Thursday, January 30, 2020

ட்ரம்பின் 'நூற்றாண்டின் தீர்வு' திட்டம் வரலாற்று குப்பை தொட்டியில் போய் சேரும்

Trump’s ‘Deal of the Century’ destined to the trash bin of history
'நூற்றாண்டின் தீர்வு' என்ற தன்னுடைய திட்டத்திற்கு ஆதரவைப் பெறுவதற்காக ஒரு பரந்த பிரச்சார இயந்திரத்தை முடுக்கிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பல மாதங்களுக்குப் பிறகு, ஏழு தசாப்தங்களாக தொடரும் இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலுக்கு இறுதி தீர்வாக பலஸ்தீனை இஸ்ரேலுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்பின் இத்திட்டம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மத்திய கிழக்கு மக்கள் கொதித்தெழுந்தனர், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடையே இது கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 'நூற்றாண்டின் துரோகம், கனவு, சதி, பேரழிவு, புதிய பால்ஃபோர் பிரகடனம், ஒரு ஆக்கிரமிப்பு திட்டம், இறந்து பிறந்த திட்டம், அதிக துன்பங்களுக்கான ஒரு கையேடு, மற்றும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கான திட்டம்' போன்ற பெயர்களை பெற்றது.
இத்திட்டத்தை இரு தரப்பினருக்கும் ஒரு வெற்றி-வெற்றி வாய்ப்பாக தனது முன்மொழிவை சந்தைப்படுத்த ட்ரம்ப் முயன்றார். ஆனால் ட்ரம்பின் கூற்றுக்கு மாறாக, அரசியல் தலைவர்களும் ஆர்வலர்களும் இதை இஸ்ரேலுக்கு ஆதரவாக பெரிதும் திசைதிருப்பப்பட்ட ஒன்றாகவும், உலகெங்கிலும் உள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணிக்கனிக்கும் திட்டமாக கருதுகின்றனர். இது, பலஸ்தீனர்கள் அவர்களின் தலைவிதியையும் அவர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு செயல்முறையிலிருந்து அவர்களை வெளியேற்றுகிறது.
நிச்சயமாக இஸ்ரேலுக்கு ஆதரவான திட்டம் இது, சமாதானத்திற்கான எந்த தீர்வையும் இது வழங்கவில்லை என்று ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர், ஏனெனில் இது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுகிறது மற்றும் பாலஸ்தீனியர்களின் அடிப்படை உரிமைகளை, குறிப்பாக ஜெருசலேம் அல்-குத்ஸ், பாலஸ்தீனியரின் இறையாண்மை,  எல்லைகள், பாலஸ்தீனிய அகதிகள் தங்கள் தாயம் திரும்பி வருவது, பாதுகாப்பு பொறுப்பு, அத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் போன்ற பல முக்கிய விஷயங்களில் பாலஸ்தீனியரின் உரிமையை இல்லாதொழிக்கிறது.
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்தை  பலஸ்தீன மக்களுக்கு எதிரான, அவர்களது உரிமைகளை பறிக்கும் ஒரு "சதி" என்று கடுமையாக நிராகரித்தார். 'அமைதிக்கான பார்வை' என்று அழைக்கப்படும் இதனை அனைத்து பாலஸ்தீனிய குழுக்களும் ஒருமனதாக நிராகரித்துள்ளன.
கடந்த செவ்வாய் (28/01/2020) அன்று வாஷிங்டனில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வின் போது டிரம்ப் தனது முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டார்.
இதில் எத்தனையோ சர்ச்சைக்குரிய சொற்கள் அடங்கியுள்ளன. அவற்றில்  ஜெருசலேம் அல்-குத்ஸை "இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகரம்" என்று கூறப்படுகிறது; ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜோர்டான் பள்ளத்தாக்கு இறையாண்மையை இஸ்ரேலுக்கு வழங்குவதோடு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளன.
டிரம்பின் சாத்தானிய திட்டம் நிறைவேறாது - ஈரானின் தலைவர்
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி காமனேயி  தனது ட்விட்டர் செய்தியில் ட்ரம்பின் திட்டம் தொடர்பாக ஜூலை 2018 இல் தான் வெளியிட்ட கருத்துக்களை மீண்டும் பதிவுசெய்தார்.
அந்த நேரத்தில் அயதுல்லாஹ் காமனேயி, "பாலஸ்தீனத்தை தொடர்பான அமெரிக்காவின் சாத்தானிய மற்றும் தீங்கிழைக்கும் கொள்கைகள் அடங்கிய 'நூற்றாண்டின் தீர்வு' என்று அழைக்கப்படுகின்றன சதி, அல்லாஹ்வின் கிருபையால் ஒருபோதும் செயல்படாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க அரசியல்வாதிகள் ஜெருசலேம் அல்-குத்ஸ் யூதர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் அது ஒரு முட்டாள்தனம்என்று தலைவர் கூறினார்.
"பாலஸ்தீன பிரச்சினை ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது," என்று அவர் கூறினார். "பாலஸ்தீனிய தேசமும் அனைத்து முஸ்லிம் நாடுகளும் நிச்சயமாக அவர்களது சூழ்ச்சிக்கு எதிராக எழுந்து நின்று 'நூற்றாண்டின் தீர்வு' என்ற சதி நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும்," என்றார்.


ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஒரு ட்விட்டர் செய்தியில் டிரம்பின்னால் முன்மொழியப்பட்ட நூற்றாண்டின் தீர்வு’, “மிகவும் இழிவான, அருவருப்பூட்டும், வெறுக்கத்தக்க திட்டம்என்று குறிப்பிட்டார். இந்த முட்டாள்தனமான முயற்சி இனியும் வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி "பாலஸ்தீனிய பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. சாசனம், அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஆகியவற்றின் அனைத்து சர்வதேச தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை இந்த திட்டம் மீறுகிறது,” என்று குறிப்பிட்டார். அமெரிக்க - சியோனிச கூட்டுச் சதியை முறியடிக்க முஸ்லிம் நாடுகள் இணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்தார்.

இது இஸ்ரேலிய மீறல்களை அதிகப்படுத்தும் சட்டவிரோத ஒப்பந்தம் - சர்வதேச மன்னிப்பு சபை
அம்னஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச மன்னிப்பு சபை  அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த தீர்வு திட்டமானது  ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் "அதிக துன்பங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான கையேடு" என்று விமர்சித்துள்ளது. சர்வதேச சட்டத்திற்கு முரணான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிராகரிக்க உலகளாவிய சமூகத்தை அது வலியுறுத்துகிறது.

"டிரம்ப் நிர்வாகம் தனது ஒப்பந்தத்தில் நில பரிமாற்றக் கொள்கையை வலியுறுத்தியுள்ள நிலையில், பாலஸ்தீனிய பிரதேசத்தை மேலும் இஸ்ரேலுடன் இணைக்க முன்மொழிகிறது என்ற புரிதலில் எந்த தவறும் செய்யக்கூடாது. இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அப்பட்டமாக மீறும் திட்டமாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலான ஆக்கிரமிப்பின் போது, இஸ்ரேல் தனது ஆட்சியின் கீழ் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடு காண்பிக்கும் முறையை கடைப்பிடித்து வந்துள்ளது, அவர்களது அடிப்படை உரிமைகளை மறுத்து, மீறல்களுக்கு பயனுள்ள தீர்வுகளை அணுகுவதையும் மறுத்து வந்துள்ளது. மிருகத்தனமான இந்த திட்டம், சட்டவிரோத கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகும்என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் பிலிப் லூதர் கூறினார்.
பாலஸ்தீனிய அகதிகளுக்கு தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கான உரிமையை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஒரு "இழப்பீட்டு பொறிமுறையை" முன்வைப்பதற்கான ஒரு திட்டமே இதுவாகும் என்று அவர் கடிந்துரைத்தார்.
"மில்லியன் கணக்கான பாலஸ்தீனிய அகதிகள் நெரிசலான முகாம்களில் சிக்கியுள்ளனர், 70 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள், அவர்களது பெற்றோர்களை விட்டும் தங்கள் வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டனர். இந்த திட்டம் சர்வதேச சட்டத்தின் கீழ் அகதிகளின் உரிமைகளையும் அவர்கள் தாங்கிய பல தசாப்த கால துன்பங்களையும் புறக்கணிக்கிறது,” என்றும் லூதர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "பாலஸ்தீனிய பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் குறித்து முழு விசாரணையைத் தொடங்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) கடந்த மாதம் எடுத்த தீர்மானத்தின் பின்னர், சர்வதேச நீதியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த இந்த அமெரிக்கத் திட்டம் மூலம் முயல்கிறது" என்று கூறினார்.
"ஒரு நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கு பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு திட்டம் தேவைப்படுகிறது, மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த திட்டமானது இந்த அடிப்படையை தோல்வியடையச் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் இது தற்போது நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் நீதியை நோக்கிய முயற்சிகளை தவிடுபொடியாக்க நாடுகிறதுஎன்றும் அவர் கூறினார்.

மத்தியகிழக்கு அமைதிக்கான இந்த தீர்வுத்திட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் - துருக்கி
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்தோகான் அமெரிக்காவினால்  முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தை "முற்றுமுழுதாகவே ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளார்.
"ஜெருசலேம் [அல்-குத்ஸ்] முஸ்லிம்களுக்கு புனிதமானது. ஜெருசலேமை இஸ்ரேலுக்குக் கொடுக்கும் திட்டத்தை ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த திட்டம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளை புறக்கணிக்கிறது மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுஎன்று எர்தோகான் தெரிவித்ததாக சி.என்.என் துர்க் தெரிவித்தது.
துருக்கிய வெளியுறவு அமைச்சு "அமெரிக்க முன்மொழிவு "உயிரற்று பிறந்துள்ளது" என்றும் பாலஸ்தீனத்தின் மக்களும் நிலமும் விற்பனைக்கு உரிய பொருட்கள் அல்ல என்றும் கூறியுள்ளது.
"இது பாலஸ்தீனிய நிலங்களை அபகரிப்பது மற்றும் 'இரண்டு தேசங்கள்' என்ற தீர்வை செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒர் ஆக்கிரமிப்பு திட்டமாகும்" என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் அல்-குட்ஸ் துருக்கியின் பார்வையில் ஒரு சிவப்புக் கோடு என்றும், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் துன்புறுத்தலை நியாயப்படுத்த அந்த நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
"நாங்கள் எப்போதும் பாலஸ்தீனத்தின் சகோதர மக்களுடன் நிற்போம். ஒரு சுயாதீன பாலஸ்தீனத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அது கூறியது, பாலஸ்தீன அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்தவொரு திட்டத்தையும் அங்காரா ஆதரிக்காது என்றும், ஆக்கிரமிப்புக்கு முடிவு இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி நிலவாது என்றும் அது தெரிவித்தது.

