America cannot confront Husseini ideology: political activist
அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளிகளினாலோ ஹுசைனி இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்கொள்ள முடியாது என்று கூறுகிறார் ஒரு லெபனான் அரசியல் ஆர்வலர்
"எதிர்ப்பு இயக்கங்கள் ரசூலுல்லாஹ்விடம் இருந்து கற்றுக்கொண்ட உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் இயங்குகின்றன, அல்லாஹ் அவரையும் அவரது குடும்பத்தினரையும், மற்றும் தூய்மையான இமாம்களையும், பொருந்திக்கொள்ளட்டும்" என்று ஹுசைன் அல்-திரானி டெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.
"எதிர்ப்பு சித்தாந்தத்தை எதிர் கொள்வதென்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை; அவர்களுக்கு தார்மீக சிதைவு மற்றும் சமூக மற்றும் குடும்ப சிதைவு தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை” என்று அல்-திரானி குறிப்பிடுகிறார்.
இருபது வருடப் போருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, ஒரு நாடு எதிர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒற்றுமையாக செயல்பட்டால் இராணுவ ஆதிக்கத்தால் போர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என்பதையே இது உணர்த்தியுள்ளது.
இப்போது பல அரசியல் ஆய்வாளர்கள் ஈராக் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதை எதிர்பார்க்கலாம் என்று ஆரூடம் கூறுகின்றனர்.
லெபனான் ஆர்வலர் வாதிடுகையில், மக்களின் சக்திக்கு முன்னால் அவர்களது இராணுவ சக்தி தோல்வியை தழுவியதையே அது நிரூபித்தது, அமெரிக்கர்கள் தாங்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தான் ஆகும், அமெரிக்க ராணுவம் வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடுவதை நாம் கண்டோம்" என்று லெபனான் ஆர்வலர் கூறுகிறார்.
அல்-திரானி மேலும் கூறுகையில், "முன்னர், லெபனானிலிருந்தும் அமெரிக்கப் படைகள் சத்திய போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஒரு காட்சியை நாங்கள் கண்டோம். விரைவில் சிரியா, ஈராக் மற்றும் யேமனில் இருந்து தப்பித்து ஓடுவதையும் நாம் காண்போம்".
அவரின் முழுமையான நேர்காணல் பின்வருமாறு:
கே: இஸ்லாமிய உம்மத்தின் அரசியல் வாழ்க்கையில் தியாகி இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஷஹாதத் நினைவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ப: இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்), அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் தேதி ஹிஜ்ரி 61 கர்பலாவில் நடந்த தியாகம் மனித வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய சோக பேரழிவாகும்.
இமாம் அல்-ஹுசைனின் ஆளுமை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு சிறப்புப் பாடத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் இறை தூதரின் பேரனாக இருந்தார், "ஹுசைன் என்னைச் சேர்ந்தவர், நான் ஹுசைனை சேர்ந்தவன்". என்று ரசூலுல்லாஹ் கூறிய ஹதீஸ் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
மேலும், அவரது பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் சொர்க்கது இளைஞர்களின் தலைவர்களாகும்."
றஸூலுல்லாஹ்வின் மற்றொரு ஹதீஸின் படி,: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் ஆகிய இருவரும் இமாம்கள் ....." அவர்கள் இமாம் அலியின் புத்திரர்கள்; இறைவனின் அமைதி அவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்
எனவே, இமாம் ஹுசைன், (அலை), புரட்சியின் சின்னமாக இருந்தார், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார், மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் புகலிடமாக இருந்தார். அவர் எங்களுக்கு சத்திய போராட்டத்தின் பாதையைக் காட்டினார் மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மனசாட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கே: ஊடகங்கள் இல்லாத கடந்த நூற்றாண்டுகளில் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பெயர், சுன்னிகள் மற்றும் ஷியாக்கள் என்ற வேறுபாடின்றி, முஸ்லிம்கள் மனதில் எப்படி படிந்தது?
ப: இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஞாபகார்த்த துக்க நிகழ்ச்சிகள், அது அவரது தியாகத்தின் ஆரம்ப காலம் முதலே நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம்கள் மனதில் அவரது நினைவை புதுப்பித்து வந்தது எனலாம்.
