Thursday, April 28, 2022

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine


மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை 'குத்ஸ் தினம்' என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரிப்பதில் முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றேன்." இந்தத் தினமானது பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய ஆதரவைப் பிரதிபலிக்கிறது.



சர்வதேச குத்ஸ் தினம்நாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் ஊர்வலங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகள் மூலம் அனுஷ்டிக்கப்படுகிறது, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இந்த நுண்ணறிவுமிக்க அறிவிப்பு எல்லைகடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது..

சியோனிசம் என்பது ஒரு இயக்கமாக, 1800களின் பிற்பகுதியில் யூதர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீன மண்ணில் வெறும் 5% மட்டுமே இருந்த யூத மக்களால் இஸ்ரேல் என்ற ஓர் அரசு சட்டவிரோத மற்றும் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட, பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி அபகரிக்கப்பட்டு,, 1948 இல் மேற்கத்திய சக்திகளால் இஸ்ரேல் என்று அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ சிலுவைப்போராளிகள் யூதர்களை தங்கள் ஜெப ஆலயத்தில் உயிருடன் எரித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் சலாஹுத்தீன் யூதர்களை அபயமளிக்குமுகமாக ஜெருசலேமுக்கு அழைத்து வந்து, பெரும்பான்மையான முஸ்லிம்களுடன் குடியமர்த்தினார். 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் கடந்தகாலத்தில் யூதர்களுக்கு முஸ்லிம்கள் காட்டிய கருணைக்கான நன்றிக்கடனை இவ்வாறே  திருப்பிச் செலுத்தியது.


பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கம் அல்லது இடைவிடாத மத்திய கிழக்கு மோதல் என்று அறியாமையால் மற்றவர்கள் குறிப்பிடுவது தொடர்பான அனைத்து சாலை வரைபடங்களின் முக்கிய சூத்திரதாரி மற்றும் தலைமை வடிவமைப்பாளராக அமெரிக்கா இருந்து வருகிறது.

இப்போது எழும் மிக முக்கியமான கேள்விகள் என்னவெனில் "ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் ஏதேனும் உறுதியான சாதனைகள் பெறப்பட்டுள்ளதா? பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் குறித்து ஏதேனும் நம்பிக்கை உள்ளதா? என்பதாகும்.

மோதலின் மறுபக்கம் பார்க்கையில் அமெரிக்க மற்றும் பிற ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கான ஆதாய ஆயுத வர்த்தகம் வெளிப்படுகிறது.

1945 இல் அரபு லீக் அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்றும், எனவே, அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அவர்களின் பொதுவான நலன்களைப் பாதுகாக்க முடியும் என்றும் பலர் நினைத்தனர். ஆனால் அரபு லீக் அமைப்பின் சாதனைகள் என்ன? இந்த அமைப்பினால் மற்றும் அதன் சகோதர பாலஸ்தீனிய விடுதலை அமைப்பினால் (PLO) எந்த அளவிற்கு அவர்கள் கூறிய நோக்கங்களை அடைய முடிந்தது? என்பதை சிந்தித்தல் நன்று.


கேள்வி என்னவென்றால், அரேபியம் என்ற தேசியவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரபு லீக் மற்றும் PLO வினால்  எவ்வாறு பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு வழிவகுக்க முடியும்...? ஏனெனில் அதே தேசியவாதமே அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேலை நிறுவ பயன்படுத்தப்பட்டது.

எனவே, சர்வதேச குத்ஸ் தினம் மட்டுமே முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமும் மற்றும் முதல் கிப்லாவுமான பைத்துல் முகத்தஸின் விடுதலையை உறுதி செய்யக்கூடிய ஒரே நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையே பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான இறுதி நம்பிக்கை.  உண்மையில், இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் செய்தியின் முக்கிய கருப்பொருளும் அதுவே ஆகும்.

ஜார்ஜ் கர்ஸன், 1911-1921 வெளியுறவுத்துறைக்கான பிரிட்டிஷ் செயலர்  "முஸ்லிம் மக்களிடையே இஸ்லாமிய ஒற்றுமையைக் கொண்டுவரும் எந்த முயற்சிக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிலாபத் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதால், முஸ்லிம்கள் மத்தியில் அறிவு ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஒற்றுமை என்ற ஒன்று மீண்டும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியதை உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் உச்ச தலைவர் ஆயதுல்லா சையத் அலி காமனெய், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கருத்து வேறுபாடு மற்றும் பிளவுகளை விதைப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்க நலனுக்காக தெளிவாக சேவை செய்கிறது என்று கூறுவதற்கு இதுவே காரணம். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;.(அத்தியாயம் 3, வசனம் 103) என்று அல்லாஹ் கூறியிருக்க இவ்வாறு நடக்கிறது.


சர்வதேச குத்ஸ் தினம் என்பது பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஒருமைப்பாட்டை தெரிவித்தது ஆதரவு வழங்கும் தினமாகும் அதேவேளை ஒடுக்குமுறை மற்றும் அநீதியைக் கண்டிக்கும் நாளுமாகும்.

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) நிறவெறியை வெறுத்தது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு பூரண உதவியை வழங்கினார். பதிலுக்கு நெல்சன் மண்டேலாவும் "பாலஸ்தீனன் சுதந்திரம் அடையாமல் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரம் முழுமையடையாது" கூறினார்.


நீண்ட சிறை தண்டனையில் இருந்து விடுதலையான மண்டேலா அவர் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட முதல் விஜயத்தின் போது, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இமாம் வகித்த பாத்திரத்தையும் ஈரானின் வரலாற்று ஆதரவையும் பாராட்டினார். 

மறைந்த வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் சர்வதேச குத்ஸ் தின நிகழ்வுகளில் தனது நாட்டில் ஏனைய போராட்டக்காரர்கள் மத்தியில் முன்னணியில் காணப்படும் முக்கிய நபராக இருந்தார்.


சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டும் காணாதது போல் புறக்கணித்து வரும் சவூதி அரேபியா, அதன் கூட்டாளிகளுடன் இணைந்து 2015 முதல் யெமனுக்கு எதிரான இராணுவப் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சவூதி அரேபியா பணக்கார மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் அரபு தேசமாகும். அது வறிய மற்றும் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு எதிராக திட்டமிட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெறுக்கத்தக்க செயலாகும். யெமனில் நடந்த ஆக்கிரமிப்பின் விளைவை சமகால வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐக்கிய நாடு வர்ணித்தது.


உலகம் முழுவதும் அமைதிகாக்கவும், நீதிகாக்கவும் போராடும் மக்களின் முயற்சியை அங்கீகரிப்பது கட்டாயம். இமாம் அவர்கள் வலியுறுத்தியது போல் "குத்ஸ் தினம் என்பது ஒரு சர்வதேச தினம். இது குத்ஸுக்கே பிரத்தியேகமான நாள் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும், ஆணவ சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்கும் தினமாகும்."


அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு அளித்து வரும் தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. பிராந்தியத்தில் அவர்களின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னணி நிலைகளைக் கோரும் வளர்ந்த நாடுகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குறிப்பிட்ட நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது. என்ன ஒரு நயவஞ்சகத்தனம், என்ன ஒரு இரட்டை நிலைப்பாடு...!



 


Tuesday, April 26, 2022

லெபனானில் ரமலானை கொண்டாடும் இஸ்லாமியர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள்

 Muslims, non-Muslims enjoying Ramadan festivities in Lebanon

கிறிஸ்துமஸைப் போலவேலெபனானில் ரமலான் ஒரு தேசிய நிகழ்வாகக் கருதப்படுகிறதுஅதன் உற்சவங்கள் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலானில் வரும் நோன்பை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தனித்துவமான வழிகளில் கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதன் தனித்துவமான மரபுகள் மற்றும் நடைமுறைகளுடன் இந்த புனித மாதத்தை வரவேற்கிறது.

ரமலான் பிறை கண்டவுடன் உற்சவங்கள் தொடங்கி விடுகின்றன மற்றும் ஆன்மீக ஒழுக்கம், தொண்டு, தாராள மனப்பான்மை மற்றும் பிரார்த்தனைக்கான நேரம் தொடங்கிவிடுகிறது.

பகலில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் விடியற்காலையில் இருந்து சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இருப்பதையும், எந்த திரவத்தையும் (தண்ணீர் உட்பட) சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்ப்பதையும், புகைபிடித்தல், வம்பளப்பது மற்றும் வாக்குவாதம் செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதையும் நீங்கள் காணலாம். இருப்பினும், ரமழானின் உயிர்த்துடிப்புடன் இருப்பது இரவுகள் என்றால் மிகையாகாது.

