்கி ஒடுக்கும் பஹ்ரைன் ஷேய்க் தன்னை ஒரு ஜனநாயகத்தின் காவலர் போல் காட்டிக்கொள்கிறார்.

எகிப்தில், அந்த நாட்டின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்து, மோசடியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ராணுவ ஜெனரல், தன்னை ஒரு சர்வாதிகாரி என்று காட்டிக்கொள்ளாமல் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர் என்றும் தன்னைக் காட்டிக் கொள்கின்றார்.

அரபு உலகில் வெட்கம் கெட்ட சர்வாதிகாரிகள் உள்ளனர், அவர்கள் மக்களின் உரிமைகளை ஒருபோதும் மதிப்பதும் இல்லை, ஜனநாயகம் என்ற கருத்தையே அவர்கள் வெறுக்கிறார்கள், ஜனநாயக பற்றி பேசுவோரை சிறையில் அடைக்கிறார்கள். அவர்கள் மோசடியாக சேர்த்துள்ள செல்வங்களைக் கொண்டு எதிர்மறையான செல்வாக்கைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்குவது கிடையாது. ஜனநாயகத்தின் சில வடிவங்களை ஓரளவு கொண்ட சக அரபு நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது அவர்களது வாடிக்கையாய் மாறியுள்ளது.

லெபனான் மீது ஏற்றுமதியை தடையை விதித்ததன்  மூலம், லெபனான் மற்றும் அதன் ஜனநாயக நிறுவனங்களின் மீது பிராந்தியத்தின் மூர்க்கத்தனமான குல, மதவெறி மற்றும் சர்வாதிகார ஆட்சியான சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட லெபனான் தகவல் அமைச்சரான ஜார்ஜ் கோர்டாஹியை பதவி நீக்கம் செய்ய, சவுதியின் அழுத்தம் பிற நாடொன்றின் உள்விவகாரத்தில் தலையிடும் செயலாகும்.

ஒரு சகோதர நாட்டின் மீது சவூதி அரேபியா இவ்வாறு நடந்துகொள்வது ஏன்?

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது ஆய்வாளராக கலந்துகொண்ட கோர்டாஹி, லெபனான் இடைக்கால அமைச்சரவையில் சேர்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு யெமன் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சவுதி-எமிரேட்ஸ் இணைந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தாராம், யெமன் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பேச்சு வார்த்தை மூலம் பிணக்கை தீர்ப்பதற்கு அழைப்பு விடுத்து பேசினாராம், இரு சகோதர அண்டை நாடுகளுக்கு இடையிலான சண்டையில் அமெரிக்கா-இஸ்ரேல் தலையிடுவதையும் கண்டித்திருந்தாராம்.

இந்த அழுத்தத்தின் காரணமாக அமெரிக்க ஆதரவுடன் லெபனானை பணயக்கைதியாக வைத்திருக்கும் பணக்கார அரபு சர்வாதிகாரத்திற்கு பணமில்லா ஜனநாயகம் பரிதாபகரமாக பணிந்தது.

லெபனானின் சுதந்திர ஊடகங்கள் என்று அழைக்கப்படும் ஒரு சில பத்திரிகைகள் மற்றும் உண்மையான சுதந்திரமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் கோர்டாஹியை ஆதரித்து, மக்கள் உரிமைகளை மதிப்பதாகக் கூறினாலும், துரதிர்ஷ்டவசமாக, சவூதி அரேபியாவின் சர்வாதிகார அழுத்தத்திற்கு மற்றும் மக்களை பிரதிநிதித்துவபடுத்தாத அரபு மன்னர்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பணிந்தன.

சவூதியின் வாரிசு MBS (முகமது பின் சல்மான்) சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய லெபனான் பிரதமர் ச'அத் அல்-ஹரிரியை வரவழைத்து, அவரை நிர்பந்தித்து தனது ராஜினாமாவை தொலைக்காட்சியில் அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தியதையும் இந்த கட்சியினர் மறந்துவிட்டனர்.

மன்னர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிவதாயின் லெபனானின் ஜனநாயக மாண்பு எங்கே? தேர்தல்கள், வாக்குப்பெட்டிகள், அரசியல் கட்சிகள், மக்கள் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்கு என்ன நேர்ந்தது? மற்றும் தற்போதைய நிகழ்வுகளின் வெளிப்படையான மற்றும் நேரடியான பகுப்பாய்வுகளின் அர்த்தங்களுக்கு என்னவாயிற்று.?

கோர்டாஹி விவகாரத்தில் லெபனான் ஜனநாயகத்தை தோற்கடித்த பாரசீக வளைகுடா சர்வாதிகாரம் இப்போது அப்பாவிகளின் இரத்தத்தை கோருகிறது.

சமீபத்தில், லெபனானின் உள்துறை அமைச்சர் பஸ்ஸாம் மவ்லவி, பஹ்ரைனின் அடக்குமுறை ஆல்-இ கலீஃபா சிறுபான்மை ஆட்சியின் அழுத்தத்தின் பேரில், தனது நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை கேலிக்குள்ளாக்கினார். மக்களின் பிறப்புரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஜனநாயகக் கோரிக்கையை எழுப்பியதற்காக  லெபனானில் புகலிடம் பெற்றிருந்த பஹ்ரைனின் பிரபலமான அல்-வெஃபாக் கட்சியின் உறுப்பினர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இது ஏனெனில், கடந்த டிசம்பர் 11 அன்று, பஹ்ரைனின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான தங்கள் குறைகளை தெரிவிக்க, தெற்கு லெபனான் நகரங்களில் ஒன்றில் பஹ்ரைன் மக்களின் இந்த ஒடுக்கப்பட்ட குழு செய்தி மாநாட்டை நடத்தியதாகும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அரபு நாடுகளில் உள்ள தங்கள் சர்வாதிகார வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து, ஜனநாயக ஆட்சியின் சாயல் கொண்ட லெபனான் கூட தலைவணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அளவிற்கு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது வருத்தமாக இல்லையா?

பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் மக்கள் ஆதரவற்ற மற்றும் பிரதிநிதித்துவமற்ற, இந்த இழிந்த பணக்கார ஆட்சிகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்தது கேவலம் இல்லையா...?

https://kayhan.ir/en/news/98082/despotism-defeats-democracy

Friday, December 24, 2021

இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமெய்னி கிறிஸ்தவர்களுக்கு 1979ம் ஆண்டு விடுத்த புரட்சிகர கிறிஸ்துமஸ் செய்தி

Imam Khomeini, the founder of the Islamic Republic, delivered a revolutionary Christmas message to Christians in 1979. 


இமாம் கொமெய்னி 1979ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது விடுத்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தியில், அன்பையும் அமைதியையும் பரப்பிய மற்றும் நீதியை நிலைநாட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்ட சர்வவல்லமையுள்ள இறைவனின் தூதராக இயேசு நாதர் இருந்தார் என்று கூறினார்.

ஈரானின் அனைத்து மத சிறுபான்மையினரும் தங்கள் மத மற்றும் சமூக நடவடிக்கைகளைச் செய்ய சுதந்திரம் உடையவர்கள் என்று இமாம் கொமெய்னி வலியுறுத்தினார், மேலும் இஸ்லாமியக் குடியரசு அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதை அதன் கடமையாகக் கருதுகிறது; ஈரானிய முஸ்லிம்களைப் போலவே அவர்களும் ஈரானியர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள். (Sahifeh-ye-Imam, Vol.4, page 419)

இஸ்லாமிய அரசாங்கம் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு ஜனநாயக அரசாங்கம் என்றும், அதன் கீழ், அனைத்து மத சிறுபான்மையினருக்கும் சமமான முழுமையான சுதந்திரம் உள்ளது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் இமாம் கோமேனி கூறினார். ( Sahifeh-ye-Imam, Vol.4, பக்கம் 390)

இமாம் கொமெய்னி, இயேசு நாதரைப் பின்பற்றுபவர்களையும், கிறிஸ்தவ உலகத்தையும் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சி பெறுமாறும், காலனித்துவ மற்றும் சுரண்டும் சக்திகளின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை எதிர்கொள்வதற்கு ஏகத்துவக் கொடியின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்தார்.

டிசம்பர் 24, 1979 அன்று உலக கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி இமாம் கொமெய்னி வெளியிட்ட மிகவும் பிரபலமான செய்திகளில் இதுவும் ஒன்றாகும். வரலாற்றுச் செய்தியில் கூறப்பட்ட சில விடயங்கள் பின்வருமாறு:

உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிறிஸ்தவ நாடுகளுக்கும், ஈரானிய கிறித்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

ஏசு கிறிஸ்து ஒரு சிறந்த தூதராக இருந்தார், அவரது நோக்கம் நீதியையும் கருணையையும் நிலைநிறுத்துவதாகும், மேலும் அவர் தனது பரலோக வார்த்தைகளாலும் செயல்களாலும் கொடுங்கோலர்களைக் கண்டித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தார்.


பாதிரியார்களே, மதகுருமார்களே, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களே, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக உலகில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள், இறைவனுக்காகவும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்காகவும், ஈரானில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அடக்குமுறையாளர்களைக் கண்டித்தும் உங்கள் தேவாலயங்களில் ஒரு முறை மணியோசை எழுப்புங்கள்

நீதிக்காகப் பசியாகவும் தாகமாகவும் இருப்பவர்கள், நீதிக்காகப் போராடுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

இயேசு கிறிஸ்து மற்றும் அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்கு எதிராக செயற்படும், தேசங்களின் உரிமைகளை பறிக்கும் ஒடுக்குபவர்களுக்கும் மற்றும் அவர்களது ஒற்றர்களுக்கும் கேடுதான்.

கிறிஸ்துவின் தேசமே, இயேசுவைப் பின்பற்றுபவர்களே, எழுந்து, இறைவனின் ஆவியானவரான இயேசு கிறிஸ்துவின் கண்ணியத்தையும், கிறிஸ்தவ தேசத்தையும் பாதுகாத்து, தெய்வீக போதனைகளின் எதிரிகளையும், தெய்வீக கட்டளைகளை நிறைவேற்றுங்கள்; உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் மற்றும் அதன் மதகுருமார்கள் பற்றிய தவறான எண்ணத்தை ஊட்ட எதிரிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.


தேவாலயங்களில் வல்லரசுகளின் தலைவர்களின் பிரசன்னம் அல்லது அவர்களின் உளவாளிகள் மற்றும் அவர்களுக்காக துரோகமிழைப்போர் செய்யும்  பிரார்த்தனைகளால் ஏமாந்துவிடாதீர்கள்.

இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தெய்வீக போதனைகளுக்கு எதிரான, மக்களை அடக்கி ஆள அதிக பலம் அல்லது உலகின் மேலாதிக்கத்தை பெறவேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வேண்டுவதில்லை. அடக்குமுறையாளர்களின் இந்த பாசாங்குத்தனத்தால் ஈரானிய தேசம் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது.

