Wednesday, January 2, 2019

இஸ்ரேல் ஒரு வெற்றிகொள்ள முடியாத சக்தி என்று திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்ட விம்பத்தையும் உடைத்தெறிந்தது ஈரான்.


Palestine is an organ of our body - Ayatollah Ali Khamenei  



"நாங்கள் பாலஸ்தீனத்தை நமது உடலின் ஒரு அங்கமாக கருதுகிறோம், பாலஸ்தீனிய தேசத்துக்கு வழங்கப்படும் ஆதரவை ஈரானிய மக்கள் பெருமையாகக் கருதுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகளுடனான இந்த புனித ஜிஹாதை பாலஸ்தீன மக்கள் தொடரவேண்டும். ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஃபத்தா படைகள்  ஐக்கியப்பட்டு இப் போராட்டத்தைத் தொடர வேண்டும். உண்மையில், பிரச்சினையின் மூலவேரான பிராந்தியத்தில் திணிக்கப்பட்டுள்ள சியோனிச ஆட்சி இல்லாதொழிக்கப்படுவதே இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும். என்று ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் பலமுறை தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியாக, ஈரான் இஸ்ரேலை ஒரு முஸ்லிம் நில ஆக்கிரமிப்பாளனாகவும் இஸ்லாத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒன்றாகவுமே பார்க்கிறது. இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்ரேல் என்பது ஒரு புற்றுநோய் (கேன்சர்) கட்டி, அது வெட்டி அகற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் இஸ்ரேலின் அநியாயங்களுக்கு துணைபோகும் அமெரிக்காவை "பெரிய சாத்தான்" எனவும் இஸ்ரேலை "குட்டி சாத்தான்" எனவுமே எப்போதும் குறிப்பிடுவார்.

இஸ்லாமிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஷாவின் காலத்தில் இருந்துவந்த இஸ்ரேலுடனான அனைத்துத் தொடர்புகளும் இஸ்லாமிய அரசினால் முறிக்கப்பட்டன; தெஹ்ரான் இஸ்ரேலிய தூதரக்கத்தில் இருந்த அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, பலஸ்தீன தூதரகமாக மாற்றப்பட்டது. பலஸ்தீன் விடுதலை அமைப்பின் தலைவரான யசீர் அரபாத் தெஹ்ரானுக்கு அழைக்கப்பட்டு பலஸ்தீன் தூதரகத்தின் சாவி உத்தியோகபூர்வமாக அவரிடம் ஒப்படைப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அத்தூதரகம் அமைந்துள்ள வீதிக்கும் பலஸ்தீன் என்று பெயரிட்டது.


ஈரானில் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னி அவர்களின் வழிகாட்டலில், இஸ்லாமிய அரசியலை ஸ்தாபிப்பதற்காக, சன்மார்க்க உலமாக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் வழங்கிய முழுமையான ஆதரவின் காரணமாக 1979ம் பெப்ரவரி மாதம் 11ம் திகதி இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெற்றது. இஸ்லாத்தை ஓர் அரசியல் சக்தியாக இனியும் தலையெடுக்க முடியாத படி நலிவடையச் செய்துவிட்டோம் என்ற இறுமாப்பில் இருந்த வல்லாதிக்க சக்திகளுக்கு இது ஒரு பேராச்சரியமாகவும் பேரதிர்ச்சியாகவும் இருந்தது.

"கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாமே வேண்டும்" என்ற புரட்சிக் கோஷம், சர்வதேச அரங்கில் ஒரு பாரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்லாமல் வலது சாரி, இடது சாரி என்று பிரிந்திருந்த உலகில் இப்புரட்சி, புரட்சிகளில் ஒரு புரட்சியாக இஸ்லாமியப் புரட்சி கருதப்பட்டது. நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் வியத்தகு மாற்றத்திற்கும் இப்புரட்சி வழிவகுத்தது. தமது புரட்சிக் கோஷங்கள் வெற்றுக்கோஷங்கள் அல்ல; அவை இஸ்லாமிய அரசின் அடிநாதங்கள் என்பதை உணர்த்திய ஈரான், நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலக யுத்தத்தத்தில் வெற்றிபெற்ற நாடுகளை எஜமானர்களாகவும் ஏனைய நாடுகளை அடிமைகளாகவும் கருதப்பட்டு வந்த காலகட்டத்தில், அதனை நிராகரித்து, சம அந்தஸ்த்தில், நட்பு ரீதியான உறவுகளை எந்த நாட்டுடனும் வைத்துக்கொள்ளத்தயார் என்றும் ஈரான் பிரகடனப்படுத்தியது. முஸ்லிம்கள் மனதில் விதைக்கப்பட்டிருந்த அடிமை மனப்பான்மையை தகர்த்தெறிந்து, ஈரானிய முஸ்லிம்கள் எவருக்கும் அடிமையல்ல என்று முழு உலகுக்கும் பறைசாற்றியது. அதுமட்டுமல்ல, இஸ்ரேல் ஒரு வெற்றிகொள்ள முடியாத சக்தி என்று திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்ட விம்பத்தையும் உடைத்தெறிந்து ஈரான்.

