Saturday, September 12, 2020

அரபுத் தலைவர்கள் பலஸ்தீனர்களுக்கு செய்துவரும் வரலாற்றுத் துரோகம்

The historical betrayal of the Palestinians by Arab leaders


பாலஸ்தீனிய நிலங்கள் மீது இஸ்ரேல் அதன் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடரும் அதே வேளையில், அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதாக பாலஸ்தீனிய தலைவர்கள் விமர்சித்துள்ளனர், இதுபோன்ற ஒப்பந்தங்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைமையை உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளனர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) பஹ்ரைன்-இஸ்ரேல் ஒப்பந்தம் "பலஸ்தீனிய விடுதலை போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு துரோக குத்து" என்று கூறியது.

பஹ்ரைன் கடந்த வெள்ளிக்கிழமையன்று விடுத்த அறிவிப்பை பாலஸ்தீனியர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்  என்று அல் ஜசீரா நிருபர் நிதா இப்ராஹிம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் இருந்து  அறிக்கையிட்டுள்ளார்.


அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதானம் "பாலஸ்தீனிய பிரச்சினை தீர்க்கப்படாமல் நடக்காது" என்று முன்னர் கூறியிருந்த பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் அல் ஜசீரா ஊடக நிருபர் இப்ராஹிம் பேசியதாக கூறினார்.

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இஸ்ரேலின் ஒப்பந்தங்கள் "பிராந்திய ஆதரவு இல்லாமல்" (அதாவது சவூதி அரேபியாவின் ஆதரவின்றி) நடந்திருக்கும் என்று அவர்கள் நம்பவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பஹ்ரைனின் அறிக்கை வெளிவந்த உடனேயே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்பின் மருமகனான குஷ்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஒப்பந்தங்கள் "முஸ்லிம் உலகில் பதற்றத்தை குறைக்க உதவும் என்றும் பாலஸ்தீனிய (விடுதலை) பிரச்சினையை தங்கள் சொந்த தேசிய நலன்களிலிருந்தும் அவர்களின் வெளியுறவுக் கொள்கையிலிருந்தும் விடுவித்து, அவர்களின் உள்நாட்டு முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்தும் செயல்" என்றும் கூறினார்.

https://www.aljazeera.com/news/2020/09/israel-bahrain-agree-establish-full-diplomatic-ties-200911171014685.html?

பஹ்ரைன்-இஸ்ரேல் ஒப்பந்தத்தை ஈரான் கடுமையாக கண்டிக்கிறது

ஈரானின் வெளியுறவு அமைச்சகம் பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமெரிக்க-தரகு ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக கண்டனம் செய்தது, பாலஸ்தீனிய மக்களும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களும் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதை “ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றும் அது கூறியது.


"சந்தேகத்திற்கு இடமின்றி, பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களும் நீதியை நாடும் உலக மக்களும் உலகெங்கிலும் உள்ள சுதந்திர மக்களும் (நயவஞ்சக) அரபு ஆட்சியாளர்கள் இஸ்ரேலின் அபகரிப்பு மற்றும் முரட்டு சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பஹ்ரைனின் இந்த அவமானகரமான துரோகச் செயல் பாலஸ்தீனத்தின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

https://www.tehrantimes.com/news/452341/Iran-calls-Bahrain-s-move-to-establish-ties-with-Israel-disgraceful

சவுதி சியோனிச தொடர்பு

கடந்த வாரம் இஸ்லாத்தின் மிக புனிதத் தளமான மக்காவில் உள்ள புனித ஹரம் ஷரீபின் தலைமை இமாம் அப்துர்-ரஹ்மான்-சுதைஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் கருத்தை சிதைத்து, சவுதி அரேபியா இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை வெளிப்படையாக நிறுவ வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைத்திருந்தார். இவரது குறிப்பிட்ட உரை ஊடகங்களில் ஒரு விவாதத்தை உருவாக்கியிருந்தாலும், வஹாபிகளையும் சியோனிஸ்டுகளையும் ஒன்றாக இணைக்கும் வரலாற்று உறவுகளை அறிந்த எவருக்கும் அது ஆச்சரியமான ஒன்றல்ல.