அரபு உலகம் முழுவதும், அந்தி சாயும் நேரத்தில் இப்தார் (நோன்பு முறித்தல்) முடிந்தவுடன் பண்டிகைகள் தொடங்குகின்றன, ஏனெனில் அமைதியான, மெதுவான உணவு மந்த நிலைக்குப் பிறகு சுற்றுப்புறங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.

லெபனானில் ரமலான் வித்தியாசமானது ஆனால் மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். மக்கள்தொகையில் 40% ஆனோர் கிறிஸ்தவர்கள் என்பதால், ரமலான் உற்சவ காலத்தில்  நீங்கள் லெபனானில் ஒரு புதிய அனுபவத்தை பெறுவீர்கள். அவர்களால் பகல் நேரத்தில் கண்ணியமான கண் அசைவின் மூலம் ஒரு கண்ணியமான உணவைப் பெற முடியும்.

லெபனிய முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் 21ம் இரவை லைலத்துல் கத்ர் இரவாக பொதுவாக அனுஷ்டித்த போதிலும் அம்மாதத்தின் கடைசி பத்து இரவுகளையும் புனித குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், பாவமன்னிப்பு தேடுதல் போன்ற விடயங்களில் தம்மை ஈடுபடுத்தி, பள்ளிவாசல்களில் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புனித மாதம் வந்துவிட்டால், மேற்கு ஆசிய நாடான லெபனானில் சில சுவாரஸ்யமான ரமலான் பழக்க வழக்கங்களை பார்ப்போம்.

முஸாஹராதி (வைகறையில் எழுப்புபவர்)

ரமழானின் விடியற்காலையில், அரபு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக லெபனானில் முசாஹராதி ஒரு பொதுவான காட்சியாகும். அவர் வைகறையில் எழுப்புபவர் என்றும் குறிப்பிடப்படுகிறார், அவர் சஹருக்கு முஸ்லிம்களை எழுப்ப விடியற்காலையில் தனது டிரம்மை அடித்துக்கொண்டு வீதி வீதியாக வலம்வருவார்.

முஸாஹராதிக்கு நன்றி, தங்கள் சஹர் உணவைத் தவறவிட மாட்டார்கள் என்பதை அறிந்து மக்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.

அவர் விடியற்காலையில் காற்றை நிரப்பும் கணீர் என்ற குரல் கொண்டவர், மக்களை எழுந்திருங்கள், சஹர் நேரமாகிவிட்டது, சாப்பிடுங்கள், ஃபஜ்ர் தொழுகைக்கு (விடியல் தொழுகை) தயார் செய்து ரமழானின் புதிய நாளைத் தொடங்குங்கள் என்றவாறு பாடிக்கொண்டு, வீதியெங்கும் அலைவார்.

ஹிஜாஸில் உள்ள முஸாஹராதியின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இஸ்லாமிய சகாப்தங்களில், குறிப்பாக மம்லுக் மற்றும் ஒட்டோமான் காலங்களில் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவரது செயல்பாடு தெரிகிறது.

ரமலானை கொண்டாடும் முஸ்லிமல்லாதோர்

லெபனானில், ரமலான், கிறிஸ்மஸ் போன்ற ஒரு தேசிய விழாவாகவும் கருதப்படுகிறது. இந்த நாட்டில், ரமலான் பண்டிகைகள் அனைத்து சமூகத்தினராலும் கொண்டாடப்படுகின்றது, அவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இப்தார் விருந்தில் அனைத்து சமூக தலைவர்கள் மற்றும் மத பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இப்தார் விருந்தில், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள், நோன்பு நோற்பவர்கள் மற்றும் நோன்பு நோற்காதவர்கள், அருகருகே அமர்ந்திருப்பர். உண்ணாவிரதம் இருப்பவர்களின் தனித்தன்மைகள் மதிக்கப்படுகின்றன. இரு தரப்பிலும் சமரசம் மற்றும் சகிப்புத்தன்மை அவர்கள் மத்தியில் உள்ளது.

தொண்டு நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்கின்றன, இதில் பல்வேறு மத சமூகங்கள் மற்றும் பிரிவுகளில் இருந்து விருந்தினர்கள் அழைக்கப்படுவைத்து வழமையாகும்.

 லெபனானில் திரிபோலி ரமழானின் போது இரவில் உயிர் பெறுகிறது

திரிபோலியில் ரமலான் மிகவும் அழகாக இருக்கும். வித விதமான இனிப்பு பண்டங்கள், உணவு பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை அனுபவிக்க நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வருவதால், புனித மாதத்தில், மகிழ்ச்சியான சூழ்நிலையில், திரிபோலி ஒரு புதிய உத்வேகம் பெற்றுவிடும்.

