Tuesday, January 29, 2019

மேற்கின் அழுத்தங்களால் ஈரானின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது - சீன பேராசிரியர் வூ செங்


West not able to stop Iran: Chinese Prof Wu Cheng

Professor Wu Cheng
"தெஹ்ரான் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உலகுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க முயல்கிறது. மேற்கின் அழுத்தங்களால் ஈரானின் முன்னேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது" என்று  ஈரானியலாளரும்  கிழக்கு சீனாவின் ஹென்னன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பேராசிரியருமான வூ செங்  (Professor Wu Cheng ) தெரிவித்தார்.

"தொடர்ச்சியான நெருக்குவாரங்களும் சவால்களும் இருந்தபோதும் ஈரான் அபிவிருத்தி திட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும்  பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முன்னேற்றத்தில் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது" என ஈரான் இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40 ஆண்டு நிறைவையொட்டி, ஈரான் தேசிய செய்தி நிறுவனமான IRNAவுக்கு வழங்கிய பேட்டியின் போதே பேராசிரியர் வு செங் இவ்வாறு தெரிவித்தார்.

'இஸ்லாமிய ஆட்சி' என்ற புத்தகத்தின் ஆசிரியரான வூ செங் இஸ்லாமிய குடியரசு அதன் கௌரவத்தினதும் வெற்றியினதும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தனது 40 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடப் போவதையிட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இஸ்லாமியப் புரட்சியின் மூலம் இஸ்லாமிய நாகரிகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன; இஸ்லாமிய உலகின் எந்த ஆய்வாளரும் ஈரானை அலட்சியம் செய்ய முடியாது, ஈரானைப் பற்றிய எந்த ஆராய்ச்சியும் இந்த பெரிய மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் நிறைவடையாது. அமேரிக்கா தொடர்பான ஈரானின் கடுமையான எதிர்ப்பு வாஷிங்டனை தோல்வியடையச் செய்துள்ளதுஎன்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவினது சதிகளையும் மீறி, தம் வழி பிசகாமல் ஈரான் அதன் பயணத்தைக் தொடர முடிந்தது; பல நாடுகள் வாஷிங்டனின் அழுத்தத்தையும் பொருட்படுத்தாது ஈரானுடன் நெருக்கமான நல்லுறவைக் கொண்டடுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகம் நிறைய மாறிவிட்டது; நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. எனவே அவை தன்னிச்சைவாதத்துக்கு பதிலாக பன்முகத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள பெருமுயற்சி செய்து வருகின்றன. அதேசமயம் பூகோளமயமாக்கலுடன் தன்னை தகவமைத்துக்கொள்ள ஈரானால் முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

'ஈரான் இந்த நான்கு தசாப்தங்களுகளில் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது; மற்றும் நாளுக்குநாள் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி அது நகர்கிறது. இந்த முன்னேற்றத்தை ஈரானின் எதிரிகளால் எந்த வகையிலும் தடுக்க முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானை 'சுயாதீனமான' மற்றும் 'சுதந்திரம் தேடும்' நாடாக விவரிக்கும் வு செங், 'இஸ்லாமிய குடியரசு பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் பெரும் அபிவிருத்தியைக் கொண்டுவந்துள்ளது.' என்கிறார்.

பேராசிரியர் வு செங் ஈரான் பற்றியும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தந்தை இமாம் கொமெய்னி பற்றியும் ஈராக்கினால் ஈரான் மீது திணிக்கப்பட்ட யுத்தம் பற்றியும் மற்றும் மத்திய கிழக்கில் போர்கள் மற்றும் மோதல்களை உருவாக்கும் அமெரிக்க நோக்கங்கள் பற்றியும் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.


Saturday, January 26, 2019

இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவோம் - ஐ.நா.வுக்கான ஈரானியத் தூதுவர்

Iran calls for ending Israel impunity of anti-Palestine crimes

பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அடாவடித் தனத்தை உலக நாடுகள் ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐ.நா.வுக்கான ஈரானியத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனிய பிரச்சினை உட்பட மத்திய கிழக்கில் உள்ள நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஈரானியத் தூதுவர் இஸ்ஹாக் அல்-ஹபீப் 'இப்பொழுது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைத்துவரும் அநியாயங்களுக்கு அதனை பொறுப்புக்கூறச் செய்வதன்மூலம் முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே வழி' என்றும் இது சட்டத்தின் பயன்பாட்டை உறுதிப்படுத்திபடுத்துவதுடன் இஸ்ரேலின் எதிர்கால சட்ட மீறலை தடுக்கவும் முடியும்' என்றும்  குறிப்பிட்டார்.