மற்றொரு அம்சம் என்னவெனில் இமாம் ஹுசைனின் சகோதரி ஸைனப் ஆகும், அவர் இமாம் அலீ பின் அல்-ஹுசைன் ஸெய்ன் அல்-ஆபிதீன் (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாவதாக) அவர்களுடன் அப்போதைய கலீபாவின் அரண்மனைக்கு வந்தபோது அவரது உறுதியான எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
இந்த இருவரும் யஸீதின் அநீதியையும், இமாம் ஹுசைன் (அலை) அவர்களது குடும்பத்துக்கு எதிரான அடக்குமுறையையும் பரப்ப ஊடகப் பாத்திரத்தை வகித்தனர், யஸீதின் அரண்மனையில் அவர்கள் ஆற்றிய உரை சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது.
அரண்மனையில் அப்போது கூடியிருந்த மக்கள் றஸூலுல்லாஹ்வின் பேரனுக்காக கதறி அழ ஆரம்பித்தபோது, தனது ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என்று யஸீத் அச்சமடைந்தார்.
பல்வேறு நாடுகளில், பல்வேறு தேசியங்கள் மற்றும் இனங்களுக்கிடையே வருடம் தவறாது ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ஹுசைனி ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் இந்த புரட்சி உணர்ச்சி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், ஊடகங்களிலும் நிலைத்திருப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன.
கே: பாலஸ்தீனம் மற்றும் லெபனான் முதல் யெமன் வரையிலான பிராந்தியத்தில் போராட்ட இயக்கங்களில் ஹுசைனி எழுச்சியின் தாக்கம் என்ன? இமாம் ஹுசைன் நிறுவிய திசையிலிருந்து போராளிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் எவை
ப. இமாம் ஹுசைனின் (அலை) அவர்களின் எழுச்சி மற்றும் அநியாயத்திற்கு எதிரான அவரது புரட்சி, சுதந்திரப் புரட்சியாளர்கள் தங்கள் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட போராளிகள் சரியான பாதையை வெளிச்சமிட்டு காட்டியது என்பதில் சந்தேகமில்லை.
லெபனானில், இமாம் மூசா அல்-சதர் லெபனான் மக்களை ஆக்கிரமிப்பு மற்றும் சியோனிச ஆட்சியை எதிர்த்து போராடுவதற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் போக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் இமாம் ஹுஸை (அலை) அவர்களது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் இருந்து அணிதிரட்டினார்.
இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் புரட்சியால் அவர் ஈர்க்கப்பட்டார், அதை ஓர் உதாரண பாதையாக மற்றும் நடைமுறை அணுகுமுறை என அவரது அனைத்து ஜிஹாதி மற்றும் அரசியல் இயக்கங்கள் மற்றும் நோக்குநிலைகளிலும் ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு, எதிர்ப்புப் போக்கு தொடர்ந்தது மற்றும் இன்றுவரை சியோனிச எதிரியுடன் அனைத்து முனைகளிலும் பெரும் வெற்றிகளை அடைந்து வருகிறது.
இனவெறி, பயங்கரவாத அமெரிக்க நிர்வாகம் மற்றும் பிராந்தியத்தில் அதன் கூலிப்படையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட உலகளாவிய திமிர் முன்னணியால் உருவாக்கப்பட்ட புதிய தக்பிரி எதிரியுடன் ஒரு எதிர்ப்பு முன்னணி வெற்றிகரமாக போராடி வருகிறது.
லெபனான், பாலஸ்தீனம், யெமன், ஈராக் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சத்திய போராளிகள் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளின் போது எழுப்பிய முழக்கங்களை பிரதிபலிக்க போதுமானது, குறிப்பாக அவர்களின் நிரந்தர முழக்கம்:
இப்னு ஸியாத் (இமாமின் எதிரி) எங்களுக்கு இரண்டு தேர்வுகளை முன்வைத்தான்; போர் அல்லது சரணடைதல் எனும் அவமானம். ஆனால் அவமானங்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவவனாலும் அவனுடைய தூதராலும், துஷ்டனுக்கு கீழ்ப்படிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்தால் நாம் கற்றுக்கொடுக்கொண்ட பாடம் இதுதான்: கொடுங்கோலர்களுக்கு அடிபணிய ஒப்புக்கொள்ள வேண்டாம், சரணடைய வேண்டாம்; அநீதி, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை பயமின்றி எதிர்க்க வேண்டும். தோற்கடிக்கும் வரை போராட வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் வெற்றியடையும்வரை போராடவேண்டும்; அதில் நாம் உயிர் தியாகம் செய்ய நேரிட்டாலும் சரியே. இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாம் நித்திய வாழ்க்கையில், மரியாதை மற்றும் கண்ணியத்தை அடைவோம்.