சூரிய அஸ்தமனத்தில், முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவ அண்டை வீட்டாருடன் இப்தார் உணவை உண்டுகளிப்பார்கள் மற்றும் ஹகாவதி அல்லது கதைசொல்லிகளைக் கேட்பதற்காக சிற்றுண்டி விடுதிகளில் நீண்ட நேரம் தரித்திருப்பார்கள், சிலர் சூஃபிகளின் கனவுப்போன்ற சுழல் நிகழ்ச்சியைக் காண பூங்காவிற்குச் செல்வார்கள். இப்தாருக்குப் பிறகு மக்கள் இரவில் நீண்ட நேரம் நல்லமல்கள் செய்யும் உற்சாகத்தை பெற்றுவிடுகின்றன.ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் பண்டிகை காலங்களில் லெபனான் நகரம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

அதிகாலை 2.15 ஆகிவிட்டது, திரிபோலி பழைய நகரத்தில் வசிக்கும் மக்களை சஹருக்கு முன் எழுப்புவதற்காக ஒரு முஸாஹராட்டி டிரம்ஸை அடித்துக் கொண்டிருந்தார். அமைதியாக இருந்த நகரத்தின் தெருக்கள் திடீரென உயிர்ப்பற்று எழ தொடங்குகின்றன. சமையலின் வாசனையானது, வழிப்போக்கர்களுக்கு வீடுகளில் உணவைப் பகிர்ந்துகொள்வதை அறிய முடிகிறது.

இப்தாருக்கான லெபனான் சிறப்பு இனிப்புகள்

ரமழானின் இன்றியமையாத பகுதியாக, சஹர் மற்றும் இப்தார் உணவுகள் உலகெங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் முக்கியமானவையாக உள்ளன, இது மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு மற்றொரு காரணத்தை வழங்குகிறது.

அரபு நாடுகளில், குறிப்பாக லெபனானில், புனித ரமலான் மாதத்தில் வழங்கப்படும் தனித்துவமான உணவுகள் மற்றும் இனிப்புகள் உள்ளன.

பின்வரும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் சில சிறப்பு ரமலான் ரெசிபிகளாகும், லெபனான் மக்கள் பொதுவாக ரமழானின் போது இஃப்தார் உணவுக்காக பின்வருவனவற்றை தயார் செய்கிறார்கள்.

கெல்லாஜ்

ரமலான் சீசனில் கெல்லாஜ் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இது அஷ்டா கிரீம் நிரப்பப்பட்ட ஒரு லேசான மா கலவையாகும், ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு கணம் சிரப்பில் ஒரே நேரத்தில் ஊறவைக்கப்படுகிறது. ஒரு தூய அற்புதமான சுவை...!

 மFப்ரூக்கே

ரவை மாவு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை பாகு ஆகியவற்றை மாவுடன் கலந்து மஃப்ரூக்கே தயாரிக்கப்படுகிறது. பால்கட்டி மற்றும் வறுத்த கொட்டைகள் அதன் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. Mafroukeh ஒரு தட்டில் பரிமாறப்படலாம் அல்லது பல வடிவங்களில் வடிவமைக்கப்படலாம்.

ரமலான் காலத்தில் பொதுவாக தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு, சாய்பியேட், பால்கட்டி நிரப்பப்பட்ட பேஸ்ட்ரியின் முறுமுறுப்பான அடுக்குகளால் ஆனது. Chaaybiyet பொதுவாக ஒரு முக்கோண வடிவில் வடிவமைக்கப்படுகிறது மற்றும் நொறுக்கப்பட்ட பிஸ்தா மற்றும் மிட்டாய் செய்யப்பட்ட ஆரஞ்சு சுளைகளால் அலங்கரிக்கப்பட்டு மற்றும் நிச்சயமாக இனிப்பு சிரப்பால் மூடப்பட்டிருக்கும்! அதை குளிராகவோ அல்லது சூடாகவோ பரிமாறலாம்.

டௌகியே

Daoukiyeh பெய்ரூட்டின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 80 களில் பெய்ரூட்டில் உள்ள ஒரு சிறிய பேஸ்ட்ரி கடையான Al-Daouk இனிப்புகளால் உருவாக்கப்பட்டது, மேலும் குடும்பத்தின் கடைசி பெயரால் பெயரிடப்பட்டது.

