The mind-blowing Kashan
இஸ்பஹான் மாகாணத்தில் ஈரானின்
மத்திய பாலைவனங்களின் விளிம்பில் அமைந்துள்ள கஷான், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய தளங்களில் ஒன்றாகும்.
கஷான் தரைவிரிப்புகள்,
பட்டு மற்றும் பிற ஜவுளிகள் தயாரிப்பதில்
பெயர் பெற்ற பிரதேசமாகும். இன்று, கஷானில் ஈரானின் ஏனைய பிரதேசங்க போலவே இயந்திரமயமாக்கப்பட்ட கம்பள நெசவுத் தொழிற்சாலைகள்
உள்ளன மற்றும் பளிங்கு மற்றும் தாமிரச் சுரங்கத் தொழிலைக் கொண்டுள்ளது. கஷான் மற்றும்
அதன் புறநகர்ப் பகுதிகளில் 400,000 மக்கள் வசிக்கின்றனர்.
Maranjab Desert மரஞ்சாப் பாலைவனம் கஷானின் புவியமைப்பு |
கஷான் நகரம் மலை மற்றும் பாலைவனம்
என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில், கஷானின் தென்மேற்கில் உள்ள கர்காஷ் மலை (ஈரான் தேசிய ஆய்வகத்தின்
தாயகம், ஈரானின் மிகப்பெரிய வானியல் தொலைநோக்கி அமைந்துள்ள) மற்றும் மேற்கில்
உள்ள ஆர்டெஹால் மலையின் கர்காஸ் மலைத்தொடரின் இரண்டு மிக உயரமான சிகரங்களின் சுற்றுப்புறத்தில்
கஷான் அமைந்துள்ளது. கஷானின் டமாவந்த் என்றும் அழைக்கப்படும் கஷானின், அர்டெஹால் மலைகளின் மிக உயர்ந்த சிகரமாகும் (மத்திய ஈரானில்
உள்ள கர்காஸ் மலைத்தொடரின் இறுதிப் பகுதி).
நகரின் கிழக்குப் பகுதியில்,
கஷான் ஈரானின் மத்திய பாலைவனத்திற்கான
நுழைவாயிலாக அமைந்துள்ளது. நமக் ஏரிக்கு (உப்பு ஏரி) அருகில் அமைந்துள்ள மரஞ்சாப் பாலைவனம்
மற்றும் கரவன்செராய் ஆகியவற்றிற்காக்கவும் கஷான் அறியப்படுகிறது. இன்று மரஞ்சாப் மற்றும்
அதைச் சுற்றியுள்ள ஷிஃப்டிங் சாண்ட்ஸ் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உவகைத்தரும் இடமாக உள்ளது.
சீதோஷ்ணநிலை
நாட்டின் ஏனைய மத்திய நகரங்களைப்
போலவே கஷானின் காலநிலையும் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும், இரவுகள் குளிர்ச்சியாக இருக்கும்.
Kashan Rose Water Festival: கஷான் ரோஸ் வாட்டர் திருவிழா
ஈரான் ரோஸ் வாட்டர் பண்டிகை என்பது
ஈரானில் சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கும் பருவகால மற்றும் பிரபலமான திருவிழாவாகும்.
கஷான் ரோஸ் வாட்டர் பண்டிகை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் நடத்தப்படுகிறது,
கம்சார் ரோஸ் வாட்டர் உலகில்
புகழ்பெற்றது மற்றும் தரத்தின் அடிப்படையில், இது முற்றிலும் நிகரற்றது.
பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வசந்த
காலத்தில் நடைபெறும், பொதுவாக மே நடுப்பகுதியிலிருந்து ஜூன் இறுதி வரை. மேலே குறிப்பிட்டுள்ளபடி,
கஷான் ரோஸ் வாட்டர் திருவிழாவிற்கு
சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய நகரங்கள் காம்சார் மற்றும் நியாசர் பிரதேசங்கள்
முக்கியமானவை. ரோஸ் வாட்டர் தயாரிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காம்சர்,
கஷானிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஈரானின் பண்டைய தோட்டம் என்று
அழைக்கப்படும் நியாசர், கஷானின் மேற்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரோஸ் மற்றும் ரோஸ் வாட்டர் திருவிழாவில், அதன் பிரபலத்தைத் தவிர, நியாசர் அதன் வரலாற்று மற்றும் இயற்கை எழிலுக்கு பிரபலமானது.
