8 points about ICJ ruling; victory for Gaza people
சர்வதேச நீதிமன்றம் (ICJ) தடுப்பு
நடவடிக்கைகளுடன் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்திருந்தால், அது சிறந்த தீர்ப்பாக அமைந்திருக்கும். எப்படியிருந்தாலும், அதன் ஆரம்ப தீர்ப்பு பாலஸ்தீனத்திற்கு ஒரு பெரிய
வெற்றியாகும்.
காஸாவில்
இஸ்ரேலிய மேற்கொண்டு வரும் இனப்படுகொலை தொடர்பாக சியோனிச ஆட்சிக்கு எதிராக
தென்னாபிரிக்கா அளித்த புகார் மீது சர்வதேச நீதிமன்றம் ஒரு ஆரம்ப தீர்ப்பை
வழங்கியது.
இந்த
ஆரம்ப தீர்ப்பு பற்றி ஒருவர் 8 புள்ளிகளை
கருத்தில்கொள்ள முடியும்:
1. தென்னாப்பிரிக்காவின் வழக்கை
கைவிடுவதற்கான அதன் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததால், தீர்ப்புக்கு முன்பே நீதிமன்றத்தில் இஸ்ரேல் தனது முதல்
தோல்வியை சந்தித்தது எனலாம். ஆரம்ப விசாரணையில், ICJ தலைவர் புகாரை விசாரிக்க தனது அதிகார வரம்பை அறிவித்தார்
மற்றும் இந்த நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக புகார் அளிக்க
தென்னாப்பிரிக்காவுக்கு உரிமை உண்டு என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் தென்னாப்பிரிக்காவின் அறிக்கைகள் நியாயமானவை மற்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தகுதியானவை என்றும் நீதிமன்றம் கூறியது.
2. டிசம்பர் 9, 1948 அன்று ஐ.நா பொதுச் சபையால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா இன அழிப்பு தொடர்பான
மாநாட்டின்படி, ஒரு
தேசிய, இன, அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ
அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஐந்து செயல்களில் ஏதேனும் ஒன்று இன அழிப்பு
கொலையாகக் கருதப்படுகிறது. 17 ICJ நீதிபதிகளில் 16 பேர்
காஸாவில் இனப்படுகொலை மற்றும் அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று
நம்புகின்றனர்.
"இனப்படுகொலை
நடந்ததா இல்லையா என்பது குறித்து நாங்கள் இப்போது தீர்ப்பு வழங்கவில்லை"
என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், இனப்படுகொலை
இடம்பெற்றிருப்பது நீதிமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியானது.
மேலும், "இனப்படுகொலை குற்றத்திலிருந்து
தங்களைக் காத்துக்கொள்வதற்கு பாலஸ்தீன மக்களுக்கு உரிமை உண்டு" என்றும்
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அல்-ஜசீராவுக்கு
அளித்த பேட்டியில், ஒரு சட்ட வல்லுனர் ஹேக்
நீதிமன்றத்தின் முடிவுகளை பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்று
குறிப்பிட்டார் மற்றும் காஸாவில் மேலும் போர்க்குற்றங்களை தடுக்க சியோனிச
ஆட்சிக்கு எதிராக இன்னும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தினார்.
3. ஐ.நா.வின் முக்கிய நீதித்துறை தூணாக சர்வதேச நீதிமன்றம் உள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாக்குகள் இருப்பதாலும், வீட்டோ அதிகாரம் இல்லாததாலும் ஐ.நா பொதுச் சபையையும் ஒரு சட்ட தூணாக கருதலாம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவ்வாறன்றி ஒரு அரசியல் ரீதியான அமைப்பு, அதனால் வீட்டோ அதிகாரம் கொண்டு நீதி நிர்வாகத்தைத் தடுக்க முடியும். ICJ என்பது "அரசியலை" பொருட்படுத்தாமல் நீதித்துறை தீர்ப்புகளை வழங்கும் ஒரு நீதித்துறை தூண். மற்றும் இது ஒரு வகையான விசாரணை என்பதால் நீதிமன்றத்தின் முடிவுகள் கட்டுப்படுத்தக்கூடியவை.
அதன்படி, இஸ்ரேல் தொடர்பான ICJ இன்
முடிவை, அதன் உள்ளடக்கம் என்னவாக
இருந்தாலும், பேர்லின் மதிக்கும் என்று
ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகமும் ஒரு அறிக்கையில் "சர்வதேச சட்டத்தை மதிக்க நாங்கள் ஆழமாக கடமைப்பட்டுள்ளோம், என்று குறிப்பிட்டது, ICJ க்கான எங்கள் ஆதரவை நாங்கள் வலியுறுத்துகிறோம்."
4. காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின்
குற்றத்தை தடுத்து நிறுத்த இதுவரை எந்த தீர்மானத்தையும் வெளியிடாத ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு கவுன்சிலிலுக்கு இந்த தீர்ப்பு தோல்வியாக கருதப்படுகிறது.