மேலும், உலகில் ஒடுக்கப்பட்டவர்களே, அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட உறுதி கொள்ளுங்கள், மேலும், உலகில் ஒடுக்கப்பட்டவர்களே, அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட எழுந்து ஒன்றுபடுங்கள், ஏனெனில் பூமி இறைவனுடையது, அதன் வாரிசுகள் ஒடுக்கப்பட்ட மக்களே அன்றி வேறில்லை.

====

ஈரானில் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்றாகும். அவர்களின் மத விதிகளின்படி தமது வாழ்க்கையையே அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.  கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் ஆர்மீனிய மரபுவழி ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பின்பற்றும் ஆர்மீனியர்கள் அல்லது கிழக்கின் அசிரிய தேவாலயத்தைப் பின்பற்றும் அசீரியர்கள். ஆவர் .ஆர்மீனியர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள், அவர்கள் எபிபானியையும் (Epiphany), மற்ற கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இருப்பினும், இந்த பண்டிகை நிகழ்வின் அரவணைப்பும், அழகும் ஆண்டின் கடைசி மாதத்தில் குளிர்காலத்தின் உறையும் குளிரையும் பொருட்படுத்தாது அடுத்த மாதம் ஜனவரி 6 ஆம் திகதி வரை அனைவரையும் ஈர்த்துவிடும்.

இத்தினத்தை குறிக்குமுகமாக கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மிகவும் உற்சாகமாக கழிப்பர். கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வர்.

ஈரானின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 1% க்கும் குறைவானவர்கள் என்றாலும், மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பு ரீதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முஸ்லிம்களுடன் ஒருபோதும் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவர்களது மதத்தைப் பின்பற்ற பூரண உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பல கிறிஸ்த்தவ தேவாலயங்கள் அரச செலவில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 21, 2021

அமெரிக்க நலன்களுக்கு ஈரானியர்கள் சேவை செய்ய வேண்டுமாம்

US and West ‘waged decades of war on Iran by other means’: Analyst

அமெரிக்கா மற்றும் மேற்கு 'ஈரான் மீது பல தசாப்த காலப் போரை வேறு வழிகளில் நடத்திவருகின்றன': ஆய்வாளர்

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானின் மீது பல தசாப்தங்களாக வேறு வழிகளில் போர் தொடுத்துள்ளனஅமெரிக்க எழுத்தாளரும் அரசியல் வர்ணனையாளருமான ஸ்டீபன் லெண்ட்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

2015ல் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் (JCPOA) அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான பேச்சுக்கள் "நன்றாக நடக்கவில்லை" என்று கடந்த வெள்ளியன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, சனிக்கிழமையன்று பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் லென்ட்மன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் நடத்திய நிகழ்வில் சல்லிவன் கூறுகையில், "நாம் விரும்பும் விதத்தில் பேச்சுவார்த்தை செல்லாததால் [கூட்டு விரிவான செயல் திட்டத்திற்கு (JCPOA)] திரும்புவதற்கான பாதையில் நாம் இன்னும் இல்லை என்று கூறியிருந்தார்.

வியன்னாவில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை மேசையில் "சில முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக சல்லிவன் கூறினார், ஆனால் 2018 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதிலிருந்து ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை "முன்னோக்கி" நகர்த்தியுள்ளது.

"JCPOA உடன்படுக்கைக்கு திரும்புவது பரஸ்பர இணக்கத்திற்கு திரும்புவதன் மூலம் அந்த திட்டத்தை மீண்டும் ஒரு கட்டத்திற்குள் கொண்டுவருவது, இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் பார்க்க விரும்புவதை விட கடினமானது நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று சல்லிவன் கூறினார். "2018 இல் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவது என்ற (புத்திசாலித்தனமற்ற) பேரழிவு முடிவின் பிரதிபலனையே நாங்கள் அனுபவிக்கின்றோம்"

JCPOA வில் இருந்து மே 2018 இல் ட்ரம்ப் வெளியேறினார். டிரம்ப் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை குறிவைத்து "அதிகபட்ச அழுத்தம்" பிரச்சாரம் ஒன்றை அமுல்படுத்தினார், இது ஈரானின் நிலையை மேலும் கடினமாக்கியது, ஒரு "புதிய ஒப்பந்தத்தை" செய்வதற்கு ஈரானை இணங்கச்செய்து,  பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தத் தவறியது.

ஈரான் மற்றும் JCPOA வில் மீதமுள்ள ஐந்து தரப்பினர் - ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா - ஆகியவற்றுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒப்பந்தத்திற்குத் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்ததை அடுத்து, பொருளாதாரத் தடைகளை அகற்றும் நோக்கத்துடன் ஏப்ரல் மாதம் ஆஸ்திரிய தலைநகரில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இதற்கிடையில், ஈரானின் சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச்செல்லும் தலைவர் அலி பாக்கரி கானி கடந்த வெள்ளிக்கிழமை 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூன்று ஐரோப்பியத் தரப்பினரும், "தீவிரமான, முடிவு சார்ந்த" பேச்சுக்களுக்கு தெஹ்ரானின் கண்ணோட்டத்தை அடிப்படையாக ஏற்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், தெஹ்ரான் மீது விதிக்கப்பட்ட அமெரிக்க தடைகளை நீக்கி ஒப்பந்தத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் பலதரப்பு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மீதமுள்ள ஐந்து நாடுகள் உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்குகையிலேயே பாக்கரி கானி மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வேகம் எதிர் தரப்பின் விருப்பத்தைப் பொறுத்தது. "ஈரான் இஸ்லாமிய குடியரசின் நியாயமான கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை மறுபுறம் ஏற்றுக்கொண்டால், புதிய சுற்று பேச்சுவார்த்தை பயனளிப்பதாக இருக்கும், மேலும் குறுகிய காலத்தில் நாம் ஒரு ஒப்பந்தத்தை அடைய முடியும்." என்றார்.