Daoukiyeh என்பது அஷ்டா (பால்கட்டி)வின் ஒரு அடுக்கு மற்றும் பிஸ்தா பேஸ்டின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் முந்திரி பருப்புகளின் அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பிஸ்தாவின் நிறம் Daoukiyeh க்கு அதன் சிறப்பு பச்சை நிறத்தை அளிக்கிறது. இன்று, Daoukiyeh நாடு முழுவதும் உள்ள பல பேஸ்ட்ரி கடைகளில் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது.

கத்தாயேஃப்

கத்தாயேஃப் என்பது ரமழானில் மிகவும் பொதுவாக தயாரிக்கப்படும் சுவையான உணவாகும். இந்த அரபு உணவானது பேன்கேக் போன்ற மாவை வால்நட் மற்றும் சர்க்கரை கலவை அல்லது இனிப்பு அக்காவி சீஸ் அல்லது அஷ்டா (ரோஸ் வாட்டருடன் உறைந்த கிரீம்) போன்ற பல்வேறு நிரப்புகளுடன் தயாரிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட பொருட்களால் நிறைக்கப்பட்டு செய்யப்பட்ட கத்தாயேஃப் பின்னர் வறுக்கப்பட்டு, சர்க்கரை பாகில் முக்கி பரிமாறப்படும்.

மொத்தத்தில் புனித ரமலான் மாதம் முழுவதும் ஒரு புதுமையான அனுபவத்தை லெபனானில் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

https://en.mehrnews.com/news/186023/Muslims-non-Muslims-enjoying-Ramadan-festivities-in-Lebanon

Thursday, April 21, 2022

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள்

Attributes of Imam Ali from the Perspective of a Christian Scholar


ஹிஜ்ரி 40 , ரமலான் பிறை 19 அன்று பஜ்ர் நேரத்தில் இமாம் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் (லானதுல்லாஹ்) என்ற காரிஜி ஒருவனால் விஷம் கலந்த வாளால் தலையில் வெட்டப்பட்டு ரமலான் பிறை 21 ல் ஷஹீத் ஆனார்கள்


By George Jordac

மூலம்: ஜார்ஜ் ஜோர்டாக்

இந்த கட்டுரை இமாம் அலி பற்றி ஜார்ஜ் ஜோர்டாக் எழுதிய "மனித நீதியின் குரல்" என்ற முழு புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. எனவே, இது இமாம் அலியின் சில குணங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த சுருக்கமான கட்டுரையில் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது.

மனிதர்களின் தனிப்பட்ட குணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது மற்றும் அவை ஒவ்வொன்றும் மற்றவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மனிதர்களின் மற்றும் குறிப்பாக சிறந்த ஆளுமைகளின் இயல்பு மற்றும் பழக்கவழக்கங்களை முழுமையாக விளக்குவது மிகவும் கடினம்.

ஒவ்வொரு குணமும் மற்றொரு குணத்துடன் தொடர்புடையது, ஒவ்வொரு பழக்கமும் மற்றொரு பழக்கத்திற்குக் காரணமாகும் மற்றும் மூன்றில் ஒன்றின் விளைவு, அல்லது இரண்டின் விளைவு மற்றொன்றின் விளைவாகும்.

எனவே, அலியின் தனிப்பட்ட குணங்களில் சிலவற்றை வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, அவற்றை ஒரே ஆளுமைக்குள் ஒப்பிட்டுப் பார்த்து, இந்த அறிவார்ந்த பகுப்பாய்வின் மூலம் சில முடிவுகளை எடுக்க நான் முயற்சிக்கிறேன்.

இறையச்சம் மற்றும் தன்னடக்கம்

அலி தனது பக்தி மற்றும் தன்னடக்கத்திற்காக நன்கு அறியப்பட்டவர். அவர் மிகவும் இறையச்சம் கொண்டவராக இருந்ததால், அவர் தனது சொந்த நலனுக்காகவும், தனது சொந்த மக்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பல விஷயங்களைச் செய்தார்.

அலியின் இறையச்சம், தங்கள் ஆன்மாவின் பலவீனத்தின் காரணமாக வழிபாட்டில் ஈடுபடும் மற்ற பக்திமான்களினது போல் சூழ்நிலைகளின் விளைவோ அல்லது வாழ்க்கையின் இடர்பாடுகளில் இருந்து தப்பித்து, மக்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவோ, அல்லது மக்கள் மூதாதையர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஒரு விதியாக மதிக்கிறார்கள் என்பதால் ஏற்பட்டதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அவர்களின் மூதாதையரின் வாழ்க்கையினை பின்பற்றிய நிகழ்வுகளின் விளைவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன,

உண்மை என்னவென்றால், இமாம் அலியின் இறையச்சம் ஒரு உறுதியான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் படைப்பின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பரஸ்பர பிணைப்புடன் இணைக்கப்பட்டதாக மற்றும் விண்ணையும் மண்ணையும் ஒன்றோடொன்று பிணைப்பதாய் இருந்தது.

அவரது வழிபாடானது உண்மையில் மனித வாழ்க்கை மற்றும் செழிப்புக்காக ஒரு தொடர்ச்சியான முயற்சியாகவும், கேளிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இருந்தது. அவர் தீமை மற்றும் துன்மார்க்கத்தின் அனைத்து அம்சங்களையும் எதிர்த்துப் போராடினார். ஒருபுறம் அவர் நயவஞ்சகம் மற்றும் சுயநலத்திற்கு எதிராகவும், மறுபுறம் கேவலமான செயகள், இழிநிலை, இயலாமை மற்றும் அந்த நாட்களில் மக்களிடம் இருந்த ஏனைய தீய குணங்கள் அனைத்துக்கும் எதிராகவும் போராடினார்.

அலியின் கூற்றுப்படி, இறையச்சத்தின் சாராம்சம் என்னவென்றால் உண்மை மற்றும் நீதிக்காக ஒருவரின் உயிரை தியாகம் செய்ய துணிவதாகும். அவர் இவ்வாறு கூறினார்: "உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், பொய் உங்களுக்கு ஆதாயத்தைத் தந்தாலும், பொய்யை விட சத்தியத்தை நீங்கள் விரும்பக்கூடிய அளவில் உங்கள் இறையச்சம் இருக்க வேண்டும்".

அவருடைய இறையச்சம் எவ்வாறு இருந்ததென்றால், அவர் ஏனையோருக்கு போதித்த அதே வகையிலேயே இருந்தது. இந்த உண்மையின் காரணமாக அவர் தியாகி ஆனார், மேலும் உயிருள்ளவர்களுக்கு "தியாகி" என்ற பட்டத்தை வழங்க முடிந்தால், அவர் உயிருடன் இருந்தபோதும் உண்மை மற்றும் நேர்மையின் பாதையில் ஒரு தியாகி என்று கூறலாம்.

இமாம் அலியின் வணக்கம்

இமாமின் இறையச்சத்தை ஒருவர் கவனமாகப் ஆராய்ந்தால், அரசியலிலும் சரி, ஆட்சி செலுத்தியத்திலும் சரி வணக்க வழிபாடுகளில் அவர் உறுதியாகக் கடைப்பிடித்த ஒரு சிறப்பான வழிமுறை அவற்றில் இருந்ததை அவர் அறிந்துகொள்வார். எல்லாம் வல்ல இறைவனின் முன் நின்றபோது, ஒரு கவிஞன் இயற்கையின் அழகில் தொலைந்து போவது போல, அவரது முழு கவனமும் தியானத்தில் இருக்க செய்தார்.

அலியின் பின்வரும் கருத்து, இறைவனை வழிபடுபவர்களுக்கும், இறையச்சத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் மிகவும் சிறந்த அறிவுறுத்தலாக இருக்கிறது: "ஒரு பிரிவினர் இறைவனின் ஆசியை பெறுவதற்காக வழிபடுகிறார்கள், இது வணிகர்களின் வழிபாடு, மற்றொரு குழு அவரது பயத்தின் காரணமாக இறைவனை வணங்குகிறது. இது அடிமைகளின் வழிபாடு. மூன்றாவது குழு அவரை நன்றியுடன் வணங்குகிறது. இது சுதந்திர மனிதனின் வழிபாடு"

ஏனைய நபர்களைப் போலல்லாமல், இமாமின் வழிபாடு பயத்தின் காரணமாக இருக்கவில்லை, மேலும் அது சொர்க்கத்தைப் பெறுவதற்கான எதிர்பார்ப்புடன் செய்யப்படும் வணிகரின் வழிபாடு போன்றதும் அல்ல. மறுபுறம், பெரிய மனிதர்கள் எல்லாம் வல்ல இறைவன் முன் நிற்கும்போது, அவர்கள் தங்களை சாந்தமாகவும், அவருடைய மோசமான அடிமையாக இருப்பதாக கருதிக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருப்பதைக் காண்கிறார்கள். இந்த வழிபாட்டின் அடிப்படை காரணம், மனசாட்சி மற்றும் ஆன்மீக பரிபூரணம்.