1967 திட்டத்துக்கு அப்பால் எந்த அமைதியும் பாலஸ்தீனத்திற்கு இல்லை - கத்தார்
1967 எல்லைகளின் அடிப்படையில் தங்கள் சொந்த இறையாண்மையை நிலைநாட்ட உதவுவதன் மூலம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் அமைதியை அடைய முடியாது என்றும் கட்டாரி வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியது.
அமெரிக்க முயற்சிகள் சர்வதேச சட்டபூர்வமான கட்டமைப்பிற்குள் மோதலுக்கு தீர்வு காணும் நோக்கில் இருக்கும் வரை டோஹா பாராட்டியதாக அமைச்சகம் கூறியது.
1967 இல் ஆறு நாள் போரின்போது இஸ்ரேல் மேற்குக் கரையையும் கிழக்கு ஜெருசலேம் அல்-குத்ஸையும் ஆக்கிரமித்தது. பின்னர் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு தன்னிச்சையான நடவடிக்கையில் நகரத்தை இணைத்தது.
1967 எல்லைகளின் அடிப்படையில் 'இரு தேசங்கள்' தீர்வு திட்டத்துக்கு உட்பட்டு, கிழக்கு ஜெருசலேம் அல்-குத்ஸுடன் தங்கள் பாலஸ்தீன தலைநகராக அறிவிக்கப்படுவதன் மூலம் இஸ்ரேலுடனான மோதலை தீர்க்க வேண்டும் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜோர்டான் 1967 எல்லைகளின் அடிப்படையில் சுயாதீனமான பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறது
ஜோர்டானிய வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாடி 1967 ஆம் ஆண்டு எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட, கிழக்கு ஜெருசலேம் அல்-குத்ஸுடன் அதன் தலைநகராக ஒரு சுயாதீன பாலஸ்தீனிய அரசுக்கு தனது நாட்டின் ஆதரவை உறுதிப்படுத்தினார். "பாலஸ்தீனிய நிலங்களை அபகரித்தல்" மற்றும் "ஒருதலைப்பட்ச இஸ்ரேலிய நடவடிக்கைகளின் ஆபத்தான விளைவுகள்" ஆகியவற்றிற்கு எதிராகவும் அவர் எச்சரித்தார், இது புதிய புதியதொரு பிரச்சினையை திணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
"மக்கள் ஏற்றுக்கொள்ளும் நியாயமான மற்றும் விரிவான அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒவ்வொரு உண்மையான முயற்சியையும் ஜோர்டான் ஆதரிக்கிறது," என்று அவர் கூறினார்.
இரு தேசங்கள் என்ற முயற்சியை ஐ.நா ஆதரிக்கிறது
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், 1967 க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் இரண்டு தேசங்களை உலக அமைப்பு ஆதரிக்கிறது என்றார்.
"ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள், சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையில் மோதலைத் தீர்ப்பதற்கு பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் ஆதரவளிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளது மற்றும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தேசங்கள் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. 1967 க்கு முந்தைய எல்லைகளை மதித்து பாதுகாப்பையும் அமைதியையும் அடையக்கூடிய முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்கிறது," என்று குடெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஐ.நா தலைவரை மேற்கோள் காட்டி கூறினார்.

அமெரிக்க ஒப்பந்தம் முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்தியது - ஈராக்கின் ஆயத்துல்லாஹ் சிஸ்தானி:
ஈராக்கின் மிக முக்கியமான சன்மார்க்கத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி அல்-சிஸ்தானியின் அவர்களினால் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒர் அறிக்கையில், அமெரிக்கா வகுத்த ஒப்பந்தத்தை கடுமையாக கண்டனம் செய்திருந்தார், இது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை கடுமையாக பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வாக்குமிக்க ஈராக்கிய தலைவர் முக்தாதா அல் சதர், ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, “குத்ஸ் அனைத்து மதங்களுக்கும், பாலஸ்தீனத்திற்கும் மற்றும் சுதந்திரம் நாடும் அனைவருக்கும் சொந்தமானதுஎன்றார்.
ட்டத்தின் முதல் வாசிப்பு பாலஸ்தீனிய உரிமைகளை வீணாக்குவதைக் காட்டுகிறது - அரபு லீக்
ட்ரம்பின் முன்மொழிவை முதன்முதலில் படித்தபோது அது  பாலஸ்தீனியர்களின் நியாயமான உரிமைகள் பெருமளவில் பறிக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது என்று அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபோல் கெய்ட் புதன்கிழமை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 22 உறுப்பினர்களைக் கொண்ட அரபு அமைப்பு "அமெரிக்க நோக்கத்தை கவனமாக ஆய்வு செய்து வருகிறது", சமாதானத்தை அடைய எடுக்கப்படும் எந்தவொரு தீவிர முயற்சிக்கும் ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
மத்திய கிழக்கு அமைதி திட்டம் என்று அழைக்கப்படுவது குறித்து ஆராய அரபு லீக் சனிக்கிழமை அவசர கூட்டத்தை கூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்காவின் அமைதி முயற்சிகளைவரவேற்கின்றன
இத்திட்டத்தை மத்திய கிழக்கில் சமாதானத்தை நிலைநாட்டும் அமெரிக்காவின் முயற்சி என்று சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரவேற்றுள்ளன, ஆனால் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்த சர்ச்சைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை அவ்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியது.
"பாலஸ்தீனிய பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் விரிவான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளையும் இராச்சியம் ஆதரிக்கிறது" என்று சவுதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய தரப்பினரிடையே ஒரு விரிவான சமாதான திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தின் முயற்சிகளை இராச்சியம் பாராட்டுகிறது, மேலும் அமெரிக்காவின் அனுசரணையில் நேரடி அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்க இது ஊக்குவிக்கிறது" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எகிப்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில்
"பாலஸ்தீனிய பிரச்சினையின் விரிவான மற்றும் நியாயமான தீர்வை அடைய அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் இது" என்று அமைச்சகம் பாராட்டியது.
"பாலஸ்தீனிய பிரச்சினைக்கான தீர்வை அடையும் கண்ணோட்டத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் முன்முயற்சியைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தை எகிப்து அங்கீகரிக்கிறது, இதனால் சர்வதேச நியாயத்தன்மை மற்றும் தீர்மானங்களுக்கு இணங்க, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் ஒரு இறையாண்மை கொண்ட சுயாதீன அரசை நிறுவுவதன் மூலம் பாலஸ்தீனிய மக்களுக்கு அவர்களின் நியாயமான உரிமைகளை மீட்டெடுக்கிறது”, என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.

