Monday, September 28, 2020

காஷ்மீர் விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்க இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு.

Kashmir and the United Nations Security Council


ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதர் டி எஸ் திருமூர்த்தி ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் "காலாவதியான இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை" கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிடுமாறு  கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் தூதர் முனீர் அக்ரம் இதற்கு பதிலளிக்கையில், "பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து காஷ்மீரை நீக்கலாம் என்று  இந்திய பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தங்கள் நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்", என்று கூறினார்.""

"கட்டாயப்படுத்தி காரியம் சாதிக்கும் இந்திய இராஜதந்திரம் செல்லுபடியற்றது, அதற்கு எதிர்காலம் இல்லை. ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் வெளிப்படையான கடமைகளை அது மீற முடியாது,” என்று ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகளுக்கான கவுன்சில் தலைவர் டாக்டர் சையத் நசீர் கிலானி குறிப்பிட்டார். 

பாதுகாப்பு கவுன்சில் முன்னுள்ள விஷயங்களின் பட்டியல் தொடர்பான ஐ.நா பொதுச்செயலாளர் திரு அன்டோனியோ குடரெஸின் சுருக்க அறிக்கை 2020 ஜனவரி 2 அன்று வெளியிடப்பட்டது. 2017 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் முறையான கூட்டத்தில் 56 விடயங்கள்  பரிசீலிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 13 விடயங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், நிகழ்ச்சிநிரலில் உள்ள அனைத்து 69 நிகழ்ச்சி நிரல்களும் "இந்தியா-பாகிஸ்தான் விடயம்" உட்பட "பாதுகாப்பு கவுன்சில் தற்போது முன்னுள்ள விஷயங்களாக" அடையாளம் காணப்பட்டன.

பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாட்டை நிர்வகிக்கும் நடைமுறை விதிகளின் படி மட்டுமே ஒரு விடயத்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்ற முடியும் என்பதை இங்கு குறிப்பிடுவது சிறப்பு. மோதல் தீர்க்கப்பட்டால் அல்லது பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களிடையே ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை அகற்ற ஒருமித்த கருத்து இருந்தால் அகற்றுதல் நடைபெறலாம். காஷ்மீரைப் பொறுத்தவரை, இந்த நிபந்தனைகள் எதுவும் பொருந்தாது. ஸ்ரீநகரில் (ஜம்மு-காஷ்மீர் தலைநகரம்) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பு குழு (UNMOGIP) இருப்பது எங்களுக்குத் தெரியும், காஷ்மீர் தகராறு  என்பது பாதுகாப்பு கவுன்சில் முன்னுள்ள விஷயம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

காஷ்மீர் சர்ச்சையை “காலாவதியான நிகழ்ச்சி நிரல்” என்று இந்தியா கூறுகிறது. காஷ்மீருக்கான கொள்கை ரீதியான தீர்வு ஐக்கிய நாடுகள் சபையால் ஏறக்குறைய உலகளாவிய ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு ஏழு தசாப்தங்கள் கடந்துவிட்டன என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த தீர்மானங்கள் இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பதன் காரணமாக அது பிரச்சினை நீங்கியுள்ளது என்பதாகாது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் ஒருபோதும் காலாவதியானதாகவோ அல்லது வழக்கற்றுப் போய்விட்டதாகவோ அல்லது நிகழ்வுகள் அல்லது மாற்றப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்படவோ முடியாது. காலம் கடந்துள்ளது என்பதற்காக காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்க முடியாது. தனித்துவமான சர்வதேச ஒப்பந்தங்களை காலம் கடந்துவிட்டது என்பதற்காக நீக்குவதற்கு அனுமதிக்கப்பட்டால், காஷ்மீர் மீதான தீர்மானங்களைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமும் அதே கதியை அனுபவிக்க வேண்டியிருக்கும். செயல்படுத்தப்படாதது ஒரு ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்யுமானால் இருபத்தியோராம் நூற்றாண்டில் பல நாடுகள் தொடர்பாக ஜெனீவா மாநாடு எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும்.

