Enemies try to distort IRGC's image since it’s the largest
counter-terrorism org. in the world
ஆகஸ்ட் 17 அன்று இஸ்லாமிய புரட்சி காவலர் படையின்
(ஐ.ஆர்.ஜி.சி) தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் உச்ச சபையுடனான சந்திப்பில், இமாம் காமனெய்
, ஐ.ஆர்.ஜி.சியின் உருவாக்கம், வளர்ச்சி, நெருக்கடியை தகர்க்கும் தரம் மற்றும்
செயல்திறன் ஆகியவற்றை இராணுவம், குடிமக்கள், சேவைகள் மற்றும் கட்டுமானம்
ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமானது மற்றும் பெருமைக்குரியது என்று
விவரித்தார், ஐ.ஆர்.ஜி.சியின் பிம்பத்தை சிதைப்பதே எதிரியின் முக்கிய சதி என்று
வலியுறுத்தினார்.
நெருக்கடிகளை
உருவாக்குவது, நாட்டின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, மக்களின்
வாழ்க்கையை சீர்குலைப்பது போன்ற எதிரிகளின் கொள்கையை அவர் சுட்டிக்காட்டினார்,
ஆனால் தேசிய ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள், மக்களின் பங்களிப்பை
ஊக்குவித்தல், மக்களுக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு உதவுதல், அதிகாரிகளின்
24 மணி நேரமும் மற்றும் ஜிஹாதி வேலைகள் மற்றும் தொடர்ச்சியான இயக்கம் ஆகியவற்றின்
மூலம் எதிரியின் தோல்வியும் தேசத்தின் வெற்றியும் "திட்டவட்டமாக"
இருக்கும் என்று அவர் கூறினார்.
இஸ்லாமியப் புரட்சியின் இலக்குகளை அடைவதற்கான நம்பிக்கையும் உற்சாகமும்.
"ஈரான்
இஸ்லாமிய புரட்சியின் உண்மைகளையும் மகிமைகளையும் மறக்கச் செய்வது" உலகின்
சாத்தான்களின் குறிக்கோள்களில் ஒன்றாகும் என்று இமாம் காமனெய் கூறினார்.
ஐ.ஆர்.ஜி.சி.யின் பண்புகளைக் கொண்ட ஒரு குழு
உருவாக்கப்பட்டதை வரலாற்றின் மாபெரும் புரட்சிகளில் ஒரு தனித்துவமான நிகழ்வு என்று
அவர் குறிப்பிட்டார்.
"அனைத்து
மனித குழுக்களிலும் குறைபாடுகளும் பலவீனங்களும் உள்ளன, ஆனால்
நாட்டின் வரலாற்றில், இதுபோன்ற ஆன்மீக, அரசியல், தார்மீக
மற்றும் மனித நேயம் கொண்ட ஒரு இராணுவ குழு ஒருபோதும் இருந்ததில்லை," என்று அவர் கூறினார்.
ஐ.ஆர்.ஜி.சி.யின் வளர்ச்சி
தனித்துவமானது என்றும் தலைவர் விவரித்தார்.
"ஐ.ஆர்.ஜி.சி உருவாக்கப்பட்ட
சிறிது காலத்திற்குப் பிறகு, இராணுவத்தின் ஆதரவு மற்றும்
ஒத்துழைப்புடன், (சதாமினால் திணிக்கப்பட்ட யுத்தத்தின்போது)
ஃபத்ஹ் அல்-முபீன் மற்றும் கொரம்ஷாஹர் விடுதலை உள்ளிட்ட பல
முக்கிய நடவடிக்கைகளில், ஒரு தீர்க்கமான பாத்திரத்தை
வகித்தது மற்றும் புரட்சியின் பாதுகாப்பு சக்தியின் மகத்தான சக்தியை அதனால்
எதிரிக்குக் காட்ட முடிந்தது" என்று அவர் கூறினார்.
