Martyr Beheshti’s Vision Continues to Guide Iran to the Horror of the US
மாபெரும் புரட்சிகர பிரமுகர், தலைமை நீதிபதி ஆயதுல்லா முகமது ஹுசைனி பெஹெஷ்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட 72 உயர் அதிகாரிகளுடன் குண்டுவைத்து ஷஹீதாக்கப்பட்டு ஜூன் 28ம் திகதி நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இத்தகைய பயங்கரவாத செயல்கள் ஈரானில் இஸ்லாமிய குடியரசு
அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நினைத்தனர் அமெரிக்காவின் ஊதியத்திற்காக
துணைபோன துரோகிகள்.
இன்றும், அமெரிக்க அதிகாரத்தில் இருப்போர் பயங்கரவாதத்தின் அதே பழமையான
கொள்கையையே பின்பற்றுகிறார்கள் - ஈரானுக்கு எதிரான சமீபத்திய முக்கிய பயங்கரவாதம் ஜெனரல்
காஸெம் சுலைமணி படுகொலை - ஆனால் வெலாயத்தே பக்கீஹ் அமைப்பு (சன்மார்க்கசீலர்களின் நிர்வாகம்), அதன் அரசியலமைப்பு பிரதானமாக
ஆயதுல்லாஹ் பெஹெஷ்டியால் தயாரிக்கப்பட்டது https://en.parliran.ir/eng/en/Constitution, வெலாயத்தே பக்கீஹ் முறைமை, அமெரிக்க சதிகளால் பலம் குன்றாது, இறைவன் அருளால் இன்னும் இன்னும்
வலிமையடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபோதும் திருந்தாத வாஷிங்டனின் துஷ்ட இயல்பு தொடர்பாக பெஹெஷ்டியின் பிரபல்யமான வார்த்தைகள் - அவர்களின்
பரிதாபத்துக்குரிய வில்லத்தனம் எம்மை பலவீனமாக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக - “அமெரிக்கா எம்மீது கோபப்பட்டு அக்கோபத்தினாலேயே
சாகட்டும்" என்ற சொற்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலிக்கின்றன.
உண்மையில், 1979 ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து ஈரானிய மண்ணிலிருந்து
வெளியேற்றப்பட்ட அமெரிக்காவின் முகத்தில் இப்போது அச்சம் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது, இது எங்கள் பிராந்தியத்தில் அதனது
வள சுரண்டல் நீடிக்க போவதில்லை என்பதை உணர தலைப்பட்டுள்ளது. ஈராக், சிரியா, அரேபியா, பஹ்ரைன் மற்றும் பிற இடங்களில்
இருந்து (ஆப்கானிஸ்தான் அடங்கலாக), அது வெளியேற்றப்படுவதற்கு முன்பான ஒரு சிறு கால அவகாசமே இதுவாகும். இஸ்லாமிய புரட்சியை
அழிக்கும் நோக்கில் அமெரிக்க முகவர்களால் படுகொலை செய்யப்பட்ட உயிர் தியாகிகளின் அழியாத
மரபுக்கு நன்றி.
இஸ்லாமியப் புரட்சியின் தந்தை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள்
1981 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தனது அர்ப்பணிப்பு மிக்க மாணவரின் உயிர் தியாகம் தொடர்பான
துன்பகரமான செய்தியைக் கேட்டபோது, அவரது அந்த அழியாத வார்த்தைகளை உச்சரித்தது மட்டுமல்லாமல் “பெஹெஷ்டி
நம் தேசத்திற்கு ஒரு தேசமாக இருந்தார்” என்று வர்ணித்தார்கள்.
முஹம்மது ஹுசைனி பெஹெஷ்டி; (24 அக்டோபர் 1928 - 28 ஜூன்
1981) ஒரு ஈரானிய நீதிபதி, தத்துவஞானி, சன்மார்க்க மேதை மற்றும் அரசியல்வாதியும் ஆவார், அவர் புரட்சிக்குப் பின்னர் ஈரானின்
அரசியல் வரிசையில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது செல்வாக்குமிக்க
நபராக அறியப்பட்டார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய அரசியலமைப்பின் முதன்மை
சிற்பியாகவும் இஸ்லாமிய குடியரசின் நிர்வாக கட்டமைப்பின் கர்த்தாவாகவும் பெஹெஷ்டி கருதப்படுகிறார்.
பெஹெஷ்டி தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானி, முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் காத்தமி, அலி அக்பர் வேலாயத்தி, முஹம்மத் ஜவாத் லரிஜானி, அலி பல்லாஹியான், மற்றும் முஸ்தபா பூர்முஹம்மதி போன்ற பல முக்கிய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து
பயிற்சி வழங்கியவர் என்றும் அறியப்படுகிறது.
பெஹெஷ்டி இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் பொதுச்செயலாளராகவும்
பணியாற்றினார், மேலும் ஈரானிய நீதித்துறை அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இஸ்லாமிய புரட்சி கவுன்சில்
மற்றும் நிபுணர்களின் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பெஹெஷ்டி தத்துவத்தில்
டாக்டர் பட்டம் பெற்றவர், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் அரபு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
ஈரான் மக்கள் முஜாஹெடின் என்று அழைக்கப்பட்ட முனாபிக் கூலிப்படையின்
குண்டுவெடிப்பில் 1981 ஜூன் 28 அன்று பெஹெஷ்டி படுகொலை செய்யப்பட்டார், இஸ்லாமிய குடியரசுக் கட்சியின்
70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 4 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உட்பட. பலர் இந்த சம்பவத்தில் ஷஹீதாகினர். பெஹெஷ்டியின் மரணத்தைத் தொடர்ந்து, ஆயதுல்லா கொமெய்னி அவரை "எங்களுக்கு ஒரு தேசமாக" இருந்த ஒரு நபர்
என்று குறிப்பிட்டார்.
ஆம், அவர் தனது சொந்த உரிமையில் ஒரு தேசமாகவும், இஸ்லாமிய குடியரசின் தேசிய அரசியலமைப்பின்
சீரான செயல்பாட்டாளராகவும் இருந்தார். இந்த மாபெரும் ஈரானிய நீதித்துறை அறிஞர், தத்துவஞானி அவருடைய 53 வயதில்
அமெரிக்க முகவர்களால் கோழைத்தனமாக கொல்லப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இஸ்லாமிய ஈரானின் தலைமை
நீதிபதியாக இருந்த ரயீஸி மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு நீதித்துறை பதவிகளில்
நீண்டகாலமாக பணியாற்றியது உட்பட, தனது கடமைகளை பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றியவராகும்.
இஸ்லாமிய குடியரசின் குறிக்கோள்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
ஊக்குவிக்கும் தீர்மானத்துடன் அவர் இப்போது இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் (அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற தீர்மானத்துடன்
இருக்கும் நாடுகளின் நலனுக்காக) அர்ப்பணிப்புடன் செயல்பட தயாராகி வருகிறார்.
ரயீஸியின் தெரிவானது உண்மையில் தியாகி பெஹெஷ்டியின் அபிலாஷைகளின் நிறைவேற்றமாகும், இஸ்லாமிய ஒற்றுமை, சியோனிச ஆக்கிரமிப்பில் இருந்து அல்-அக்ஸா மற்றும் பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கான பிரச்சாரம் உட்பட இமாம் கோமெய்னி (ரஹ்) அவர்களது போராட்டத்தில் விசுவாசமான சீடராக இருந்து, இஸ்லாமிய குடியரசின் கௌரவத்தையும் மனிதாபிமான விழுமியங்களையும் சத்தியத்தின் வெற்றிக்கான போராட்டத்தை இப்பிராந்தியத்தில் தூண்டியது நிச்சயமாக அவரின் சிந்தனையாகும் என்றால் மிகையல்ல.
இஸ்லாமிய குடியரசு அமைப்பு மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் பரிணாமத்திற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆயதுல்லாஹ் பெஹெஷ்டி கூறியது போல, அரசியல் சிந்தனையின் மிக முக்கியமான தூண்களில் ஒன்று, மனிதர்கள் சத்தியத்தை நோக்கிய நம்பிக்கையுடன் சரியான பாதையில் நடக்க முடியும் என்பதுதான். இன்று ஈரான் அப்பாதையில் சீராக அணிவகுத்து வருகிறது. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெறச் செய்வதன் மூலம் முன்னேற்றத்தின் உச்சத்தை நோக்கி, மற்றும் அமெரிக்காவின் துஷ்ட நுகத்திலிருந்து விடுபட நாடுகளுக்கு உதவுகிறது.