Contributors

Thursday, May 30, 2024

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிய அரிய செய்தி

 Leader to US students:

You are standing on the right side of history


காஸாவின் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க மனசாட்சி தூண்டிய இளைஞர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அமெரிக்காவின் அன்பான பல்கலைக்கழக மாணவர்களே, இந்தச் செய்தி உங்களுடனான எங்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாகும். வரலாற்றின் சரியான பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள்.

நீங்கள் இப்போது எதிர்ப்பு முன்னணியின் ஒரு கிளையை உருவாக்கி, உங்கள் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற அழுத்தத்தை எதிர்கொண்டு கௌரவமான போராட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள் - இது அபகரிப்பு மற்றும் மிருகத்தனமான சியோனிச ஆட்சியை வெளிப்படையாக ஆதரிக்கும் அரசாங்கம்.

இன்று உங்களுக்கு இருக்கும் அதே புரிதல்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் மாபெரும் எதிர்ப்பு முன்னணி, உங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தில் (ஈரானில்) பல ஆண்டுகளாக இதே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பாலஸ்தீன தேசத்தின் மீது கொடூரமான சியோனிச பயங்கரவாத வலையமைப்பு செலுத்தி வரும் அப்பட்டமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தப் போராட்டத்தின் குறிக்கோள். அவர்களின் நாட்டைக் கைப்பற்றிய பின்னர், சியோனிச ஆட்சி பலஸ்தீன மக்களை மிகக் கடுமையான அழுத்தங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தியுள்ளது.

இனவெறி சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை இன்று பல தசாப்தங்களாக நடந்து வரும் தீவிர அடக்குமுறையின் தொடர்ச்சியாகும். பாலஸ்தீனம் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சுதந்திர நாடு. இது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அடங்கிய தேசம்.

உலகப் போருக்குப் பிறகு, முதலாளித்துவ சியோனிச வலைப்பின்னலானது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியுடன் பல ஆயிரம் பயங்கரவாதிகளை படிப்படியாக இந்த மண்ணில் இறக்குமதி செய்தது. இந்த பயங்கரவாதிகள் நகரங்கள் மற்றும் கிராமங்களைத் தாக்கினர், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர் மற்றும் பல மக்களை அண்டை நாடுகளுக்கு விரட்டினர். அவர்களது வீடுகள், வணிகங்கள் மற்றும் விவசாய நிலங்களைக் கைப்பற்றி, அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் அரசாங்கத்தை உருவாக்கி அதை இஸ்ரேல் என்று அழைத்தனர்.

இங்கிலாந்து வழங்கி வந்த ஆரம்ப உதவிக்குப் பிறகு, அமெரிக்கா இந்த அபகரிப்பு ஆட்சியின் மிகப் பெரிய ஆதரவாளராக ஆனது, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை இடைவிடாமல் வழங்கியது. மன்னிக்க முடியாத பொறுப்பற்ற விதத்தில் அமெரிக்கா (சியோனிச) ஆட்சியின் அணு ஆயுத உற்பத்திக்கு உதவி செய்தது.

சியோனிச ஆட்சியானது ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்தின் பாதுகாப்பற்ற அப்பாவி மக்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்ட கொள்கையைப் பயன்படுத்தியது மற்றும் நாளுக்கு நாள், அனைத்து தார்மீக, மனித மற்றும் மத விழுமியங்களையும் முற்றிலும் புறக்கணித்து அதன் கொடூரம், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறையை தீவிரப்படுத்தியது.

அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் இந்த அரச பயங்கரவாதம் மற்றும் தொடர் அடக்குமுறையைக் கண்டுகொள்ள மறுத்துவிட்டனர். இன்று, காசாவில் நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் சில கருத்துக்கள் உண்மையானதை விட பாசாங்குத்தனமானவை.

இந்த விரக்தியின் இருண்ட சூழலில் இருந்து தான் எதிர்ப்பு முன்னணி வெளிப்பட்டது, மேலும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தை நிறுவியது அதை விரிவுபடுத்தி பலப்படுத்தியது.

