Islamic
Republic can defeat any enemy - Imam Khamene'i
"அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள் முதல்
தர முட்டாள்கள்; அணு ஒப்பந்தத்தில் இருந்து
வெளியேறினால் ஈரானிய மக்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி, அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி
போராடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். 2019 ஆம் ஆண்டை தெஹ்ரானில்
கொண்டாடுவோம் என்று கிறுக்குத்தனமாக உளறிக் கொட்டினார்கள் அமெரிக்க அதிகாரிகள். ஈரானுக்கு எதிரான திட்டங்கள்
அனைத்திலும் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது" என்று கூறினார் இமாம்
ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே.
பாரசீக
புத்தாண்டையொட்டி இம்மாதம் 21ம் திகதி மஷ்ஹத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இமாம் காமனே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் “இந்த ஆண்டு அச்சுறுத்தல்களுக்கும் சோதனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய ஆண்டு என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் நான் அவ்வாறு நம்பவில்லை. கடந்த ஆண்டும் இவ்வாறே கூறினர். அது பொய்த்துப் போனது. நிச்சயமாக இவ்வாண்டு வாய்ப்புகளுக்குரிய ஆண்டாகவும் அல்லாஹ்வின் அருளால் உற்பத்தி பெருகி, வெற்றிக்குரிய ஆண்டாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்”, என்று தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் “இந்த ஆண்டு அச்சுறுத்தல்களுக்கும் சோதனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய ஆண்டு என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் நான் அவ்வாறு நம்பவில்லை. கடந்த ஆண்டும் இவ்வாறே கூறினர். அது பொய்த்துப் போனது. நிச்சயமாக இவ்வாண்டு வாய்ப்புகளுக்குரிய ஆண்டாகவும் அல்லாஹ்வின் அருளால் உற்பத்தி பெருகி, வெற்றிக்குரிய ஆண்டாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்”, என்று தெரிவித்தார்.
“எதிரிகளின்
பிரச்சாரத்தால் பாதிப்புக்கு உள்ளாகி, எதிர்மறையாகப் பேசும் உள்நாட்டவர் சிலரும்
இருக்கவே செய்கின்றனர். ஏதோ விபரீதம் நடக்கவுள்ளது போன்று அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ, அவர்கள் எதிரிகளின் பிரச்சாரத்தின் செல்வாக்குக்கு
ஆளாகி உள்ளனர். இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான சக்திகள், அவர்கள் செய்யும் மற்ற காரியங்களுக்கு
மேலதிகமாக, ஒரு உளவியல் போரிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதான் அவர்களது வழிமுறை. ஈரானிய மக்களை அச்சுறுத்த கடந்த ஆண்டும் இதைத்தான்
செய்தனர்”.
“அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள் முதல் தர முட்டாள்கள்; அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஈரானிய மக்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். 2019ம் ஆண்டை தெஹ்ரானில் கொண்டாடுவோம் என்று கிறுக்குத்தனமாக உளறிக்கொட்டினார்கள் அமெரிக்க அதிகாரிகள். ஈரானுக்கு எதிரான திட்டங்கள் அனைத்திலும் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது”, என்றும் இமாம் காமனே தெரிவித்தார்.
ஈரானின் நிலைமை
தொடர்பாக அமெரிக்கா அளித்த தவறான பகுப்பாய்வை இமாம் காமனே சுட்டிக்காட்டியதோடு, இந்த மோசமான பகுப்பாய்விற்கு காரணம் பற்றி
விரிவாக விளக்கினார்: உண்மையிலேயே பகுப்பாய்வு செய்த அவர்களுக்கு
பிராந்தியத்தினதும் எமது நாட்டினதும் நடப்புகள் பற்றிய அறிவில்லையா? இத்தகைய பகுப்பாய்வுகளை அவர்கள் தீவிரமாக
கருதுகிறார்களா அல்லது இது அவர்களின் முட்டாள்தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடா? அல்லது இந்த பகுப்பாய்வுகள் உலகளவிலான
அவர்களது உளவியல் போரின் ஒரு பகுதியா? அல்லது உலகம் முழுவதுமான அவர்களது இந்த தீய
பிரச்சாரம் வன்மத்தின் வெளிப்பாடா? என்பது எனக்குப் புரியவில்லை. இது
முட்டாள்தனம் வன்மம் ஆகிய இரண்டாகவும் இருக்கலாம்.
இன்று, இஸ்லாமிய குடியரசினால் எந்த எதிரியையும் எதிர்த்துப் போராடி, அவர்களை தோல்வியுறச் செய்ய முடியும் என்பதை நமது எதிரிகள் அறிவார்கள்.
இமாமவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு
எதிராக தொடரும் பொருளாதார மற்றும் உளவியல்
போர்களை பற்றி விளக்குகையில்: “இன்று எமது எதிரிகள் எமக்கு எதிராக ஒரு
பொருளாதார போரில் ஈடுபட்டிருக்கின்றனர். எதிரிகள்
எமக்கு ஏதிராக போர் தொடுத்துள்ளனர் என்பது
இப்போது அனைவருக்கும் தெரியும்; எமது அதிகாரிகளும்
அதனை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
ஆயுதங்களைக் கொண்டுதான் யுத்தங்கள் இடம்பெற வேண்டும் என்பதில்லை. போர்
பொருளாதார விவகாரங்களிளிலும் காணப்படலாம்.
அறிவார்ந்த மோதலும் ஒரு போர் தான். இந்த வகையான போர் சில நேரங்களில் இராணுவப்
போரைவிட ஆபத்தானது. இந்த யுத்தத்தில் எதிரிகளை நாம் தோற்கடிக்க
வேண்டும்; அல்லாஹ்வின் கிருபையால் அவர்களை நாம்
நிச்சயம் தோற்கடிப்போம். ஆனால் இது போதாது. அரச அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் பொது துறையைச்
சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எதிரிகளின் சதித்திட்டங்களை தோற்கடிப்பது
மட்டுமல்லாது,
எதிரிகளை
நெருங்கவிடாது விரட்டியடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீண்டும் ஒரு
சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பர்”, என்றும் தெரிவித்தார்.
“எதிரிகள் எமது நாட்டின் பொருளாதாரத்தைத் சீர்குலைக்க முடியாதவாறு ஈரான் ஒரு தடுப்பு நிலையை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது எம்மால் முடியும். நாம் ராணுவத்துறையில் பலம் பெற்றது போன்று இதுவும் சாத்தியமே. எதிரி எமது நகரங்களை குண்டு வீசி தாக்கும்போது எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது நாம் எமக்கு அவசியமான சாதனங்களை உருவாக்கியுள்ளோம்; எமது எதிரியை இலக்கு தவறாமல், துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை கொண்டுள்ளோம் என்பது எமது எதிரிகளுக்கும் தெரியும்.
“சவுதி அரேபியாவின் நிலை பற்றி குறிப்பிடுகையில் இம்மாமவர்கள் சவுதியைப் போன்ற ஒரு மோசமான அரசு முழு பிராந்தியத்திலும் இருக்க முடியாது; முழு உலகத்திலேயும் இருக்குமா என்பது சந்தேகமே. அது ஒரு கொடுங்கோன்மைமிக்க, சர்வாதிகார, ஊழல் மிகுந்த ஒட்டுண்ணி அரசு. அந்த அரசுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கப் போகிறார்களாம்; அணு உலை ஒன்றை அமைக்கப் போகிறார்களாம். சவுதி அணு உலை உருவாக்குவது பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை. சவூதி அரசு மிக குறுகிய காலத்தில் வீழ்ச்சிடையும் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் ஏவுகணை உற்பத்தி பிரிவுகளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களது ஆட்சியின் நீட்சியே ஆயுதங்களில் தான் தங்கியுள்ளது. இவை பற்றியெல்லாம் நான் கவலைப்படமாட்டேன், ஏனென்றால் மிக விரைவில் அந்த நாடு, அல்லாஹ்வின் உதவியால், இஸ்லாமிய வீரர்களின் கைகளில் வீழும் என்று எனக்குத் தெரியும்”.
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அண்மையில் நியூஸிலண்ட் கிறைஸ்ட்சர்ச்சில்
மேற்கொள்ளப்பட்ட பயங்கவாத தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், மேற்கத்தேய ஊடகங்களின் இரட்டை வேடத்தை
கண்டித்தார். “பல முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவம்
ஒரு பயங்கரவாத செயலாக இந்த ஊடகங்களுக்குத் தெரியவில்லையா...? என்றும் கேள்வி எழுப்பினார். எந்தவோர் ஐரோப்பிய அரசியல்வாதியும் சரி
அவர்களது ஊடகங்களும் சரி இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கூற வில்லை. அவர்கள்
அதற்கு பதிலாக அவர்கள் ஓர் ஆயுத தாக்குதல் என்றுதான் குறிப்பிட்டனர். மேற்குலகு ஆதரிக்கும் எவருக்காவது ஏதும்
நேர்ந்தால், அதனை எதிர்த்து, பயங்கவாதம், மனித உரிமை
என்றெல்லாம் கூக்குரலிடுவார்கள். அவர்கள் இப்படித்தான்” என்றும் தெரிவித்தார் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் ஐ.நா.பாதுகாப்பது சபை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட அணு செரிவாக்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் அமேரிக்கா வெளியேறியது தொடர்பாக ஐரோப்ப்பிய நாடுகள் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கின்றன.
கூட்டு ஒப்பந்தத்தை மதிக்கவேண்டிய கடமை, ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் இந்த ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கடமையை சரியாகச் செய்ய தவறிவிட்டன என்றும் இமாம் குறிப்பிட்டார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் ஐ.நா.பாதுகாப்பது சபை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட அணு செரிவாக்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் அமேரிக்கா வெளியேறியது தொடர்பாக ஐரோப்ப்பிய நாடுகள் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கின்றன.
கூட்டு ஒப்பந்தத்தை மதிக்கவேண்டிய கடமை, ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் இந்த ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கடமையை சரியாகச் செய்ய தவறிவிட்டன என்றும் இமாம் குறிப்பிட்டார்.