லேண்ட்மன் "JCPOA பேச்சுக்கள் வியன்னாவில் எங்கும் இலக்கை நோக்கி செல்வதாகத் தெரியவில்லை, அது ஈரான் மீதான நீண்டகால அமெரிக்க/மேற்கத்திய விரோதப் போக்கை பிரதிபலிக்கிறது. இந்த ஆட்சிகள் எல்லாவற்றையும் கோருகின்றன, பதிலுக்கு எதையும் வழங்கவில்லை, ஆனால் இவர்களது வெற்று வாக்குறுதிகள் மீறப்படும்" என்று கூறினார்

ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சியின் பின்னர், நாட்டையும் அதன் மக்களையும் அமெரிக்காவின் ஆதிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்ததில் இருந்து இவ்வாறுதான் இருந்து வருகிறது. போரை விரும்பும் இரு வலதுசாரி கட்சிகளும் ஈரானில் தாம் இழந்ததை மீண்டும் பெற விரும்புகின்றன. அவர்கள் ஈரானின் அபரிமிதமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்ய சாதாரண ஈரானியர்கள் சுரண்டப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஈரான் மீது பல தசாப்தங்களாக பல்வேறு வழிகளில் போரை நடத்தி வருகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

"JCPOA ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே ஒபாமா / பிடென் ஆட்சி அதை மீறியது," என்று அவர் கூறினார்.

"வெள்ளை மாளிகையில் வஞ்சகத்தைக் கட்டுப்படுத்தும் கடும்போக்குவாதிகளுக்கு, பாதுகாப்பு கவுன்சில் 2231 தீர்மானத்தினால் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றும் எண்ணம் இல்லை. — அதன் மேலாதிக்கப் பிரிவின் கீழ் ஒப்பந்தம் சர்வதேச மற்றும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் பிணைக்கப்படுவதைப் புறக்கணிக்கிறது" என்று ஆய்வாளர் கூறினார்.

"வியன்னா பேச்சுக்களில் எட்டப்படும் முடிவு என்னவாக இருந்தாலும் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் நீண்டகால நோக்கத்தை மாற்ற முடியாது. இஸ்லாமிய குடியரசின் மீதான போர் சாத்தியமில்லை என்றாலும், அது தற்செயலாக அல்லது வடிவமைப்பால் இடம்பெறக்கூடும், ஏனெனில் அமெரிக்காவின் அடக்கி ஆளும் கொள்கை அதை நோக்கியே தள்ளும்” என்று அவர் கூறினார்.

https://www.presstv.ir/Detail/2021/12/18/672940/US-and-West-%E2%80%98waged-decades-of-war-on-Iran-by-other-means%E2%80%99

Tuesday, December 14, 2021

பாரசீக சிற்றோவியம் : ஓர் அற்புத கலைப்படைப்பு

Persian Miniature: A wonderful work of art

ஒரு பாரசீக சிற்றோவியம் என்பது, தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கின் பகுதியிலிருந்து மத அல்லது புராணக் கருப்பொருள்களை சித்தரிக்கும் ஒரு துல்லியமான ஓவிய வடிவமாகும். பாரசீக சிற்றோவியக் கலை 13 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை செழித்து வளர்ந்தது, இன்றுவரை தொடர்கிறது, பல சமகால கலைஞர்கள் குறிப்பிடத்தக்க பாரசீக சிற்றோவியங்களை உருவாக்குகின்றனர். இந்த நுட்பமான, பசுமையான ஓவியங்கள் நிபுணத்துவமிக்க கைகளினால் மற்றும் மிக நுண்ணிய தூரிகை மூலம் மட்டுமே அடையக்கூடிய துல்லியமான விவரங்களின் நிலை, பொதுவாக பார்ப்பவரை பிரமிக்க வைக்கும்,

இந்த ஓவியம் ஒரு புத்தக விளக்கப்படமாக இருந்தாலும் அல்லது அத்தகைய படைப்புகளின் ஆல்பத்தில் வைக்கப்படும் ஒரு தனி கலைப் படைப்பாக இருந்தாலும் சரி, அது பாரசீக பாரம்பரியத்தின் தோற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒளியேற்றப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் உள்ள சிற்றோவியங்கள் மேற்கத்திய மற்றும் பைசண்டைன் மரபுகளுடன் இந்த நுட்பங்கள் பரவலாக ஒப்பிடப்படுகின்றன.


சுவர் ஓவியம் பாரசீக பாரம்பரியத்தில் சமமாக நன்கு நிறுவப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சிற்றோவியங்கள் நீண்ட காலம் நீடித்து, பாதுகாப்பாக இருக்கும் நிலை இன்னும் சிறப்பாக உள்ளது, இதன் காரணமாக, பாரசீக சிற்றோவியங்கள் மேற்குலகில் மிகவும் பிரபலமான கலை வடிவமாகும்.

பாரசீக சிற்றோவியங்கள் பல அம்சங்களில் தனித்துவமானவையாகும். முதலாவது விவரத்தின் அளவு மற்றும் நிலை; இந்த ஓவியங்களில் பல மிகச் சிறியவை, ஆனால் அவை வியத்தகு, சிக்கலான காட்சிகளைக் கொண்டுள்ளன, அவை பார்வையாளரை மணிக்கணக்கில் வசீகரிக்கும். பாரம்பரியமாக, ஒரு பாரசீக சிற்றோவியம் தங்கம் மற்றும் வெள்ளி தகடுகளில் உயிர்துடிப்புள்ளவையாக வரையப்பட்டு இருக்கும், மேலும் கண்கவர் வண்ணங்கள் மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டவையாகவும் இருக்கும்.