அலி வழங்கிய அதே நிலைப்பாட்டை வணக்க வழிபாட்டிற்கு ஒப்புக்கொள்பவர் நிச்சயமாக வாழ்க்கையை அலி எவ்வாறு பார்த்தார்களோ அதே வழியில் பார்ப்பார். அத்தகைய நபர் உலக ஆதாயங்களுக்காகவும் நிலையற்ற இன்பங்களுக்காகவும் வாழ்க்கையைத் தேட மாட்டார். மறுபுறம், அவர் உயர்ந்த ஒழுக்கத்தை அடைவதற்கும் தனது இயல்புக்கு இணங்கக்கூடிய முடிவுகளை அடைவதற்கும் அதை நாடுகிறார். இந்த காரணத்திற்காகவே அலி உலகில் இறையச்சத்தைத் தேர்ந்தெடுத்தார், புகழையும் பகட்டையும் நாடவில்லை. அவர் தனது செயல்கள், வார்த்தைகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றின் விஷயத்தில் எப்படி உண்மையாக இருந்தாரோ, அதே போல் இறையச்சம் என்ற விஷயத்திலும் அவர் உண்மையாக இருந்தார்.

ஆடம்பர வாழ்க்கையில் அக்கறையற்றவர்

அவர் ஆட்சியின் மீதும், பிறரால் மிகவும் விரும்பப்படும் பிற விஷயங்களிலும் எப்படி அக்கறையற்றவராய் இருந்தாரோ, அவ்வாறே இவ்வுலக இன்பங்களிலும் அவர் விருப்பம் கொண்டிருக்கவில்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு குடிசையில் வசித்து வந்தார், அதுவே அவரது அரச அலுவலகமாகவும் இருந்தது. அவரது ஆட்சி அரச வடிவில் இல்லாமல் கலிபா ஆட்சி முறையில் இருந்தது. அவரது உணவு மிகவும் சாதாரணமானதாக இருந்தது; தனது மனைவியால் அரைத்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பார்லி ரொட்டியை சாப்பிட்டார். நிச்சயமாக அவரது ஆளுநர்களும் அதிகாரிகளும் சிரியா, எகிப்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆடம்பர பொருட்களை பயன்படுத்தினர். பெரும்பாலும் தன் மனைவிக்கு மா அரைக்கும் சிரமத்தை கொடுக்காமல், இந்த வேலையை தானே செய்து வந்தார். அவர் விசுவாசிகளின் தளபதியாக இருந்த போதிலும், முழங்காலால் அழுத்தி உடைக்கக்கூடிய அளவுக்கு கடினமான மற்றும் உலர்ந்த ரொட்டியை அவர் சாப்பிட்டார். மிகவும் குளிராக இருந்தபோது, ​​அந்த குளிர் பருவத்திற்கான ஆடைகள் எதுவும் அவரிடம் இல்லை, மெல்லிய கோடை ஆடைகளுடன் திருப்தி அடைந்தார்.

நீதி தவறாமை

அந்தாராவின் மகன் ஹாரூன் தனது தந்தையை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறுகிறார்: "குர்னாக் அரண்மனைக்கு குளிர்காலத்தில் நான் அலியின் முன்னிலையில் சென்றேன், அவர் பழைய ஆடை அணிந்து குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டேன். நான் அவரிடம் : ஓ விசுவாசிகளின் தளபதி அவர்களே! இறைவன் உங்களுக்கு பொதுக் கருவூலத்திலும் ஒரு பங்கை நிர்ணயித்துள்ளான், அவ்வாறிருக்க நீங்கள் ஏன் இந்த நிலையில் வாழ்கிறீர்கள்" என்று கேட்க. அவர் இவ்வாறு பதிலளித்தார்: "உங்கள் (அதாவது பொது) சொத்தில் எதையும் நான் எடுக்க மாட்டேன் என்று நான் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன். நான் அணிந்திருக்கும் இந்த மேலங்கி மதீனாவில் இருந்து வரும்போது கொண்டு வந்த ஆடைதான்", என்றார்கள்.

அவர் இப்னு முல்ஜிமின் கைகளால் வெட்டப்படும் வரை அவர் தனது சிறிய வீட்டில் நாட்களைக் கழித்தார். அவர் கலீஃபாவாக இருந்தாலும், அவரைப் போல எளிமையாகவும் இருப்பதைக்கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களில் எவரையும் நான் அறியவில்லை.

