Saturday, February 25, 2023

ஹஸ்ரத் அபுல் ஃபஸ்ல் அல்-அப்பாஸ் தைரியம், விசுவாசம், தியாகம் ஆகியவற்றின் அடையாளம்

Hazrat Al-Abbass symbol of courage, loyalty, sacrifice

அபுல் ஃபஸ்ல் அல்-அப்பாஸ் என்ற பெயரை நாம் ஒவ்வொரு வாரமும் இரண்டாவது குத்வாவில் கேட்டிருப்போம். யார் இவர்? முக்கிய ஸஹாபாக்கள் வரிசையில் இவர் பெயரும் கூறப்படுவது ஏன்? அவரின் சிறப்பு என்ன? என்பது பற்றியெல்லாம் நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? குத்பாக்களில் கூட இவர் யார் என்பது பற்றி விளக்கப்படுவதை இதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் எமது ஷீஆ சகோதரர்கள் இவரை ஒருபோதும் மறப்பதில்லை.

தைரியம், அன்பு, விசுவாசம் மற்றும் சுய தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஹஸ்ரத் அபுல் ஃபஸ்ல் அல்-அப்பாஸ் அவர்களின் பிறந்த நாளை உலகெங்கிலும் உள்ள புனித அஹ்லுல் பைத்தின் மீது அன்பு கொண்டோர் மற்றும் ஷியா சகோதரர்கள் நினைவுகூர்வதற்கு ஒருபோதும் தவறுவதில்லை.

இமாம் அலி இப்னு அபு தாலிப் (அலை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் ஹஸ்ரத் ஃபாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்கள் காலமான பல ஆண்டுகளுக்குப் பிறகு பாத்திமா பின்த் ஹிஸாம் அவர்களை மணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பிறந்தவரே அல்-அப்பாஸ் ஆவார். அவரது தாயாரின் முழுப் பெயர் உம் அல்-பனீன் பாத்திமா பின்த் ஹிஸாம் ஆகும். அல்-கிலாபிய்யா குலத்தைச் சேர்ந்த நல்லொழுக்கமுள்ள பெண்மணி (அல்-கிலாபிய்யா குலம் அக்காலத்தில் அதன் தைரியம் மற்றும் துணிச்சலுக்காக போற்றப்படும் ஒன்று).

ஹஸ்ரத் அபுல் ஃபஸ்ல் அல்-அப்பாஸ் அவர்கள் ஹிஜ்ரி 26 ஆம் ஆண்டு ஷபான் மாதம் 4 ஆம் தேதி புனித மதீனாவில் பிறந்தார்.

ஹஸ்ரத் பஸல் அல் அப்பாஸ் தனது மூத்த சகோதரர்களான திரு நபியின் பேரன்கள், இமாம் ஹசன் (அலை) மற்றும் இமாம் ஹுசைன் (அலை) ஆகியோரை விட இருபது வயதுக்கு மேல் குறைந்தவர்கள், சிறுவயதிலிருந்தே ரசூழுலுல்லாஹ்வின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தார்.

இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கர்ம வீரர்; கர்பலா போரில் இமாம் ஹுசைனின் இராணுவத்தில் துணிச்சலாக செயற்பட்ட தியாகி ஆவார்.

கர்பலா களத்தில் ஹஸ்ரத் அல் அப்பாஸ்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் அரை சகோதரரான அவர் கர்பலா போரில், இமாம் ஹுசைன் (அலை) அருகில் ஒரு நிழல் போல் இருந்தார். அவரது புனைப்பெயரே அபு ஃபாதில் (நல்லொழுக்கங்களின் தந்தை) ஆகும். அவர் சத்தியம், இறை நீதி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஆஷுரா நாளில் தனது உயிரை அர்ப்பணித்தார்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்தின் கொடியை ஏந்தியவர் அவர், எதிர்தரப்பினர் பயந்து நடுங்கும் அளவிற்கு மாவீரர், இமாமின் தீவிர விசுவாசியாக இருந்தார். தாகத்தால் தவித்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது புதல்விகளுக்கு குடிப்பதற்கு நீர் எடுத்து வர சென்ற வேளையில் மறைந்திருந்து தாக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களினதும் அவரது குழந்தைகளினதும் தாகத்தை தீர்க்க நீரை கொண்டு வருவதற்கு விரைந்த அபு பஸல் ஆற்றை அடைந்ததும், நா வறண்ட நிலையில் தானும் நீரருந்த முயன்றார். கூடாரத்தில் தாகத்தால் தவிப்போரின் நிலை அவர் கண் முன் வந்து நின்றது, தான் தாகம் தணிக்கும் முன் அவர்களது தாகத்தைத் தீர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற எண்ணம் காரணமாக அவர் தான் கையில் ஏந்திய நீரையும் குடிக்காமல், நீர் நிரப்பட்ட கூஜாவை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்கு திரும்புகையில், மறைந்திருந்து தாக்கிய யஸீதின் இராணுவத்தால் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாளில் அவர் எமக்கு வழங்கிய பல பாடங்களில் இதுவும் ஒன்று. சுயநலமின்மை, தன்னலத்தை விட பிறர் நலனே முக்கியம் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், றஸூலுல்லாஹ்வின் வீட்டுப் பெண்கள் தங்கியிருந்த கூடாரங்களைப் பாதுகாத்தல், குழந்தைகளைப் பராமரித்தல், முகாமில் தரித்திருந்தோருக்கு தண்ணீர் கொண்டு வருவதல் போன்றவற்றில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் மிக அழகான மற்றும் உச்சக்கட்ட தியாகத்தின்  வெளிப்பாடுகளாகும்.