அதே சந்திப்பின் போது, "சிலர்
இதற்கு விரோதமாக மாறுவதற்கு இஸ்லாமியப் புரட்சியில் என்ன உள்ளது?"
என்ற முக்கியமான கேள்விக்கான பதிலை இமாம் காமனெய் விளக்கினார்:
ஈரானில் "இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசின்
ஸ்தாபகம்" தான் இவர்களது விரோதத்திற்கான முதல் முக்கிய காரணம் என்பதை அவர்
விவரித்தார்.
ஒடுக்குமுறைக்கு எதிராக
நிற்பதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் அரசியல் இஸ்லாத்தின் முக்கிய மற்றும்
உணர்திறன் அம்சமாகும். ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை, கட்டாயப்படுத்தல்
மற்றும் சித்திரவதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சியோனிச ஆட்சி போன்ற ஓர் அமைப்பு,
இஸ்லாமிய குடியரசு போன்ற ஓர் அமைப்புக்கு விரோதமாகவும் இருப்பது ஆச்சரியமல்ல,"
என்று அவர் அரசியல் இஸ்லாத்தின் அம்சங்களை விவரிக்கும் போது மேலும் கூறினார்.
தேசிய இனங்களின் நலன்களில் மற்றும் வளங்களில் திமிர்
பிடித்த சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பதானது இஸ்லாமிய
அமைப்புடனான காலனித்துவவாதிகளின் மோதலுக்குக் மற்றுமொரு காரணம். "காலனித்துவ
அணுகுமுறைக்கு மாறாக, பிற நாடுகளை நியாயமான முறையில் நடத்துமாறு குர்ஆன் நமக்கு
அறிவுறுத்தியுள்ளது. எங்களிடம் இருந்து வேறுபட்ட நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளைக்
கொண்ட நாடுகளும் இதில் அடங்கும்," என்று அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற
நாடுகளின் செல்வக் குவிப்பு மற்றும் வளர்ச்சிக்கு அவற்றின் ஆக்கிரமிப்பு,
குடியேற்றம் மற்றும் பிற நாடுகளில் சுரண்டல் ஆகியவையே காரணம் என்று இமாம் காமனெய் கோடிட்டுக் காட்டினார்.
‘ஒரு குறிப்பிட்ட நாடு இஸ்லாமியக் குடியரசை எதிர்க்க
அது என்ன செய்தது?’ என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கேட்பதை நீங்கள் காண்கிறீர்கள்.
இந்த கேள்விக்கான பதில் மிகவும் தெளிவானது. தீய வரலாற்றை கொண்ட காலனித்துவ அமைப்பு
ஓர் இஸ்லாமிய அமைப்புடன் நட்பு ரீதியாக செயல்படும் என்று ஒருபோதும் எதிர்ப்பார்க்க
முடியாது."
நிறம், இனம் அல்லது பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல்
அனைத்து மனிதர்களின் கண்ணியத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு குர்ஆனில் உள்ள ஒரு
கட்டளையையும் தலைவர் சுட்டிக்காட்டினார். "குர்ஆனின் தர்க்கத்தின்படி, ஒரு
கறுப்பின நபர் வேறு எந்த நபரிடமிருந்தும் வேறுபட்டவர் அல்ல. எனவே, இனப்பாகுபாடு
என்ற தர்க்கத்தை இழிவான முறையில் பரப்பும் மேற்கத்தியர்கள், இஸ்லாமிய அமைப்பை
பாராட்டுவோராக இருப்பர் என்று எதிர்பாக்க முடியுமா?!"
சில நாடுகள் இஸ்லாமிய அமைப்புமுறைக்கு விரோதமாக
இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம், இஸ்லாமிய குடியரசு உணர்திறன் மிக்க
மேற்காசிய பிராந்தியத்தில் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும்,
முன்னோடியாகவும், உந்து சக்தியாகவும் செயல்பட்டுள்ளது என்பதை இமாம் காமனெய் அடிக்கோடிட்டுக்
காட்டினார். இஸ்லாமிய குடியரசு ஒரு முன்மாதிரியாக மாறாமல் இருந்திருந்தால்,
பகைமைகள் குறைந்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
புரட்சியின் வெற்றிக்கு முந்தைய ஆண்டுகளில், அதாவது
1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் போர் மற்றும் 1973 போரில் குட்டி சியோனிச ஆட்சிக்கு
முன்னால் மூன்று அரபு நாடுகளின் இராணுவங்கள் ஊனமடைந்ததை இமாம் காமனெய் ஒப்பிட்டார்.
"இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இந்த [சியோனிச] ஆட்சி லெபனானில் ஹெஸ்பொல்லாவைத்
தோற்கடிக்க 33 நாட்கள் செலவிட்டும் அது தோல்வியடைந்து அவமானத்துடன் தப்பி ஓட
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புரட்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திற்கு
இடையிலான வேறுபாடு 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் போருக்கும் 33 நாள் போருக்கும்
இடையிலான வித்தியாசத்தை ஒப்பிட்டால் புரியும் என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.
"இன்று, பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட
பகுதிகளிலும், ஜோர்டான் ஆற்றின் மேற்கு பிராந்தியத்திலும், இளைஞர்கள் சியோனிச
ஆட்சியை முடக்கும் வகையில் நகர்ந்து தாக்கும் நிலையை நாம் எட்டியுள்ளோம் என்பது
வெளிப்படையான சாட்சி," என்று குறிப்பிட்டார்.
இமாம் காமனெய் அரசியல் இஸ்லாத்தின் உன்னத இலக்குகள் தீய,
வெறுப்பு, வாக்குறுதி மீறும் மற்றும் பொய் சாத்தான்களின் எதிரியாக ஆவது
தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது என்று விளக்கினார்.
"நமது எதிரியைப் பற்றி நாம் அறியும்போது,
[அரசியல் இஸ்லாத்தை] பாதுகாப்பதற்கான நமது உந்துதல் மிகவும் ஆழமானது, மேலும் இது
எதிர்தரப்பை அறிந்து கொள்வதில் தவறுகள் விடுவதைத் தடுக்கிறது. இமாம் கொமெய்னி
(ரஹ்) அவர்கள் தனது புலனுணர்வு நுண்ணறிவால், "உங்கள் எதிர்ப்பு குரல்களை
அமெரிக்கா மீது வெளிப்படுத்துங்கள்" என்று கூறுவார்.
இந்த சந்திப்பின் போது, புரட்சியின் தொடக்கத்தில்
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் பயங்கரவாத குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட
மற்றும் மேற்கொள்ளப்பட்ட நெருக்கடிகள், கலவரங்கள், பாதுகாப்பின்மை மற்றும் பரந்த
நடவடிக்கைகள் குறித்தும் தலைவர் நினைவு கூர்ந்தார். ஈரானில் ஒன்றன்பின் ஒன்றாக
நெருக்கடியை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட அதே மேற்கத்திய மூலோபாயத்தின்
கட்டமைப்பிற்குள் இந்த சம்பவங்கள் நடந்தன என்பதையும் ஈரானில் உள்ள அமெரிக்க உளவு
மையத்தின் ஆவணங்கள் வெளிப்படுத்தின" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நெருக்கடிகளை ஐ.ஆர்.ஜி.சி சாதுர்யமாக சமாளித்ததாகவும்,
இந்த அமைப்புதான் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள மக்களைக் காப்பாற்ற முன் வந்ததாகவும்
இமாம் காமனெய் கோடிட்டுக் காட்டினார். "எதிரிகள் தொடர்ச்சியான நெருக்கடிகளை
உருவாக்குவதன் மூலம் புரட்சியை பலவீனப்படுத்தவும் அதன் வளர்ச்சியை முடக்கவும்
முயன்றனர். ஆகஸ்ட் 19, [1953] அன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்பைப் போன்ற ஒரு
நடவடிக்கை மூலம் புரட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், IRGC
அதை முறியடித்தது. அதனால்தான் எதிரிகளுக்கு ஐ.ஆர்.ஜி.சி மீது இவ்வளவு வெறுப்பும்,
காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது.
இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் புனிதப் பாதுகாப்பின்
போது ஐ.ஆர்.ஜி.சியின் செயல்திறனை, அதன் இருப்பின் மிக முக்கியமான மற்றும்
புத்திசாலித்தனமான அத்தியாயம் என்று விவரித்தார். "ஐ.ஆர்.ஜி.சி.யின்
திறன்களில் அதிகரித்து வரும் வளர்ச்சி அதன் செயல்திறனின் மற்றொரு பரிமாணமாகும்,
இது ஈரானுக்கு பாதுகாப்பு மற்றும் தடுப்புகளை உருவாக்கியுள்ளது," என்று அவர்
மேலும் கூறினார்.
"சகல இராணுவ தெரிவுகளும் மேசையில் உள்ளன"
என்ற (அச்சுறுத்தும்) சொற்றொடரை இப்போதெல்லாம் நாம் கேட்பதில்லை; இதை மீண்டும்
பயன்படுத்தாததற்கும் ஐ.ஆர்.ஜி.சியின் தடுப்பு சக்தி மற்றும் திறன்கள் தான் காரணம்
என்று தலைவர் கூறினார். "இந்த சொற்றொடர் இப்போது அற்பமானது, அர்த்தமற்றது
மற்றும் பயனற்றது என்பது அனைவருக்கும் தெரியும்," என்று அவர் கூறினார்.
கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு விஷயங்களில்
ஐ.ஆர்.ஜி.சியின் செயல்திறன் மிகவும் பாராட்டுக்குரியது, புத்திசாலித்தனமானது
மற்றும் இணையற்ற பரிமாணங்களில் சிறப்புமிக்கது என்று அவர் விவரித்தார். இயற்கை
பேரழிவுகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் போன்ற சம்பவங்களின் போது, இழப்புகளை
கடந்து, பொது சேவைகள் மூலம் புரட்சிகர காவலர்கள் தங்கள் முழு சக்தியுடனும்
மக்களுக்கு சேவையாற்றினார்.
ஈரானில் குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதே
எதிரியின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் விவரித்தார். பாதுகாப்பு
இல்லை என்றால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் இருக்காது. தொழிற்சாலைகள்
அமைக்க முடியாது, அறிவியல், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் இருக்காது. எனவே,
நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதும், மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதும் அவர்களின்
முக்கிய நோக்கமாகும், என்றார்.
சிஐஏ, மொசாட் மற்றும் பிரிட்டிஷ் MI6 உளவு முகமைகள்
நெருக்கடிகளின் திட்ட வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள முக்கிய
குற்றவாளிகளாக அவர் கூறினார்.
"நிச்சயமாக, அவர்கள் உள்நாட்டு மற்றும்
வெளிப்புற முகவர்களையும் மேற்கத்திய சார்பு மற்றும் அலட்சியமான கூறுகளைப்
பயன்படுத்துகிறார்கள், ஆனால் முக்கிய குற்றவாளிகள் குறிப்பிட்ட உளவு அமைப்புகளே,"
என்றார்.
இந்த கூட்டத்தின் தொடக்கத்தில், ஐ.ஆர்.ஜி.சியின்
தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி, இராணுவம், பாதுகாப்பு, உளவுத்துறை, அறிவியல்,
பொருளாதாரம், கட்டுமானம், சுகாதாரம், சேவைகள், பிரச்சாரம் மற்றும் நம்பிக்கையை
உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஐ.ஆர்.ஜி.சியின் அடைவுகளை மற்றும் செயல்திறன்களை
விளக்கினார்.
https://english.khamenei.ir/news/10010/Enemies-try-to-distort-IRGC-s-image-since-it-s-the-largest-counter-terroris