ஒவ்வொரு மே மாதத்திலும்,
கஷானில் உள்ள நியாசர் மற்றும்
கம்சார் ஆகியவை டமாஸ்க் ரோஜாக்களின் நறுமண வாசனையால் நிரப்பப்படுகின்றன, அங்கு ரோஸ் வாட்டர் தயாரிக்கும்
பல்வேறு முறைகளையும் நீங்கள் காணலாம்.
ஞாபகார்த்த பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்
கஷான் பக்லாவா: பல ஈரானிய நகரங்களில்
தயாரிக்கப்படும் இனிப்புகளில் பக்லாவாவும் ஒன்று, ஆனால் கஷான் பக்லாவா பிரத்தியேகமான சுவை கொண்டது. இந்த
கஷான் நினைவு பரிசுகளின் தனித்துவமான அம்சம்,. கஷான் பக்லாவா. ஐந்து விதைகள் கொண்டது; வால்நட், பாதாம், ஹேசல்நட்ஸ்,
பிஸ்தா மற்றும் முந்திரி
பருப்பு, இவற்றுடன் ஜாதிக்காயும் இதில்
பயன்படுத்தப்படுகின்றது மேலும் இதில் மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது.
தரைவிரிப்புகள் மற்றும் ஜமக்காலங்கள்: ஈரானின் எல்லா முக்கிய நகரங்களிலும் கம்பள நெசவு பொதுவானது, ஆனால் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவமான வடிவமைப்பு உள்ளது. கஷான் கார்பெட் வடிவமும் மிகவும் அழகானது, அங்கு இயந்திர நெய்த தரைவிரிப்புகளும் உள்ளன.
மட்பாண்டங்கள்: கஷான் நினைவுப் பொருட்களில் மற்றொரு முக்கிய அம்சம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மட்பாண்டக் கலை. பழமையான மட்பாண்டக் கடை கஷானில் பட்டு நாகரிகத்துடன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் காட்டுகின்றன.சுற்றுலா மற்றும் வரலாற்று இடங்கள்
சிலாக் மலை
கிமு 5000 இல், ஈரானிய பீடபூமியின் குகைவாசிகள் காலநிலை மாற்றம் மற்றும்
வயல்வெளிகள் மற்றும் புல்வெளிகளின் உருவாக்கம் காரணமாக புதிய வாழ்க்கைக்காக சமவெளிகளுக்கு
திரும்பத் தொடங்கினர். கஷான் மாவட்டத்தின் வரலாற்று பின்னணி ஈரானின் மத்திய பீடபூமியில்
உள்ள பழமையான மனித குடியிருப்புகளுடன் தொடர்புடையது. சியால்க் மற்றும் கஷான் மனித நாகரிகத்தின் முதல் அடித்தளங்களில் ஒன்றாகும்.
கஷானின் சியால்க் மலையின் தொல்பொருள்
அகழ்வாராய்ச்சியின் படி, அந்தப் பகுதியில் மனிதர்கள் இருந்த
வரலாறு 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
உண்மையில், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சியால்க் மலைகளின் மக்கள், குதிரை மற்றும் சூரிய உருவங்கள் பாதிக்கப்பட்ட, இரும்பு கவசம் மற்றும் வாள்கள் மற்றும் ஈட்டிகள் கொண்ட நீண்ட
தொட்டிகளை தயாரித்திருந்ததற்கான பல்வேறு காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்
ஆரியர்களால் அழித்தொழிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றன.
Niasar Waterfall: நியாசர் நீர்வீழ்ச்சி: |
நியாசர் நீர்வீழ்ச்சி சசானிட்
சகாப்தத்திற்கு முந்தைய அக்கினி கோவிலுக்கு அருகிலுள்ள நீர் ஊற்றிலிருந்து தொடங்குகிறது.
இந்த பழங்கால நீரூற்றின் அனைத்து வரலாறு மற்றும் இயற்கை காட்சிகளை நியாசர் கொண்டுள்ளது.