பாலஸ்தீனிய நிலைமை கடந்த ஆண்டு மிகவும் மோசமடைந்தது. 295 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குடிமக்கள் இஸ்ரேலினால் கொடூரமாக கொல்லப்பட்டனர் மற்றும் 29,000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் சுமார் 7,000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்லும் ஒரு கொலைகார ஆட்சி என்று இது நிரூபிக்கிறது. இது இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் தெளிவான வெளிப்பாடுமாகும். அதேபோல், 2018 ல், ஏராளமான பாலஸ்தீனிய வீடுகளை இடித்து, சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்கள் கட்டப்பட்டன: இது அப்பட்டமான சர்வதேச சட்டமீறலாகும்.

இன்னும் பல பாலஸ்தீனிய வீடுகளை இடித்து, பல பாலஸ்தீனிய காணிகளை பலாத்காரமாக பறிமுதல் செய்வதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் புதிய திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். இது இன்னும் பல பாலஸ்தீனிய குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றம் செய்வதையே  அர்த்தப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் காசா மீது அதன் பத்தாண்டு கால சட்டவிரோதமான, மனிதாபிமானமற்ற முற்றுகையை மிக மோசமாக மேற்கொண்டது; அதன் தொடர்ச்சியானது ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதார நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

2018 ல், யூதர்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஒரு சட்டத்தை இயற்றியதன் மூலம் இஸ்ரேல் இனவாதத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. அண்மையில், இஸ்ரலினால் பெரிய கான்கிரீட் சுவரினால் பிரிக்கப்படும் ஒரு இனவெறி நெடுஞ்சாலை திறந்துவைக்கப்பட்டது; ஒரு பக்கம் இஸ்ரேலிய வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது; மற்றொன்று பாலஸ்தீனிய வாகனங்களுக்கு மட்டுமே என்று திறக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் ஏதும்  இல்லை. இனவெறி இஸ்ரேலிய ஆட்சியின் இயல்பே அதுதான். முதலாவதாக, அவர்கள் ஒரு இனப் பிரிவினை சுவர் கட்டினர், பின்னர் ஒரு இன பாகுபாடு சட்டத்தை இயற்றினர், இப்போது ஒரு இனவெறி நெடுஞ்சாலையை கட்டியுள்ளனர். இது மிகவும் வெட்கக்கேடானதாகும்! வலுவான மற்றும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் இது கண்டிக்கப்பட வேண்டும்.

அல் குத்ஸ் அல் ஷரீப்பை இஸ்ரேலிய தலைநகராக நாம் ஒருபோது அங்கீகரிக்கப்போவதில்லை. மேலும் லெபனான் மற்றும் சிரிய கோலன் பிரதேச பகுதிகளில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த ஆக்கிரமிப்பு அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல்களாகும்  மற்றும் ஐ.நா. தீர்மானங்களை மீறும் செயலுமாகும்.
கடந்த 70 ஆண்டுகளாக பாலஸ்தீனியர்களின் பிறப்புரிமைகள்  தொடர்ச்சியாக மீறப்படுவது ஏன்? என்ற கேள்வியை இந்தச்சபையில் மீண்டும்  கேட்க விரும்புகின்றேன் ?
இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் எளிதானது: இஸ்ரேலைக் காப்பாற்றுவதன் மூலம், இஸ்ரேலிய விவகாரத்தில் அமெரிக்கா இந்த சபையை முற்றிலும் பயனற்ற ஒன்றாக ஆக்கியுள்ளது. இதன் விளைவாக, அதன் குற்றச்செயல்களுக்கு தண்டனைப் பெறாமை இஸ்ரேலை இன்னும் தைரியமூட்டியுள்ளது. இந்த தண்டனைவிலக்கு அனைத்து சர்வதேச குற்றங்களையும் தொடர்ச்சியாகவும் செய்வதற்கு இஸ்ரயேலுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆகியுள்ளது.
இதன் காரணமாகத்தான், குறுகிய காலப்பகுதியில் இஸ்ரேல் 15 யுத்தங்களை தொடுத்தது; அரபுப் பிரதேசங்களை பலவந்தமாக கைப்பற்றியுள்ளது; அதனை சுற்றியுள்ள அனைத்து அண்டை நாடுகளையும் விதிவிலக்கு இல்லாமல் ஆக்கிரமித்துள்ள; மத்திய கிழக்கில் இருந்து ஆபிரிக்கா வரை, அதற்கு அப்பாலும் மற்ற நாடுகளைத் தாக்கியுள்ளது; பேரழிவு ஆயுதங்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது; இவ்வாறு பட்டியல் தொடர்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேல் பலமுறையும் பிராந்திய நாடுகளை தாக்கி, அதற்கான பொறுப்பை வெட்கக்கேடான முறையில் ஏற்றுள்ளது. ஐ.நா. சாசனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அத்துமீறல்களுக்கு இந்த சபை என்ன நடவடிக்கை எடுத்தது?

இஸ்ரேலுக்கு  சார்பான அறிக்கைகளை தவிர அமெரிக்க ஒன்றியத்திலிருந்து வேறு எதையும் நீங்கள் அறிந்ததுண்டா? எந்தவொரு மேற்கத்திய உறுப்பு நாடுகளாலும் அது கண்டிக்கப்பட்டதா?

மிக சமீபத்தில், இஸ்ரேல் "எந்த இடத்திலும் எவ்வித இலக்கையும் எட்டக்கூடிய ஏவுகணைகளை தயாரித்துள்ளோம்" என்று அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில், எகத்தாளமாக கூறுமளவுக்கு தைரியம் பெற்றுள்ளது.

இதேபோல், ஈரானை அணு ஆயுதங்களைக்கொண்டு அழிக்கப்போவதாக இஸ்ரேல் சில காலத்துக்கு முன் அச்சுறுத்தியது. நிச்சயமாக அது ஒரு கனவாகவே அமையும்.

பிராந்திய நாடுகளின் மீதான இஸ்ரேலின் ஒட்டுமொத்த முறைமை மீறலும் இறையாண்மையை மீறலும் நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற அனைத்து மீறல்களுக்கும் அது பொறுப்புக்கூற வேண்டும்.

ஐ.நா. சாசனத்தின் 51 வது உறுப்புரைக்கு அமைய, அனைத்து பிராந்திய நாடுகளும் இஸ்ரேலின் ஆயுத தாக்குதலுக்கு எதிராக தங்களை பாதுகாக்க ஒரு இயல்பான உரிமையைக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த உரிமையை எவராலும் மறுக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாது. அந்த உரிமையை எவ்வாறு, எப்போது பயன்படுத்தவேண்டும் என்று அந்தந்த நாடுகளே முடிவு செய்யும்.

இப்போது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்வதன் மூலம் அது அனுபவித்துவரும் தண்டனைவிலக்கை முடிவுக்கு கொண்டுவருவதே ஒரே வழி. இவ்வாறு செய்வதனால் சட்டத்தின் பயன்பாட்டை உறுதிசெய்து, இஸ்ரேலின் எதிர்கால மீறல்களை தடுக்க முடியும்.

அதனால்தான், பாலஸ்தீனியர்கள் அவர்களது உரிமைகளை அடைவதற்கு  உலக நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க  வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, அச்சுறுத்தல் ஆகியவற்றை அங்கீகரிக்கலாகாது என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

Thursday, January 24, 2019

இஸ்லாமிய புரட்சி, அமெரிக்கர்களுக்கு ஒர் அரசியல் அதிர்ச்சி: ஈரானிய பிரிகேடியர் ஜெனரல்


Islamic Revolution, a political shock to Americans: Iranian cmdr.

Brigadier-General Ahmad-Reza Pourdastan

"1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி அமெரிக்கர்களுக்கு ஒரு அரசியல் பேரதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அது அவர்களின் அனைத்து சமன்பாடுகளையும் மாற்றியமைத்தது"  என்று இராணுவத்தின் மூலோபாய ஆய்வுகள் மையத்தின் தலைவர் புதனன்று (23-01-2019) தெரிவித்தார்.

பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத்-ரெசா பூர்தாஸ்டான் (Brigadier-General Ahmad-Reza Pourdastan) ஈரானிய இராணுவத்தின் 40 ஆண்டுகால சாதனைகளை நினைவுகூறும் ஒரு விழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

"இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகை பிரித்தாண்டன. ஈரான் மீது அமெரிக்கா தமது  தலைவர்களுக்கு நன்மைகள் ஏற்படும் விதத்தில்  ஆதிக்கம் செலுத்தியது.

பாரசீக வளைகுடாவில் சக்தி வள சந்தையிணை கட்டுப்படுத்துவதும் சோவியத் ஒன்றியத்தை எதிர்ப்பதற்காக வட ஈரானில் ராடார் அமைப்பதுவதும் அமெரிக்க உற்பத்தி பொருட்களுக்கு பெரிய சந்தையாக ஈரானை மாற்றியமைத்து நன்மைப் பெறுவதும் அவர்களது முக்கிய குறிக்கோளாய் இருந்தது.

இஸ்லாமியப் புரட்சிக்கு முன் ஈரானிய இராணுவத்தின் கடமைகளில் ஒன்று ஷாவின் சிம்மாசனத்தை பாதுகாப்பதாகும். அதேவேளை பிராந்திய நாடுகள் அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்படாதவாறு பார்த்துக்கொள்வதுமாகும்.
இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்கு பின்னர் அமேரிக்கா பெற்றுவந்த இந்த நன்மைகள் அனைத்தும் இல்லாமல் போயின. எனவே இஸ்லாமிய ஆட்சி முறைக்கு எதிராக அதன் முதல் நாளிலிருந்து அவர்கள் திட்டமிட்டனர்.

எமது எல்லைகளை பாதுகாப்பதில் ஈரான் மிக உறுதியாக இருக்கிறது. ஈராக்கில் செயல்பட்டுவந்த தாயேஷ் பயங்கரவாதக் குழு இப்போது நலிவடைய செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் கொஞ்சப்பேர் தியாலா மாகாணத்தில் எஞ்சியுள்ளனர்; இருந்துவிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் அழுத்தம் கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 6,000 தாயேஷ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவும் எமிரேட்ஸும் இவர்களுக்கு நிதி வழங்கி வருகின்றன. இருப்பினும், அவர்கள் ஈரானிய எல்லைக்கு அருகே நிலைக் கொண்டிருக்கவில்லை.

கிழக்கு எல்லைகளில் எமது இராணுவப் படைகள் முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கின்றன. எமக்கு எதிராக அவர்கள் பயங்கவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், எமது பதிலடியின் வீரியத்தை புரிந்துகொள்வர்என்றும் தளபதி அஹ்மத்-ரெசா பூர்தாஸ்டான் கூறினார்.

http://www.irna.ir/en/News/83181938  

Monday, January 21, 2019

நவீன மருத்துவ அறிவியல் - முஸ்லிம்களின் பங்களிப்பு


Muslims’ Contribution to Modern Medical Science

இஸ்லாமிய நாகரிகம் ஆன்மாவை கவனிப்பது போலவே உடலையும் கண்ணுக்கு இமை போல் காத்து நிற்கும். இஸ்லாம் உடல் அறிவு, ஆன்மா ஆகிய மூன்று பகுதிகளிலும் சமநிலை பேணுகிறது. எனவே உடலை பாதுகாப்பதில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது. காரணம் சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது.

மருத்துவத்துறையை முன்னிலைப்படுத்தி பேசுவற்கு காரணம் இன்று மருத்துவ வளர்ச்சியின் விளைவுகள் குறித்தும், மருத்துவ முறைகள் குறித்தும் அதிகம் பேசப்பட்டு வருவதுதான்.


மருத்துவத் துறையில் முஸ்லிம்கள்


மருத்துவத் துறையில் உலகமே இருட்டில் இருந்த போது அத்துறையை வளர்த்து அதில் கொடிகட்டிப் பறந்தவர்கள் முஸ்லிம்களே. நோய்க்கு மருந்து செய்யக் கூடாது என்று கிறிஸ்தவ உலகம் நம்பியிருந்த காலத்தில் இஸ்லாம் மருத்துவம் பற்றி பேசியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முழு ஐரோப்பாவும் நோயாளியை இறைவனால் சபிக்கப்பட்டவன் என்றும் தீண்டத்தகாதவன் என்றும் ஒதுக்கிய காலத்தில் முஸ்லிம்கள் நோயாளிகளுக்கு தனியறைகள் அமைத்து தனித்தனி தாதிகள் (செவிலியர்) நியமித்து மிக உயர்ந்த மருத்துவச் சேவையை அறிமுகம் செய்தனர்.

இஸ்லாமிய உலகில் மருத்துவம் சேவையாகச் செய்யப்பட்டது. பணம் வாங்குவதற்குப் பதிலாக குணமடைந்து வெளியேறுவோருக்கு பணம் வழங்கப்பட்டது. நோய்க்காக ஓய்வெடுக்கும் காலப்பகுதில் தனது வாழ்வை கௌரவமாக கொண்டு செல்வதற்காக அந்த சலுகை அறிமுகமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அப்போது முஸ்லிம்கள் மனித சமத்துவத்தை மருத்துவமனைகளிலும் எடுத்துக்காட்டி மகத்தான சேவை புரிந்தனர் என கலாநிதி முஸ்தபா ஸிபாஈ (Mustafa al-Siba'i) அவர்கள் தனது நமது நாகரிகத்தின் தலைசிறந்த படைப்புகள்என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முஸ்லிம் மருத்துவ மேதைகளுள் அர்ராஸி Abū Bakr Muhammad ibn Zakariyyā al-Rāzī, இப்னு ஸீனா (Ali Ibn Sina), இப்னு நபீஸ் ( Ibn al-Nafis), அஸ்ஸஹ்ராவி (Al-Zahrawi), ஹுனைன் இப்னு இஸ்ஹாக் (Hunayn ibn Ishaq) ஆகியோர் சிறப்புற்று விளங்கினர்.

அர்ராஸி : இவர் எழுதிய 12 பாகங்களை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற நூலான அல்ஹாவி என்ற நூல் மருத்துவத்தின் கலைக்களஞ்சியம்என போற்றப்படுகிறது. இதைப்போன்ற ஒரு மருத்துவ நூல் இதுவரை உலகில் இல்லை என கருதப்படுகிறது. அர்ராஸி மகப்பேற்று மருத்துவம், பெண் மருத்துவம், கண் மருத்துவம், அறுவை சிகிச்சை போன்ற துறைகளிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அறுவைச் சிகிச்சையின் போது தையல் போடுவதற்காக முதன் முதலில் மிருகங்களின் குடல் இழைகளைப் பயன்படுத்தியதும் இவரேயாவார்.

அலி இப்னு ஸீனா: மருத்துவத் துறையில் அலி இப்னு ஸீனாவின் பங்களிப்பும் மகத்தானதாகும். அவர் எழுதிய மருத்துவ விதிகள்’ (The Canon of Medicine) என்ற நூல் மிகவும் பிரபல்யமானதாகும். இந்நூல் 17ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல்கலைக்கழக பாடப்புத்தகமாக இருந்தது.

மருத்துவத் துறையை ஊக்குவித்த இஸ்லாம்


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றின் தொகுப்புகளில் ஒன்றான ஸஹீஹுல் புகாரியில் மட்டும் மருத்துவம்என்ற அத்தியாயத்தில் சுமார் 30 ஹதீஸ்கள் மருத்துவம் பற்றி பேசுகிறது.


நோய் வந்தால் மருந்து செய்யுங்கள்என்றும் எல்லா நோய்களுக்கும் மருந்துண்டுஎன்ற ஹதீஸும் நோய்க்கான மருந்து சரியாக அமைந்து விட்டால் அல்லாஹ்வின் உதவியால் குணமடைவான்என்ற நபி மொழியும் மருத்துவத்துறையை ஊக்கப்படுத்திய நபி வாக்குகளாகும்.

மருத்துவத் துறையில் பெண்கள்

போர்க்களத்தில் பெண்கள் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளனர். உதாரணமாக, போர் வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுதல், கொல்லப்பட்டவர்களையும், காயமுற்றவர்களையும் களத்திலிருந்து அப்புறப்படுத்துதல், போர்க்கருவிகளை எடுத்துக்கொடுத்தல், படையினருக்கு உணவு தயாரித்தல், அடக்கம் செய்யக் குழிதோண்டுதல், கபனிட்டு அடக்கம் செய்தல், போர்வீரர்களுக்கு உற்சாகமூட்டல் என பல அரிய தொண்டாற்றினர்.

இவற்றில் போராளிகளில் காயப்படுவோருக்கு நீர்புகட்டுவதும் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதுமே அப்போதைய முதல் தரப்பணிகளாக விளங்கின. இந்த வகையில் ரபீதா என்ற ஸஹாபிப் பெண்மணி இஸ்லாத்தின் முதலாவது தாதியாகக் (செவிலியர்) கருதப்படுகின்றார்.