காஸாவுக்கு
எதிரான குற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இஸ்ரேலை பல முறை கண்டித்துள்ளது, ஆனால் பொதுச் சபையின் தீர்மானங்கள் அமல்படுத்த முடியாதவை, அதேசமயம் ICJ தீர்ப்புகள் கட்டுப்படுத்துகின்றன, மேலும் இது காஸாவின் நிலைமை தொடர்பாக வல்லரசுகளின்
செயல்திறன் குறித்த ஒரு வகையான விமர்சனமாக கருதப்படுகிறது.
5. நீதிமன்ற தீர்ப்பின்படி, சியோனிச ஆட்சி ஒரு மாதத்திற்குள் காஸா மக்களின் மனிதாபிமான
தேவைகளை அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மேலும் ஒரு குழுவினருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க
தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காஸாவிற்கு
எதிரான இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்வது இந்த சியோனிச ஆட்சிக்கு சட்டரீதியான
விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காததால்
தாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்று சியோனிஸ்டுகள் கூறினாலும், தீர்ப்பு வழங்கப்பட்ட பின் சியோனிச அதிகாரிகளின்
பிரதிபலிப்பு அவர்கள் நீதிமன்றத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டதையே
சுட்டிக்காட்டுகிறது.
6. ICJ தீர்ப்பு அதற்கான அமலாக்க இயங்குமுறை எதுவும் இல்லை என்ற போதிலும் இஸ்ரேல் மீது சர்வதேச சட்ட கடமைப்பாடுகளை சுமத்துகிறது. எனவே, 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில், கிழக்கு குத்ஸ் உட்பட, இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவுவது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது என்று கூறிய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2334 ஐ செயல்படுத்த இஸ்ரேல் மறுத்தது போன்று, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்ப்பையும் செயல்படுத்த இஸ்ரேல் மறுக்கலாம்.
7. இன அழிப்பு இன்னும் நடந்து
கொண்டிருக்கும் போதே, போரின்
முடிவுக்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், முதற்கட்டத்
தீர்ப்பு வெளியானதால், இது
ஒரு வகையான புதுமையாகவும், திருப்புமுனையாகவும்
கருதப்படுகிறது.
ஹேக்
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தென்னாப்பிரிக்க அரசாங்கமும் "இஸ்ரேலுக்கு
எதிராக சர்வதேச நீதிமன்றம் விதித்த தற்காலிக நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு தீர்க்கமான வெற்றி மற்றும் பாலஸ்தீனிய
மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று குறிப்பிட்டது.
ஹமாஸ்
இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சமி அபு ஸுஹ்ரியும் காஸாவில் சியோனிச ஆட்சியின்
இனப்படுகொலை பற்றிய ஹேக் நீதிமன்றத்தின் ஆரம்ப தீர்ப்பை சியோனிச ஆட்சியை
தனிமைப்படுத்துவதற்கும் காஸாவில் இந்த ஆட்சியின் குற்றங்களை
அம்பலப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று தெரிவித்தார்.
8. ஒரு காலத்தில் நிறவெறி
ஆட்சியால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுக்கு
எதிராக வழக்குத் தொடுப்பதன் மூலம் 21 ஆம்
நூற்றாண்டின் மிகப்பெரிய மனித துயரங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
எடுத்துள்ளதால், நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதன்
நடவடிக்கையும் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு பெருமையாகும்.
தடுப்பு
நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக காஸாவில் போர் நிறுத்தத்திற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால்
அது மிகச் சிறந்த ICJ
தீர்ப்பாக இருந்திருக்கும், எனினும், உலக ஒழுங்கில் சியோனிச லாபியும் அதன் ஆதரவாளர்களும்
அமெரிக்காவுக்குள் நிறைய செல்வாக்கு செலுத்துவோராக இருக்கின்றனர் என்பதையும் நாம்
மறத்தல் ஆகாது.
"இனவெறி
மற்றும் இனப்படுகொலையின் கசப்பை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு நாட்டின் இந்த
நடவடிக்கையானது, இஸ்லாமிய உலகில் மட்டுமின்றி, சுதந்திர மற்றும் சுதந்திரத்தை விரும்பும் உலகின் அனைத்து
நாடுகளாலும் போற்றப்படுகிறது," என்று
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சர்வதேச நீதிமன்றத்தின் ஆரம்ப தீர்ப்பு பாலஸ்தீனத்திற்கு
ஒரு "பெரிய வெற்றி" என்றும், சியோனிச
ஆட்சிக்கு ஒரு "மூலோபாய தோல்வி" மற்றும் "நீதிக்கு" ஒரு
முக்கியமான திருப்புமுனை என்றும் கருதலாம்.
By Seyyed Razi Emadi; West Asia expert
https://en.mehrnews.com/news/211347/8-points-about-ICJ-ruling-victory-for-Gaza-people