ஆரம்பத்தில், பாரசீக சிற்றோவியங்கள் கையெழுத்துப் பிரதிகளுக்கான புத்தக ஒளியேற்றப்பட்ட விளக்கப்படங்களாகவே அமைந்திருந்தன. ஒரு பாரசீக சிற்றோவியம் சொல்லும் விடயம் மிகவும் புதிரானதாக இருக்கும், மேற்கத்திய கலையின் தோற்றத்திற்கும் உணர்விற்கும் பழக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புரிவதற்கு சங்கடமாக உணரும் விதங்களில் கூறுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து மேலெழுதப்பட்டவையாக அமைந்திருக்கும்.

ஒரு சிற்றோவியம் வரைந்து முடிப்பதற்கு சில சமயங்களில் ஒரு வருடம் வரை எடுத்துக்கொள்வதால், அதிக விலைக்கு விலைபோகும்; செல்வந்த புரவலர்களால் மட்டுமே இந்த சிற்றோவிய விளக்கப்படங்களை வாங்க முடியும். காலப்போக்கில், மக்கள் இந்த கலைப் படைப்புகளை தாங்களாகவே சேகரிக்கத் தொடங்கினர், அவற்றை தனித்தனி புத்தகங்களாக பாதுகாத்து வைக்கலாயினர். இந்த சேகரிப்புகளில் பல, ஈரானின் புகழ்பெற்ற கம்பளங்கள் போன்று, பாரசீக கலையின் எடுத்துக்காட்ட்டாக அதிர்ஷ்டவசமாக இன்றுவரை உயிர்வாழ்கின்றன,

பாரசீக சிற்றோவியங்கள் அநேகமாக சீனக் கலையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம், ஆரம்ப உதாரணங்களில் காணப்படும் பாரசீக சிற்றோவியங்கள் சில சீனக் கருப்பொருள்கள் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். ஆரம்பகால பாரசீக கலையில் சித்தரிக்கப்பட்ட பல புராண உயிரினங்கள், உதாரணமாக, சீன புராணத்தில் உள்ள விலங்குகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இருப்பினும், காலப்போக்கில், பாரசீக கலைஞர்கள் தங்கள் சொந்த பாணி மற்றும் கருப்பொருள்களை உருவாக்கினர், மேலும் பாரசீக சிற்றோவியங்கள் அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பல ஆசிய கலை அருங்காட்சியகங்கள் தங்கள் சேகரிப்பில் பாரசீக சிற்றோவியங்களைக் கொண்டுள்ளன, மேலும் இந்த தனித்துவமான கலை வடிவத்தின் எடுத்துக்காட்டுகளை நேரில் கண்ணால் பார்ப்பது அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகும். பாரசீக சிற்றோவியம் ஒன்றை ஒருவர் எவ்வளவு நேரம் பார்க்கின்றாரோ அவ்வளவு விவரங்களும் கருப்பொருள்களும் வெளிப்படும். ஒரு சிற்றோவியத்தைப் பற்றிய ஆய்விற்கு ஒரு நாள் முழுவதும் எடுக்கும், பல விவரங்களை அறிய கிடைக்கும், மேலும் பல அருங்காட்சியகங்கள் அவற்றின் பாரசீக சிற்றோவியங்களில் உள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் கருப்பொருள்களுக்கான விரிவான வழிகாட்டிகளை வசதியாகக் கொண்டுள்ளன, இதனால் பார்வையாளர்கள் தாங்கள் பார்ப்பதைப் பற்றி மேலும் அறியக்கூடிதாய் இருக்கும்.


கமால் உத்-தின் பெஹ்சாத் ஹெராவி, கமால் அல்-தின் பிஹ்சாத் அல்லது கமாலுத்தீன் பெஹ்சாத் (c. 1450 - c. 1535) என்றும் அழைக்கப்படுபவர், பாரசீக சிற்றோவிய கலைஞர். இவர் ஆரம்பகால சஃபாவிட் ஆட்சியின்போது ஹெராட் மற்றும் தப்ரிஸில் உள்ள அரச கலையகங்களின் தலைவராவார்.

பெஹ்சாத் பாரசீக சிற்றோவிய கலைஞர்களில் மிகவும் பிரபலமானவர், அவர், அவரது சொந்த சிந்தனை பாணியில் கையெழுத்துப் பிரதிகளை உருவாக்கும் கிதாப்கானா எனப்படும் ஒரு பயிற்சி பட்டறையின் இயக்குனராகவும் இருந்தார். அந்த கால பாரசீக ஓவிய வடிவியல் கட்டிடக்கலை கூறுகளின் அமைப்பை பொதுவாக பயன்படுத்தியதாய் அமைந்திருந்தது.