உலகளாவிய சியோனிச உயரடுக்கு - பெரும்பாலான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடக நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானது அல்லது நிதி மற்றும் லஞ்சம் மூலம் அவற்றை கட்டுப்படுத்துகிறது - எமது இந்த தைரியமான, மனிதாபிமான எதிர்ப்பு இயக்கத்தை "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தியுள்ளது.

சியோனிஸ்டுகளின் குற்றங்களுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போராடும் மக்களை பயங்கரவாத தேசம் என்று அழைக்க முடியுமா? அநியாயமிழைக்கப்பட்ட தேசத்துக்கு உதவி செய்து அதை வலுப்படுத்துவது பயங்கரவாதச் செயலா?

உலகளாவிய மேலாதிக்கத்தின் அடக்குமுறை தலைவர்கள் மிக அடிப்படையான மனிதக் கருத்துக்களைக் கூட இரக்கமின்றி சிதைக்கின்றனர். இரக்கமற்ற, பயங்கரவாத இஸ்ரேலிய ஆட்சியை தற்காப்புக்காகச் செயல்படுவதாக அவர்கள் சித்தரிக்கின்றனர்.

இன்று சூழ்நிலைகள் மாறி வருகின்றன என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேற்கு ஆசியாவின் முக்கியமான பகுதிக்கு வித்தியாசமான ஒரு விதி காத்திருக்கிறது. உலக அளவில் மக்களின் மனசாட்சி விழித்துக்கொண்டுள்ளது, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும், எதிர்ப்பு முன்னணி வலுவடைந்துள்ளது; மேலும் வலுவடையும்.

மேலும் வரலாறு அதன் புதிய பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறது.

பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களாகிய உங்களுடன், ஏனைய நாடுகளிலும் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன.

உங்கள் பேராசிரியர்களின் ஆதரவும் ஒற்றுமையும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் விளைவான வளர்ச்சியாகும். இது உங்கள் அரசாங்கத்தின் பொலிஸ் மிருகத்தனம் மற்றும் அது உங்கள் மீது செலுத்தும் அழுத்தங்களின் நடுவே ஓரளவு ஆறுதல் அளிக்கும் சங்கதியாகும். இளைஞர்களாகிய உங்களுடன் ஒருமைப்பாட்டை பகிர்ந்து கொண்டவர்களில் நானும் ஒருவன், உங்கள் விடாமுயற்சிக்கு மதிப்பளிக்கிறேன்.

முஸ்லிம்களாகிய எமக்கும், மனிதகுலம் அனைவருக்கும் குர்ஆன் கூறும் பாடம், எது சரியானதோ அதற்காக உறுதியாக நிற்க வேண்டும் என்பதுதான். உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள். (11:112).

மனிதர்களிடையேயான உறவுகளுக்கு குர்ஆனின் பாடம் நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. (2:279).

ஒரு விரிவான புரிதல் மற்றும் இதைப் போன்ற பிற நூற்றுக்கணக்கான கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்ப்பு முன்னணி முன்னேறுகிறது - மேலும் இறைவனின் அருளால் வெற்றியை அடையும்.

நீங்கள் குர்ஆனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதே உங்களுக்கான எனது அறிவுரை.

https://en.mehrnews.com/news/215893/You-are-standing-on-the-right-side-of-history  

 

Friday, May 17, 2024

பல்துறை விற்பன்னர் உமர் கய்யாம்

 The world famous poet Omar Khayyam was equal to 

Kepler and Newton in mathematics.

உமர் கய்யாம் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘ருபையாத்’ அல்லது வசனங்களைத் தந்த ஓர் அற்புத கவிஞர், தத்துவஞானி, மருத்துவர், வானியலாளர், கணிதவியலாளர். இவ்வாறான ஒருவரை சரித்திரத்தில் காண்பது அரிதிலும் அரிது.