உண்மையில் உலக சுகபோகங்களில் அவருக்கு இருந்த அக்கறையின்மை அவரது வீரத்துடன் தொடர்புடையது. இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது சரியான பார்வை அல்ல. உண்மையில், அவரது வீரம் என்பது அவரது ஆன்மாவின் மகத்துவத்தை உள்ளடக்கிய, பெரிய இலக்கை அடைவதற்கான முயற்சிகளையும், தனது சொந்த நலன் பற்றி கவலைப்படாமல் ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் உதவுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆதரவற்ற மற்றும் வறிய மக்கள் பலர் வசிக்கும் ஒரு நகரத்தில் வாழும் போது வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க அவர் தயாராக இல்லை என்பதே உண்மை.

அலி தனக்காக ஒரு கல்லின் மீது கல்லையோ அல்லது ஒரு செங்கல் மீது ஒரு செங்கலை வைக்கவில்லை என்றும், மேலும் ஒரு நாணலுடன் ஒரு நாணலை இணைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் நாணலால் செய்யப்பட்ட ஒரு வீட்டைக் கூட தனக்காகக் கட்டவில்லை. அவருக்கு வெள்ளை மாளிகை கட்டப்பட்டிருந்தாலும், ஏழை மக்கள் குடியிருக்கும் மரக் குடிசைகளை விட சிறந்த வீட்டில் வசிக்க அவர் விரும்பாததால் அவர் அதை தனது வாசஸ்தலமாக அமைத்துக் கொள்ளவில்லை. அலி தனது வாழ்க்கையை வழிநடத்திய விதம் அவரது நன்கு அறியப்பட்ட கருத்தில் பிரதிபலிக்கிறது: "மக்கள் என்னை விசுவாசிகளின் தளபதி என்று அழைப்பதில் நான் திருப்தியடைந்து அவர்களின் வாழ்க்கை துயரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாமா?”

அலியின் கலிபா ஆட்சியின் போது இஸ்பஹானில் இருந்து சில அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றன. அதை அவர் ஏழு பகுதிகளாகப் பிரித்தார். அதில் ஒரு ரொட்டியும் இருந்தது, அதையும் ஏழு துண்டுகளாக உடைத்தார்.

பரந்த மனப்பான்மை மற்றும் மன்னிக்கும் தன்மை

எல்லா விடயத்திலும் அலியின் ஆளுமை பிரதிபலித்தது  மற்றும் அதற்குத் தேவையான ஒவ்வொரு குணத்தையும் அது உள்ளடக்கி இருந்தது. பரந்த மனப்பான்மை மற்றும் மன்னிப்பு ஆகியவை ஆளுமையின் அவசியமான பண்புகளாகும், மேலும் அவை இமாமின் இயல்பில் வேரூன்றி இருந்தன. இதனடிப்படையில் அவர் எந்த நபருக்கும் தீங்கு விளைவித்ததில்லை, அவருக்குத் தீங்கு விளைவிப்பதைப் பற்றிய எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. மேலும் அவரைக் கொல்ல விரும்புவதாகத் தெரிந்த ஒருவரை கூட அவர் ஒடுக்கவில்லை.

மன்னிப்பு மற்றும் ஒத்துழைத்தல் விஷயத்தில் வரலாற்றில் அவருக்கு இணையானவர்கள் இருக்க இல்லை, மேலும் அவரது இந்த குணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன. ஒரு போரின் போது அவர் தனது வீரர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியதாக பதியப்பட்டுள்ளது: ஓடிப்போகும் எதிரியைக் கொல்லாதே. உதவியற்ற மற்றும் காயமடைந்த ஒருவருக்கு உதவியை நிறுத்த வேண்டாம். யாரையும் நிர்வாணமாக்க வேண்டாம். யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்காதீர்கள்.

ஒட்டகப் போரின் முடிவில் அலி கொல்லப்பட்ட எதிரிகளுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார் மற்றும் அவர்களின் மன்னிப்புக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். வீழ்ந்த எதிரிகள் மீது அவர் கட்டுப்பாட்டைப் பெற்றபோதும், அவர் அவர்களை மன்னித்தார், அவர்களுடன் அன்பாக நடந்து கொண்டார், மேலும் அவர் அவர்களைத் தண்டிக்கத் தடை விதித்தார், ஆனால் அவர் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் நிலையில் இருந்தார், என்றாலும் அலி அவர்களுக்கு கருணை காட்டினார். தாம் விடுவிக்கப்படுவோம் என்று கைதானவர்களும் நம்பியிருக்கவில்லை.

http://echoofislam.itfjournals.com/article_5.html