டிரம்ப் திட்டம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வாய்பை ஏற்படுத்தியுள்ளது  - ஐரோப்பிய ஒன்றியம்
ட்ரம்பின் முன்மொழிவுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலுக்கான ஒரு சாத்தியமான தீர்வைநோக்கிய புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பொன்றாக ஐரோப்பிய ஒன்றியம் விவரித்துள்ளது. இந்த முயற்சி "இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மற்றும் சாத்தியமான தீர்வை நோக்கி அவசரமாக தேவையான முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், ஒன்றியத்தின் சார்பில் கூறினார்.


Monday, January 20, 2020

ஈரான் குறுகிய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், எதிரிகள் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்துவதற்கு கூட துணிய மாட்டார்கள் - ஆயத்துல்லாஹ் காமனெய்


Iran will become more powerful in the short term, enemies will not even dare to threaten Islamic Republic - Leader-Khamenei-Friday-prayers
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் சையத் அலி காமெனெய் தனது குத்பா உரையில், ஓர் ஈரானிய தளபதியின் படுகொலை அமெரிக்காவை இழிவுபடுத்தியுள்ளது, ஏனெனில் அது "பயங்கரவாத" நடவடிக்கைக்கு சொந்தமான நாடு, இப்போது ஈரானின் பதிலடி காரணமாக அது அவமானமடைந்துள்ளது.
"இஸ்லாமிய புரட்சி காவல்படையின் ஏவுகணைகள் அமெரிக்க தளத்தை நொறுக்கிய நாள் இறைவனின் நாட்களில் ஒன்றாகும். புரட்சி காவலர்களின் பதிலடி, அமெரிக்காவின் வல்லரசின் விகாரமான உருவத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் அடியாகும்" என்று தலைவர் தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை (17/01/2020) ஜும்மாவுக்காக ஒன்றுகூடிய பெரும்திரளான மக்கள் கூட்டத்திடம் தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி கிராண்ட் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஆயத்துல்லாஹ் காமனேய் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெனரல் கஸ்ஸெம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஈராக்கில் இரண்டு அமெரிக்க தளங்களை தனது ஏவுகணைககளை கொண்டு  தாக்கிய பின்னர் இடம்பெறும் இமாம் காமனேயின் பகிரங்க உரையாகும்.
கடந்த இரண்டு வாரங்கள் கசப்பான மற்றும் இனிமையான சாகசங்கள் கொண்டதாகும். இவை  ஈரானிய மக்களுக்கு படிப்பினைகளைக் கொண்ட நிகழ்வுகளால் ஆன, அசாதாரண வாரங்கள் என்று தலைவர் விவரித்தார்.
"இறைவனின் நாள் என்பது நிகழ்வுகளில் இறைவனின் பலத்தை காண்பது - ஈரானிலும் ஈராக்கிலும் மற்றும் சில நாடுககளிலும் மில்லியன் கணக்கான மக்கள் குத்ஸ் படை தளபதியின் இரத்தத்தை கௌரவிக்க வீதிக்கு வந்த நாள்," என்றும் இமாம் சொன்னார்கள்.
"இஸ்லாமிய புரட்சி காவல் படையினரின் ஏவுகணைகள் அமெரிக்க தளத்தைத் தாக்கிய நாள், இறைவனுக்குரிய மற்றொரு நாளாகும். இறைவனின் இந்த இரண்டு நாட்களையும் நம் கண் முன்னே பார்த்தோம். நாட்கள் வரலாற்றை உருவாக்கும் ஒரு திருப்புமுனையாகும். ஆகவே இந்த நாட்கள் சாதாரண நாட்கள் அல்ல" என்று அவர் விபரித்தார்.
"உலகின் திமிர்பிடித்த மற்றும் கொடுமை இழைத்து வரும் ஒரு சக்திக்கு கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு பதிலடியை கொடுக்கும் தைரியத்தையும் பலத்தையும் எமக்கு கிடைக்கச் செய்தது நிச்சயமாக இறைவனின் அருளாகும்," என்று ஆயதுல்லாஹ் காமெனெய் மேலும் கூறினார்.
அண்மைய சம்பவங்கள், தேசங்களின் உறுதியிலும் மனநிலையிலும் ஒரு நித்திய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை ஈரானிய மக்கள் "பொறுமை, எதிர்ப்பு மற்றும் நன்றி மறவா தன்மை" போன்றவற்றை கொண்டுள்ளதாக தலைவர் கூறினார்.
மேலும் அவர் "சியோனிச செய்தி சாம்ராஜ்யமும் அமெரிக்க ஆட்சியின் பயங்கரவாத அதிகாரிகளும் எங்கள் அன்புக்குரிய மற்றும் சிறந்த பயங்கரவாத ஒழிப்பு தளபதியைக் குற்றம் சாட்ட தங்களால் முடிந்த அத்தனை முயற்சியைச் செய்தார்கள், ஆனால் சர்வவல்லமையுள்ள இறைவன் காட்சியை மாற்றியமைத்தான். இதனால் ஈரானில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தது மட்டுமல்லாமல் அமெரிக்க மற்றும் சியோனிச கொடிகளை எரித்து, அவர்கள் மீதான தமது விரோதத்தை வெளிப்படுத்தினர்" என்று கூறினார்.
ஜெனரல் சுலைமானி மற்றும் அவரது தோழர்களுக்காக நடத்தப்பட்ட பாரிய இறுதி ஊர்வலங்கள் மற்றும் அவர்களின் உயிர் தியாகங்கள் "தெய்வீக அடையாளங்களில் உள்ளவை" என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
ஏனென்றால், "முழு பிராந்தியத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த தளபதியாக இருந்த ஜெனரல் சுலைமானியின் படுகொலை, அவமதிக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் அவமானத்திற்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார்.
"இந்த வீரம் நிறைந்த தியாகியை அமெரிக்கர்களினால் போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியவில்லை, அதனால் தான் அவரை திருட்டுத்தனமாகவும் கோழைத்தனமாகவும் படுகொலை செய்தார்கள். இது  அமெரிக்காவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது," என்று தலைவர் மேலும் கூறினார்.
இத்தகைய படுகொலைகள் கடந்த காலங்களில் சியோனிச ஆட்சிக்கு மிகவும் பொதுவானவை என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் குறிப்பிட்டார்.
"நிச்சயமாக, அமெரிக்கர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான அநியாயங்களையும் கொலைகளையும் செய்திருக்கிறார்கள், ஆனால் இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி 'நாங்கள் பயங்கரவாதிகள்' என்று தனது சொந்த வார்த்தைகளில் ஒப்புக்கொண்டார். இதை விட பெரிய அவமானம் அவர்களுக்கு எதுவும் இல்லை என்று தலைவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோரின் தொடர்ச்சியான ட்வீட்களைக் குறிப்பிட்டு, ஈரானிய மக்களுடன் நிற்கின்றோம் என்று கூறும் அவர்கள் "மிகவும் மோசமான அமெரிக்க கோமாளிகள்" என்பதையும் ஆயதுல்லாஹ் காமனேய் குறிப்பிட்டர்.
"நாட்டின் புகழ்பெற்ற தளபதியின் உருவத்தை அவமதித்தது ஈரானிய மக்களின் சில நூறு பேர் கொண்ட சிறு குழுவாகும், ஆனால் ஹஜ் கஸ்ஸெமை கௌரவித்ததோ எண்ணற்ற பாரிய கூட்டம்" என்று தலைவர் கூறினார்.
உக்ரேனிய பயணிகள் விமானம் தவறுதலாக வீழ்த்தப்பட்டதற்கு எதிராக தெஹ்ரான் நகரத்தில் சில நூறு பேர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஆயத்துல்லாஹ் காமனெய் குறிப்பிடுகிறார், இதன் போது ஜெனரல் சுலைமானியின் சுவரொட்டிகள் சில கிழிக்கப்பட்டன.
"அமெரிக்கர்கள் ஈரானிய மக்களுடன் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருந்தால், இந்த தேசத்தின் இதயத்தில் ஒரு விஷக் கத்தியை சொருகுவதே  அதன் பொருளாகும். நிச்சயமாக, அவர்களால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை, இனிமேலும் எதுவும் செய்ய இயலாது" என்று அவர் கூறினார்.