உமர் கய்யாம் ஒரு வானியலாளர்மருத்துவர்தத்துவவாதி மற்றும் கணிதவியலாளர்: அவர் இயற்கணிதத்தில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அவரது கவிதை வேறு எந்த மேற்கத்திய சாரா கவிஞரையும் விட மேற்கில் நன்கு அறியப்பட்டிருக்கிறது.

கி.பி 1072 ஆம் ஆண்டில்உமர் கய்யாம் இதுவரை கணக்கிடப்பட்ட மிக துல்லியமான ஆண்டு நீளத்தை ஆவணப்படுத்தினார் - நவீன உலகில் பெரும்பாலான நோக்கங்களுக்காக துல்லியமான ஒரு கணக்கீடாக இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.


ஆரம்பம்
உமர் கய்யாம் 1048 மே 18 அன்று வடக்கு பாரசீகத்தின் நைஷாபூரில் ஒரு பெரிய வர்த்தக நகரத்தில் பிறந்தார். இன்று நகரம் ஈரானில் உள்ளது. உமரின்  தந்தை இப்ராஹிம் கய்யாமிஒரு செல்வந்த  மருத்துவர். உமரின் தாயின் பெயர் தெரியவில்லை. கய்யாமி என்றால் கூடாரம் கட்டுபவர் என்று பொருள்படும் என்பதால் உமரின் தந்தை கூடாரங்களை அமைப்பவராக இருந்தார் என்று சில ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும்பல ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஸ்மித் என்று பெயரிடப்பட்டிருந்தாலும்அவர்கள் கொல்லர்களாக இருப்பதில்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்குலக இலக்கியத்தில் ஒமர் கய்யாமின் தாக்கம்
பாரசீக வானியலாளர்கணிதவியலாளர் மற்றும் கவிஞர் உமர் கய்யாம் 1048 இல் நைஷாபூரில் (கோராசான் ராஸாவி மாகாணத்தில் உள்ள ஒரு நகரம்) பிறந்தார். ஷேக் முகமது மன்சூரி என்ற அறிஞரிடமிருந்து தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர்  இயற்கணிதம் மற்றும் வடிவியலைக் கற்பிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

உமர் கய்யாமின் மிகவும் பிரபலமான இயற்கணித  சிக்கல்களுக்கான தீர்வுஎன்ற படைப்பை அவர் 1070 இல் நிறைவு செய்தார்இதில் அடிப்படை இயற்கணிதக் கொள்கைகளை வகுத்திருந்தார். 1077 ஆம் ஆண்டில் கயாம் எழுதிய மற்றொரு பெரிய படைப்பு, ‘ஷார்ஹ் மா அஷ்கலா மின் முசாதராத் கிதாப் உக்லிடிஸ்’ அதாவது யூக்லிட்டின் போஸ்டுலேட்டுகளில் உள்ள சிரமங்களின் விளக்கங்கள்” என்ற நூலாகும். நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜியோர்டானோ விட்டேல் என்ற ஒரு இத்தாலிய கணிதவியலாளர் கய்யாமின் கோட்பாட்டில் மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். எண்கணித சிக்கல்கள்’ என அழைக்கப்படும் கய்யாமின் மற்ற புத்தகம், இசை மற்றும் இயற்கணிதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நன்கு அறியப்பட்ட அக்கால வானியலாளராக இருந்தார். பாரசீக ஜலாலி நாட்காட்டியில் பல சீர்திருத்தங்களையும் செய்தார். ஜலாலி நாட்காட்டி ஏனைய நாட்காட்டிகளுக்கு அடித்தளமாக மாறியது. மேலும் கிரிகோரியன் காலெண்டரை விட இது மிகவும் துல்லியமானது என்றும் அறியப்படுகிறது. ஒரு சிறந்த கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என்பதற்கும் அப்பால்மேற்கில் அவரது புகழ் அவரது “ ருபையாத்” கவிதைகளின் தொகுப்பால் ஏற்படுகிறது.