பெஹ்சாத் பெரும்பாலும் திறந்த, வடிவமற்ற வெற்றுப் பகுதிகளைப் பயன்படுத்தினார். அதைச் சுற்றியே அவரது கற்பனை செயல் நகர்கிறது. மேலும் அவர் தனது படைப்பை சுற்றி ஒரு பார்வையாளரின் கண்ணை நகர்த்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். உருவங்கள் மற்றும் பொருட்களின் அசைவுகள் தனித்துவமானதாகவும் இயற்கையாகவும், வெளிப்பாடாகவும், உயிரோட்டம் உள்ளதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவை படத் தளம் முழுவதும் ஒருவரின் கண்ணை நகர்த்திக் கொண்டே இருக்கும்.

https://www.tasnimnews.com/en/news/2018/02/12/1652847/persian-miniature-a-richly-detailed-miniature

Friday, December 10, 2021

Iran - UAE உறவில் புது அத்தியாயம்

 UAE, Iran Hope to Turn Page in Bilateral Ties

பாரசீக வளைகுடா அரபு நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் அரிய விஜயத்தை அடுத்து ஈரான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான அதன் உறவுகளில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல்-நஹ்யான் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானியின் அழைப்பின் பேரில் கடந்த திங்கள்கிழமை ஈரான் நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசியையும் சந்தித்தார்.

2016ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறைக்கப்பட்டதன் பின்னர் எமிரேட்ஸின் உயர் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது பயணம் இதுவாகும்.

மதிப்பிற்குரிய ஷியா உலமா ஒருவருக்கு ரியாத் மரணதண்டனை விதித்ததற்கு எதிராக ஆத்திரமடைந்த ஈரானிய எதிர்ப்பாளர்கள் சவூதி இராஜதந்திர அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியதை அடுத்து, சவுதி அரேபியா இஸ்லாமிய குடியரசுடனான உறவை துண்டித்தது. அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்சும் ஈரானுடனான அதன் தொடர்பை துண்டித்தது.

அதன் பிறகு எமிரேட்ஸின் உயர் அதிகாரி ஒருவரால் ஈரானுக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது பயணம் இதுவாகும்.

"இந்த பிராந்தியத்தின் நாடுகளுடன் நல்லுறவு புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என்று சந்திப்பின் போது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி கூறினார் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. 


"எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான உறவுகளின் வளர்ச்சியை நாங்கள் வரவேற்கிறோம்," என்று அவர் கூறினார்.

"வெளிநாட்டினரின் தலையீட்டால் இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கப்படக்கூடாது" என்று ரயீசி மேலும் கூறினார்.

ஈரான் மற்றும் சவூதி அரேபியா வும் பாரசீக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம்வகிக்கும் அதன் ஆறு நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பிராந்தியத்தில் பல்வேறு ஆயுத மற்றும் அரசியல் மோதல்களில், குறிப்பாக யெமன் மற்றும் சிரியாவில் எதிரெதிர் பக்கங்களில் நின்றன.

ஆனால் கடந்த மாதங்களில் சவூதி அரேபியாவும் ஈரானும் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியதால் நல்லுறவுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

ஈரான் இஸ்லாமிய குடியரசில் இப்ராஹிம் ரயீஸி நிர்வாகம் அதன் கோட்பாடு மற்றும் நடைமுறையில் அண்டை நாடுகளுடனும் பிராந்திய நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கான தீவிர விருப்பத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த கொள்கைஏனைய தரப்பினரிலும் தீவிர விருப்பம் இருந்தால், பிராந்தியத்தில் நீடித்த நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட வழிவகுக்கும்.

"ஈரான் இஸ்லாமிய குடியரசு அண்டை நாடுகளை அதன்  'உறவினர்கள் என்று கருதுகிறது மற்றும் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான மற்றும் முக்கிய முன்னுரிமையாகக் கருதுகிறது மற்றும் அவர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் விரும்புகிறது" என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஷேக் தஹ்னூன் “இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்”, என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று கூறியது.

மேலும், இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் ஒட்டுமொத்த விரிவாக்கத்துக்கும் இது வழி வகுக்கும் என அவர் நம்புவதாகவும் அவர் கூறினார்.

80 ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் 14 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தை பாரிஸ் செய்துகொண்டது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, பாரசீக வளைகுடா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் பிராந்தியத்தை "ஸ்திரமின்மைக்கு ஆளாக்கியதற்காக" தெஹ்ரான் பிரான்ஸைத் குற்றம்சாட்டியது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே பிரான்சை "இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார் மற்றும் "எங்கள் பிராந்தியத்தை இராணுவமயமாக்குவதை" விமர்சித்தார்.

ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், "பிராந்திய நாடுகள் எங்கள் ஏவுகணைகளைப் பற்றி பல கூட்டங்களை நடத்தினாலும், பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுத விற்பனையை நாங்கள் காண்கிறோம்" என்று காதிப்சாதே கூறினார். "இந்த நடவடிக்கைகளின் காரணமாக, நாங்களும் எங்கள் பாதுகாப்புக் கவசத்தை இன்னும் பலமானதாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு ஆலோசகரின் வருகையும் சிரிய வெளியுறவு மந்திரி பைசல் அல்-மெக்தாத் மற்றும் ஈரானிய வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் சந்திப்பும் ஒரே சமயத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் ஒரு நல்ல இருதரப்பு பேச்சுவாத்தைகளில் ஈடுபட்டோம்" என்று அமீர்-அப்துல்லாஹியன் ஒரு கூட்டு செய்தி மாநாட்டில் கூறினார்.

ஷம்கானி, நாடுகளுக்கிடையேயான "இணக்கமான மற்றும் நட்பான" உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளால் அவை பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறினார் (இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியைக் குறிக்கும்).

ஷேக் தஹ்னூனின் சகோதரர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின் சக்திவாய்ந்த முடிக்குரிய இளவரசர் மற்றும் ஏழு அமீரகங்களின் கூட்டமைப்பான எமிரேட்ஸின் நீண்ட கால ஆட்சியாளர். ஷேக் முஹம்மதுவின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது இராணுவப் படைகளின் துரித விரிவாக்கத்தில் இறங்கியுள்ளது. எமிரேட்ஸ் அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படை தளங்களை வழங்குகிறது மற்றும் அதன் ஜெபல் அலி துறைமுகம் அமெரிக்காவிற்கு வெளியே அமெரிக்க கடற்படையின் மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாகும்.

