Saturday, September 19, 2020

பின்விளைவுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் பொறுப்பு - ரூஹானி எச்சரிக்கை

Rouhani Warns UAE, Bahrain of ‘Consequences’

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி புதன்கிழமை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்குவதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு "விளைவுகளுக்கும்" ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை பொறுப்பாகும் என்று கூறினார்.

சியோனிச பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் வெள்ளை மாளிகையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மறுநாள் ரூஹானி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரூஹானி, சியோனிச ஆட்சி “ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தில் அதிக குற்றங்களைச் செய்து கொண்டு இருக்கையில் இவ்வாறு நிகழ்வது பலஸ்தீனர்களுக்கு செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்" என்றும் அவர் கூறினார்.

"பிராந்திய நாடுகளில் வாழும் மக்கள் இறையச்சம் கொண்ட உண்மையான முஸ்லிம்கள், ஆனால் அவர்களின் ஆட்சியாளர்களால் இஸ்லாத்தையோ அல்லது ஒரே மொழிபேசும் தங்கள் பலஸ்தீன் சகோதர இனத்தவர்கள் தொடர்பாக செய்ய வேண்டிய அவர்களின் கடமையையோ புரிந்து கொள்ள முடியவில்லை..." என்றும் அவர் கூறினார்

"நீங்கள் சியோனிச பயங்கரவாதிகளுக்கு உங்கள் நட்புக் கரங்களை எவ்வாறு நீட்ட முடியும்? தொடர்ந்து நீங்கள் அவர்களுக்கு பிராந்தியத்தில் ராணுவ தளங்களை கொடுக்க விரும்புகிறீர்களா? இதிலிருந்து எழும் கடுமையான விளைவுகள் அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு."

கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதேபோன்ற வாஷிங்டன் தரகு ஒப்பந்தங்கள் இஸ்ரேலின் ஆட்சிக்கும் சவுதி அரேபியா உட்பட பல அரபு நாடுகளுக்கும் இடையே இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.

"பல தசாப்தங்களாக தொடர்ந்த பிளவு மற்றும் மோதல்களுக்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய மத்திய கிழக்கின் விடியலைக் காண்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.

http://kayhan.ir/en/news/82901/rouhani-warns-uae-bahrain-of-%E2%80%98consequences%E2%80%99

இது நியாயமான பாலஸ்தீன விடுதலை போராட்டத்திற்கு விழுந்த மரண அடி என்பதை ஏன் இந்த அராபுத் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை...?

ஈரான் முன்னர் பஹ்ரைனை, அதன் ஒப்பந்தம் இஸ்ரேலின் "குற்றங்களுக்கு" ஒரு அதை பங்காளியாக்கிவிட்டது என்றும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் உலகத்தை எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியது. இவர்களது இந்த துரோகச் செயலுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

 


முஸ்லிம் உலகை அழிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட  செப்டம்பர் 11 சம்பவ ஞாபகார்த்த அதே தினத்தில், இஸ்ரேலிய ஆட்சி மற்றும் பஹ்ரைன் உறவுகளை சீராக்க ஒப்புக்கொண்ட செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய ஆட்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே அமெரிக்காவால் தரகு செய்யப்பட்ட இதேபோன்ற ஒப்பந்தம் இடம்பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த இவ்விரு நாடுகளும் முடிவு செய்தன. இஸ்ரேலிய ஆட்சியை அங்கீகரித்த நான்காவது அரபு நாடாக பஹ்ரைன் உள்ளது. 1979 ல் எகிப்து மற்றும் 1994 இல் ஜோர்டான் ஆகியன முதல் இரண்டு நாடுகளாகும்.


பாலஸ்தீனிய ஆணையம் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பஹ்ரைன் தலைவர்களின் துரோகச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்க சமாதான முன்முயற்சிகளை சியோனிச ஆட்சிக்கு ஆதரவானது என்று கண்டனம் செய்ததோடு
, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பஹ்ரைன் பொதுவான அரபு நிலைப்பாட்டை பலமிளக்கச் செய்கிறது என்று விமர்சித்தது.

இது பல லட்சம் மக்களின் உயிர்களை பறித்து, புனித பூமியையும் பலஸ்தீன் தாயகத்தையும் அபகரித்த பயங்கரவாத ஆட்சியின் சட்டவிரோத செயலை அங்கீகரிக்கும் செயல் என்று பலஸ்தீனர்கள் கூறுகின்றனர்.


முஸ்லிமல்லாத பல நாடுகள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் சியோனிச அரசுடனான தமது தொடர்புகளை அறுத்துள்ள நிலையில் இந்த அரபு ஆட்சியாளர்களின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

"இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனின் சமாதான ஒப்பந்தங்கள் அவர்களுக்கு இஸ்ரேலுடன் மேலும் இராஜதந்திர, வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளைத் திறப்பதற்கான ஒரு கதவு மட்டுமே. இந்த ஒப்பந்தத்தில் சேர பல நாடுகளான ஓமான், சூடான், மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா போன்றவை காத்திருக்கின்றன,” என்று பிரிட்டிஷ்-பாகிஸ்தான் ஆய்வாளர் நூர் தஹ்ரி குறிப்பிடுகின்றார். இந்த அலையில் கட்டார் அரசும் பாகிஸ்தான் அரசும் கூட அள்ளுண்டு செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பு மற்றும் யூத அரசுடன் எந்தவொரு சமரசத்திற்கும் முயல்வது தொடர்பாக ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக வெளிப்படையான  எச்சரிக்கையை மீறி, இரு உடன்படிக்கைகளாலும் ஏற்பட்ட தாக்கம் இப்பகுதி முழுவதும் தொடரும் என்று ஜெருசலேம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

 

No comments:

Post a Comment