மஷ்ஹத் நகரிலுள்ள இமாம் ரிஸா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியர் டாக்டர் மரியம் கோஹெஸ்தானி இஸ்னா (ஈரானிய செய்தி நிறுவனம்) வுக்கு அளித்த பேட்டியில் உமர் கய்யாம் பற்றி குறிப்பிடுகையில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட ருபையாத்’ அல்லது வசனங்களைத் தந்த ஒரு சிறந்த கவிஞர் என்று குறிப்பிட்டார். இவரது கவிதைகள் 70க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவித்துவத்துக்கு அப்பால் உமர் கய்யாம் ஒரு திறமையான தத்துவஞானியூமாவார். இவரது சிந்தனைப் பள்ளியில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு மொழிகளில் அவரது படைப்புகளின் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன.
அது மட்டுமல்லாமல்தனது இளம் வயதிலேயே மருத்துவம் கற்ற  உமர் கய்யாம் மருத்துவ அறிவியலை நன்கு அறிந்திருந்தார். இப்னு சினாவின் ஆக்கங்களை ஆர்வத்துடன் கற்றார். அவற்றின் தாக்கம் அவரில் நிறைய இருந்தது. இதை அவரே குறிப்பிட்டிருந்தார்.
உமர் கய்யாம் தனது வாழ்நாளில் எந்த கவிதையையும் வெளியிடவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியாகவும் தத்துவஞானியாவுமே நன்கு அறியப்பட்டவர். இன்று ருபையாத் எனும் அவரது  படைப்பு உலகில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
உமர் கய்யாமின் ஆக்கங்களை ஆராய்ந்த முதல் ஆங்கில அறிஞர்தாமஸ் ஹைட் (1636-1703), கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளுக்கு சிறிது இடத்தை அர்ப்பணித்தார்மேலும் கய்யாமின் 'ருபைஎனும் நாலடிப்பாடல்களை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்
சர் கோர் ஒஸ்லி (Sir Gore Ouseley 1770 -1844) ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர்மொழியியலாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர் பாரசீக மொழியை நன்கு அறிந்தவர் மற்றும் ஈரானிய புத்தகங்களின் பல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாரசீக இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஃபிட்ஸ் ஜெரால்ட் உமர் கய்யாமின் ருபையாத்'தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில்(FitzGerald) மொழிபெயர்த்த ருபையாத்தின் புகழ் பிரிட்டனில் மட்டுமல்லஅமெரிக்காவிலும் பரவியது. ஃபிட்ஸ் ஜெரால்ட் தனது மொழிபெயர்ப்பை பல முறை மாற்றியமைத்தார் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத்நான்காவது ஆங்கில பதிப்பு 1879 இல் வெளியிடப்பட்டதுமற்றும் ஐந்தாவது பதிப்பும் (கடைசி பதிப்பு) அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.
ஃபிட்ஸ் ஜெரால்டின் பதிப்பின் ஊடாக ஐரோப்பாவில் (மேற்கு) கய்யாம் நன்கு அறியப்பட்டாலும்எட்வர்ட் ஹென்றி வின்ஃபீல்ட் (1836-1922)  எனும் பாரசீக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் கய்யாமின் ருபையாத்தினது துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்கினார். இவர் உமர் கய்யாமின் 500 ருபையாத்களை மொழிபெயர்த்தார்.  ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்தது 101 ருபையாத்கள் மட்டுமே. இந்த இரண்டு படைப்புகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில்வின்ஃபீல்ட் பாரசீக கவிதை மரபு பிசகாமல் மொழிபெயர்த்திருந்தார் என்பதாகும்.
ஃபிட்ஸ்ஜெரால்ட் விக்டோரியன் ரொமாண்டிஸத்துடன் ஒத்துப்போகும்படி அசல் "ரூபாயத்"தை கணிசமாக சிதைத்தார். கய்யாமின் தத்துவ வசனங்களுக்கு பதிலாக காதல் வசங்களை உட்புகுத்தியதன் காரணமாக ருபையாத் கவிதையை ஒரு காதல் பாடலாக சிலர் கருத வழிவகுத்தது.
1892 ஆம் ஆண்டில் கய்யாம் சங்கம்” லண்டனில் நிறுவப்பட்டது. இது பிரிட்டிஷ் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் ஒன்றுகூடும் மையமாக இருந்தது. விக்டோரியன் எழுத்தாளர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத்தை  நினைவுகூரும் வகையில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது. லண்டனில் கய்யாம் சங்கத்தின் வெற்றி ஜெர்மனிநெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் கய்யாம் சங்கங்களை நிறுவ வழிவகுத்தது. ருபையாத்தை நினைவுகூரும் வகையில் கய்யாம் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் லண்டன் சங்கத்தில் ஒன்றுகூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் கய்யாம் மேற்கத்திய இசையிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். கிரான்வில்லே பான்டோக் என்ற ஒரு பிரிட்டிஷ் இசைக்கலைஞர்இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு உமர் கய்யாம்” ஆல்பத்தை உருவாக்கினார்.
அமெரிக்காவின் சிறந்த கணிதவியலாளர் வில்லியம் எட்வர்ட் ஸ்டோரி என்பவர் உமர் கய்யாம் கெப்லருக்கும் நியூட்டனுக்கும் சமம் என்று நம்பினார்.


பாரசீக கவிதைகள் குறித்த தனது "இலக்கியம் மற்றும் சமூக நோக்கங்கள்" என்ற கட்டுரையில் கய்யாம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் ரால்ப் வால்டோ எமர்சன் சுட்டிக்காட்டுகின்றார்.
அமெரிக்க எழுத்தாளர்களான மார்க் ட்வைன் மற்றும் டி.எஸ். எலியட் ஆகியோரில் உமர் கய்யாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். கய்யாமின் எண்ணங்களுக்கு ஏற்ப இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலின் கதையைச் சொல்லும் தனது "தி வுல்ப்  ஆஃப் தி சீ" (The Wolf of the Sea) நாவலில் அமெரிக்க நாவலாசிரியரான ஜாக் லண்டனையும் அவர் ஈர்த்திருந்தார்.
உமர் கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை கருவாகக் கொண்டு பல படங்களை ஹாலிவுட் உருவாக்கியுள்ளது. "தி கீப்பர்: தி லெஜண்ட் ஆஃப் உமர் கய்யாம்" (The Keeper: The Legend of Omar Khayyam) 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் சமீபத்திய திரைப்படமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்ஜீன்-பாப்டிஸ்ட் நிக்கோலாய் கய்யாமின் ருபையாத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தபோது பிரெஞ்சு மக்கள் கய்யாமின் ருபையாத்துடன் நன்கு பரிச்சயமாகினர்.
பிரெஞ்சு கவிஞரும் நாடக ஆசிரியருமான மோரிஸ் புஷெர் "ட்ரீம் ஆஃப் கய்யாம்" (Dream of Khayyam) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை வழங்கினார்அதில் அவர் "நான் கய்யாமை  பின்பற்றுபவர்களில் ஒருவன்" என்று கூறினார்.

தவிரஜீன் லாகூர் கய்யாமின் தத்துவத்தின் அடிப்படையில் "மாயை" (Illusion) என்ற புத்தகத்தை எழுதினார்.
கய்யாம் ஒரு புதிரான மனிதராக இருக்கிறார். அவரைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர். ஆயினும் அவர் ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

தாஹா முஸம்மில் 

Monday, May 13, 2024

பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகத்தை குறிக்கும் "நக்பா"

"Nakba" refers to the historical betrayal of the Palestinian people.

நக்பா தினம்: அடக்குமுறையின் 76 ஆண்டுகள்

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காஸா பகுதியிலும், மேற்குக் கரையிலும், அதேபோல் உலகின் பிற பகுதிகளிலும் தெருக்களுக்கு வந்து பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த ஒரு பேரழிவை நினைவுகூர்கின்றனர்.