இப்பெண்ணுக்கு இறைத்தூதர் (ஸல்) கந்தக் யுத்தத்தில் காயப்பட்டவர்களை கவனிப்பதற்காக இன்றைய நடமாடும் மருத்துவமனையையொத்த பெரிய கூடாரமொன்றையே தனியாக அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ரபீதா (ரழி) அவர்களுக்கு உதவுவதற்காக அவரது தலைமையில் பெண்கள் குழுவொன்றும் பணியில் ஈடுபட்டது.

ருபைஃ பின்த் முஅவ்விஸ் (ரழி) அவர்கள் நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு போராடிக் கொண்டும் போராளிகளுக்கு நீர் புகட்டிக் கொண்டும் இருந்தோம். அவர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டும் கொல்லப்பட்டவர்களையும் காயப்பட்டவர்களையும் மதீனாவுக்கு இடமாற்றிக் கொண்டும் இருந்தோம்என அறிவித்துள்ள ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது.


உம்மு அதிய்யா அவர்கள் றஸூலுல்லாஹ்வின் காலத்தில் ஏழு யுத்தங்களில் கலந்து கொண்டார். இவர் நோயுற்றவர்களைக் கவனிப்பதிலும் தாகிப்போருக்குத் தண்ணீர் புகட்டுவதிலும் காயப்பட்டோருக்கு மருந்து கட்டுவதிலும் ஈடுபட்டார் என்ற செய்தியை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.


இறைத் தூதரின் கண்காணிப்பிலும் வழிகாட்டுதலின் பேரிலும் நடைபெற்ற சிகிச்சைகள் மருத்துவத்துறையை வளர்ப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சை செய்வதை நபி (ஸல்) அவர்கள் பணித்தது மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை ஒரு படி கூடுதலாகவே எடுத்துக் காட்டுகிறது.

பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சையளித்தல்

முதல் தாதியான ரபீதா (ரழி) அவர்களிடம் காயப்பட்டிருந்த ஸஃத் இப்னு முஆத் (ரழி) அவர்களுக்கு சிகிச்சை செய்யுமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அவ்வாறே ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்கு அன்று மிகவும் பிரபல்யம் வாய்ந்த வைத்தியராக திகழ்ந்த ஹாரிஸ் பின் கலதா எனபவரிடம் சிகிச்சை பெறுமாறு பணித்தார்கள். அப்போது ஹாரிஸ் இஸ்லாத்தை தழுவியிருக்கவில்லை. உங்களில் மிகச் சிறந்த வைத்தியர் யார் என்று கேள்வி கேட்டு மருத்துவம் பார்க்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ள செய்தியும் தபரானியில் பதிவாகியுள்ளது.

இந்தத் தூண்டுதல்களும் வழிகாட்டல்களும் முஸ்லிம்களை மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்க வைத்தது. அவர்கள் மருத்துவத்துறைக்கு முன்னோடிகளாக மாறினர்.

அறுவைச் சிகிச்சைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

முற்கால குருதிவடிப்பு (இரத்த நாள) முறையில் தொடங்கி பழுதடைந்த உறுப்புக்களை அறுத்து அகற்றும் வகையில் வளர்ந்து யோனி வழியாக சிறுநீர்ப்பை கற்களை வெளியேற்றும் முறைக்கு உயர்ந்து, சிதைந்த உறுப்புக்களை வடிவமைக்கும் அழகியல் அறுவை சிகிச்சை வரை முஸ்லிம்கள் மருத்துவதில் முன்னோடிகளாக முன்னேறி வந்தார்கள்.

இத்துறையில் முஸ்லிம்கள் உச்ச நிலைக்கு வருவதற்கு அடிப்படைக் காரணம் மனிதன் என்பவன் உடல், அறிவு, ஆன்மா ஆகிய முக்கூறுகளைக் கொண்ட ஒரு கலவை என்பதை புரிந்து அவற்றுக்கிடையில் சமநிலை பேணுவது கடமை என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டை மிகச்சரியாக அறிந்து புரிந்து தெளிந்திருந்தமையாகும்.

மருத்துவம் வெறும் உடம்புக்கு மாத்திரம் அல்ல

அத்துடன் உடலுக்கான மருத்துவம் என்பது வெறும் உடல் உறுப்புக்களுக்கு மாத்திரம் அல்ல என்பதை புரிந்து முஸ்லிம் மருத்துவர்கள் அதற்கு அப்பால் உள்ளத்துடனும் அதனை இணைத்துப் பார்த்தார்கள். எனவே சிதைந்த உறுப்புக்களை வடிவமைப்பதிலும் அசிங்கமான தோற்றம் தரும் உறுப்புக்களை மாற்றுவதிலும் அவர்கள் கவனம் எடுத்தார்கள்.

நோயைக் குணப்படுத்துவது போலவே இயல்பாக இருக்கும் அவையவங்கள், உறுப்புக்கள் அதன் அசலான தோற்றத்தில் இருப்பதைத்தான் மனித உள்ளம் விரும்பும். தன் உறுப்புக்களில் உள்ள குறையை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற உள்ளத்தின் தேவையை நிவர்த்தி செய்வது மருத்துவத்துறையின் ஒரு அங்கம் என்றே இஸ்லாம் கருதியது. எனவே அவற்றை சரிசெய்வதும் அழகுபடுத்துவதும் உருமாற்றம் அல்ல என்ற கருத்தை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

எனவே பேரறிஞர் ராஸி அவர்கள் அழகியல் அறுவைச் சிகிச்சையில் முன்னேடியாக திகழ்ந்தார். இமாம் ராஸி மருத்துவ முன்னேடியாக இருந்த அதேசமயம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களிலும் துறைபோனவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படைப்பினங்களில் மாற்றம் செய்தல்

அல்லாஹ் படைத்த படைப்பினங்களின் ஒழுங்குகளில் மாற்றம் செய்வது சைத்தானிய செயல்களில் உள்ளவையாகும் என சூரா நிஸாவின் 118ம் வசனம் குறிப்பிடுகிறது. எனவே கீறிக் கிழிக்கும் அறுவைச் சிகிச்சை சைத்தானிய செயல்களில் உள்ளவை. அது சுத்த ஹராம் என சிலர் பாமரத்தனமாக தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர்.

புனித அல்குர்ஆன் கூறவந்த கருத்துக்களை கொச்சைப்படுத்தும் அபத்தமான வார்த்தைகள் சமூக இணைய தளங்களில் வலம் வருவதை அவதானிக்க முடிகிறது. எனவே இது பற்றி சில தெளிவுகளை நோக்குவது சிறந்தது எனக் கருதுகின்றோம்.

படைப்பினங்களின் ஒழுங்கில் மாற்றம் செய்தல் என்ற அல்குர்ஆன் வசனத்தை விளங்கிக் கொள்வதற்கு அது குறித்த ஆரம்பகால அறிஞர்களின் புரிதல்களை படிப்பது அவசியமாகும். அவர்களின் கருத்துக்களை தொகுத்துப் பார்க்கும் போது படைப்பினங்களை மாற்றுதல்என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் இருவகையில் பொருள் கூறியுள்ளனர்.

ஒன்று: கருத்து ரீதியான பொருள். அதாவது அல்லாஹ்வுடைய தீனை மாற்றுதல், இயல்பாக இறைவன் எந்த நோக்கத்தில் ஒன்றை படைத்திருக்கின்றானோ அந்த இயல்புகளை மாற்றுதல், அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகளுக்கு முரணாக செயல்படுதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இரண்டு : அல்லாஹ் படைத்தவற்றின் வடிவமைப்பில் மாற்றம் செய்தல். இதில் குறிப்பாக மிருகங்களுக்கு விதையடித்தல், பச்சை குத்துதல், புருவ முடிகளை களைதல், பற்களுக்கு இடையில் செயற்கையாக இடைவெளிகளை அமைத்தல், மிருகங்களின் காதுகளை துண்டித்தல், கண்களை பிடுங்குதுல் அல்லது தண்டனை என்ற வகையில் விதையடித்தல், கண்ணைப் குருடாக்குதல், பிற முடிகளை இணைத்து சிகை அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாக கூறலாம். இவையாவும் இந்த வசனத்திற்கு கூறியுள்ள பொதுவான கருத்துக்களாகும்.


இது குறித்து மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கும் போது: இந்த வசனம் அல்லாஹ்வுடைய படைப்பினங்களின் வெளித்தோற்ற வடிவமைப்பில் மாற்றம் செய்வதை குறிப்பிடவில்லை என்றும் இங்கு நாடப்படுவது அல்லாஹ் எந்த நோக்கத்திற்காக ஒன்றை படைத்திருக்கின்றானோ அந்த நோக்கததிற்கும் இயல்புக்கும் மாற்றமாக செயல்படுவதையே அல்குர்ஆன் வசனம் சைத்தானிய கருமங்களாக குறிப்பிடுகின்றன என்றும் கூறுகிறார். அதற்கு உதாரணமாக ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறான பாலியல் புணர்ச்சி, துறவறம், பிரம்மச்சாரியம், மலடாக்கும் செயல்பாடு, பெண்கள் அவர்களுக்கேயுரிய பிரத்தியேகமான பணிகளை செய்யாமலிருத்தல் அல்லது ஆண் பெண்ணின் பணிகளை செய்தல், பெண் ஆணுக்குரிய பணிகளை செய்தல் போன்றவையே அல்லாஹ்வுடைய படைப்பினங்களின் ஒழுங்கில் ஏற்படுத்தும் மாற்றங்களாகும் என விளக்கமளித்துள்ளார். இதுவே சைத்தானிய தூண்டுதல்களால் நடைபெறும் தீய கருமங்களாகும் என மௌதூதி சுட்டிக்காட்டுகிறார்.


அறிவியல் துறையின் வளர்ச்சியாக உள்ள பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறையயானது இந்த வசனத்துடன் மிகுந்த தொடர்புடையதாகும். இது குறித்து சர்வதேச இஸ்லாமிய சட்ட சபை 2007ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 18வது மாநாட்டில் மிகவும் தெளிவான சட்டத் தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விசயங்களை சுருக்கமாகத் தருகின்றோம்.
1)    செயலிழந்த உறுப்புக்களை மீண்டும் செயல்பட வைத்தல், குறைபாடுகளை சரிசெய்தல், வழமையான ஒழுங்கமைப்புக்கு மாற்றமான தோற்றத்தில் உள்ள உறுப்புக்களை இயல்பான தோற்றத்திற்கு வடிவமைப்பு செய்தல் போன்ற ஷரீஆ அங்கீகரிக்கும் நலன்களை கருதி பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யலாம். இப்படியான நோக்கங்களுக்காக செய்யப்படும் அறுவைச் சிகிச்சை முறையை மார்க்கம் அனுமதிக்கிறது.
2)    துறை சார்ந்த தகுதிவாய்ந்த ஒரு மருத்துவரே இந்த சிகிச்சையை செய்யவேண்டும்.
3)    குறித்த சிகிச்சையின் பக்கவிளைவுகள் பற்றி நோயாளிக்கு மிகவும் தெளிவாக உணர்த்துதல் வேண்டும்.

எனவே சூரா நிஸாவின் 119ம் வசனம் அல்லாஹ்வுடைய படைப்பினங்களில் மாற்றம் செய்தல் என்பது என்ன என்பதை வெறுமனே உருவமாற்றம் என்பதாக எந்த ஆரம்பகால மற்றும் நவீன கால அறிஞரும் கூறவில்லை. குறை நீக்கும் வகையில் உறுப்புக்களில் மாற்றம் செய்தல் அல்லது குறைபாடுள்ள உறுப்புக்களை மீள் வடிவமைத்தல் என்ற நோக்கத்திற்காக அறுவைச் சிகிச்சை செய்வதை அன்று முதல் இன்று வரை எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தடுத்தது கிடையாது.

உடம்பும் உள்ளமும் நலமாக இருப்பது ஷரீஆவின் பார்வையில் அத்தியாவசியத் தேவை என்ற புரிதலின் பின்புலத்தில் தான் இந்த விஷயத்தை அறிஞர்கள் நோக்கியுள்ளார்கள். ஆன்மாவை பாதுகாப்பது போலவே ஆரோக்கியம் முக்கியமானது என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்லுகிறது. அதன் விளைவாகவே அறுவைச் சிகிச்சை முறையில் முஸ்லிம்கள் முன்னேறியதோடு கோடிக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றவும் உதவியுள்ளார்கள்.

அல் குர்ஆனும் நபிமொழியும் முஸ்லிம்களுக்கு வழங்கிய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதல் வழியாக மருத்துவத்துறையில் இஸ்லாமியர்கள் செய்த ஆளுமை குறித்த ஒரு சிறு தொகுப்பே இது.





=============

தத்துவார்த்த இயற்பியலாளர் ஜிம் அல்-கலீலி தன்னுடைய ஆய்வுப் பயணத்தின் வழியே ஒன்பதாம் மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்களின் பொற்காலத்தில் நடைபெற்ற அறிவியல்மருத்துவ ஆராய்ச்சிக்கும் இன்றைய நவீன ஆராய்ச்சிக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுபடுத்தியுள்ள ஆக்கமே இது.