உலகெங்கிலும் உள்ள அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்ற ‘இஸ்லாமிய’ போர்வையைப் பயன்படுத்தும் சவூதி அரசு, 'ஒரு மினி பாலஸ்தீனிய அரசுக்கு டெல் அவிவ் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இஸ்ரேலுக்கான அங்கீகாரம்' என்று கூறி அதன் வழக்கமான பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

பலஸ்தீன விடுதலை போராட்டத்தை நலிவடையச் செய்வதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (இப்போது பஹ்ரைனும்) சட்டவிரோத சியோனிச நிறுவனத்துடன் இணைந்து, அதன் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பினாமியாக செயல்பட இணங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் ஒப்புதல் இன்றி இது நடந்திருக்காது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.

ஆரம்பத்தில் இருந்தே சவுதி அரேபியா இஸ்ரேலுடன் விரிவான இரகசிய உறவுகளைக் கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நிறைந்துள்ளன. அதுபோலவே  பெரும்பாலான பாரசீக வளைகுடா ஷேக் குட்டி ராஜ்ஜியங்களும் தொடர்புகளைக் கொண்டிருந்தன. மக்களின் அங்கீகாரமற்ற, இந்த சட்டவிரோத ஏகாதிபத்திய முகவர் ராஜ்ஜியங்கள் அனைத்தும், ஒருகாலத்தில் காலனித்துவ பிரிட்டனுக்கும் இப்போது அமெரிக்காவிற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன.

இஸ்லாத்தின் ஆரம்ப கால யூத பழங்குடியினரும், அரபு கோத்திரவாதிகளும் சர்வவல்லமையுள்ள இறைவனால் புனித இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக அருளிய இஸ்லாத்தின் உலகளாவிய தூதுக்கும் எதிராக நெருக்கமாக ஒத்துழைத்தனர் என்பதை மறுக்கமுடியாது. முஸ்லிம் உம்மாவை பிரித்து பலவீனப்படுத்தவும் ஒன்றுபட்டிருந்த முஸ்லிம் உலகை துண்டு துண்டாக உடைத்து, அவற்றின் விவகாரங்களை சிக்கலாக்கி அடிமைப்படுத்தி வைத்திருப்பது காலனித்துவ சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்; இதற்காக 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து சியோனிஸமும் வஹ்ஹாபிஸமும் கைகோர்த்து செயல்பட்டு வந்துள்ளன என்பது வெளிப்படை.

இவ்வாறு, சிரியா, ஈராக், லெபனான், யெமன், எகிப்து மற்றும் பாரசீக வளைகுடாவை சீர்குலைக்க இந்த இரண்டு மனிதாபிமானமற்ற சக்திகளும் கைகோர்த்து செயல்படும் அதேவேளை, ஈரான் இஸ்லாமிய குடியரசை தங்கள் பொதுவான எதிரியாக சித்தரிப்பதன் மூலம் அவை உண்மையில் இஸ்லாம்-விரோத முன்னோடிகளின் பழைய கொள்கைகளையே தொடர்கின்றன. சவுதியும் அதன் பிரதிநிதிகளும் முஸ்லிம்கள் என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டு இந்த இஸ்லாம் விரோத செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் பொருள் என்னவென்றால், மேற்கில் உள்ள சியோனிச கிறிஸ்தவர்களைப் போலவே நமது பிராந்தியத்தில் சியோனிச முஸ்லிம் தலைவர்களின் கும்பல் ஒன்றே உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

