Female Football in Iran
ஃப்ரீஸ்டைல்
மல்யுத்தம் ஈரானின் பாரம்பரிய தேசிய விளையாட்டு என்று கருதப்பட்ட போதிலும் இன்று, கால்பந்தே
ஈரானில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். ஈரானிய ஆண்கள் தேசிய கால்பந்து அணியானது “டீம் மெல்லி” என அழைக்கப்படுகிறது. இதுவே சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஈரானை பிரதிநிதித்துவம் செய்யும் அணியாகும். 2014ம்
ஆண்டிலிருந்து 2018 மே வரை ஆசியாவின் சிறந்த அணியாக ஈரானிய அணியே இருந்துவந்தது. இவ்வளவு
நீண்டகாலம் அதனை தக்கவைத்துக்கொண்ட ஒரே அணியாக ஈரான் அணியே கருதப்படுகிறது.
ஆசியாவின்
அதிசிறந்த கால்பந்தாட்ட அணிகளில் ஈரான் அணியும் ஒன்றாகும். மூன்றுமுறை ஆசிய
சாம்பியன்ஷிப் (1968, 1972, மற்றும் 1976) கோப்பையை
தனதாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் ஈரானின் சிறந்த
விளையாட்டின் காரணமாக 1976ம் ஆண்டு மொன்றியல் நகரில் இடம்பெற்ற போட்டியில் கால்
இறுதிக்கு முன்னேறியது. ஈரான் உலகக் கோப்பைக்கான போட்டிக்கு ஐந்து முறை (1978, 1998, 2006, 2014, மற்றும் 2018) தகுதி
பெற்றது.
ஈரானிய பெண்கள் தற்போது
ஆண்கள் ஆதிக்கத்தில் இருக்கும் கால்பந்து ஆடுகளத்தில் தமது திறமையை
வெளிக்காட்ட முற்படுகிறார்கள். ஆண்கள் கால்பந்து விளையாட்டை ரசிக்க பெண்களை அனுமதிக்கும் அரசின்
தீர்மானத்தை பெரிதுபடுத்திய ஊடகங்கள்
ஆடுகளத்தில் பெண்கள் பெற்றுவரும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கவனத்தில்கொள்ள
தவறியுள்ளது எனலாம்.
ஈரானிய பெண்கள் கால்பந்தாட்ட அணி
நவம்பர் 13 ம் தேதி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு
தாய்லாந்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி
பெற்றது.
கடந்த மாதம், 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கால்பந்தாட்ட
அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) சாம்பியன்ஷிப் போட்டியில் தமது அபார
திறமைகளை வெளிப்படுத்தி, அதிகூடிய புள்ளிகளை பெற்று, அதி உயர்நிலைக்கு வந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த மகளிர் தேசிய அணிக்கு பயிற்சிகளை
வழங்கி தயார்படுத்தும் பொறியியலாரான கடயோன் கொஸ்ரோவ்யார் ஈரானிய பெண்களின் விளையாட்டுத்துறையில்
மாற்றம் ஏற்படுத்தி, அவர்களை சர்வதேச தரத்துக்கு
உயர்த்தும் முயற்சியை FIFA வெகுவாகப்
பாராட்டியுள்ளது.
நாட்டின் 16 வயதுக்குட்பட்ட பெண் கால்பந்தாட்ட அணி, செப்டம்பர் மாதம் தஜிகிஸ்தானில்
இடம்பெற்ற முதல் சுற்றில் இருந்து AFC போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறியுள்ளது. AFC கிண்ணத்துக்கான போட்டி 2019 மார்ச் மாதம் நடைபெறும்.
நாட்டின் பல்வேறு துறையில்
முன்னேறியுள்ள ஈரானிய பெண்கள் இப்போது, இதுவரை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்த விளையாட்டுத்துறையிலும்
தடம்பதித்து வருகின்றனர்.
ஈரானின் வடக்கு காஸ்பியன் கடலை அண்டிய
பகுதியில் பந்தர் அன்ஸாலி என்ற நகரொன்றுள்ளது. இங்கே இரண்டு ஆண்டுகளாக
செயலிழந்ததிருந்த மலவான் விளையாட்டு கழக மகளிர் விளையாட்டு அணியினரிடம் திடீரென
ஒரு புத்தூக்கம் பிறந்துள்ளது எனலாம்.