பலத்தைப் பிரயோகித்து, பலாத்காரமாக அமைக்கப்பட்ட இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இஸ்ரேல் என்று ஒரு நாடு கிடையாது, அது சியோனிஸ்ட்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமி என்றும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி என்ற நிலைப்பாட்டில் இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறது. ஈரானின் இந்த நிலைப்பாடு தான் அது தற்போது முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் எனபதை பலர் அறியார். எனினும், கொண்ட கொள்கையில் ஈரான் ஒருபோதும் தளரவில்லை. பாலஸ்தீனிய தேசத்துக்கு வழங்கப்படும் ஆதரவை ஈரானிய மக்கள் பெருமையாகவும் இஸ்லாமிய கடமையாகவும் கருதுகின்றனர்.

ஷாவின் காலத்தில் இருந்துவந்த இஸ்ரேலுடனான அனைத்துத் தொடர்புகளும் இஸ்லாமிய அரசினால் முறிக்கப்பட்டன; தெஹ்ரான் இஸ்ரேலிய தூதரக்கத்தில் இருந்த அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, பலஸ்தீன தூதரகமாக மாற்றப்பட்டது. பலஸ்தீன் விடுதலை அமைப்பின் தலைவரான யசீர் அரபாத் தெஹ்ரானுக்கு அழைக்கப்பட்டு பலஸ்தீன் தூதரகத்தின் சாவி உத்தியோகபூர்வமாக அவரிடம் ஒப்படைப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அத்தூதரகம் அமைந்துள்ள வீதிக்கும் பலஸ்தீன் என்று பெயரிட்டது.

"நாங்கள் பாலஸ்தீனத்தை நமது உடலின் ஒரு அங்கமாக கருதுகிறோம், பாலஸ்தீனிய தேசத்துக்கு வழங்கப்படும் ஆதரவை ஈரானிய மக்கள் பெருமையாக கருதுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகளுடனான இந்த புனித ஜிஹாதை பாலஸ்தீன மக்கள் தொடரவேண்டும். ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஃபத்தா படைகள்  ஐக்கியப்பட்டு இப் போராட்டத்தைத் முன்னெடுக்க வேண்டும். உண்மையில், பிரச்சினையின் மூலவேரான பிராந்தியத்தில் திணிக்கப்பட்டுள்ள சியோனிச ஆட்சி இல்லாதொழிக்கப்படுவதே இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும். என்று ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் பலமுறை தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் விடுதலைக்காகப் போராடும் ஹமாஸ், பாலஸ்தீன் விடுதலை இயக்கம் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்ற குழுக்களுக்கு ஈரான் எல்லா வழிகளிலும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகிறது என்பது இரகசியமல்ல. ஹமாஸும் இஸ்லாமிக் ஜிஹாதும் அஹ்லுஸ்ஸுன்னா அமைப்புகளாகும். (ஹாமாஸ் என்பது ஷேய்க் அஹ்மத் யாசீன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும்.) அமேரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் இதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்கை ரீதியாக, ஈரான் இஸ்ரேலை ஒரு முஸ்லிம் நில ஆக்கிரமிப்பாளனாகவும் இஸ்லாத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒன்றாகவுமே பார்க்கிறது. மற்றும் ஹிஸ்புல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்ரேல் என்பது ஒரு புற்றுநோய் (கேன்சர்) கட்டி, அது வெட்டி அகற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் இஸ்ரேலின் அநியாயங்களுக்கு துணைபோகும் அமெரிக்காவை "பெரிய சாத்தான்" எனவும் இஸ்ரேலை "குட்டி சாத்தான்" எனவுமே எப்போதும் குறிப்பிடுவார்.

பலஸ்தீன் விடுதலைக்காக களத்தில் நின்று போராடும் மற்றுமொரு இயக்கம் தான் ஹிஸ்புல்லாஹ். லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த பெருமை ஹிஸ்புல்லாஹ்வுக்கு உண்டு. ஈரானுடனான அதனது நெருக்கம் உலகறிந்தது.

சிரியாவில் அண்மையில் அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் சில அரபு நாடுகளும் இணைந்து மேற்கொண்ட அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பிராந்தியத்தில் அகண்ட இஸ்ரேலுக்குத் தடையாய் உள்ள ஒரே ஒரு நாடு சிரியா மட்டுமே என்பது மத்தியகிழக்கு அரசியல் ஆய்வாளர்களுக்கு நன்கு தெரியும்.  ஈரான் அந்நாட்டுக்கு உதவி வழங்கியிராவிட்டால் இன்று சிரியாவும் அமெரிக்க, இஸ்ரேலிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடாக மாறியிருக்கும் என்பது நிச்சயம்.

ஆக, பலஸ்தீனை மீட்டெடுப்பதில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பங்களிப்பு அளப்பரியது எனலாம்.

பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கெல்லோவே இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

காஸாவில் உள்ளோர் அனைவரும் சுன்னிகள்... அவர்களுக்கு உதவுவது ஷியாக்கள் மட்டுமே... சிந்தியுங்கள்.
- ஜோர்ஜ் கெல்லோவே




No comments:

Post a Comment