சோகமான நிகழ்வு
தெஹ்ரானுக்கு அருகே ஒர் உக்ரேனிய விமானம் தவறுதலாக வீழ்த்தப்பட்ட  "கசப்பான" சோக நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். பல உயிர்கள் பலியாக காரணமான இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 இந்த சம்பவத்தில் தெளிவற்ற தன்மைகள் சூழ்ந்து உள்ளன. விளக்கங்களை வழங்கிய ஐ.ஆர்.ஜி.சி தளபதிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஆனால் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரப்பட வேண்டும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆயத்துல்லாஹ் காமனெய் மேலும் கூறுகையில், “விமான விபத்தால் நாங்கள் துக்கப்படுகையில், நாம் மனமுடைந்து இருக்கையில், எங்கள் எதிரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை ஐ.ஆர்.ஜி.சி, மற்றும் இஸ்லாமிய குடியரசை கேள்விக்குட்படுத்துவதற்கு கிடைத்த ஒரு சாக்காக அவர்கள் கருதுகின்றனர்".
எதிரியின் குறிக்கோள், "அந்த மாபெரும் சம்பவங்களை" (ஜெனரல் சுலைமானிக்கு நடத்தப்பட்ட இறுதிச் சடங்குகள் மற்றும் அமெரிக்க தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சியின் ஏவுகணைத் தாக்குதல்கள்) மறைப்பதாகும், ஆனால் "அது தவறான எண்ணம்" என்று அவர் கூறினார்.
விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலைவர் அனுதாபம் தெரிவித்தார்.
"அவர்களின் துக்கத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம், அவர்களுடைய இதயங்கள் வேதனையும் துக்கமும் நிறைந்திருந்தாலும் கூட, எதிரிகளின் சதி மற்றும் சோதனையை எதிர்த்து நின்று, எதிரிகளின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்ட பெற்றோர்களுக்கும், துயரமடைந்த குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம், " என்று அவர் கூறினார்.
 இந்த விமான விபத்தில் உயிரிழந்த இந்த அன்பானவர்களில் ஒருவரின் தாய் எனக்கு கடிதம் எழுதி, ‘நாங்கள் இஸ்லாமிய குடியரசிற்கும் உங்கள் முயற்சிகளுக்கும் ஆதரவாக நிற்கிறோம்என்று எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு தைரியம், நுண்ணறிவு மற்றும் விழிப்புணர்வு தேவை, ”என்று அவர் மேலும் கூறினார்.

மூன்று ஐரோப்பிய நாடுகளின் நகர்வு
ஈரான் மீது ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையை அமெரிக்க அழுத்தத்தின் கீழ் தொடங்கியதாக இந்த வாரம் ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு தலைவர்களையும் தலைவர் சாடினார்.
"இங்கிலாந்து, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசாங்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகள் எமது நாட்டின் முன்னேற்றங்களை மறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அணுசக்தி பிரச்சினையை மீண்டும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்வதாக அவர்கள் ஈரானை அச்சுறுத்தினர், அதற்கு அதிர்ஷ்டவசமாக ஈரானிய அதிகாரிகள் கடுமையாக பதிலளித்தனர்,” என்று அவர் கூறினார்.
"இந்த மூன்று நாடுகள்தான் திணிக்கப்பட்ட போரின் போது சதாம் ஹுசைனுக்கு தங்களால் இயன்ற அளவு உதவியது. எங்கள் நகரங்களையும் போர் முனைகளையும் குறிவைப்பதற்கு ஜெர்மன் அரசாங்கம் சதாம் உசேனுக்கு ரசாயன ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கியது. அந்த தாக்குதல்களின் தாக்கங்கள் எங்கள் வீரர்களின் உடல்களில் இன்னும் தெளிவாக உள்ளன,” என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
பிரெஞ்சு அரசாங்கம் முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரிக்கு சூப்பர் எண்டார்ட் ஸ்ட்ரைக் போர் விமானங்களை வழங்கியது, அவை 1980 களில் யுத்தம் திணிக்கப்பட்ட காலத்தில் ஈரானிய எண்ணெய் தாங்கிகளை குறிவைக்க பயன்படுத்தப்பட்டன என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.
"இதுதான் அவர்களது சரித்திரம். இங்கிலாந்து அரசாங்கமும் ஈரானுக்கு எதிரான சதாம் ஹுசைனின் யுத்தத்தில் உதவியது", என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
 இவைதான் அவற்றின் பின்னணி, அவை இன்றும் அதே வழியிலேயே செயல்படுகின்றன. இந்த அடிப்படையிலேயே அவர்கள் கணிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
விரிவான கூட்டு செயல்திட்டத்திலிருந்து (ஜே.சி.பி.ஓ.ஏ) அமெரிக்கா விலகிய பின்னர், இந்த மூன்று ஐரோப்பிய அரசாங்கங்களும் "சும்மா பேசிக் கொண்டே இருந்தன, முட்டாள்தனமான கருத்துக்களைத் தெரிவித்தன."  இந்த மூன்று அரசாங்கங்களையும் நான் நம்பவில்லை என்று முதல் நாளிலிருந்தே சொன்னேன். அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு சேவகம் புரிவோர் என்றும் சொன்னேன். இப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவை உண்மையில் அமெரிக்காவுக்கு தம்மை அடகு வைத்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது."
" உங்களுக்கெல்லாம் அப்பனான, முன்னோடியாக மற்றும் எஜமானராக இருந்த அமெரிக்காவினால் கூட ஈரானிய தேசத்தை முழங்காலிட செய்வதற்கு முடியவில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதனுடன் ஒப்பிடுகையில் ஈரான் தேசத்தை முழங்காலிடச் செய்வதற்கு இவர்கள் அட்பமானவர்கள்என்று அவர் கூறினார்.
ஐரோப்பியர்கள் பேச்சுவார்த்தைக்கு அமரும்போது கூட, அவர்களின் பேச்சுவார்த்தை வஞ்சகம் மற்றும் தந்திரங்களுடன் கலக்கப்படுவதாக தலைவர் கூறினார்.
 பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருப்பவர்கள் இவர்கள் தான்; பாக்தாத் விமான நிலையத்தில் [ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்தவர்கள்] கோழைத்தனமாக கொன்ற பயங்கரவாதிகளும் இவர்கள்தான்.
"அவர்கள் ஒரே மாதிரியானவர்கள், வேறுபட்டவர்கள் அல்ல. அவர்கள் தேவைக்கேற்ப தமது ஆடைகளை மாற்றிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான். உள்ளிருந்து புறமொன்று பேசுபவர்கள்.... எம்மால் அவர்களை ஒருபோதும் நம்ப முடியாது," என்று அவர் கூறினார்.

