தெஹ்ரான் ஷரீஃப் பல்கலைக்கழக தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் 150 கொண்ட குழு இந்த செய்மதியையும்
அதன் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்தையும் வெற்றிகரமாக அமைத்துள்ளதுள்ளது. மேலும்
தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளை வெற்றிகரமாக அணி நடத்தி
முடித்துள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசு விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட "தூஸ்தி" (பாரசீக மொழியில் "நட்பு") செய்மதியினை விண்ணுக்கு ஏவுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று ஈரான் விண்வெளி நிறுவனம் (ISA) தலைவர் முர்தஸா பராரி தெரிவித்துள்ளார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசு விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட "தூஸ்தி" (பாரசீக மொழியில் "நட்பு") செய்மதியினை விண்ணுக்கு ஏவுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று ஈரான் விண்வெளி நிறுவனம் (ISA) தலைவர் முர்தஸா பராரி தெரிவித்துள்ளார்.
எதிரிவரும் 2019 மார்ச் மாத இறுதியளவில்
இச்செய்மதியை விண்ணுக்கு ஏவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பாரசீக மொழியில் "நட்பு" என்பதன் அர்த்தம்
கொண்ட "தூஸ்தி "
தொலைதூர-உணர்திறன் செய்மதி ஆகும்.
52 கிலோகிராம் எடைகொண்ட இந்த
சாதனம் பூமிக்கு 250 கிமீ மற்றும் 310 கிமீ உயரத்தில், குறைந்த பூமி சுற்றுப்பாதை என
பொதுவாக அழைக்கப்படும் 2,000 கிலோமீட்டருக்கு குறைவான
தொலைவில் சஞ்சரிக்கும். இது தொலைதொடர்பு பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட
செய்மதியாகும் எனது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம்
விஞ்ஞான உற்பத்தியில் ரஷ்யாவையும் சீனாவையும் பின்தள்ளியுள்ளது இஸ்லாமிய ஈரான்...!
ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகில் விஞ்ஞான உற்பத்தியில் 16 வது இடத்தையும், உலக அளவில் துறையில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் வரிசையில் 1 வது இடத்தையும் பெற்றுள்ளது.
டெஹ்ரானில் டிசம்பர் 24 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றுவரும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்கான 19 வது கண்காட்சியை ஆரம்பித்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஈரானின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மன்சூர் குலாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"உலகில் விஞ்ஞான உற்பத்தியில், சீனா மற்றும் ரஷ்யா ஈரானுக்குப் பிறகு பட்டியலில் உள்ளன. ஈரான் பல்கலைக் கழகங்கள் விஞ்ஞானத்தில் பெரும் திறனைக் கொண்டுள்ளன," என குலாமி குறிப்பிட்டார்.
இன்று (24-12-2018) தெஹ்ரானில் ஆரம்பமான ஈரானின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கான 19 வது கண்காட்சி மற்றும் ஆய்வக உபகரணங்கள் மற்றும் பொருட்களின் 6 வது கண்காட்சி பன்னாட்டு நிறுவனங்களையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment