Iranian approach towards the Afghanistan debacle
அமெரிக்க தோல்வியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஈரானிய அணுகுமுறை
--------------------------------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தான் எங்கள் சகோதர நாடு, ஒரே மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாடு. ஆப்கானிஸ்தானின் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் அமெரிக்காவாகும். அந்த நாட்டின் 20 வருட ஆக்கிரமிப்பின் போது அனைத்து வகையான கொடுமைகளையும் அமெரிக்கா செய்தது. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் குண்டுவெடிப்பு, தனிநபர்களை சிறையில் அடைத்தல், மற்றும் போதை மருந்துகளின் உற்பத்தியை பத்து மடங்கு அதிகரித்தல் உட்பட அனைத்து அநியாயங்களையும் செய்தனர். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒரு அடி கூட முன்வைக்கவில்லை.
நாங்கள் ஆப்கான் தேசத்தை ஆதரிக்கிறோம். அரசாங்கங்கள் வரும் போகும் ஆப்கான் தேசம் என்றும் இருக்கும்.ஏனைய அரசாங்கங்களுடனான நமது உறவுகளின் தன்மை எங்களுடனான அவர்களின் உறவுகளின் தன்மையைப் பொறுத்தது.
ஆப்கானிஸ்தான் தேசத்திற்கு சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
- இமாம் கமேனி, ஆகஸ்ட் 28, 2021
---------------------------------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நடப்புகள்
பல சமூக மற்றும் அரசியல் காரணிகளை கொண்டுள்ளன.
தலிபான் போராளிகள் அல்-காய்தா
போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்
என்ற போர்வையில் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் 2001 ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன.
இந்த படையெடுப்பு தலிபான்களை அதிகாரத்திலிருந்து நீக்கியது என்றாலும் அது நாட்டின்
பாதுகாப்பு நிலையை இன்னும் இன்னும் மோசமாக்கியது.
தலிபான் போராளிகள் தங்கள் தாக்குதலை
தீவிரப்படுத்தினர் மற்றும் சமீபத்திய வாரங்களில் ஆப்கானிஸ்தான் பிரதான நகரங்களை தமது
கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் அவசர அவசரமாக வாபஸ் பெறுவது நல்ல வாய்ப்பாய் அமைந்தது. தலிபான்கள்
ஆகஸ்ட் 15 அன்று காபூலை முற்றுகையிட்டனர், அப்போதிருந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அதே தினம்
நாட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக,
காபூலின் விமான நிலையத்தில் குழப்பமும்
கொந்தளிப்பும் மற்றும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அச்சமடைந்துள்ள
ஆப்கானிஸ்தான் மக்களும் மற்றும் வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறும் விமானங்களில்
இடம்பிடிக்க முண்டியடிக்கின்றனர்.
பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கு தலிபான்களுக்கு
எதிரான பலத்த எதிர்ப்பை காட்டி வருகிறது
காபூலில் அமெரிக்க ஆதரவு பெற்ற
அரசாங்கத்தை வீழ்த்தியதன் மூலம் கடந்த வாரங்களில் தலிபான்கள் ஒர் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பு கோட்டையான பஞ்ஷிர்
பள்ளத்தாக்கு மட்டுமே தலிபான்களால் வெற்றிகொள்ள முடியாதிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் பல
பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் பிரிவுகளின் பங்கேற்புக்கும் ஈரான் அழைப்பு
விடுத்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசு அழைக்கப்படும் பட்சத்தில் பிரச்சனை தீர்வில்
உதவுவதற்கு தயாராய் உள்ளது. எனினும், எந்த அளவுக்கு அதனால் உதவ முடியும் என்பது கேள்விக்குறியே.
உதவி என்பது ஆயுதங்கள் வழங்குவது
அல்லது இராணுவ ஆலோசகர்களை அனுப்புவது என்று சிலர் தவறாக நினைக்கின்றனர்; 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று
அச்சுறுத்தியதால் தலிபான்களுக்கு எதிராக ஈரான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே; ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றும் தலிபான்கள் மீது நம்பிக்கை
அற்ற சிலர் கேட்கிறார்கள்.