ஆனால் யெமன் மீதான போரில் சவுதி தலைமையிலான கூட்டணியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் இப்போது பின்வாங்கியுள்ளது. அரசியல் சர்ச்சையின் காரணமாக பல ஆண்டுகளாக ஐக்கிய புறக்கணித்து வந்த துருக்கி மற்றும் கத்தாருடனான இராஜதந்திர உறவுகளை சீர்செய்ய இப்போது எமிரேட்ஸ்  முயன்று வருகின்றது.

https://kayhan.ir/en/news/97452/uae-iran-hope-to-turn-page-in-bilateral-ties 

Tuesday, December 7, 2021

ஈரானில் ஜின்கள் உருவாக்கிய பள்ளத்தாக்கு

Kal-e Jeni Canyon, a Natural Attraction in Iran

கல்-இ ஜெனி பள்ளத்தாக்கு, ஈரானில் ஒரு இயற்கை ஈர்ப்பு

தபாஸில் உள்ள கல்-இ ஜெனி பள்ளத்தாக்கு ஈரானுக்கான உங்கள் சுற்றுப்பயணத்தில் நீங்கள் காணக்கூடிய மிக அழகான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். இந்த பள்ளத்தாக்கு தெற்கு-கொராசன் மாகாணத்தில் அமைந்துள்ளது மற்றும் பல நூற்றாண்டுகளாக நீர் இயக்கம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றால் வடிவமைந்துள்ளது.

கல்-இ ஜெனியின் நீர், கால்வாய் மூலம் தாஷ்குனி என்ற கிராமத்திற்கு மாற்றப்படுகிறது, இது சைரஸ் தி கிரேட் தனது வாழ்க்கையின் முதல் 16 ஆண்டுகளை கழித்த கிராமம் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். கல்-இ ஜெனி என்பது ஜின் கால்வாய் என்று பொருள்படும் மற்றும் அப்பகுதியின் உள்ளூர் மக்களிடையே ஒரு மர்மமான இடமாக அறியப்படுகிறது.


இந்த பள்ளத்தாக்குக்கு ஜின் கால்வாய் என்று பெயரிடுவதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

முதலாவது அதன் மர்மமான தோற்றம் கொண்ட துாண்கள், வளைவுகள் மற்றும் சுவர்கள் காரணமாக இது ஜின்கள் மற்றும் வேற்றுகிரக உயிரினங்களின் வீடு என்று மக்கள் நம்புகிறார்கள்.

இரண்டாவது காரணம், பலமான காற்று வீசும் நாளில் நீங்கள் பள்ளத்தாக்கில் நின்றால், ஜின்கள் உங்கள் மீது கூழாங்கற்களை வீசும்! கூழாங்கற்கள் உங்களைத் தாக்குவதற்கான உண்மையான காரணம், காற்று வீசும் போது, ​​அது பள்ளத்தாக்கின் மென்மையான சுவர்களில் உள்ள மணல் மற்றும் கூழாங்கற்கள் உங்கள் உடலைத் தாக்கும், ஆனால் உள்ளூர்வாசிகள் ஜின்கள் அதைச் செய்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.


மூன்றாவது காரணம், பள்ளத்தாக்கின் சுவர்களில் செதுக்கப்பட்ட அறைகள் உள்ளன, அவற்றின் உண்மையான செயல்பாடு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் வரலாற்றாசிரியர்கள் மித்ராயிசத்தைப் பின்பற்றுபவர்கள் இந்த அறைகளை நாற்பது நாட்கள் தன்மையில் தங்கியிருக்க பயன்படுத்தியதாக நம்புகிறார்கள். ஒரு குறுகிய பாதை உங்களை ஒரு குறுகிய மண்டபத்திற்கு இட்டுச்செல்லும்; செங்குத்து சுரங்கப்பாதை உள்ளது. அதன் முடிவில் பத்து அறைகள் நீங்கள் காண்பீர்கள். செலே என்பது ஒரு மதச் சடங்கு, அதில் சிலர் நாற்பது இரவுகள் ஒரே இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். எனவே இந்த சடங்கைப் பாதுகாப்பதற்காக, மித்ராவைப் பின்பற்றுபவர்கள் மக்களை பயமுறுத்துவதற்கும், அவர்களால் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் இந்த பள்ளத்தாக்குக்கு கல்-இ ஜெனி என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர் என்று கூறப்படுகிறது,


இந்த அழகிய பள்ளத்தாக்குக்கு நீங்கள் செல்லும்போது, சூட்டப்பட்டுள்ள பெயர் முற்றிலும் பொருத்தமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், இது ஒரு சக்திவாய்ந்த மர்மமான மற்றும் வளிமண்டல சுற்றுப்புறமாகும்.