நக்பா தினம் என்று அழைக்கப்படும் இந்த தினமானது, பாலஸ்தீன சமுதாயத்தின் கிட்டத்தட்ட மொத்த அழிவின் இழப்பில் இஸ்ரேலை "யூதர்கள் பெரும்பான்மை நாடாக" நிறுவுவதைக் குறிக்கிறது.

முதலாம் உலகப் போருக்கு முன்னர் காஸா ஒட்டோமன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. போர் மற்றும் ஒட்டோமன் பேரரசின் (உஸ்மானிய சாம்ராஜ்யம்) வீழ்ச்சியைத் தொடர்ந்து, லீக் ஆஃப் நேஷன்ஸ் திட்டத்தின்படி பிரான்சும் இங்கிலாந்தும் துருக்கிய பிரதேசங்களின் கட்டுப்பாட்டை தமதாக்கிக் கொண்டன. பாரிஸ் மற்றும் லண்டன் ஏற்பாட்டுக்கமைய, பாலஸ்தீனமும் காஸாவும் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் வந்தன. யூத குடியேறிகள் பாலஸ்தீனத்திற்கு வரும் வரை 1920 கள் முதல் 1940 கள் வரை பிரிட்டிஷ் படைகள் காஸாவை ஆட்சி செய்தன, இது பாலஸ்தீனிய பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமிக்க வழிவகுத்தது. நக்பா 750,000 பாலஸ்தீனர்களை அவர்களின் மூதாதையர் நிலங்களை விட்டு வெளியேறி, காஸா உட்பட அண்டை பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர், இன்றளவிலும் அவர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

நக்பா என்பது அரபு மொழியில் "பேரழிவு" என்பதை குறிக்கும் சொல்லாகும், இது இஸ்ரேலின் தோற்றம் குறித்து பாலஸ்தீனர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் துரோகத்தனத்தை குறிக்கும் நாள் மே 15, 1948 ஆகும், அந்நாளில் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதன் விளைவாக 750,000 பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர், இது அந்த நேரத்தில் பாலஸ்தீனிய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது.

இன்னும் துல்லியமாக, நக்பா என்பது 1947-1949 க்கு இடையில் சியோனிச துணை இராணுவங்களால் பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட காலமாகும். இக்கால இடைவெளியில் சியோனிச படைகள் வரலாற்று ரீதியான பாலஸ்தீனத்தின் 78 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை கைப்பற்றியதாகவும், சுமார் 530 கிராமங்கள் மற்றும் நகரங்களை இனரீதியாக சுத்திகரித்து அழித்ததாகவும், 70 க்கும் மேற்பட்ட படுகொலைகள் உட்பட அதன் தொடர்ச்சியான அட்டூழியங்களில் சுமார் 15,000 பாலஸ்தீனியர்களை கொன்றதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர் அல்லது வரலாற்று பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர், அனைத்து அண்டை நாடுகளிலும் பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களை உருவாக்கினர். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய மற்றும் ஏனைய நாடுகளிலும் பலத்த பாலஸ்தீனிய புலம்பெயர் சமூகங்கள் உருவாகின.

உலகில் பல நாடுகள் வேதனை மற்றும் இடம்பெயர்வு காலங்களை அனுபவித்துள்ளன, ஆனால் பாலஸ்தீனியர்கள் மட்டுமே அவர்களின் அவலநிலை ஒருபோதும் முடிவுக்கு வராத நிலையில் இன்றுவரை தொடர்கின்றனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக, இஸ்ரேல் அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து வந்துள்ளது மற்றும் அண்டை அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களில் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக அதன் எல்லைகளை விரிவுபடுத்தி வந்துள்ளது. இஸ்ரேல் எகிப்தின் சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமித்துள்ளது மற்றும் மேற்குக் கரையில் பரந்த பாலஸ்தீனிய பிரதேசங்களை ஆக்கிரமித்ததோடு கூடுதலாக சிரிய மற்றும் லெபனான் பிரதேசங்களையும் ஆக்கிரமித்துள்ளது.

இதற்கிடையில், பாலஸ்தீனியர்களின் அவல நிலைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் நிராகரித்துள்ளது, தொடர்ந்து நிராகரித்தும் வருகிறது. மேற்கத்திய ஆதரவிலான ‘இரு அரசு’த் தீர்வையும் அது மதிக்கவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனிய பிராந்தியங்களில் தனது குடியேற்ற கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் இந்த தீர்வை பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது எனலாம்.

மறுபுறம், யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சம உரிமை கொண்ட ஒரு அரசு தீர்வை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது. இஸ்ரேல் ஒரு "யூத அரசு" என்று வரையறை செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை நாடாளுமன்றம் ஜூலை 2018 இல் நிறைவேற்றியது, இது நடைமுறையளவில் இஸ்ரேலின் கணிசமான அரபு பாலஸ்தீன மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது.

பாலஸ்தீனத்தின் பூர்வகுடி மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஈரான் முன்வைத்துள்ள ஜனநாயக தீர்வை இஸ்ரேல் எதிர்க்கிறது.

இவ்வளவு நடந்தும் ஒரு சிலர் தற்போது இடம்பெற்றுவரும் போரை ஹமாஸ் போராளிகள்தான் ஆரம்பித்துவைத்தனர் என்பது போன்ற ஒரு கருத்தை மக்கள் மத்தியில் திணிக்க முயற்சி செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் இஸ்ரேல் பல்லாண்டுகாலமாக மேற்கொண்டுவரும் தொடர் அடாவடித்தனத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்று:

காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு

1967 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான ஆறு நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது. காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு 1990 களின் முற்பகுதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில், சியோனிச குடியேற்றங்கள் நிறுவப்பட்டன, இது முஸ்லிம்களுக்கும் சியோனிச யூதர்களுக்கும் இடையில் பதட்டங்களைத் தூண்டியது. "முதலாவது இன்திபாதா" காஸாவில் தோன்றியது, இது "எரெஸ்" சுவர் அருகே ஒரு இஸ்ரேலிய டிரக் டிரைவரால் பாலஸ்தீனிய தொழிலாளர்கள் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தால் தூண்டப்பட்டது. இந்த நிகழ்வு பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதலைத் தூண்டியது, இது 1993 ஒஸ்லோ ஒப்பந்தங்களின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது.

சியோனிச ஆட்சியும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் கையெழுத்திட்ட ஒஸ்லோ ஒப்பந்தங்கள், இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருந்து காஸா விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது, யாசர் அரபாத்தின் படைகளின் நிர்வாகத்திற்கு மாறியது.

ஃபத்தா-ஹமாஸ் மோதல்கள்

1993 ஒஸ்லோ உடன்பாடுகள் இருந்தபோதிலும், 2005ல் இரண்டாம் இன்திபாதா முடியும் வரை இஸ்ரேலியர்கள் காஸாவில் இருந்தனர், தொடர்ந்து குடியேற்றங்களை கட்டியெழுப்பினர். 2005 ஆம் ஆண்டில் காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியபோது இந்த குடியிருப்புகள் காலி செய்யப்பட்டன, ஃபத்தா அல்லது பாலஸ்தீனிய அதிகாரம் முழு நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

காஸாவில் ஃபத்தாவின் ஆட்சி குறுகிய காலமே நீடித்தது. 2006 இல், ஃபத்தா எதிர்க்கட்சியான ஹமாஸ் பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது. பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவரான மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை பிரதமராக நியமித்தார், ஆனால் பிரிவுகளுக்கு இடையிலான சர்ச்சைகள் அதிகரித்தன, இது அப்பாஸால் ஹனியேவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. காஸாவில் ஹமாஸிற்கும் ஃபத்தாவிற்கும் இடையே ஒரு சிறிய போர் வெடித்தது, இதன் விளைவாக ஃபத்தா அல்லது பாலஸ்தீனிய அதிகாரம் தென்மேற்கு கடற்கரையை கட்டுப்படுத்தியது மற்றும் காஸாவில் இஸ்மாயில் ஹனியே தலைமையிலான ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்றதற்கிணங்க அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக கைப்பற்றியது.