பிராந்தியத்தில் ஈரான் மிகவும்
பலம்வாய்ந்த சக்தியாகவும் தாயேஷ் பயங்கரவாதிகளை அழிப்பதில் முக்கிய சக்தியாகவும் இருந்தது; அது ஈராக் மற்றும் சிரியா மக்களின் உயிர்களை காப்பதில்
அர்ப்பணிப்புடன் செயல்பட்டது ஆனால் ஆப்கான் விடயத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை?
ஈராக் மற்றும் சிரியா மக்களின்
உயிர்களை விட ஆப்கானிஸ்தான் மக்களின் உயிர்கள் குறைவான மதிப்புடையவை என்று எண்ணியதாலா?
அது ஏன் தாலிபான்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
அண்டை நாடுகளுடன் சகவாழ்வை விரும்பும்
ஈரான் நிதானம் தவறவில்லை.
ஆப்கானிஸ்தான் கொந்தளிப்பு நிலையில்
ஈரானின் அணுகுமுறை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்
மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், ஈரான் அதனை ஏற்கும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாயினும்
அவர்கள் விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் நிதானமாகவும் செயல்படும் என்றே தோன்றுகிறது.
சிரியா மற்றும் ஈராக்கில் செய்ததைப்
போல ஈரான் ஆப்கானிஸ்தானில் ஈடுபட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த நாட்டின்
சொந்த வேண்டுகோளைத் தவிர்த்து ஈரான் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய முடியாது. நாம் அவ்வாறு
செய்வோமெனில் எமக்கும் அமெரிக்காவிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
“ஈராக் மற்றும் சிரியாவில் எங்கள் இருப்பின் தன்மை, அந்த நாடுகளின் அரசாங்கங்கள் தமக்கும் எங்களுக்கும்
அச்சுறுத்தல்கள் இருப்பதைக் கண்டன, அதனால்தான் நாங்கள் அந்த அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரில் அங்கு சென்றோம்.
முடிவும் நேர்மறையாக இருந்தது, அதாவது இந்த நாடுகள் தனியாக விடப்பட்டு
இருந்தால், ஒருவேளை இந்நாடுகளின் அரசியல்
வரைபடங்கள் மீண்டும் வரையப்பட்டிருக்கக் கூடும்.
ஈராக் தொடர்பான எங்கள் நிலைப்பாடு வேறுபட்டது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசு எங்களிடம்
உதவியோ அல்லது ஒத்துழைப்போ கேட்டதில்லை. அதனால்தான்
நாங்கள் ஏனைய அண்டை நாடுகளுடன் இருப்பது போலவே ஆப்கானிஸ்தானுடனும் அதே உறவைப் பேணி
வந்தோம்,” என்று ஆப்கானிஸ்தான் மற்றும்
இத்தாலியின் முன்னாள் தூதர் அபுல்பஸ்ல் சொஹ்ரவண்ட் கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில் எந்த ஒரு
தரப்பையும் ஆதரிப்பதாக ஈரானை குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக ஆப்கானிஸ்தானில் சம்பந்தப்பட்ட
எந்த தரப்பினருக்கும் ஆயுதங்களையோ அல்லது நிதி உதவிகளையோ வழங்கவில்லை.
ஈரான் ஒருபோதும் இராணுவ ரீதியாக
எந்த நாட்டினுள்ளும் நுழையவில்லை, அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசாங்கங்கள் அல்லது அதிகாரிகளின் கோரிக்கையின்றி
ஒரு நாட்டிற்கு ஆலோசகர்களை கூட அனுப்பவில்லை, எனவே இந்த மூலோபாயத்தின் படி, எந்த நிலையிலும் அது ஆப்கானிஸ்தானுக்குள் நுழையாது.
இவ்வருடம் ஜூலை 7,
2021 அன்று, ஈரான் தலிபான்களுக்கும் அப்போதைய
ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே தெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
செய்திருந்தது.
முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர்
முகமது ஜவாத் ஸரீப், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்க
இந்த சந்திப்பை பயன்படுத்தினார். அதே நேரத்தில் தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான்
அரசாங்கத்துக்கும் இடையே மோதல்கள் தொடர்வது பாரிய பின்விளைவுகளையே உருவாக்குவதாக அமையும்
என்று எச்சரிக்கை செய்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க
இராணுவ வெளியேற்றம் ஆகஸ்ட் 31 க்குள் நிறைவு பெற வேண்டும். இதற்கிடையில், இன்றைய நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையல்ல என்பதால் ஈரானிய
கொள்கை வகுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் தொடர்பாக தங்கள் எதிர்கால அணுகுமுறை குறித்து வியூகம்
வகுத்து வருகின்றனர்.
தலிபான்களால் ஈரானிய துணைத் தூதரகம்
மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் ஈரானிய இராஜதந்திரிகள் கொல்லப்பட்டதும் அந்த நேரத்தில்
இருந்த அவர்களின் பகைமையின் வெளிப்பாடு.
இந்த சம்பவங்களுக்கு தலிபான்
பொறுப்பேற்றிருந்தது. அந்த சமயத்தில் தாலிபான்களுக்கு எதிரான தமது கடுமையான கண்டனத்தை
தெரிவித்தோமே அன்றி அந்த நாட்டிற்குள் நுழைய எண்ணவில்லை.
"ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் எங்களுக்கு நிறைய ஒற்றுமை உள்ளது.
நாம் அனைவரும் ஆசியாவில் வாழ்கிறோம். நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி நாம் முன்னேற
வேண்டும். அதனால் ஒருவருக்கொருவர் நல்ல உறவுகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகவும்.
அப்போது தான் நாம் நம் தேசங்களுக்கு
சேவை செய்ய முடியும்."
- முல்லா கைருல்லா கைர்க்வா, மூத்த தலிபான் அதிகாரி
ஹெல்மண்ட் நதி நீர் தொடர்பாக
ஆஃகானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் 100 வருடங்களுக்கு முன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்
அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்டினோம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அது உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. இது சிஸ்தான்,
பலுசிஸ்தான் மற்றும் தெற்கு கொராசன்
மாகாணங்களின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க நாம் பேச்சுவார்த்தையில்
ஈடுபட வேண்டும். பொருளாதார உறவுகள் போன்ற பிற விடயங்களும் உள்ளன. ஆப்கானிஸ்தானுடன்
3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள
நாணய பரிவர்த்தனைகள் உள்ளன. இது ஓரிரு ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் இந்த உறவு ஆப்கானிஸ்தான்
மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு மக்களுக்கு பயனளிப்பதாய் அமையும்.
ஈரான் எதிர்பார்ப்பது என்னவென்றால்
முதலில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் மற்றும் அனைத்து ஆப்கான் பிரிவுகளும்
பரஸ்பர புரிந்துணர்வை எட்டுவதன் மூலம் இந்த நிலையை அடைய அமைதியான வழிகளை நாட வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை,
காபூலை தலிபான்கள் கைப்பற்றிய
பிறகு, ஈரானின் அப்போதைய வெளியுறவு
அமைச்சர் முகமது ஜவாத் ஸரிஃப் ஆப்கானிஸ்தானில் ஒரு ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ நிறுவப்பெற்றதை வரவேற்றார், இது ஆப்கானிஸ்தான் தொடர்பான ஈரானின் முதல் பெரிய எதிர்வினையாகும்.
"இந்த 'ஒருங்கிணைப்பு கவுன்சில்’ ஆப்கானிஸ்தானில் பேச்சுவார்த்தைக்கும் மற்றும் அமைதியான மாற்றத்திற்குக்கும் வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வன்முறை போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது", என்றும் ஸரீப் குறிப்பிட்டுள்ளார்.
https://www.presstv.ir/Detail/2021/08/27/665267/Iran-Afghan-Taliban-relations-prospects
இது PressTV யில் வெளியான கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது.