Thursday, August 25, 2022

நாட்டை ஆட்சிசெய்தல் - இமாம் கொமெய்னி காட்டும் வழி

Government Week

Ruling the country - Imam Khomeini's guidance

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது இதயத்தை இறைவனுடன் இணைத்துக் கொண்டார், மேலும் அவரது முழு வாழ்க்கையும் மக்களுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை காலை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்துக்குச் சென்று இமாமின் கொள்கைகள் மற்றும் இஸ்லாமியப் புரட்சியில் விசுவாசத்தைப் புதுப்பித்துக்கொண்டபோது, ஆயத்துல்லா டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரயீஸி தியாகிகளையும் குறிப்பாக தியாகி ரஜாய் மற்றும் தியாகி பஹோனார், ஆகியோரையும் நினைவுகூர்ந்தார்,

இங்கு உரையாற்றும்போது "எங்கள் உன்னத இமாமின் அடக்கஸ்தலத்தில் 'அரசாங்க வாரத்தின்' முதல் நாளில் அரசாங்க உறுப்பினர்கள் முன்னிலையில் இமாம் கொமைனி (ரஹ்) உடனான இந்த உடன்படிக்கை (பைஅத்) மிகவும் சிறப்பான மற்றும் மதிப்புகள் கொண்ட உடன்படிக்கையாக அரசாங்கம் கருதுகிறது, என்று ஆயத்துல்லா ரயீஸி குறிப்பிட்டார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இதயம் எப்போதும் இறை நினைவில் நிறைந்திருந்தது என்று கூறிய ஜனாதிபதி, “இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் முழு வாழ்க்கையும் இறை திருப்தியை நாடி மக்களுக்குச் சேவை செய்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. எனவே, அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கை மிகவும் சிறப்பானதோர்  உடன்படிக்கையாகும்", என்றார்.

மக்களுக்கு சேவை வழங்குவது போன்று சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் நெருக்கத்திற்கான அடிப்படை எதுவும் இல்லை என்று இமாம் ரிஸா (அலை) விளக்குவதைக் குறிப்பிடுகையில், "இன்று வெளிநாட்டில் வசிப்பவர்களிடம், 'இங்கே என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டாலும், சேவை செய்ய வந்ததாக பலர் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்வது சேவை அல்ல, சுயநலத்துக்காக உழைக்கின்றனர் என்பது தான் உண்மை," என்று டாக்டர் ரயீஸி கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, “இவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக வேலை செய்கிறார்கள், கேட்டால் தமக்கான பலனைத் தேடுவதாகக் கூறுகிறார்கள். நாட்டுக்காகவும், எங்கள் கொள்கைக்காகவும், எங்கள் இயக்கத்திற்காகவும் இவர்கள் எதையும் செய்வதில்லை, ஒரு முயற்சி கூட எடுப்பதில்லை. ஆக, சுயநலம்தான் அவர்கள் கூறும் சேவையின் பொருள்சார் பார்வையாகும், என்றார்.

"மற்றொரு வகையான சேவையும் உள்ளது, அதுதான் பொது நல சேவை என்று விவரித்தார், இதுவே தேசப் பற்றின் காரணமாக செய்யப்படும் சேவையாகும், உலகில் தன்னலமற்ற சேவை செய்பவர்கள் பலர் உள்ளனர். இந்த வகையான சேவையே மனிதநேய மற்றும் மனித மையக் கண்ணோட்டத்தில் இருந்து பெறப்பட்டது". என்று ஆயதுல்லா ரயீஸி தெளிவுபடுத்தினார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் எமக்குக் கற்றுத்தந்த சேவையானது இறைவனுக்குச் செய்யும் சேவையாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, “இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் சளைக்கக்கூடாது. ஏனெனில் யாரேனும் இந்த வகையான சேவையை செய்வாராயின் இறை திருப்திக்காக மட்டுமே செய்ய வேண்டும். இந்த முக்கியமான விஷயமே இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களினால் இஸ்லாமிய ஈரானின் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கற்பிக்கப்பட்டது, என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ரயீஸி, “இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இந்த பார்வை சம்பிரதாயபூர்வமான ஒன்றல்ல இமாம் கொமெய்னி (ரஹ்) இறை நம்பிக்கையின் வெளிச்சத்தில் மக்களை நோக்கினார், மேலும் மக்களின் திருப்தியைப் பெறுவதே சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை நெருங்குவதற்கான அடிப்படையாக கருதினார். மேலும் அது மக்கள் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது வைத்துள்ள உண்மையான நம்பிக்கை ஆகும், மேலும் அதுவே இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழியாகும். இந்த அடிப்படையில் மக்கள் மீது கவனம் செலுத்துவதும், மக்கள் மீது நம்பிக்கை வைப்பதும், மக்களுக்காக நாட்டை நிர்வகிப்பதையும் தான் தனது பணியின் முன்னுரிமையாக இந்த நிர்வாகம் கருதுகிறது, மேலும் அதுவே இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழியாகவும் உள்ளது".