எதிர்ப்பின் சகாப்தம்

2006 முதல், ஹமாஸ் காஸாவில் மேலாதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது, மேற்குக் கரையில் இஸ்ரேலுடன் இணைந்ததாகக் கருதப்படும் பாலஸ்தீனிய அதிகார சபைக்கு மாறாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. ஹமாஸ் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து காஸா இஸ்ரேலினதும் எகிப்தினதும் தரை, கடல் மற்றும் வான் முற்றுகைகளுக்கு உள்ளாகியது. இஸ்ரேல் காஸா அருகே ஏராளமான குடியிருப்புக்களை நிறுவியுள்ளது மற்றும் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளது. கடுமையான இஸ்ரேலிய முற்றுகை மக்கள் மற்றும் பொருட்களின் நடமாட்டத்தை வெகுவாகக்  கட்டுப்படுத்தியது. காஸா மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்தன, இது பல மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. 2006 முதல் காஸா மீது இஸ்ரேல் பல பேரழிவுகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

டிசம்பர் 2008 - ஜனவரி 2009 இஸ்ரேலிய தாக்குதல்கள்:

காஸா மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் டிசம்பர் 27, 2008 தொடங்கி ஜனவரி 18, 2009 வரை மூன்று வாரங்கள் நீடித்தது. இந்த மோதலில் கடுமையான வான்வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் ஆகியவை அடங்கும், இதன் விளைவாக கணிசமான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டன, பல பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 1,400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

2012 நவம்பர்: ஹமாஸ் இயக்கத் தலைவர் அகமது ஜபாரியை இஸ்ரேல் குறிவைத்து அழித்ததை தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகள் மீது எட்டு நாட்கள் இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல் நடத்தியது.

ஜூலை-ஆகஸ்ட் 2014: மூன்று இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஹமாஸால் கடத்தப்பட்டதால் ஏழு வார மோதல் ஏற்பட்டது, இது காஸாவில் 2,100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 67 சிப்பாய்கள் உட்பட 73 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மார்ச் 2018: இஸ்ரேலுடனான காஸாவின் பலப்படுத்தப்பட்ட எல்லையில் பாலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின, கூட்டத்தை கலைக்க இஸ்ரேலிய படைகள் அதன் மோசமான சக்தியைப் பயன்படுத்தின. பல மாதங்களாக நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது 170 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர், இது ஹமாஸுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்தது.

மே 2021: ரமலான் மாதத்தில் அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில், ஆக்கிரமிக்கப்பட்ட அல்-குத்ஸில் உள்ள அல்-அக்ஸா புனித மஸ்ஜித் வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் நடத்திய மூர்க்கமான தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். புனித வளாகத்தில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஹமாஸ் கோரியது. காஸாவில் இருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறிக்கொண்டு, இஸ்ரேல் அப்பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்தது. அதைத் தொடர்ந்த மோதல் 11 நாட்கள் நீடித்தன, இதன் விளைவாக காஸாவில் குறைந்தபட்சம் 260 பேரும் இஸ்ரேலியர் 13 பேரும் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 2022: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாத் இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகளை ஏவியது.

அக்டோபர் 2023: அக்டோபர் 7 ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஹமாஸ் அல்-அக்ஸா புயல் நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் இஸ்ரேல் காஸாவுக்கு எதிராக இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடங்கியது. நடந்து கொண்டிருக்கும் தாக்குதல் 21ம் நூற்றாண்டின் மிகவும் அழிவுகரமான மோதல்களில் ஒன்றாக விவரிக்கப்படுகிறது, இதன் விளைவாக இதுவரை 35,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அநேகர் பெண்களும் சிறுவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- தாஹா முஸம்மில்