கே: போராட்ட முன்னணியின் ஹுசைனி சித்தாந்தத்தை எதேச்சதிகார அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் எதிர்கொள்ள முடியுமா? இமாம் ஹுசைன் கைக்கொண்ட வழிகள் மக்கள் மீதான "மென்மையான செல்வாக்கு" என்று விளக்கப்படலாம், ஏனெனில் இமாம் அவர்களின் போதனைகள் மக்களின் இதயங்களிலும் சிந்தனையிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. அத்தகைய செல்வாக்கை அமெரிக்கா எதிர்கொள்ள முடியுமா?
ப. ஹுசைனி சித்தாந்தம் என்பது முஸ்லிம்களின் இதயங்களில் ஆழமாகவும் உறுதியாகவும் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை ஆகும். உலகில் எந்த ஒரு சக்தியாலும் அத்தகைய நிறுவப்பட்ட நம்பிக்கையை எதிர்க்கவோ அல்லது தோற்கடிக்கவோ முடியாது, அது இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சரி.
ஆமாம், இந்த உண்மையான ஹுசைனி மற்றும் புரட்சிகர சிந்தனையைச் சேர்ந்தவர்களை மதிப்பிழக்கச் செய்வதற்காக அமெரிக்க நிர்வாகம் ஆராய்ச்சி மையங்களுக்காகவும் மூலோபாய மற்றும் ஊடக ஆய்வுகளுக்காகவும் ஒரு பெரிய பட்ஜெட்டை வருடாந்தம் செலவிடுகிறது. போராட்ட இயக்கங்களுக்கு எதிராக இராணுவம், உளவுத்துறை மற்றும் ஊடகப் போரைத் தொடர அது தயங்காது என்பது உண்மையே.
போராட்ட இயக்கங்கள் உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் நிறுவப்பட்டுள்ளன, இது இறைதூதரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மற்றும் தூய இமாம்களின் வழிகாட்டல் அடிப்படையைக் கொண்டுள்ளது, இவர்களது இந்த போராட்ட சித்தாந்தத்தை எதிர்கொள்வது என்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை.
அவர்களது இராணுவ சக்தி அனைத்தும் உறுதிகொண்ட மக்களின் முன்னிலையில் தோல்வியை தழுவும் என்பதையே சரித்திரம் நிரூபித்தது, அமெரிக்கர்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தானில் ஆகும், அங்கிருந்து அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டது.
முன்னதாக, லெபனானில் இதுபோன்ற காட்சியை நாங்கள் கண்டோம், அமெரிக்க துருப்புக்கள் போராட்ட முன்னணியின் தாக்குதல்களுக்குப் பிறகு தப்பி ஓடியது, சிரியா, ஈராக் மற்றும் யெமனில் இருந்தும் மிக விரைவில் அவர்கள் தப்பி ஓடுவதை நாங்கள் விரைவில் காண்போம்.
கே: அர்பஈன் (இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட 40 ஆம் நாள்) அணிவகுப்புகள் எதிர்வரும் காலங்களில் (அதாவது இஸ்லாமிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய் அடங்கிய பிறகு) மற்ற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் நீடிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ப. ஈராக்கிலும் மற்றும் ஈராக்கிற்கு வெளியிலும், கொரோனா தொற்றுக்கு முன், அர்பஈன் அணிவகுப்புகளில் மக்கள் பங்கேற்றதன் அடிப்படையில், நாங்கள் கண்ட காட்சி எமது கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது; கர்பலாவில் அர்பீன் அணிவகுப்பில் 25 மில்லியன் யாத்ரீகர்களுக்கும் அதிகமானோரை பங்கேற்றனர். அது ஒரு மானுட சூறாவளி போல் இருந்தது.
இந்த நிகழ்வை மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் அணிவகுப்பை கண்ட வெளிநாட்டு ஊடகங்கள் பிரமித்து, வாயடைத்து போகின்றன. பிறகு, இமாம் ஹுசைன் மீதான இந்த அன்பு எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை ஆராய தலைப்படுகின்றன.
அதன் செய்தி என்னவென்றால் அது ஒரு புரட்சி மற்றும் அநீதி, கொடுங்கோன்மை மற்றும் ஆணவத்திற்கு எதிரான எழுச்சி என்பதைத் தவிர வேறில்லை.
இந்த கர்பலா அணிவகுப்பில் ஷிஆக்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான
சன்னிகளுடன் கிறிஸ்தவர்களும் பங்கேற்பதையும் நாங்கள் கண்டோம், இந்த அணிவகுப்பில் ஷியாக்களின்
பிரசன்னம் மிகப்பெரியதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பிரிவுகுரியது என்று கூற முடியாத, உலகளாவிய செய்தி அதில் உள்ளது
என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
https://www.tehrantimes.com/news/465443/America-cannot-confront-Husseini-ideology-political-activist