Shushtar Hydraulic System:
The Oldest
Engineering Masterpiece in World
சுஷ்டார் என்பது ஈரானின் குஜெஸ்தான் மாகாணத்தின் சுஷ்டர் பிரதேச தலைநகரம் ஆகும். சுஷ்டர் ஒரு பழங்கால கோட்டை
நகரம், இது மாகாணத்தின் மையமான அஹ்வாஸிலிருந்து சுமார் 92
கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது.
சுஷ்டாரின் வரலாற்று
புகழ்மிக்க ஹைட்ராலிக் அமைப்பு 5 ஆம் நூற்றாண்டு வரையிலான பகுதிகளை உள்ளடக்கியது.
ஐரோப்பாவில் 18 ஆம்
நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஈரான்
ஒரு மேம்பட்ட தொழில்துறை வளாகமாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்நிலை
அமைப்பு, நீரனை பாலங்கள், அணைக்கட்டுகள், நீர் வழிகள், நீர் ஆலைகள், ஆறுகள், அகழிகள் மற்றும் அமைப்பின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மைய
கோட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மிகப் பழமையான பகுதிகள் ஆக்கிமினிட் சகாப்தத்தில் (கிமு 550-330)
நிர்மாணிக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது.
மேலும் கர்கர்
சேனல் மற்றும் சலாசெல் கோட்டை என அழைக்கப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட நதியும்
இவற்றுள் அடங்கும். இதுவே முழு ஹைட்ராலிக் செயல்பாட்டு அமைப்பின் மூளையாகும்.
சலாசெல் கோட்டை, நீர் அமைப்பின் செயல்பாட்டு ஓட்டத்தை
கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுஷ்டார் நகர பாதுகாப்பின் ஒரு பகுதியாகவும் இருந்தது.
பிற்காலத்தில், கோட்டையை சுற்றி ஒரு பேக்கரி, தொழுவங்கள், தடுப்பணைகள், பாதுகாப்பு அறைகள், குளியலுக்கான ஓரிடம், ஒரு சமையலறை பகுதி மற்றும் பல முற்றங்களை உள்ளடக்கியதாக
விரிவுபடுத்தப்பட்டு குஸேஸ்தான் மாகாண ஆளுநரின் வதிவிடமாக மாறியது.
கர்கர் ஆற்றின்
மீது பல நீரனை பாலங்கள் கட்டப்பட்டன, குறிப்பாக சசானிட் (224-651) கர்கர் நீரனை பாலம், மீன்பிடி அணை, மற்றும் சசானிட்
அயார் கோபுர அணை ஆகியவை கட்டப்பட்டிருந்தன.
இந்த அமைப்பில்
அமையப்பெற்றுள்ள பாலங்களில் மிகவும்
பிரபலமானது பேண்ட்-இ கைசர் என்று அழைக்கப்படும் ஷாடோர்வன் நீரனை பாலமாகும். இது ஷாபூர்-1 (240 முதல் 270 வரை) மன்னரால் 253-260ல்
ஆட்சி செய்த வலேரியன் பேரரசருடன் சேர்த்து சிறைபிடிக்கப்பட்ட ரோமானிய வீரர்கள்
மற்றும் பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. (ஷாபூர் I, ஷாபூர் தி கிரேட் என்றும்
அழைக்கப்படுபவர், ஈரானின் மன்னர்களின் இரண்டாவது
சாசானிய மன்னர் ஆவார். அவரது ஆட்சியின் 240 முதல் 270 வரை ஆட்சி செய்தார் என்று
ஒப்புக் கொள்ளப்படுகிறது.)
பாரசீக மொழியில்
சரிசெய்தல் அணை என்று பொருள்படும் பேண்ட்-இ மிசான், ஷாபூர் I இன் மற்றொரு
கட்டமைப்பாகும், இது கரோன் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை அதன் இரண்டு கிளைகளான
கர்கர் மற்றும் ஷோட்டீட் இடையே பிரிக்கிறது.
லஷ்கர் நீரனை பாலம்
ஈரானில் சிறப்பாக பராமரிக்கப்படும் சசானிட் பாலங்களில் ஒன்றாகும். சாரூஜ்
(சுண்ணாம்பு மற்றும் களிமண் கலவை) மற்றும் மணற்கல் ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த
பாலம், சுஷ்டார் நகரின் தெற்கே உள்ள கிராமங்களுடன் இணைப்பதிலும், அதன் தெற்கு
பக்கத்தில் அமைந்துள்ள நீர் ஆலைகளுக்கு தண்ணீரை சேர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு
காலத்தில் அப்பகுதி வாழும் மக்களின்
வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்தது.
பேண்ட்-இ-ஷரப்தார்
அல்லது ஒயின் அணை என்பது மற்றொரு முக்கிய நீரணையாகும், பல திராட்சைத் தோட்டங்கள் அதன் அருகாமையில் அமைந்துள்ள காரணமாக
அவ்வாறு பெயரிடப்பட்டது. இது லஷ்கர் நீரணை பாலம் மற்றும் பேண்ட்-இ மஹி பஸானுக்கு
இடையில் அமைந்துள்ள மற்றொரு சசானிய கட்டமைப்பாகும்.
கஜார் வம்ச
மன்னர்களின் காலத்தில் பேண்ட்-இ-மிஸான் மற்றும் காரூன் நதிக்கு அருகில் ஒரு
கோபுரம் அமைக்கப்பட்டது. பார்வையாளர் கோபுரம் (போர்ஜ்-இ-கோலா ஃபாரங்கி) என்று
அழைக்கப்படுகிறது. இது சுஷ்டார் நீர்நிலை அமைப்பின் பழைய பாலங்களின் கட்டமைப்புகளை
மேற்பார்வை செய்வதற்காக ஷாபூர்-I ஆல் பயன்படுத்தப் படுவதற்காக, பழைய கட்டமைப்பொன்ரின் மீது
கட்டப்பட்ட ஒரு காவற்கோபுரமாகும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
இதை அதி அற்புத
படைப்பாக அடையாளம் கண்ட யுனெஸ்கோ நிறுவனம், இந்த நீர் நிலை
அமைப்பை, 2009 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தளமாக பதிவு செய்தது.