மலவான் பந்தர் அன்ஸாலி கால்பந்தாட்ட
கலகமானது தெஹ்ரானுக்கு வெளியில் இருந்து வரும் வெற்றிகரமான அணிகள் ஒன்றாக
காணப்படுகிறது.
2002 இல் தொடங்கப்பட்ட இந்த அணி, 25 வீரர்களால் ஆனது, அதே நேரத்தில் இன்னும் படித்துக்கொண்டிருக்கும் மாணவியரும்
இவ்வணியில் அடங்குவர்.
சமீபத்திய மாதங்களில், பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஈரானிய பெண்கள் அணிகள் முன்னேறியுள்ளன.
உலக கோப்பை மற்றும் 2020 ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து வருவதுடன் பல
இளம் பெண்களுக்கு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது.
பெண்கள் லீக்கின் கால்பந்து சீசன்
டிசம்பர் 12 அன்று தொடங்குகிறது.
பந்தர் அன்சாலி நகரில் கால்பந்து
மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். சமீப ஆண்டுகளில், பல பெண் ரசிகர்களை அது ஈர்த்துவரும் அதே நேரத்தில் ஏராளமான இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகள் அதை
தொழில்ரீதியாக விளையாட உத்வேகம் கொண்டுள்ளனர்.
கிளான் மாகாணத்தின் வடக்கில், காஸ்பியன் கடலை அண்மித்ததாக உள்ள பந்தர் அன்ஸாலி ஈரானின் முக்கிய
நகரங்களில் ஒன்றாகும். பல முக்கிய கால்பந்து வீரர்களை இது உருவாக்கியுள்ளது.
நீல நிற ஜெர்சியில் இருப்பவர் பெண்கள்
அணியின் தலைமை பயிற்சியாளர் மரியம் ஈரான்
தூஸ்ட், தனது தொழில் வாழ்க்கையை ஈரானில் கால்பந்தாட்ட வீரராக
செலவழித்துள்ளார், இப்போது புதிதாக புதுப்பிக்கப்பட்ட அணிக்கு தலைமை தாங்குகிறார்.
மரியம் ஈரான் தூஸ்ட், 1976 இல் மலவான் அணி ஹாபிஸ் கிண்ணத்தை சுவீகரிக்க உதவிய, ஈரானின் பிரபல்யமிக்க கால்பந்தாட்ட
வீரர் நுஸ்ரத் ஈரான் தூஸ்ட் என்பவற்றின் மகளாவார்.
மரியம் சிறுவயதிலேயே தனது தந்தையின்
கால்பந்தாட்ட போட்டிகளை ரசிக்க ஆரம்பித்ததாகவும், 'தான் அப்போதே மாபெரும் கால்பந்தாட்ட
ரசிகை' என்று நகைச்சுவையாகக் கூறினார்.
ஒரு விளையாட்டு வீராங்கனையாகவும்
பயிற்சியாளராகவும் 14 ஆண்டுகளை மலவான் கழகத்தில் கழித்துள்ள மரியம், தற்போது புதிய தலைமுறை வீராங்கனைகளை உருவாக்குவதில் சிரத்தை காட்டி
வருகின்றார்.
2016 ஆம் ஆண்டில் மலவான் கழகத்தில் ஏற்பட்ட உள்முரண்பாடு காரணமாக
இரண்டாண்டுகள் அது செயலற்று போனது. அந்த நிலையை விபரிக்கையில் 'கான்கிரீட் சுவர்களால் சூழப்பட்ட கைதி போல, விளையாட இயலாதிருந்தோம்' என்று மரியம் கூறினார்.
இப்போது நாம் மீண்டும் காலத்தில்
இறங்கியுள்ளோம்; தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெறுவதே எமது இலக்கு என்று
மரியம் தெரிவித்தார்.
படங்கள்: முகம்மது
அலி நஜிப்
அல்ஜஸீரா செய்தியைத் தழுவியது.
No comments:
Post a Comment