Despotism Defeats Democracy
பணக்கார அரபு சர்வாதிகாரத்திற்கு
பணமில்லா ஜனநாயகம் பரிதாபகரமாக பணிந்தது.
இன்றைய உலகில், மக்களை ஏமாற்றுவதற்காக,
வார்த்தை ஜாலம் புரியும் சந்தேகத்திற்கு
இடமில்லாத பல சர்வாதிகாரிகள் கூட ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்வது ஒரு ஃபேஷனாகிவிட்டது.
அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக்
கட்சியினரோ அல்லது எதிர்கட்சியினரோ எந்த ஜனநாயக அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்பது
மறுக்க முடியாத உண்மை. பிறப்புரிமை மற்றும் ஜனநாயகத்தைக் கோரும் மக்களைக் கொன்று குவிக்கும்
வெறித்தனமான சர்வாதிகாரிகளை இவ்விரு தரப்பினரும் தீவிரமாக ஆதரிக்கின்றனர், எனினும் ஒடுக்கும் சர்வாதிகார
ஆய்ச்சியாளர்களை ஜனநாயகவாதிகளாக காட்டி, பெருமை காட்டுவதில் மட்டும்
அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை.
மக்களை அடக்கி ஒடுக்கும் பஹ்ரைன்
ஷேய்க் தன்னை ஒரு ஜனநாயகத்தின் காவலர் போல் காட்டிக்கொள்கிறார்.
எகிப்தில், அந்த நாட்டின் வரலாற்றில் ஜனநாயக
ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்து, மோசடியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு ராணுவ ஜெனரல், தன்னை ஒரு சர்வாதிகாரி என்று காட்டிக்கொள்ளாமல் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர்
என்றும் தன்னைக் காட்டிக் கொள்கின்றார்.
அரபு உலகில் வெட்கம் கெட்ட சர்வாதிகாரிகள்
உள்ளனர், அவர்கள் மக்களின் உரிமைகளை ஒருபோதும் மதிப்பதும் இல்லை, ஜனநாயகம் என்ற கருத்தையே அவர்கள் வெறுக்கிறார்கள், ஜனநாயக பற்றி பேசுவோரை சிறையில் அடைக்கிறார்கள். அவர்கள் மோசடியாக
சேர்த்துள்ள செல்வங்களைக் கொண்டு எதிர்மறையான செல்வாக்கைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்குவது
கிடையாது. ஜனநாயகத்தின் சில வடிவங்களை ஓரளவு கொண்ட சக அரபு நாடுகளின் உள் விவகாரங்களில்
தலையிடுவது அவர்களது வாடிக்கையாய் மாறியுள்ளது.
லெபனான் மீது ஏற்றுமதியை தடையை
விதித்ததன் மூலம், லெபனான் மற்றும் அதன் ஜனநாயக நிறுவனங்களின் மீது பிராந்தியத்தின்
மூர்க்கத்தனமான குல, மதவெறி மற்றும் சர்வாதிகார ஆட்சியான
சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட லெபனான் தகவல் அமைச்சரான
ஜார்ஜ் கோர்டாஹியை பதவி நீக்கம் செய்ய, சவுதியின் அழுத்தம் பிற
நாடொன்றின் உள்விவகாரத்தில் தலையிடும் செயலாகும்.
ஒரு சகோதர நாட்டின் மீது சவூதி
அரேபியா இவ்வாறு நடந்துகொள்வது ஏன்?
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
போது ஆய்வாளராக கலந்துகொண்ட கோர்டாஹி, லெபனான் இடைக்கால அமைச்சரவையில் சேர்வதற்கு நீண்ட காலத்திற்கு
முன்பு யெமன் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சவுதி-எமிரேட்ஸ்
இணைந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தாராம், யெமன் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பேச்சு வார்த்தை மூலம் பிணக்கை தீர்ப்பதற்கு அழைப்பு விடுத்து
பேசினாராம், இரு சகோதர அண்டை நாடுகளுக்கு
இடையிலான சண்டையில் அமெரிக்கா-இஸ்ரேல் தலையிடுவதையும் கண்டித்திருந்தாராம்.
இந்த அழுத்தத்தின் காரணமாக அமெரிக்க
ஆதரவுடன் லெபனானை பணயக்கைதியாக வைத்திருக்கும் பணக்கார அரபு சர்வாதிகாரத்திற்கு பணமில்லா
ஜனநாயகம் பரிதாபகரமாக பணிந்தது.
லெபனானின் சுதந்திர ஊடகங்கள்
என்று அழைக்கப்படும் ஒரு சில பத்திரிகைகள் மற்றும் உண்மையான சுதந்திரமாக சிந்திக்கும்
அரசியல்வாதிகள் கோர்டாஹியை ஆதரித்து, மக்கள் உரிமைகளை மதிப்பதாகக் கூறினாலும், துரதிர்ஷ்டவசமாக, சவூதி அரேபியாவின் சர்வாதிகார அழுத்தத்திற்கு மற்றும்
மக்களை பிரதிநிதித்துவபடுத்தாத அரபு மன்னர்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பணிந்தன.
சவூதியின் வாரிசு MBS
(முகமது பின் சல்மான்)
சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய லெபனான் பிரதமர் ச'அத் அல்-ஹரிரியை வரவழைத்து, அவரை நிர்பந்தித்து தனது ராஜினாமாவை தொலைக்காட்சியில்
அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தியதையும் இந்த கட்சியினர் மறந்துவிட்டனர்.
மன்னர்களின் அழுத்தங்களுக்கு
அடிபணிவதாயின் லெபனானின் ஜனநாயக மாண்பு எங்கே? தேர்தல்கள், வாக்குப்பெட்டிகள், அரசியல் கட்சிகள், மக்கள் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்கு என்ன நேர்ந்தது?
மற்றும் தற்போதைய நிகழ்வுகளின்
வெளிப்படையான மற்றும் நேரடியான பகுப்பாய்வுகளின் அர்த்தங்களுக்கு என்னவாயிற்று.?
கோர்டாஹி விவகாரத்தில் லெபனான்
ஜனநாயகத்தை தோற்கடித்த பாரசீக வளைகுடா சர்வாதிகாரம் இப்போது அப்பாவிகளின் இரத்தத்தை
கோருகிறது.
சமீபத்தில், லெபனானின் உள்துறை அமைச்சர் பஸ்ஸாம்
மவ்லவி, பஹ்ரைனின் அடக்குமுறை
ஆல்-இ கலீஃபா சிறுபான்மை ஆட்சியின் அழுத்தத்தின் பேரில், தனது நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை கேலிக்குள்ளாக்கினார்.
மக்களின் பிறப்புரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஜனநாயகக் கோரிக்கையை எழுப்பியதற்காக லெபனானில் புகலிடம் பெற்றிருந்த பஹ்ரைனின் பிரபலமான
அல்-வெஃபாக் கட்சியின் உறுப்பினர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இது ஏனெனில், கடந்த டிசம்பர் 11 அன்று, பஹ்ரைனின் சர்வாதிகார ஆட்சிக்கு
எதிரான தங்கள் குறைகளை தெரிவிக்க, தெற்கு லெபனான் நகரங்களில் ஒன்றில் பஹ்ரைன் மக்களின் இந்த ஒடுக்கப்பட்ட குழு செய்தி
மாநாட்டை நடத்தியதாகும்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் அரபு
நாடுகளில் உள்ள தங்கள் சர்வாதிகார வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து, ஜனநாயக ஆட்சியின் சாயல் கொண்ட
லெபனான் கூட தலைவணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அளவிற்கு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது
வருத்தமாக இல்லையா?
பாரசீக வளைகுடா பிராந்தியத்தின்
மக்கள் ஆதரவற்ற மற்றும் பிரதிநிதித்துவமற்ற, இந்த இழிந்த பணக்கார ஆட்சிகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்தது
கேவலம் இல்லையா...?