காஷ்மீர் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் தீர்மானங்கள் வழக்கமான இயல்புடையவை அல்ல. அவற்றில் அடங்கியுள்ள விடயங்கள் அனைத்தும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிக நுணுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டவையாகும், ஒவ்வொரு ஏற்பாடும் சம்பந்தப்பட்ட இரு அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அவை பாதுகாப்பு கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரு அரசாங்கங்களின் ஒப்புதல் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவை ஒரு தனித்துவமான சர்வதேச உடன்படிக்கை மட்டுமல்லாமல், பாதுகாப்பு கவுன்சிலாலும், அடுத்தடுத்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளாலும் பலமுறை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்கள் தங்கள் தாயகத்தின் எதிர்கால நிலையை தீர்மானிக்க உள்ள உரிமையை அவர்கள் இத்தீர்மானங்களின் மூலம் வெளிப்படையாக அங்கீகரிக்கின்றனர். தீர்மானங்களின் விதிகளின் இருபுறமும் செயல்படுத்தப்படவில்லை என்பதற்காக இந்த உரிமை இல்லையென்று ஆகிவிடாது.

 ஜம்மு-காஷ்மீரின் நிலை குறித்த சர்ச்சை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதும் சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, ஜனநாயக முறையின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது இந்தியா ஏற்கனவே எடுத்த நிலைப்பாடு. இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கப்பட்டது மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஜனநாயக நாடுகளின் ஆத்தாவையும் வென்றது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் சர் கோபாலசாமி அய்யங்கர் 1948 ஜனவரி 15 ஆம் தேதி தனது அரசாங்கத்தின் சார்பில் கவுன்சிலில் முன்வைத்தபோது,

காஷ்மீர் இந்தியாவுக்குள் இருப்பதில் இருந்து விலக வேண்டுமா, அல்லது பாகிஸ்தானுக்குள் இருக்க ஒப்புக் கொள்ளலாமா அல்லது சுதந்திரமாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இணைவது தொடர்பாகவும் முடிவு செய்யும் உரிமை - காஷ்மீர் மக்களின் தடையற்ற முடிவுக்கான ஒரு விடயமாக நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம்,
என்று கூறினார்.

மகாத்மா காந்தியின் "காஷ்மீர் மக்களின் விருப்பமே காஷ்மீரின்  மிக உயர்ந்த சட்டமாகும்" என்ற கூற்று பிரபல்யமானது.

இந்தியாவின் ஸ்தாபக பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர் லால் நேரு நவம்பர் 2, 1947 அன்று,

காஷ்மீரின் தலைவிதி இறுதியில் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த உறுதிமொழியை நாங்கள் காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் அளித்துள்ளோம். நாங்கள் வழங்கிய அந்த உறுதிமொழியை விட்டு எங்களால் வெளியேற முடியாது, வெளியேறவும் மாட்டோம்",
என்று கூறினார்.

எவ்வாறாயினும், காஷ்மீரின் மக்கள் ஒருபோதும் இந்தியாவுக்குள்  இருப்பதற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் செய்வதற்கு பல  சாக்குப்போக்குகளைக் காட்டி தடுத்து வந்துள்ளது. பிரச்சினையை தீர்ப்பதற்கான வேறு எந்த முறையையும் முன்மொழிந்தபோது, இந்தியா அவை அனைத்தையும் குழப்பியே வந்துள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரை இணைப்பதை ஒருதலைப்பட்சமாக அறிவிப்பதன் மூலம் வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொள்ளும் அனைத்து பாசாங்குகளையும் அது கைவிட்டது. மேலும் ஆகஸ்ட் 5, 2019 அன்று, அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி, இந்தியா 370 மற்றும் 35 ஏ பிரிவை ரத்து செய்தது. இந்தியாவின் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை, இது தொடர்ந்து காஷ்மீரை சர்ச்சைக்குரிய பிரதேசமாக பட்டியலிட்டு சுயநிர்ணய உரிமை என்ற பாதுகாப்பு கவுன்சில்  தீர்மானங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. சாசனம் மற்றும் பொருந்தக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கவும், அந்த நோக்கத்திற்காக அவரது உதவியைப் பெறவும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் வலியுறுத்துவதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இப்போது வரை, இந்த யோசனைக்கு இந்தியா எந்தவிதமான ஆக்கபூர்வமான பதிலும் அளிக்கவில்லை, அதற்கு பதிலாக இந்தியா தனது ‘உள் விஷயங்களில்’ தலையிட வேண்டாம் என்று பொதுச்செயலாளரை எச்சரித்துள்ளது.