அவரது நினைவாக கட்டப்பட்டுள்ள கம்பீரமான கல்லறை மாடம் இன்றுவரை இமாம் ஹுசைனின் (அலை) அவர்களின் சன்னதியைக் காக்கும் ஒரு காவலாளி போல் உள்ளது. கர்பலாவிற்கு விஜயம் செய்யும் எவரும் அபூ பஸல் அவர்களின் அடக்கஸ்தலத்தை பார்வையிடாமல் வருவதில்லை.

அப்பாஸ் அவர்கள் ஷீஆ சகோதரர்களால் இறையச்சம், தைரியம், வீரம், அன்பு, நேர்மை மற்றும் சுய தியாகம் ஆகியவற்றின் இறுதி முன்னுதாரணமாக கருதப்படுகிறார். ஹஸ்ரத் அல்-அப்பாஸுக்கும் இஸ்லாத்தில் மிகப் பெரிய பதவி உண்டு.

- தாஹா முஸம்மில் 

Friday, February 17, 2023

இஸ்ரா மற்றும் மிராஜ் அருள்மிக்க அற்புத நிகழ்வாகும்

Isra and Miraj is a miraculous event of grace


மனிதகுல வரலாற்றில் மகத்துவமிக்க நாட்களில் ஒன்றை அடைந்தவர்களாக நாம் இருக்கிறோம். சர்வவல்லமையுள்ள அல்லாஹ் தனது இறுதித் தூதருக்கு இஸ்லாத்தின் உலகளாவிய செய்தியை முறையாக ஒப்படைத்த நாள் இது.

இந்த நாளுக்கு இத்தினத்தை மிஹ்ராஜ் என்று அழைப்போம். மீட்சி என்று பொருள்படும் "மப்'அத்" என்றும் இத்தினம் அழைக்கப்படுகிறது. இது ரஜப் மாதத்தின் 27 ஆம் தேதி (முஸ்லிம் நாட்காட்டியின் 7 வது மாதத்தின் 27 வது நாளில்) கொண்டாடப்படும் இஸ்ரா மற்றும் மிராஜ் என்னும் அற்புத நிகழ்வாகும். 

முதலில் மெக்காவிலிருந்து ஜெருசலம் வரை, பின்னர் ஜெருசலமிலிருந்து வானங்கள் வரை நபிகள் நாயகம் மேற்கொண்ட ஒரு அற்புதமான இரவு நேர பயணத்தைக் குறிக்கிறது. விசுவாசிகள் இதை றஸூலுல்லாஹ்வின் உடல் மற்றும் ஆன்மீக பயணமாக கருதுகின்றனர்.

 سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (புனித குர் ஆன் 17:1)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டது இத்தினத்திலாகும். இந்தப் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பல அசாதாரண காட்சிகள் காண்பிக்கப்பட்டன.  

இரவுப் பயணமும், விண்ணேற்றமும் நடந்த வரலாற்றுக் காலம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது அன்பான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரின் தொடர்ச்சியான மரணத்திற்குப் பிறகு கடுமையான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்ட காலகட்டம், அதே சமயம் தாயிஃப் மக்களின் கொடூரமான நிராகரிப்புகளையும் எதிர்கொண்டது. இது மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த காலத்தின் அனைத்து தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தபடி, முழு பிரபஞ்சத்தையும் படைத்த ஒரே இறைவன், ஏகத்துவத்தின் உலகளாவிய பணியை இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய சந்ததியான முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான், சமாதானம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை சர்வவல்லமையுள்ள இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாமை ஆகியவற்றின்பால் அழைக்கும் பணியை ஒப்படைத்தான். இந்த தூதுக்கு அரபியில் "இஸ்லாம்" என்று பொருள்.