உள்ளூர்வாசிகள் கல்-இ ஜென்னியை ஒரு ரகசிய இடமாக பாதுகாத்து வந்ததால், ஈரானியர்களினதோ  அல்லது ஈரானுக்கு வரும் சுற்றுப்பயணிகளினதோ கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ஆனால் இன்று அதிகமான ஈரானியர்கள் இயற்கை அன்னையின் கைகளால் செய்யப்பட்ட இந்த அற்புதமான இடத்தை அறியத் தொடங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் பலர் இந்த பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்கைப் பார்வையிடுவதற்காக தபாஸ் நகருக்கு செல்கின்றனர்.

https://irandoostan.com/kal-e-jeni-canyon-a-natural-attraction-in-iran/

Iran seeks UNESCO tag for gigantic geopark

பிரமாண்டமான நிலப்பரப்புக்கான யுனெஸ்கோ அந்தஸ்தை கோரல்

ஈரான் இஸ்லாமிய குடியரசு தபாஸில் (மத்திய ஈரானில்) உள்ள இந்த தபாஸ் புவி பூங்காவை (ஜியோபார்க்) பிரமாண்டமான நிலப்பரப்புக்கான யுனெஸ்கோ அந்தஸ்தை வெல்லும் நம்பிக்கையில் அது தொடர்பாக அனைத்தையும் உள்ளடக்கிய ஆவணத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு சமர்ப்பித்துள்ளது.


நான்கு வருட கடின உழைப்பு மற்றும் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்திய பிறகு, இந்த ஆவணம் சாத்தியமான பதிவுக்காக யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கப்பட்டது,

மத்திய ஈரானில் அமைந்துள்ள குறிப்பிட்ட நிலப்பரப்பை கள ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய யுனெஸ்கோ நிபுணர்கள் அடுத்த கோடையில் அங்கு செல்ல உள்ளனர்.

தெற்கு கொராசன் மாகாணத்தில் அமைந்துள்ள தபாஸ் ஜியோபார்க்கில் 50 புவிசார் தளங்கள் மற்றும் பலவிதமான இயற்கைக் காட்சிகள் மற்றும் அஸ்மிகன் கிராமத்தில் அமைந்துள்ள மர்மமான கல்-இ ஜெனி (ஜின் பள்ளத்தாக்கு) கொண்டகளங்கப்படுத்தப்படாத நிலப்பரப்புகள் உள்ளன. தபாஸ் ஜியோபார்க் பற்றிய ஆரம்ப ஆய்வுகள் அதன் பல்வேறு தளங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியுடன் 2011 இல் தொடங்கப்பட்டன.

ஜியோபார்க்கின் சிறப்பம்சங்களில் ஒன்றான கல்-இ ஜெனி இன்னும் அது போன்ற பல சாத்தியமான இடங்கள் பயணிகள் மற்றும் சாகசக்காரர்களால் ஆராயப்படவில்லை என்பது ஆச்சர்யமானது, அவர்கள் பூமியில் அத்தகைய அற்புதமான ஈர்ப்புக்குரிய இடமொன்று இருப்பதைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள்!

புவியியல் பூங்கா என்பது ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும், இது புவியியல் பாரம்பரியத்தின் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் நிலையான வழியில் முன்னேற்றி அங்கு வாழும் மக்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துகிறது. உலகளாவிய புவிசார் பூங்காவின் யுனெஸ்கோ வரையறையானது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் பாரம்பரியத்துடன் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும். ஜியோபார்க்ஸ் நாம் வாழும் புவியின் சூழலில் சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த குறிப்பிட்ட பாரம்பரியத்தை பயன்படுத்துகிறது.


எரிமலைகள், பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் உள்ளிட்ட புவியியல் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த பெரும்பாலான புவிசார் பூங்காக்கள் உதவுகின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஜியோபார்க்குகள் கடந்த கால காலநிலை மாற்றங்களின் பதிவுகளை உள்ளடக்கியுள்ளது என்பதால் தற்போதைய காலநிலை மாற்றங்களின் குறிகாட்டிகளாகும்.

யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் சமூக-பொருளாதார வளர்ச்சியை தூண்டுகிறது மேலும் இது கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலையானது, மனித வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கிராமப்புற சூழலை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் வாழ்வில் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. இது உள்ளூர் மக்களுக்கு அவர்களின் பிராந்தியத்தின் பெருமையை உரித்தாக்குகிறது, அப்பகுதியின் பொது அடையாளத்தை வலுப்படுத்துகிறது, மேலும் அப்பகுதியின் புவியியல், இயற்கை சூழல், தொல்பொருள், கலாச்சாரம் மற்றும் தொழில்துறை பாரம்பரியத்தைப் பற்றிய சிறந்த புரிதலை ஊக்குவிக்கிறது.

ஐ.நா அமைப்பின் கூற்றுப்படி, யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்ஸ் அதன் பிராந்திய புவிசார் பாரம்பரியத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் அப்பகுதியின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சியை உள்ளடக்கிய பல நோக்கங்களைக் கொண்டுள்ளது.


"யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்ஸ் ஆனது அடிப்படையில் மக்களைப் பற்றியது மற்றும் நமது சமூகங்களுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வது மற்றும் (அவற்றை வியந்து) கொண்டாடுவது. நாம் யார் என்பதை பூமி வடிவமைத்துள்ளது: அது நமது விவசாய நடைமுறைகள் என்ன என்பதையும், கட்டுமானப் பொருட்கள் யாவை என்பது பற்றியும் மற்றும் அவை நமது வீடுகளுக்குப் பயன்படுத்திய முறைகள் பற்றியும், நமது புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளையும் வடிவமைத்துள்ளன. எனவே, யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்ஸ், இந்த இணைப்புகளைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பல யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்குகள் கலை சமூகங்களுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன, அங்கு அறிவியலையும் கலைகளையும் ஒன்றாகக் கொண்டுவருவதன் மூலம் ஆச்சரியமான முடிவுகளைத் தரும்.

மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு புவியியல் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை தெரிவிப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புவி அறிவியல் கல்வியை மேம்படுத்துவது முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

https://www.tehrantimes.com/news/467743/Iran-seeks-UNESCO-tag-for-gigantic-geopark