எமது தேசம் பலப்படுத்தப்பட வேண்டும்
ஈரானிய தேசம் இன்னுமின்னும் பலமடைய வேண்டும் என்று அயதுல்லா கமேனி மேலும் கூறினார்.
"ஈரானிய தேசம் முன்னேற ஒரே வழி வலுவாக இருப்பதுதான். நாம் மென்மேலும் பலமடைய முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை - நிச்சயமாக அமெரிக்காவுடன் அல்ல, மற்றவர்களுடன், ”என்று அவர் கூறினார்.
ஈரான் ஏற்கனவே வலுவானது தான், எதிர்காலத்தில் இன்னும் அது சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று தலைவர் கூறினார்.
பலமடைதல் என்பது இராணுவ வலிமை மட்டுமல்ல. நாட்டின் பொருளாதாரமும் பலப்படுத்தப்பட வேண்டும். எண்ணெயை நம்பியிருப்பது முடிவுக்கு வர வேண்டும்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் எமது பாய்ச்சல் வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
ஈரானிய தேசம் குறுகிய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், எதிரிகள் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்துவதற்கு கூட துணிய மாட்டார்கள் என்று ஆயத்துல்லாஹ் காமனெய் கூறினார்.

'அரபு சகோதரர்களுக்கு' ஒரு செய்தி
தனது உரையின் இறுதியில், தலைவர் "எங்கள் அரபு சகோதரர்களுக்கு சில வார்த்தைகளை கூறிக்கொள்ள  விரும்புகிறேன்" என்று தனது உரையை அரபு மொழியில் வழங்கத் தொடங்கினார்.
ஜெனரல் சுலைமானி மற்றும் ஈராக்கின் பிரபலமான அணிதிரட்டல் பிரிவுகளின் (பி.எம்.யூ) இரண்டாவது தளபதியாக இருந்த மஹ்தி அல்-முஹண்டிஸ் ஆகியோரின் படுகொலை "கோழைத்தனமானது" என்று குறிப்பிட்டார்.
"அமெரிக்கர்கள், போர்க்களத்தில் ஜெனரல் சுலைமானியை எதிர்கொள்ளத் துணியவில்லை என்பதாலேயே பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவருடன் வந்தவர்களுடன் அவரை படுகொலை செய்ய கோழைத்தனமான வழியை தேர்ந்தெடுத்தனர்," என்று அவர் கூறினார்.
"மீண்டும் ஒரு முறை, ஈராக்கிய மற்றும் ஈரானிய இரத்தம் ஒன்றாகக் கலந்தன," என்று அவர் கூறினார், ஜெனரல் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவுகளை விதைக்க வெளிநாட்டு திட்டங்கள் தோல்வியடைந்தன.
"ஈரானில் ஈராக் தேசத்திற்கு எதிராகவும், ஈராக்கில் ஈரானிய தேசத்திற்கு எதிராகவும் தீங்கிழைக்கும் உணர்வை ஊக்குவிக்க, பொறுப்பற்ற மக்கள் பயன்படுத்தப்பட்டனர்."
வாஷிங்டனின் குறிக்கோள் ஈராக்கில் ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்டுவதும், இறுதியில் நாட்டை பிளவுபடுத்துவதும், அதன் எதிர்ப்பு சக்திகளை ஒழிப்பதும் ஆகும் என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் அந்நிய சக்திகளினால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் திட்டமிடப்பட்ட ஒன்று. அத்திட்டத்தின் ஒரு பகுதி ஈராக்கையும் குறிவைத்துள்ளது என்று அவர் கூறினார்.
அஞ்சாமல் எதிரிகளுக்கு முகம்கொடுப்பது மட்டுமே இந்த நாடுகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் "ஒரே பாதை" என்று தலைவர் கூறினார்.

Monday, January 13, 2020

அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் அமேரிக்கா திரும்புவர் - நஸ்ரல்லா


Dramatic Images Show Scale of Damage to U.S. Bases -  Media

U.S. Troops to Return in Coffins If Not Withdrawn - Nasrallah



பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் விழுந்தும், அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஒரு அதிசயம்…!



ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க வான்படை தளங்கள் ஈரானின் ஏவுகணை வீச்சுக்கும் இலக்காகிய பின்னர், அத்தலங்கள் சேதமுற்று இருப்பதை வெளிக்காட்டும் படங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. 

அந்த தளங்கள் தாக்கப்படவுள்ளதாக சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன் கிடைத்த ஐரோப்பிய நாடொன்றின் ரகசிய தகவலை அடுத்து, அங்கிருந்த படையணிகளில் அநேகர் வெளியேற்றப்பட்டனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'டெயிலி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் 16 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக பென்டகன் தெரிவித்துள்ளது, அவற்றில் குறைந்தது 11 ஈராக்கின் அல்-ஆசாத் விமானத் தளத்தையும், எர்பில் ஒரு தளத்தையும் தாக்கியது, ஆனால் பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று பென்டகன் தெரிவித்தது.