பல்வேறு காலங்களிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான்; ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை), நூஹ் (அலை) மற்றும் எண்ணற்ற தூதர்களை, சமூக நீதியை ஊக்குவிப்பதற்கும், மறுக்கப்படும் அனைத்து மனிதாபிமான விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவ வழிபாடு, நாத்திகம், அடக்குமுறை, தீமைகள் மற்றும் மற்ற எல்லா பாவங்களிலும் ஈடுபடுவதிலிருந்து மக்களை தடுப்பதற்காகவே நியமித்தான்.

சர்வவல்லமையுள்ள இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முறையான நியமனம் வழங்கி இவ்வாறு கூறுகிறான்: 

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ

"(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." (புனித குர்ஆன் 21:107).

றஸூலுல்லாஹ்வின் வருகைப்பற்றி முன்வந்த அனைத்து மதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்த வேத நூல்களை இடைத்தரகர்கள் சேதப்படுத்திய போதிலும், இந்த மத நூல்களில் றஸூலுல்லாஹ்வின் வருகை தொடர்பான இந்த பத்திகள் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளதானது  இஸ்லாத்தின் உண்மைத்தன்மையையும், நபிகள் நாயகத்தின் ஒப்பற்ற ஆளுமையையும் உறுதிப்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமானது. இறைவன் இவரைப்பற்றி கூறுகையில்:

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏

எவர்கள் அல்லாஹ்வையும்இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். (புனித குர்ஆன் 33:21)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தின் முழுமையான அர்த்தத்திலும் ஓர் உன்னதமான சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். அவர் நல்லொழுக்கத்தின் சிகரம் மற்றும் மனித இனத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.

அடக்கம்உண்மைத்தன்மைகருணைபொறுமைவிசுவாசம்நேர்மைதைரியம்துணிச்சல்தாராளம்பெருந்தன்மைஞானம் போன்ற சிறந்த குணங்களை தன்னுடைய உயர்ந்த ஆளுமையில் வெளிப்படுத்தியதன் மூலம் சர்வவல்லமையுள்ள இறைவன்  அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டினான்.

அவரது உயர்ந்த பண்புகள் மற்றும் அவரது குடும்பத்தினர், தோழர்கள், மனைவிகள் மற்றும் பிறருடன் அவர் வழிநடத்திய அதிசயமான எளிமையான வாழ்க்கையைப் படிப்பதன் மூலம், அவருடைய நடத்தையிலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடிகிறது, அதன்படி நமது சொந்த வாழ்க்கை முறையை நாம் வடிவமைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் இறுதி தூதரின் காலடி சுவட்டை பின்பற்றிஅவருடைய போதனைகளுக்கு செவிசாய்த்துஅவருடைய உன்னத தோழர்களைப் போலவே அவருடைய நடைமுறையையும் வாழக்கை உதாரணங்களையும்  (சுன்னா மற்றும் சீரா) பின்பற்றினால் ஒழிய நமது சமூகம் ஒருபோதும் இஸ்லாமிய சமூகமாக இருக்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால்அவர் தடைசெய்தவற்றிலிருந்து விலகிஅவர் நமக்குக் போதித்த வற்றுக்கு கீழ்ப்படிந்து நடத்தலாகும்.

ஆகவே எம்மத்தியில் உள்ள வீண் தர்க்கங்களை ஒதுக்கி விட்டு றஸூலுல்லாஹ்வின் அடியொற்றி, ஒற்றுமை குலையாது, புனித வேதத்தை ஒழுகி நடப்போம்.

தாஹா முஸம்மில் 

Wednesday, February 15, 2023

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சாதனைகள்

Achievements of the Islamic Republic of Iran in the Area of Science and Technology Iranian Scientists among the Top Scientists in the World


இஸ்லாமியப் புரட்சிக்கு முன், ஈரானில் குறிப்பிடத்தக்க சிறந்த விஞ்ஞானிகள் எவரும் இருக்கவில்லை, ஆனால், அதிகாரப்பூர்வமான சர்வதேச “Web of Science” தரவுத்தளத்தின்படி, இஸ்லாமிய புரட்சியின் பின், 208 ஈரானிய விஞ்ஞானிகள் உலகின் முதல் 1 சதவீத விஞ்ஞானிகளில் இருக்கின்றனர். இந்த தரவரிசை 22 துறைகளில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி ஆவணங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

அறிவியல் ஆவணங்கள் மற்றும் ஆய்வுகளின் படி பிராந்திய மற்றும் உலகளாவிய அறிவியல் தரவரிசை

“Scopus” மேற்கோள் தரவுத்தளத்தின் அடிப்படையில், ஈரானியர்களால் தயாரிக்கப்பட்ட குறியீட்டு ஆவணங்களின் எண்ணிக்கை புரட்சிக்கு முன் 3071 ஆகவிருந்து புரட்சிக்குப் பின் 397,212 ஆவணங்களாக அதிகரித்துள்ளது, இது இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ஈரானில் இருந்து வெளிவந்த ஆவணங்களின் எண்ணிக்கையில் 129 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது. அதே தரவுத்தளத்தின் அடிப்படையில் ஈரான் 1996 ஆம் ஆண்டில், பிராந்தியத்தில் 5 வது இடத்திலும், உலகில் 52 வது இடத்திலும் இருந்தது; தற்போது அதன் நிலை 2018 இல் பிராந்தியத்தில் முதலாவதாகவும் மற்றும் உலகளவில் 16 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

உலகில் அறிவியல் கட்டுரைகள் தயாரிப்பில் ஈரானின் பங்கின் சதவீதம் இஸ்லாமியப் புரட்சிக்கு முந்தையதை விட 656 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது இஸ்லாமியப் புரட்சிக்கு முன் அதன் பங்கு 0.0001 சதவீதமாக இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் ISI  படி 1.95 சதவீதமாகவும், ஸ்கோபஸின் (Scopus) படி 1.97 சதவீதமாகவும் உயர்ந்தது. International Scientific Indexing (ISI ) அறிக்கையின்படி, புரட்சியின் தொடக்கத்திலிருந்து 2016 வரை ஈரானியர்களால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 69 மடங்கு அதிகரித்துள்ளது (ஸ்கோபஸ் அறிக்கையின்படி 75 மடங்கு) அறிவியல் ஆவணங்களின் எண்ணிக்கையில் ஈரான் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் முதலிடத்தில் உள்ளது. அதே அளவீட்டின் படி மூலம், ஈரானின் வேகமான அறிவியல் வளர்ச்சி விகிதம் உலக சராசரி வளர்ச்சி விகிதத்தை விட 11 மடங்கு அதிகமாகும்.

ஈரானிய பல்கலைக்கழகங்களின் உலக தரவரிசை

"டைம்ஸ் ரேங்கிங் சிஸ்டம்" அடிப்படையில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் ஈரானின் தரவரிசை 2012 இல் 32 வது இடத்தில் இருந்து 2017 இல் 17 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேபோல், டைம்ஸ் தரவரிசை முறையின்படி, உலகில் உள்ள ஈரானின் சிறந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை, புரட்சிக்கு முன் பூஜ்ஜியத்தில் இருந்து 2018 இல் 18 ஆக உயர்ந்துள்ளது. "லைடன் தரவரிசை அமைப்பில்" (Leiden Ranking System) இன்னும் புள்ளிவிவரங்கள் உள்ளன, அதன்படி 2018 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் 18 ஈரானிய பல்கலைக்கழகங்கள் இருந்தன.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் 98% அறிவியல் சாதனைகள் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய காலத்துடன் தொடர்புடையது மற்றும் அதில் 2% மட்டுமே புரட்சிக்கு முந்தைய காலத்துடன் தொடர்புடையது. ஷெரீஃப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அதே எண்ணிக்கை புரட்சிக்கு முன் 1% ஆக இருந்த நிலையில் புரட்சிக்கு பின் 99% ஆக உள்ளது. இதேபோல், இந்த புள்ளிவிவரங்கள் ஷிராஸ் பல்கலைக்கழகத்தில் முறையே 95% மற்றும் 5% ஆகும். உண்மையில், புரட்சிக்கு முன்னர், ஈரானிய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு ஆவணங்களை மொழிபெயர்ப்பதிலேயே ஈடுபட்டிருந்தன மற்றும் எந்த அறிவியல் ஆய்வு அல்லது வெளியீடு இல்லை என்று கூறலாம்.

விரிவுரையாளர்கள் அதிகரிப்பு

புரட்சியின் தொடக்கத்தில், வெறும் 100 ஆக இருந்த பெண் விரிவுரையாளர்கள் எண்ணிக்கை 1996 இல் 2,100 ஆக அதிகரித்துள்ளது, இது 21 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது. பொதுவாக, ஈரானிய பல்கலைக்கழகங்களில் ஆசிரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 மடங்கு அதிகரித்துள்ளது.

அறிவியல் ஒலிம்பியாட்களில் தரவரிசை

புரட்சிக்கு முன், ஈரான் எந்த அறிவியல் ஒலிம்பியாட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இருப்பினும், புரட்சிக்குப் பிறகு, ஈரான் 1987 இலேயே அறிவியல் ஒலிம்பியாட்களில் பங்கேற்கத் தொடங்கியது மற்றும் 2017 காலகட்டத்தில் 669 பதக்கங்களை வென்று, இந்தத் துறையில் உலகின் முதல் 10 நாடுகளில் இடம் பிடித்தது.

தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் உலக தரவரிசை

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, சொந்த முயற்சியில் அணுசக்தி, நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ராக்கெட், ஸ்டெம் செல்கள், விண்வெளி, மறுசீரமைப்பு மருந்துகள் மற்றும் மருத்துவம் போன்ற அறிவியல் துறைகளில் ஈரானின் எண்ணற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் உலகை திகைக்கச் செய்துள்ளது. அவற்றின் முறையான மேலாண்மை மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சங்களை அணுகுவது ஈரானுக்கு சாத்தியமான ஒன்றாகும்.

புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது (ஸ்கோபஸ்) மருத்துவ அறிவியல் துறையில் முன்னேற்றம் 75 மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவ அறிவியலின் இந்த முன்னேற்றம், புரட்சிக்கு முந்தைய ஆயுட்காலம் 54 வருடங்களில் இருந்து 2017 இல் 76 வருடங்களாக அதிகரித்து. இதில் ஈரான் உலகில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் ஈரானின் வேறு சில சாதனைகள் பின்வருமாறு.

·         செயற்கைக்கோள்களை ஏவுவதில் ஈரான் உலக அளவில் எட்டாவது இடத்தில் உள்ளது.

·         நானோ தொழில்நுட்பத் துறையில் உலகில் ஐந்தாவது நாடாக ஈரான் உள்ளது.

·         அணு அறிவியல் மற்றும் இயற்பியலில் ஈரான் பதினான்காவது நாடு.

·         ஸ்கோபஸின் ஆய்வுக் கட்டுரை குறியீட்டின் படி 2015 ஆம் ஆண்டில் இரசாயன பொறியியல் மற்றும் ஆற்றல் பொறியியலில் ஈரான் உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

·         Scopus இன் ஆய்வு கட்டுரை குறியீட்டின் படி, 2015 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் மற்றும் கடல் பொறியியலில் ஒன்பதாவது நாடாக ஈரான் இடம்பிடித்துள்ளது.

·         அதே ஆதாரத்தின்படி, ஈரான் 2015 இல் விண்வெளி பொறியியலில் 11 வது இடத்தைப் பிடித்தது.

·         மேலும், ஈரான் 2015 இல் தொழில்துறை பொறியியலில் உலகில் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்தது.

·         செயற்கைக்கோள் ஏவுதல் தொழில்நுட்பத்தில் உலகின் 11 நாடுகளில் ஈரானும் உள்ளது.

·         முழுமையான அணு எரிபொருள் சுழற்சியைக் கொண்ட 13 நாடுகளில் ஈரானும் ஒன்றாகும், இங்கு யுரேனியம் ஆய்வு, செறிவூட்டல், பிரித்தெடுத்தல், மஞ்சள் கேக் உற்பத்தி மற்றும் UF வாயுவாக மாற்றுதல் ஆகியவை எரிபொருள் உற்பத்தி மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

·         யுரேனியத்தை செறிவூட்டும் திறன் கொண்ட 14 நாடுகளில் ஈரானும் ஒன்று.

·         ஸ்டெம் செல்கள் துறையில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

·         2017 இல் பயோடெக்னாலஜி உற்பத்தியில் ஈரான் உலகில் 13 வது இடத்தையும், பிராந்தியத்தில் முதல் இடத்தையும் பிடித்தது.


அறிவு சார்ந்த நிறுவனங்கள்

·         புரட்சிக்குப் பிந்தைய ஈரானில் அறிவு சார்ந்த நிறுவனங்கள் தோன்றின, தற்போது அறிவு சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1150க்கும் அதிகமாக உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள்

·         நாட்டில் இந்த தொழில்நுட்ப பூங்காக்களின் எண்ணிக்கை புரட்சிக்கு முன்பு பூஜ்ஜியத்தில் இருந்து 2015 இல் 36 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமைகள்

·         1978 இல் 64 ஆக இருந்த ஈரானியர்களின் சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை 2015 இல் 13,683 ஆக, அதாவது 213 மடங்கு அதிகரித்துள்ளது.

மேம்பட்ட அறிவியல் மற்றும் உயர் தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி

·         நாட்டின் தொழில்நுட்ப நிலையின் முன்னேற்றத்தைக் குறிக்கும் உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதி, புரட்சிக்கு முன் பூஜ்ஜியத்திலிருந்து 2009 இல் 620 மில்லியன் டாலர்களை எட்டியது, இது 219 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த ஏற்றுமதிகள் மின்னணுவியல், தொலைத்தொடர்பு சாதனங்கள், கணினிகள் மற்றும் அலுவலக இயந்திரங்கள், விண்வெளி சாதனங்கள், மருந்தியல், மின் மற்றும் இரசாயன இயந்திரங்கள் மற்றும் இரயில் மற்றும் போக்குவரத்து போன்ற தொழில் துறைகளாகும்.

பிந்தைய இஸ்லாமிய புரட்சியில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்கள்

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு சுதந்திரமாகப் பெற்ற தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் உள்ளூர் சாதனைகள் மற்றும் அனுபவங்கள் சில:

பாதுகாப்பு

·         வான் பாதுகாப்பு (குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர பாதுகாப்பு அமைப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்)

·         விமானம் (போர் விமானங்கள், பல்வேறு வகையான ட்ரோன்கள் (UAVகள்), ஹெலிகாப்டர்கள் மற்றும் வான்வழி எலக்ட்ரானிக்ஸ் வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்)

·         கடல்சார் பாதுகாப்பு (பல்வேறு வகையான கப்பல்கள் மற்றும் அழிப்பான்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பறக்கும் படகுகள், வேகமான மற்றும் அதிவேக தாக்குதல் படகுகள் மற்றும் ஹோவர்கிராஃப்ட்களை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்)

·         தரை பாதுகாப்பு (பல்வேறு வகையான டாங்கிகள், இராணுவ வாகனங்கள், தனிப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் பல்வேறு வகையான இலகு மற்றும் கனரக வெடிமருந்துகளை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்)

·         ஏவுகணைகள் (பல்வேறு வகையான மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு ஏவுகணைகளை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள்)

·         எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடார் (பல்வேறு வகையான தேடல் மற்றும் கண்டறிதல் ரேடார்கள், சிறப்பு மின்னணு அமைப்புகள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக் கூறுகளை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்)

·         சைபர்ஸ்பேஸ் (சைபர்ஸ்பேஸ், சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு மேலாண்மை)

விண்வெளி அறிவியல்

·         பல்வேறு பரிமாணங்கள் மற்றும் துல்லியங்களில் பல்வேறு வகையான செயற்கைக்கோள்களை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல், விண்கலங்கள், செயற்கைக்கோள் கேரியர்கள் (சஃபிர், சிமோர்க், துல்-ஜனா), ஏவுதளங்கள், இயக்க நிலையங்கள் (நிலையான மற்றும் மொபைல்), செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு நிலையம், விண்வெளி ஆய்வகம் (ஆராய்வு ராக்கெட்டுகள்)


விமானங்கள்

·         பயணிகள் விமானங்களை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல் (ஈரான் 140, Fajr, Faez)

அணு தொழில்நுட்பம்

·         20% செழுமையுடன் முழுமையான எரிபொருள் சுழற்சி மற்றும் எரிபொருள் உற்பத்தியை அடைதல்

·         மேம்பட்ட சென்ட்ரிபியூஜ் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தல்

·         அணு உலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை வடிவமைத்து உற்பத்தி செய்தல்

·         அனைத்து வகையான கதிரியக்க மருந்துகளின் உற்பத்தி.

இந்த சாதனைகள் அனைத்தும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள மிகவும் கடுமையான பொருளாதார தடைகளின் மத்தியில் அடையப்பெற்றுள்ளன என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

http://echoofislam.itfjournals.com/article_4311.html