இமாம் கொமைனி (ரஹ்) அவர்கள் நாட்டின் பாதுகாப்பில் மக்களையும் இளைஞர்களையும் நம்பியிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, “மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் இமாம் வைத்திருந்த நம்பிக்கையே புரட்சிக்கும் புரட்சியின் வெற்றிக்கும் வழிவகுத்து இஸ்லாமிய அமைப்புக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியது. எனவே நாம் இமாம் கொமெய்னியின் வழிகாட்டலுக்கு அமைய, மக்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் நமது செயல்பாட்டில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஆயதுல்லா ரயீஸி, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளில் மற்றொரு முக்கியமான அம்சமான நீதியை நடைமுறைப்படுத்தல் பற்றி குறிப்பிட்டார், மேலும் "இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கு மறைந்த இமாமுடன் செய்த உடன்படிக்கையை மிகவும் முக்கியமானதாக மக்கள் நிர்வாகம் கருதுகிறது" என்று கூறினார்.

"இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கும் வேறு சில இறையியலாளர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், சமகால மனிதர்கள் சமூகத்தின் சூழலில் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் நம்பினார். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதை ஒரு அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தினார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) உடனான எங்களின் மற்ற உடன்படிக்கை என்னவென்றால், அவரைப் போலவே, இஸ்லாத்தை மனித சமுதாயத்திற்கு ஒரு தீர்வாக, மகிழ்ச்சியை உருவாக்கும் மருந்தாகவும் கருதுகிறோம்; இது சமூகத்தில் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ரயீஸி கூறினார்.

ஹஜ் காசிம் சுலைமானி போன்ற தியாகியும் இந்த திசையில் நகர்ந்து மக்களின் கவனத்தைப் ஈர்த்த ஒருவர் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "இதனால்தான், உச்ச தலைவரின் விளக்கத்தின்படி, தியாகி சுலைமானி ஒரு பள்ளிக்கூடமாக கருதப்படுகிறார்" என்றார்.

"இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது போதனைகளிலும் புத்தகங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் நீதியை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை எப்போதும் வலியுறுத்தினார். எப்போதும் நீதியை நேசிக்கும் மக்களாலேயே நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை இமாம் கொமெய்னி (ரஹ்) வலியுறுத்தினார். எனவே சிறந்த மனித குணங்கள் மற்றும் குறிப்பாக உயர்தரம் கொண்டவர்களைத் நீதிக்காக தேர்ந்தெடுப்பதை எப்போதும் வலியுறுத்தினார்" என்று ஆயத்துல்லா ரயீஸி குறிப்பிட்டார்.

இன்று நாம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழியைப் பின்பற்ற விரும்பினால், அதற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவர் (ஆயத்துல்லா செய்யதலி காமனெய்) இருக்கின்றார் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, "இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் நீதியை நடைமுறைப்படுத்துவதை முக்கியமென கருதினார். எனவே, நாம் அனைவரும் ஒரு நியாயமான அணுகுமுறையில் கவனம் செலுத்த வேண்டும்." என்று கூறினார்.

இந்த அரசாங்க வாரத்தில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், இறை திருப்தி, மக்கள் சேவை மற்றும் நீதி ஆகிய மிக முக்கியமான கோட்பாட்டின் மீதான கவனம் அனைத்து அரச செயல்திட்டத்திலும் கடைபிடிக்கப்படும் என்றார்.

இந்த திசையில் ஓர் அடி எடுத்து வைத்தால், இமாம் கொமைனி (ரஹ்) அவர்களினதும் தியாகிகளினதும் படிப்பினைகள் இந்த பாதையில் வெற்றிபெற எமக்கு உதவும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, இதுவே மக்களின் திருப்தியையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் வழியுமாகும்.

"இஸ்லாமிய அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இறைவனின் ஆசீர்வாதங்களில் ஒன்றாகும், மேலும் இது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டிய ஒரு பெரிய சொத்து" என்று ஆயத்துல்லா ரயீஸி கூறினார்.

அரசாங்க வாரத்தில் அனைத்து அரச தலைவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள தனது சகாக்களின் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த வாரம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் விளக்கிக்கூறப்படும். நிர்வாகிகள் மற்றும் உயரதிகாரிகளின் கருத்துகள், மக்கள் கருத்துக்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மேலும் விமர்சகர்களின் விமர்சனங்களிலிருந்தும் நாம் பயனடைவோம்" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மற்றவர்கள், குறிப்பாக உயரடுக்கினரின் கருத்துகளை அரசாங்கம் தனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறது, மற்றவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம், ஏனென்றால் அரசாங்கம் ஒரு கப்பலைப் போல நகர்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அதில் குறைபாடு இருந்தால், அதன் இயக்கத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சீர் செய்யப்பட வேண்டும் என்பதை டாக்டர் ரயீஸி வலியுறுத்தினார்.

Sunday, August 21, 2022

துருக்கி சியோனிஸ்ட்டுகளுடன் ஹனிமூன் - பலஸ்தீனுக்கு செய்யும் பச்சைத் துரோகம்

 Turkey, Zionist Regime Restore Diplomatic Ties

Selling Palestinians for Economic Gains?

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு மற்றும் துருக்கி முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை மீண்டு ஏற்படுத்துகின்றன என்று சியோனிஸ்ட் பிரதமர் Yair Lapid கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில் அறிவித்தார். இரு தரப்பினரும் இப்போது தூதுவர்களை பரிமாறிக்கொள்வர்.

சியோனிச பிரதமர் லாபிட் கடந்த ஜூன் மாதம் அங்காராவிற்கு விஜயம் செய்த பின்னர், துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவுடனான அவரது சந்திப்புகள் மற்றும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடனான அவரது உரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

துருக்கிய வெளியுறவு அமைச்சர் கவுசோக்லு இந்த செய்தியை உறுதிப்படுத்தியதுடன், டெல் அவிவில் உள்ள அதன் தூதர் மூலம் பாலஸ்தீனிய உரிமைகள் மற்றும் அல்-குத்ஸின் நிலையை துருக்கி தொடர்ந்து பாதுகாக்கும் என்று கூறினார். இனி ஒருவர் தூதராக தேர்வு செய்யப்படுவார் என்றார்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி அலோன் உஷ்பிஸ் செவ்வாயன்று துருக்கிய துணை வெளியுறவு மந்திரி சதாத் உனாலுடன் உரையாடினார், மேலும் "இருவரும் விஷயத்தை முடித்துக்கொண்டனர்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உறவுகளின் அளவை முழு இராஜதந்திர பிரதிநிதித்துவத்திற்கு உயர்த்தவும், தூதர்கள் மற்றும் கொன்சுலர் ஜெனரலை மீண்டும் பணியில் அமர்த்தவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அங்காராவிற்கும் டெல் அவிவிற்கும் இடையிலான உறவுகள் 2011 இல் இருந்து சீராக இருக்கவில்லை, 2010 இல் மாவி மர்மாரா என்ற காசாவிற்கான உதவிக் கப்பல் மீதான சியோனிச ஆட்சியின் தாக்குதலில் ஒன்பது துருக்கியர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான ஐ.நா அறிக்கையின் பின்னர் துருக்கி இஸ்ரேலின் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது,

அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான விரிசல் சீர் செய்யப்பட்டு 2016 இல் மீண்டும் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்பி, இரு தரப்பும் தூதுவர்களை பரிமாறிக்கொண்டன.

பலஸ்தீன அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உரிமையை நடைமுறைப்படுத்தவும், காசா மீதான 11 ஆண்டுகால முற்றுகையை நிறுத்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டில் காஸாவில் இடம்பெற்ற மாபெரும் "தாயகம் திரும்பும் உரிமை" போராட்டங்களில் பங்கேற்ற பல பலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றதால் அங்காரா - டெல் அவிவ் இடையே முறுகல் நிலை மீண்டும் தோன்றியது. துருக்கி தனது இராஜதந்திரிகள் அனைவரையும் திரும்ப அழைத்தது மற்றும் சியோனிச ஆட்சியின் தூதரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பு ஆட்சியின் ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக் அங்காராவில் எர்டோகனைப் சந்தித்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு சமீபத்திய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, 2008 க்குப் பிறகு துருக்கிக்கு ஒரு சியோனிச ஜனாதிபதியின் முதல் விஜயம் இதுவாகும்.

அந்த விஜயத்துக்கு முன்னர், ஒரு வருட அமைதியும்  துருக்கிய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை ஒத்துழைப்பும், துருக்கி ஒரு சாதுரியமான ஆட்சி என்றும் அது சித்தாந்த நிலைப்பாட்டை விட அதன் நலன்களின் அடிப்படையில் செயல்படுகிறது என்றும் டெல் அவிவை நம்பவைத்தது.

பிடென் நிர்வாகம் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கான வழிகளைத் தேடும் அதேவேளை, சியோனிச ஆட்சி அங்கு உறவுகளை சீர்செய்வதற்கு அதன் சொந்த உந்துதல்களைக் கொண்டுள்ளது என்று ஒரு இஸ்ரேலிய அதிகாரி Middle East Eye இடம் தெரிவித்தார்.

அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய அத்துமீறல்கள் தொடர்பாக 2018 இல் சமரச முயற்சி முறிந்தது ஆகவே துருக்கி விடயத்தில் அவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டனர்.

இரு தரப்பினரும் முதலில் 2020 இல் நாகோர்னோ-கராபாக் பின்னர் 2021 இல் ஆப்கானிஸ்தானில் நிகழ்வுகளின் போது நெருங்கி செயல்படுவதால் தங்கள் உறவிலும் ஊக்குவிப்பிலும் பரஸ்பர பலனைக் கண்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர்;

துருக்கியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியும் அஜர்பைஜானில் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு கூட்டாளியைக் கொண்டுள்ளன, மேலும் ஆர்மேனியப் படைகளை நாகோர்னோ-கராபக்கிலிருந்து வெளியேற்றுவதற்காக பாகு (Baku) வுக்கு இராணுவ வளங்களை இணைந்து வழங்குவதன் மூலம் அதற்கு உதவுவதற்குத் பணிபுரிந்தன. "நாங்கள் எதையும் ஒருங்கிணைக்கவில்லை, ஆனால் துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான பாதுகாப்பு சவால்கள் உள்ளன என்பதையும் சில பகுதிகளில் ஒன்றாகச் செயல்பட முடியும் என்பதையும் இது அனைவருக்கும் காட்டியது" என்று துருக்கிய அதிகாரி கூறினார்.

துருக்கி-இஸ்ரேல் உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் காலியா லிண்டன்ஸ்ட்ராஸ் (Gallia Lindenstrauss), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற பிராந்திய நாடுகளுடன் துருக்கியின் சமீபத்திய இணக்கம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு ஊக்கமளிக்கிறது என்று குறிப்பிடுகின்றார். "துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லுறவு உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பே தொடங்கியது, ஆனால் இந்த போரின் தாக்கங்கள் துருக்கி மற்றும் இஸ்ரேல் தங்கள் தகவல் தொடர்பு சேனல்கள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மற்றொரு தூண்டுதலாக இருப்பதைக் காணலாம்," என்று அவர் கூறினார்.

இருப்பினும், துருக்கிய அதிகாரிகள் இஸ்ரேலுடனான தங்கள் உறவு ஈரானுக்கு எதிரான கூட்டணி அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதில் கவனமாக உள்ளனர். "நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாடு உள்ளது, ”என்று துருக்கிய அதிகாரி கூறினார்.

துருக்கிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கும் இடையே உள்ள ஓர் உணர்வுபூர்வமான விஷயம், காஸா பகுதியை ஆளும் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ் ஆகும். துருக்கியில் ஹமாஸ் தலைவர்கள் தரித்து இருப்பதற்கு எதிராக, நல்லிணக்கப் பேச்சுக்களைத் தொடங்குவதற்கு முன் அங்காரா சில நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாக கடந்த ஆண்டு இஸ்ரேல் கூறியது. இருப்பினும், ஹாமாஸ் குழுவுடன் உறவுகளைப் பேணுவதையும், அதன் தலைவர்கள் சிலரை இஸ்தான்புல்லில் தொடர்ந்து பராமரிப்பதையும் துருக்கி மறுத்தது,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி இந்த முறை ஹமாஸ் தொடர்பாக எந்த முன்நிபந்தனையும் இல்லை என்று ஜெருசலேம் போஸ்டிடம் கூறினார். இது பலஸ்தீன் விடயத்தில் துருக்கியின் வெளிப்படையான பின்னடைவாகும். "ஹமாஸ் தொடர்பான துருக்கியின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை" என்று துருக்கி அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. "முன்பு இருந்தது போலவே இன்றும் ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்த துருக்கி அனுமதிக்காது. பல வருடங்களாக (துருக்கியின் நிலைப்பாடு) அப்படித்தான் இருக்கிறது”

துருக்கிய மற்றும் சியோனிச அதிகாரிகள் இருவரும், கிழக்கு மத்தியதரைக் கடலில் திருடப்படும் பாலஸ்தீனிய மற்றும் லெபனான் வாயுவை ஒரு குழாய் மூலம் துருக்கிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு அவர்களின் உறவை சீர்செய்வதற்கு ஒரு முக்கிய ஊக்கம் என்று கூறியுள்ளனர். "இஸ்ரேலிய இயற்கை எரிவாயுவை உள்நாட்டு பயன்பாட்டிற்காக துருக்கிக்கு கொண்டு வருவதற்கும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் நியாயம் குறைந்தது எட்டு ஆண்டுகளாக அறியப்பட்டுள்ளது, அந்த நிலை மாறவில்லை உக்ரைனில் நடந்த நிகழ்வுகளுடன் இயற்கை எரிவாயு தேவை மீது அவசர உணர்வை மையப்படுத்துதல், இஸ்ரேல் மற்றும் பிற மத்திய கிழக்கு நடிகர்களுடன் துருக்கியின் சமீபத்திய நல்லிணக்க முயற்சிகளுடன் இணைந்து, முந்தைய அரசியல் தடைகள் தீர்க்கப்படலாம்" என்று வாஷிங்டனில் உள்ள மத்திய கிழக்கு நிறுவனத்தில் (Middle East Institute) ஒரு சகாவான மைக்கேல் டன்சும் (Michael Tanchum) கூறினார்.

துருக்கிக்கு எரிவாயு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை இரு தரப்பும் நடத்தி வருவதாகவும், இருப்பினும் அவர்கள் அதில் உள்ள சவால்களை அறிந்திருப்பதாகவும் இரண்டாவது துருக்கிய அதிகாரி கூறினார்.

ஈஸ்ட்-மெட் (East-Med) பைப்லைன் திட்டம் என்று அழைக்கப்படுவதற்கான ஆதரவை அமெரிக்கா கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதால், அதன் லெவியதன் எரிவாயு வயலில் இருந்து சைப்ரஸுக்கும் பின்னர் கிரீஸுக்கும் குழாய் அமைக்கும் இஸ்ரேலிய திட்டம் முறிந்தது. சைப்ரஸ் மற்றும் கிரீஸுடன் பிளவு ஏற்படும் அபாயத்தை விரும்பாததால், பைடன் நிர்வாகத்தை அவ்வாறு செய்ய இஸ்ரேலே ஊக்குவித்திருக்கலாம் என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட சில ஆதாரங்கள் MEE (Middle-East Eye) இடம் தெரிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரும், ஜோர்டான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முன்னாள் இஸ்ரேலிய தூதருமான Oded Eran, எரிவாயுக்கான துருக்கிய பாதை நீண்ட காலமாக சாத்தியமான சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

"இன்னும் சைப்ரஸ் மற்றும் சிரியாவுடனான அரசியல் பிரச்சினைகள் போன்ற தொடர்ச்சியான முட்டுக்கட்டைகள் உள்ளன, சைப்ரஸுக்கு அருகில் குழாய் அமைத்தாலும், உங்களுக்கு ஒரு சிக்கல் உள்ளது. அதை சிரிய கடற்கரைக்கு அருகில் அமைத்தாலும், உங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது, என்றும் அவர் கூறினார்.

திருடப்பட்ட பாலஸ்தீனிய எரிவாயுவை எகிப்துக்கு கொண்டு வந்து எல்என்ஜியாக சர்வதேச சந்தைகளுக்கு அனுப்பும் இஸ்ரேலின் சமீபத்திய முயற்சிகளின் அதை துருக்கிக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதாக எரான் நம்புகிறார்.

"இருப்பினும், நீங்கள் லெபனான் எரிவாயு வயல்களில் இருந்து பெற்று அதை இஸ்ரேலிய மற்றும் எகிப்திய வாயுவுடன் இணைக்க முடிந்தால் அது இன்னும் பெரிய ஆற்றலைக் கொண்டிருக்கும். குறிப்பிட்ட பைப்லைன் இனால் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

உக்ரைன் - ரஷ்ய போருடன், ஐரோப்பா ரஷ்ய வாயுவிலிருந்து மாற வேண்டிய அழுத்தத்தில் உள்ளது. ஆனால் எரானின் கூற்றுப்படி, பாலஸ்தீனிய வாயு ரஷ்யாவின் வாயுக்கு பகரமாகாது, என்றாலும் ஐரோப்பிய ஆற்றல் வள தேவையை ஒரு பெரிய அளவிற்கு பல்வகைப்படுத்த முடியும்.

லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகியன எதிரி நாடுகள், அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவது சாத்தியமற்றது. இருப்பினும், லெபனானின் வாயுவைப் பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், இஸ்ரேல் துருக்கிய நட்பை விரும்புகிறது, ஏனெனில் அரசியல் சிக்கல்கள் இருந்தபோதிலும், மற்ற விருப்பங்களை விட இது மிகவும் இலகுவான ஒன்று என்று மூத்த துருக்கிய அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

"எகிப்திய தெரிவானது, வாயுவை எடுத்துச் செல்வது, களஞ்சியப்படுத்துவது, திரவமாக்குவது மற்றும் ஸ்பாட் சந்தைகளுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பது ஆகிய செயல்பாட்டில் பல செலவுகள் உள்ளன, ஆனால் துருக்கியே வளர்ந்து வரும் ஆற்றல் தேவையைக் கொண்ட ஒரு பெரும் சந்தையாகும், மேலும் துருக்கி பல குழாய்களை ஏற்கனவே கொண்டுள்ளது. அவற்றின் ஊடாக ஐரோப்பாவிற்கு நல்ல விலையில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளது" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

https://kayhan.ir/en/news/105878/selling-palestinians-for-economic-gains

Thursday, August 18, 2022

மதீனா சாசனம் மத சகிப்புத்தன்மையின் சிறந்த அடையாள சின்னம்

 The best symbol of tolerance towards another religion was the Covenant of Medina

பாகம் 2


மதீனா சாசனம் மத சகிப்புத்தன்மையின் மற்றொரு சிறந்த அடையாள சின்னம்

பிற மதங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய சகிப்புத்தன்மைக்கு சிறந்த உதாரணம், ஆரம்பகால வரலாற்றாசிரியர்களால் ‘ஸஹீபா’ என்று அழைக்கப்பட்ட மதீனா சாசனம் ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) மதீனாவுக்கு குடிபெயர்ந்தபோது, வெறும் மதத் தலைவராக அவரது பாத்திரம் முடிவுக்கு வந்தது: அவர் இப்போது இஸ்லாத்தின் கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவராக இருந்தார். முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பலதெய்வவாதிகளின் அமைதியான சகவாழ்வை உறுதிசெய்யும் வகையில், ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டு பல தசாப்த கால யுத்தத்தினால் நிலைகுலைந்த சமூகத்தில் நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்ய, தெளிவான நிர்வாகச் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று இந்த நிலைமை கோரியது. இதன் காரணமாக, மதீனாவில் வசிக்கும் அனைத்து தரப்பினரின் பொறுப்புகள், ஒருவருக்கொருவர் தங்கள் கடமைகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு ‘அரசியலமைப்பு’ நபிகள் வகுத்தார். (இதுவே மதீனா சாசனம் என்றும் உலகின் முதலாவது அரசியலமைப்பாகவும் அறியப்படுகிறது). அனைத்து தரப்பினரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதன் விதிகளை மீறுவது அரச விரோத செயலாகக் கருதப்பட்டது.


இமாம்களின் எடுத்துக்காட்டுகள்

நபி (ஸல்) அவர்களால் விவரிக்கப்பட்டுள்ள இரக்கம் மற்றும் மனிதாபிமான பழக்கவழக்கங்களின் பல எடுத்துக்காட்டுகள் இமாம்களால் கடைப்பிடிக்கப்பட்டன. இமாம்கள் என்போர் நபியின் உண்மையான அனந்தரகாரர்கள் மற்றும் தூய இஸ்லாத்தின் நடைமுறை வெளிப்பாடு எனலாம்.

இமாம் அலி (அலை) அவர்களின் ஆட்சியின் போது, தெருக்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு வயதான குருடனைக் கண்டார், இதைப் பார்த்த இமாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் இதுபோன்ற விஷயங்கள் எப்படி இருக்க முடியும் என்று அதிர்ச்சியடைந்தார் என்ற சம்பவம் வரலாறில் பதியப்பட்டுள்ளது. இவர் பற்றி விசாரிக்கையில், "இந்த நபர் ஒரு கிறிஸ்தவர்" என்று சொல்லப்பட்டது. அதன்போது இமாம் அலி (அலை) அவர்கள், "அந்த நபர் சக்தி வாய்ந்தவராக இருந்தபோது, நீங்கள் அவருடைய சக்தியைப் பயன்படுத்தினீர்கள், இப்போது அவர் பலவீனமாக இருப்பதால், நீங்கள் அவரைத் தனியாக விட்டுவிட்டீர்கள்!?" (இந்தச் செயல் நீதிக்கும் கருணைக்கும் எதிரானது.) பிறகு இமாம் அலி (அலை) அவர்கள், "முஸ்லிம்களின் பொதுப் பணத்திலிருந்து (பைத்துல்மாலில் இருந்து) அவருக்கு நன்கொடை அளியுங்கள்" -- அவர் சம்பாத்தியத்துக்காக ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்றார்கள்.

மற்றொரு சம்பவம், இமாம் சாதிக் (அலை) அவர்கள் ஒரு பயணத்தின் போது, ஒரு மூலையில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஒருவரைக் கண்டார்கள். அவர் தனது தோழர்களில் ஒருவரிடம், "இவருக்கு தாகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன், அவருக்கு தண்ணீர் கொண்டு வாருங்கள்" என்றார்கள். அவர் (தோழர்) சென்று, பின்னர் இமாம் சாதிக் (அலை) அவர்களிடம், "இவர் ஒரு யூதர், நான் அவருக்கு தண்ணீர் கொடுக்கவில்லை" என்று கூறினார். இமாம் சாதிக் (அலை) இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து, "அவரும் மனிதனல்லவா?" என்று வருத்தத்துடன் கூறினார்.


முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும்?                ஒரு குர்ஆனிய-நீதியியல் பார்வை,

குர்ஆனிய-சட்ட அடிப்படையில், முஸ்லிம் அல்லாதவர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்:

1.    திம்மி [பாதுகாக்கப்பட்ட நபர்கள்]: இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இஸ்லாமிய அரசாங்கம் அவர்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்: இந்த வரிகள் "ஜிஸ்யா" என்று அழைக்கப்படுகின்றன - அதாவது முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இஸ்லாமிய அரசாங்கம் பெறும் செலவு மற்றும் வெகுமதி.

2.             முஆஹித் [ஒப்பந்ததாரர்]: இஸ்லாமிய அரசாங்கத்துடன் நட்புறவு கொண்ட முஸ்லிமல்லாதவர்கள். அவர்கள் தூதர்கள், வணிக, பொருளாதார மற்றும் கலாச்சார ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்வோர் அல்லது சர்வதேச அமைப்புகளின் மூலம் ஒருவருக்கொருவர் உடன்படிக்கைகளில் ஈடுபடுவோர். இவை அனைத்தும் 'ஒப்பந்தம்' என்பதற்கு எடுத்துக்காட்டுகள்; எனவே, அவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளின் அடிப்படையில் - நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சர்வதேச அமைப்புகளின் ஊடாக - அவர்கள் கையாளப்பட வேண்டும் மற்றும் பரஸ்பரம் மதிக்கப்பட வேண்டும்.

3.   முஹாதீன் [அமைதியான; வன்முறையற்ற]: இஸ்லாமிய அரசாங்கத்துடன் போரிலும் ஈடுபடாத, தொடர்பு இல்லாத நாடுகள். அவர்கள் தூதர்களை பரிமாறிக் கொண்டவர்களா அல்லது அவர்களுக்கிடையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொண்டவர்களோ அல்ல. எவ்வித தொடர்பும் இல்லையாயினும் அவர்கள் ஒருவரையொருவர் தொந்தரவு செய்வதில்லை. அத்தகைய நாடுகளுடன் இஸ்லாமிய அரசாங்கம் அமைதியையும் பரஸ்பர மரியாதையையும் பேண வேண்டும்.

4.      முஹாரிப் [எதிரிகள்]: முஸ்லிம்களுடன் போரில் ஈடுபட்டுள்ள குழுக்கள் அல்லது நாடுகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நாசவேலைகளை செய்வோர் அல்லது அதற்கு உதவுவோர். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நாசவேலை அல்லது போர் தொடுக்கும்போது, இவர்களின் இந்த செயலை முறியடிக்க ஏனைய முஸ்லிம்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நான்கு குழுக்களில், திம்மிகள் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் வாழ்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு அவர்களை தேசத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது; மேலும், அவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளது.

சில இஸ்லாமிய அறிஞர்கள் அஹ்லுல் கிதாப்கள் மட்டுமே திம்மிகளாக கருதப்படுகிறார்கள் என்றும், ஏனையோரை திம்மிகளில் கருத முடியாது என்றும் நம்புகிறார்கள். இருப்பினும், இந்தக் கருத்து அனைத்து அறிஞர்களும் ஒப்புக்கொண்ட கருத்தல்ல. பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் திம்மியுடனான ஒப்பந்தம் என்பது அஹ்லுல் கிதாப் மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உட்பட எந்த முஸ்லிமல்லாத குழுவையும் உள்ளடக்கும் என்று நம்புகிறார்கள் - முஸ்லிம் அல்லாத அனைத்து மக்களும் ஒப்பந்தத்தின் மூலம் பயனடையலாம். (அஹ்லுல் கிதாப் என்போர் கிறிஸ்தவ, யூத மற்றும் சேபிய மதங்களை பின்பற்றுபவர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள்). குர்ஆனின் கண்ணோட்டத்தில், இந்த மதங்கள் இறைவனால் அருளப்பட்ட மதங்கள் மற்றும் அவற்றின் தூதர்கள் இஸ்லாத்தால் தூயவர்களாகக் கருதப்படுகிறார்கள்; எனவே, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். இருப்பினும், காலப்போக்கில், இந்த மதங்கள் சிலரின் தீய செய்கைகளினால் சில மாற்றங்களுக்கு உள்ளாகி சிதைவடைந்துள்ளன என்று இஸ்லாம் நம்புகிறது; எனவே, அந்த சிதைவுகளை சரிசெய்து இந்த மதங்களை முழுமைப்படுத்தவே இஸ்லாம் தோன்றியது. 

இஸ்லாத்தில் போர் - இஸ்லாத்தினால் தடை செய்யப்படாத ஒரே போரானது சுதந்திரத்தை அடைவதற்கும், ஒப்பந்தத்தை மீறுவதைத் தடுப்பதற்கும், இஸ்லாத்தை தர்க்கரீதியாக ஊக்குவிப்பதில் உள்ள தடைகளை நீக்குவதற்கும், இஸ்லாத்தைத் தழுவ விரும்புவோரை தடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராகும்.

மக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவ காலம் தொடங்கி 13 வருடங்களாக, போரில் ஈடுபடுவதற்கான எந்த உத்தரவும் இறை தூதருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. எதிரிகளை மன்னிப்புடன் நடத்துமாறு தான் அவர் இறைவனால் பணிக்கப்பட்டார்:

فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ‌ؕ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏

ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சாந்தி' என்று கூறிவிடும். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள். (43:89.)

குர்ஆனில் போரில் ஈடுபடுவதும் கொலை செய்வதும் தடை செய்யப்பட்ட வசனங்கள் ஏறக்குறைய எழுபது உள்ளன, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு, மதீனாவில் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டபோதே தற்காப்பு போர் ஏற்கத்தக்கதாக இருந்தது.

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (8:30).

அந்த நேரத்தில்தான் ஜிஹாத் பற்றிய வசனம் இறை தூதருக்கு அருளப்பட்டது, அதில் அவர் போரில் ஈடுபடுவதற்கான காரணமும் விளக்கப்பட்டது:

اُذِنَ لِلَّذِيْنَ يُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا‌ ؕ وَاِنَّ اللّٰهَ عَلٰى نَـصْرِهِمْ لَـقَدِيْرُ ۙ‏

போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (22:39).

اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ ؕ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ ؕ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (22:40).