சி.என்.என் படி, ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. அமெரிக்க வீரர்கள் குவிந்துள்ள இடம் தான் இலக்கு வைக்கப்பட்ட தளத்தின் ஒரே பகுதி. ஏவுகணைகள் பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் விழுந்தும், அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஒரு அதிசயம் என்று நிபுணர்கள் சி.என்.என்-க்கு கூறினர்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஈரான் 'வீழ்த்தப்பட்டது' என்று கூறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி கூறிய கருத்துக்களுக்கு இந்த வெளிப்பாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.

அமெரிக்க வீரர்கள் அல்-அசாத் தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் இரவு 11 மணியளவில் வெளியேற்றப்பட்டதாகவும் ஏனையோர் பதுங்கு குழிகளில் இருந்ததாகவும் அதிகாரிகள் சி.என்.என். க்கு தெரிவித்தனர். புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஈரானிய ஏவுகணைகள் தளங்களை பதம்பார்த்தன.


ஏவுகணைகள் பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் தரையிறங்கின, இவ்வளவு துல்லியமாக இலக்குவைக்கப்பட்டது ஓர் "ஆச்சரியம்" என்று நிபுணர்கள் சி.என்.என்-க்கு கூறினர்.

லண்டனை தளமாகக் கொண்ட அல் மாயதீன் தொலைக்காட்சி சேனலும் பல ஈரானிய மற்றும் ஈராக் அரசியல்வாதிகளும் இந்த தாக்குதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர். மேலும் காயப்பட்ட அவர்களில் சிலர் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கும்  மற்றவர்கள் பாக்தாத்தில் உள்ள ஒரு அமெரிக்க மருத்துவமனைக்கும் ஜோர்டானுக்கும் மாற்றப்பட்டனர், என்றும் தெரிவித்தனர்.

ஈரானிய அதிகாரிகள் கூறுகையில், அந்த நாடு 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, அவற்றில் குறைந்தது 11 ஈராக்கின் அல்-ஆசாத் விமானத் தளத்தையும், மீதமுள்ளவை எர்பில் இராணுவ தளத்தையும் தாக்கியுள்ளன.

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக ஓர் ஐரோப்பிய தூதரகம் எங்களுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.


அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருக்கும் இரண்டு விமானத் தளங்களில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரானியர்கள் தயாராக இருந்தனர், அமெரிக்க உளவுத்துறை மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் திட்டங்களைக் கண்டறியக் கூடியவாறு ஈரான், வேண்டுமென்றே தாக்குதலை உறுதிசெய்துள்ளது, அதிகாரிகள் டைம் பத்திரிகைக்குத் தெரிவித்தனர்.

ஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி கூறுகையில், ஈரான் தனக்கு ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னதாக ஒரு சமிக்ஞையைக் வழங்கியிருந்தது. ஆனால் தாக்கப்பட்டும் இடங்கள் பற்றி ஈரான் தனக்கு அறிவித்தல் வழங்கவில்லை, ஆனால் அவை அமெரிக்கப் படைகள் இருக்கும் இடங்களை மட்டுமே குறிவைப்பார்கள் என்பதை அறிந்துகொண்டேன். அந்த செய்தியை குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம், துருப்புக்களுக்கு பதுங்கு குழிகளில் தங்குமிடம் பெற அவகாசம் அளிக்கவும் முடிந்தது, என்று கூறினார்.

அதே நேரம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று ஈராக்கிய பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், நாம் அத்தீர்மானத்துக்குக் கட்டுப்படப் போவதில்லை அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.


இதனையடுத்து ஹிஸ்புல்லாஹ் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துருப்புக்களை பிராந்தியத்திலிருந்து விலகுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், ஈரான் மீதான எதிர்கால அமெரிக்க தாக்குதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.

"வரவிருக்கும் நாட்கள் அல்லது வாரங்களில் அமேரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கிலிருந்து திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மேரிக்கா திரும்புவர்" என்று நஸ்ரல்லா அறிவித்தார்.


ஈரான், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலானது அமெரிக்காவுக்கு தெஹ்ரானின் இராணுவ வலிமையைக் காட்டியுள்ளது. ஈரான் பயன்படுத்திய ஏவுகணைகள் அனைத்தும் ஈரானின் உள்நாட்டு தயாரிப்பாகும், என்று நஸ்ரல்லா கூறினார்.

சமீபத்தில் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி நினைவு தொடர்பாக லெபனானில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  நஸ்ரல்லா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

"மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் ஈரானின் துல்லியமான ஏவுகணை எல்லைக்குள் உள்ளன," என்று நஸ்ரல்லா கூறினார். "ஈரானில் உள்ள உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி நிலையங்களைத் தாக்க தனது விமானப்படையை அனுப்ப நெத்தன்யாகு தொடர்ச்சியாக கனவு காண்கிறார். இஸ்ரேல் ஈரானுடன்விளையாட திட்டமிட்டுள்ளது.  அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் சியோனிச நிறுவனத்திற்கு ஒரு வலுவான செய்தியாகும்", என்றும்  நஸ்ரல்லா கூறினார்.

ஈரானுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க தாக்குதலும் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலைக் கொண்டுவரும் என்ற செய்தியை தெஹ்ரான் நட்பு நாடுகள் ஊடாகவும் ஊடகங்கள் மூலமாக வாஷிங்டனுக்கு தெரிவித்துள்ளதாக நஸ்ரல்லா கூறினார்.