இந்த மாதிரியான ஒரு விஷயத்தை பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தால் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலைகளில் மற்றும் நிரந்தர உறுப்பினர்களின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளை கருத்தில்கொள்கையில், பொதுச்செயலாளரின் இந்த உரிமையும் அதிகாரமும் தற்போதைக்கு இருப்பில் வைக்கப்படலாம் என்பதை நாங்கள் முழுமையாக உணர்கிறோம். 99 வது பிரிவைத் தொடங்குவதன் மூலம், மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கும், ஜம்மு-காஷ்மீர், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் - மூன்று கட்சிகளிடையே ஒரு 'சிறப்பு தூதரை' அனுப்புவதன் மூலம் நிலைமையைத் திருப்ப பொதுச் செயலாளர் உதவ முடியும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் திருப்திக்கு காஷ்மீர் சர்ச்சையை தீர்ப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் ஆராயும். அத்தகைய பணி ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் தலைநகரங்களுக்கும் சென்று இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகளின் உண்மையை சரிபார்க்க முடியும். மனித உரிமைகள் பேரவையின் வழக்கமான பொறிமுறை மற்றும் பல்வேறு மரபுகளை கண்காணிக்க நிறுவப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு இந்த விஷயம் மிகவும் அவசரமானது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போதுள்ள மோதலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான விரோதப் போக்குகள் - மூன்றும் அணுசக்தி சக்திகள் மற்றும் காஷ்மீருடனான எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் - காஷ்மீர் மோதல் தீர்க்கப்படாவிட்டால், முழு பிராந்தியத்தையும் அணுசக்தி பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதையும் பொதுச் செயலாளர் பி 5 க்கு எச்சரிக்க வேண்டும்.

பொதுவாக உலக வல்லரசுகள் மற்றும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதில் மகத்தான தார்மீக மற்றும் அரசியல் செல்வாக்கைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம், இது விரைவான, நியாயமான மற்றும் சர்ச்சைக்கு கௌரவமான தீர்வு காண வழிவகுக்கும் மற்றும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்.

கட்டுரையாசிரியர் - டாக்டர் குலாம் நபி ஃபாய், வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலக காஷ்மீர் விழிப்புணர்வு மன்றத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

தமிழில் - தாஹா முஸம்மில்  

Wednesday, September 23, 2020

அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் மேற்கு நாடுகளைத் தனியாக நின்று தோற்கடித்தது ஈரான்

 During the Sacred Defense, Iran single-handedly defeated the US, the USSR and the West

புனித பாதுகாப்பு (சதாம் ஈரான் மீது திணித்த போர்) தொடங்கிய 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புனித போரில் பங்குபற்றிய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவரான இமாம் காமனெய்:

 


தனது உரையில், "ஈராக்கின் பாத்திஸ்ட் ஆட்சிக்கு உலகின் பல நாடுகள் முழு வீச்சுடன் ஆதரவளித்த போதிலும், ஈரான் இறைவனின் அருளால் போரில் வெற்றிபெற முடிந்தது," என்று இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்,

ஈரான் மீது சதாம் மேற்கொண்ட தாக்குதலின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புனித பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்துடன் கடந்த செவ்வாயன்று (22-09-2020) நடைபெற்ற வைபவத்தில் தலைவர் அவர்கள் உரையாற்றுகையில், “அமெரிக்காவும் பிற சக்திகளும் இஸ்லாமிய குடியரசு ஆட்சி முறையை தூக்கியெறியும் நோக்கத்துடன் ஒரு போரைத் தொடங்கின. ஆனால் அவர்களே தோற்கடிக்கப்பட்டனர்; இந்த போரில் ஈரானின் வெற்றி சூரியனின் இருப்பைப் போலவே தெளிவாக உள்ளது. முழு உலகமும் சதாமுக்கு ஆதரவாக அதனால் முடிந்த அனைத்தையும் செய்தது, ஆனால் இறுதியில் அவர்கள் இலக்கை அடையத் தவறிவிட்டனர் என்று குறிப்பிட்டு, இதை விட சிறந்த வெற்றி ஏதேனும் உண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.

"கடந்த ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகளில் ஈரான் ஈடுபட்டிருந்த போர்களில் தோல்வியை சந்தித்தது மற்றும் அதன் பிரதேசங்களின் ஒரு பகுதியை இழந்தது, ஆயினும் ஈரானுக்கு எதிராக சதாம் திணித்த போரில் (1980-1988), அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் நேட்டோ ஆகியவை அவருக்கு ஆதரவளித்திருந்தாலும் ஈரானின் ஒரு அங்குல நிலத்தை கூட அவரால் வெற்றி கொள்ள முடியவில்லை," என்றார்.

ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான சாதாரண யுத்தம் அல்ல என்பதை எங்கள் மறைந்த இமாம் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தார் என்று இமாம் காமனெய் வலியுறுத்தினார். போரில் முக்கிய எதிரி யார் என்பதையும் சதாம் வெறும் கருவி மட்டுமே என்பதையும் மறைந்த இமாம் வலியுறுத்தினர்.” அமெரிக்கா சோவியத் யூனியனை விட மோசமானது, சோவியத் யூனியன் அமெரிக்காவை விட மோசமானது, இங்கிலாந்து இரண்டையும் விட மோசமானது என்று இமாம் கொமெய்னி எப்போதும் கூறி வந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த சக்திகள் போரின் திரைக்குப் பின்னால் செயல்படும் முக்கிய கூறுகள் என்பதை அவர் புரிந்து கொண்டார், என்பதையும் தலைவர் ஞாபகமூட்டினார்.

இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவர் காமனெய் ஈரானின் புனித தேசிய பாதுகாப்புத் திட்டம், மனித வளங்களை வளப்படுத்தியதாக வலியுறுத்தினார், மேலும், “அந்த நாட்களில் புனித பாதுகாப்பில் ஈடுபட்ட எண்ணற்ற மக்கள், இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகின்றனர் என்றும் இறைவனின் கிருபையுடன் தொடர்ந்து எதிர்காலத்திலும் இதைத் தொடர்வர் என்றும் கூறினார். மேலும் இதற்கு தியாகி சுலைமானி ஒரு நல்ல உதாரணம் என்றும் அவரது செயல்பாடுகளின் அளவை இதுவரை யாரும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் செய்தவை பற்றி எதிர்காலத்தில் நாம் அனைவரும் படிப்படியாக அறிந்து கொள்வோம்,” என்றும் இமாம் காமனெய் குறிப்பிட்டார்.


https://english.khamenei.ir/news/7970/During-the-Sacred-Defense-Iran-single-handedly-defeated-the

 

ஈரான்-ஈராக் போர்

ஈராக் 1980 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி ஈரான் மீது திடுதிப் என்று படையெடுத்து, கசப்பான போரைத் திணித்தது. இதனால் அந்நிய சக்திகள் உள்ளே புகவும் பிராந்தியத்தின் ஸ்திரமின்மைக்கு காரணமாகவும் அமைந்தது மட்டுமல்லாமல் இரு நாடுகளையும் பேரழிவிற்கு உட்படுத்தியது.

ஈரானில் இமாம் கொமெய்னி அவர்களின் வழிநடத்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமிய புரட்சி, அரபு ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம் உலகின் தலைமைத்துவ கனவில் மிதந்து கொண்டிருந்த சத்தாம், சூழவுள்ள அரபு ஆட்சியாளர்களினால் தூண்டப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை நீர்வழிப்பாதையான ஷட் அல்-அராப் தொடர்பாக தொடர்ந்த ஒரு பிராந்திய தகராறுக்கு, பேச்சுவார்த்தை மூலமாக அல்லாது, படையெடுப்பின் மூலம் விடை தேட முயன்றார் அப்போதைய ஈராக் தலைவர் சதாம் உசேன்.



இஸ்லாத்தின் விரோதிகளான அமேரிக்கா, சோவியத் ஒன்றியம் உட்பட மேற்குலக நாடுகள் அனைத்தும் இந்த போரில் சதாமுக்கு ஆதரவாக செயல்பட்டன; அரபு நாடுகள் சதாமின் யுத்தத்திற்கு பணத்தை வாரி இறைத்து, பக்க பலமாய் இருந்தன.

யுத்தத்தைத் தொடங்கிய சதாம் ஹுசைன் கண்மூடித்தனமான பாலிஸ்டிக்-ஏவுகணை தாக்குதல்கள், இரசாயன ஆயுதங்களை விரிவாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் பாரசீக வளைகுடாவில் ஈரானில் இருந்து எரிபொருள் ஏற்றிச்செல்லும் மூன்றாம் நாட்டு எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டார்.