டொனால்ட் டிரம்ப், மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்காவில் உள்ள மற்றவர்கள் தங்களை 'சியோனிச கிறிஸ்தவர்கள்' என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதுபோல், அதே உற்சாகத்துடன் சவுதியின் மொஹமட் பின் சல்மான் அந்-நஜ்தி, அபுதாபியின் முகமது பின் சயீத், மற்றும் பஹ்ரைனின் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஆகியோர் தம்மை 'சியோனிச முஸ்லிம்கள்' என்று வெளிப்படையாகவே காட்டி பெருமிதம் கொள்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மொஹமட் பின் சல்மான் ஒரு சியோனிச வம்சத்திலிருந்து வந்தவர் என்பதை வரலாற்று உண்மைகள் சுட்டிக்காட்டுகின்றன. அவரது தந்தையான மன்னர் சல்மான், நஜ்திலிருந்து வந்த பாலைவன வழிப்பறி கும்பல் தலைவரான தாத்தா அப்துல்-அஜீஸ் ஆகியோர் வெய்ஸ்மான் போன்ற சியோனிச தலைவர்களின் நெருங்கிய நண்பர்கள் என்பதை சரித்திர சான்றுகள் நிரூபிக்கின்றன.

1917 ஆம் ஆண்டின் பால்ஃபோர் பிரகடனத்தை (Balfour Declaration) ஹிஜாஸின் கவர்னர் ஷெரீப் ஹுசைன் நிராகரித்த பின்னர், பிரிட்டிஷார் வழிப்பறி கொள்ளையரான சவுத் அப்துல் அஸீஸை கொண்டு ஷரீப் ஹுசைனுக்கு எதிராக கலகம் விளைவித்து, புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவிலும், தாயிப் மற்றும் மற்றும் ஜெத்தா போன்ற நகரங்களில் முஸ்லிம்களை கொண்றுகுவிக்கச் செய்ததுடன், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஸ்தாபிக்கச் செய்வதற்கான லண்டனின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கான வெகுமதியாக 1932 இல் சவுத் அப்துல் அஸீஸை சவுதி அரேபியா என்று அழைக்கப்படும் ஒரு மோசமான அரசின் மன்னராக அறிவித்தது. இந்த விடயத்தில் எவருக்காவது சந்தேகம் இருப்பின் அரேபியா மற்றும் லெவண்டின் சமீபத்திய வரலாற்றைப் படித்தால் தெளிவு பெறலாம்.


லண்டனில் உள்ள வெளியுறவு அலுவலகத்தில் மத்திய கிழக்கு பிரிவில் பணிபுரிந்த ஜார்ஜ் ரெண்டெல் (George Rendel) என்ற ஒரு அதிகாரி, ‘சவுதி அரேபியா’ என்ற புதிய பெயரை தாமே உருவாக்கியதாக பெருமைப்பட்டிருந்தார்.

மேலும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சந்ததியினரின் பொறுப்பில் இருந்த ஆயிரம் ஆண்டுகால ஹிஜாஸின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த அப்துல்-அஸீஸ் பனீ சவ்த்பாலஸ்தீனத்தை "யூதர்களின் மூதாதையர் தாயகம்" என்று அழைத்ததோடு, 1948 இல் கிட்டத்தட்ட 800,000 பாலஸ்தீனியர்களின் இன அழிப்பு விடயத்தை கண்டும் காணாததுபோல இருந்து தம்மை ஆட்சியில் அமர்த்திய பிரிட்டிஷாருக்கு நன்றிக்கடன் செலுத்தினார்.

அதாவது, பாலஸ்தீனத்தில் சியோனிசத்தை திணிப்பதற்கான காலனித்துவ பிரிட்டனின் உந்துதல் சமகால சவுதி அரேபியாவின் நிறைந்த பங்களிப்புடனேயே இடம்பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் சியோன் (Friends of Zion) அருங்காட்சியகத்தின் நிறுவனர் மைக் எவன்ஸ் என்பவர் பல பாரசீக வளைகுடா நாடுகளுக்குச் விஜயம் செய்தபின் "[அங்குள்ள அரபு] தலைவர்கள் யூதர்களை விட இஸ்ரேலுக்கு ஆதரவானவர்கள்," என்று கூறியிருந்தார்.

எனவே, பாலஸ்தீனத்தின் சியோனிச அபகரிப்பை அங்கீகரிக்கும் சவுதி அரேபியா அதனை நிராகரிக்கும் நாடுகளுடன் போர்தொடுத்துள்ளதில் ஆச்சரியமில்லை.

http://kayhan.ir/en/news/82594/saudi-arabia%E2%80%99s-zionist-connection

No comments:

Post a Comment