மத்திய கிழக்கில், இரு அண்டை நாடுகளுக்கிடையில் எட்டாண்டுகளாக தொடர்ந்த இந்த போரில் இருதரப்பிலும் குறைந்த பட்சம் அரை மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர்கிட்டத்தட்ட அதே அளவிலானோர் நிரந்தர முடமாயினர். சுமார் 228 பில்லியன் டாலர்கள் நேரடியாக செலவிடப்பட்டன, மேலும் 400 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


போர் ஆரம்பிக்கையில் ஈரான் இருந்த நிலை

இஸ்லாமிய புரட்சியின் பின், நாட்டை வழிநடத்தக் கூடிய பல தலைவர்களும் அறிஞர்களும் புரட்சியின் எதிரிகளால் கொல்லப்பட்டிருந்த நிலையில்,

ஷாவின் காலத்தில் ராணுவத்தில் சேவையாற்றிய உயர் அதிகாரிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடியிருந்த நிலையில்,

ஈரானில் இஸ்லாமிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட பூர்த்தி அடையாத நிலையில்,

அமேரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, மாபெரும் ஆக்கிரமிப்பு யுத்தமொன்றை, அமெரிக்க அடிமை அரபிகளின் துணையுடன், சத்தாம் ஆரம்பித்தார்.  

போரின் ஆம்ப காலங்களில் ஈரான் பாரிய சேதங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. சதாமின் ராணுவம் எண்ணெய் வளம் மிக்க ஈரானின் மேற்கில் பல பிரேதங்களை ஆக்கிரமித்துக்கொண்டது.


ஈரான் அப்போதிருந்த குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி துரிதமாக தனது இலக்கை அடைந்துகொள்ளலாம் என்று சதாம் கனக்குப் போட்டார்; ஆனால் போட்ட கணக்கு தப்பு என்பதை அவர் உணர கொஞ்சம் காலம் எடுத்தது.

ஈரான் கொடுத்த பதிலடியினால் சதாம் மட்டுமல்ல சூழ இருந்த அரபு ஆட்சியாளர்கள் அனைவரும் கதிகலங்கிப் போயினர். ஈரான், அது இழந்த பிரதேசங்கள் அனைத்தையும் மீட்டது மட்டுமல்லாமல் ஈராக்குக்குள் புகுந்து தாக்க ஆரம்பித்தனர்: போரில் ஈரானின் கை ஓங்கி வருவதை உணர்ந்த சதாம், போவோர் வருவோரிடமெல்லாம் சமாதான பிச்சை கேட்கும் பரிதாப நிலைக்கு ஆளானார்.

இஸ்லாமிய அரசு முறையை அகற்றுவதற்கான முயற்சியில், சதாமுடன் சேர்ந்து, உலக வல்லாதிக்க சக்திகளும் தோல்வியடைந்தன. இது இஸ்லாத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியே அன்றி வேறில்லை.


சர்வ வல்லமையுள்ள இறைவன் மீது ஈரானிய மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை கிட்டத்தட்ட முழு உலகின் அதிநவீன இராணுவ தொழில்நுட்பத்தை, பயங்கர ஆயுதங்களை வெற்றிபெறச் செய்தது, ஆக்கிரமிப்பாளரிடம் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட ஈரான் இழக்கவில்லை.

அமெரிக்காவினத்தும் மேற்கு நாடுகளினதும் ஈரான் மீதான  அதிகரித்து வரும் பொருளாதாரத் தடைகளுக்கு தொடர்ந்து முகம்கொடுத்துள்ள நிலையிலும், இஸ்லாமிய குடியரசின் தலைவர்கள் மனம் தளரவில்லை. 

இந்த வெற்றிகளுக்கு உண்மையில், ஈரானும் ஈரானிய மக்களும் இஸ்லாமியப் புரட்சியின் தந்தை, வரலாற்று நாயகன் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் சீரிய வழிகாட்டலுக்கு கடன்பட்டிருக்கிறார்கள்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இந்த 8 ஆண்டுகால புனித பாதுகாப்பு யுத்தத்தை, தேச மக்களை ஒன்றாக அணிவகுக்கச் செய்து, தியாகங்களை வழங்குவதற்காக மறைமுகமாகக் கிடைத்த ஒர் ஆசீர்வாதம் என்று நம்பினார்கள்.

அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இஸ்லாமிய அரசியல் முறைமையை பாதுகாப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் பிற அதிநவீன ராணு தொழில்நுட்பங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் இஸ்லாமிய குடியரசை தன்னிறைவு அடையச் செய்ய, ஈரானிய மக்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரவும் இந்த யுத்தம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்..