இந்த நீரூற்று நியாசரின் பரந்த பசுமையான நிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறது. நியாசர்
நீர்வீழ்ச்சியின் நீர்வழித்தடத்தை உருவாக்கிய அடித்தளம் பொதுவாக சுண்ணாம்பு கற்களினால்
ஆனது மற்றும் காலப்போக்கில் ஒரு அழகிய வடிவத்தை உருவாக்கியது. நியாசர் நீர்வீழ்ச்சி
25 மீட்டர் உயரம் கொண்டது; நியாசர் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள
பகுதியின் சுவாரஸ்யமான சூழலின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை ரசிக்க தரமான நேரத்தை
செலவழிக்க சிறந்த தேர்வாகும்.
Fin Garden:: Fin நந்தவனம் |
ஃபின் நந்தவனம் நகரத்திலிருந்து
6 கிமீ தொலைவில் கஷானின்
தெற்கில் அமைந்துள்ளது. இது சஃபாவிட் காலத்திற்கு முந்தையது. இது கஷானின் மிகவும் மதிப்புமிக்க
வரலாற்று இடங்களில் ஒன்றாகும். சில வரலாற்று ஆதாரங்கள் தோட்டத்தின் காலத்தை அல்-புயே
ஆட்சிக்குக் குறிப்பிடுகின்றன. தோட்டத்தின் உள்ளே உள்ள கட்டிடங்களில் நுழைவாயில் மற்றும்
கோபுரம், ஓஷ்டோர்-காலு, தோட்டத்தின் தெற்கில்
உள்ள அல்கோவ், மேற்கில் அருங்காட்சியகம், சிறிய மற்றும் பெரிய குளியலறைகள் மற்றும் கிழக்கு தோட்டத்தில்
உள்ள நூலகம் ஆகியவை அடங்கும்.
நஸீருத்தீன் ஷா தனது அதிபர் அமீர்
கபீரைக் கொன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக நந்தவனத்தில் உள்ள ஃபின் குளியலறை உள்ளது.
ஃபின் நந்தவனத்திற்கு தெற்குப் பகுதியில், சிறிய மற்றும் பெரிய
குளியல் என்று அழைக்கப்படும் இரண்டு குளியல் இடங்கள் உள்ளன.
சிறிய குளியல் அறைகள் சஃபாவிட்
சகாப்தத்திலும், பெரிய குளியல் அறைகள் கஜர் காகாலத்தில் ஃபத்-அலி-ஷாவால் கட்டப்பட்டதாக சரித்திரம்.
பெரிய குளியல் அறைகள் அரண்மனை வாசிகளுக்காக, சிறிய குளியல் அறைகள் சாதாரண மக்களுக்காக என இருந்தது.
Fin நகரின் தெற்குப் பகுதியில்,
செஷ்மே-சுலைமானியா என்று அழைக்கப்படும்
ஒரு நீரூற்றும் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான தோட்ட மரங்கள் 100 முதல் 470 ஆண்டுகள்
பழமையானவை.
The Mosque & School of Agha Bozorg:: Agha பெரிய மசூதி மற்றும் கல்விக்கூடம்: |
கஜர் காலத்தில் கட்டப்பட்ட மிக
அழகான மற்றும் அற்புதமான மசூதிகளில் இதுவும் ஒன்றாகும். கட்டிடத்தின் குவிமாடம்,
அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும்
அதன் வடிவமைப்பு, மிகவும் தனித்துவமானது மற்றும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
இந்த மசூதி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
மாஸ்டர்-மி'மர் உஸ்தாத் ஹஜ் சபான்-அலி என்பவரால் கட்டப்பட்டது. மசூதியும் இறையியல் பள்ளியும்
கஷான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
Boroujerdi House: போரூஜெர்டி இல்லம்: |
போரூஜெர்டி இல்லம் கஜர் காலத்தில்
கட்டப்பட்ட மற்றொரு மதிப்புமிக்க வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்த இல்லத்தின் மிக
முக்கியமான பகுதி அதன் கோடைகால மாளிகையாகும், இந்த இல்லம் ஒரு மணி மண்டபம், ஒரு அறை மற்றும் அற்புதமான வேலைப்பாடுகள்
கொண்ட 5 கதவுகளைக் கொண்டுள்ளது.
கோடைகால வீட்டின் குவிமாடத்தில் பூக்கள், பறவைகள் மற்றும் விலங்குகள்
வரையப்பட்டுள்ளது. மேலும், சுவரில் காஜர் மன்னர்களின் படங்களையும்
பார்க்கலாம். இந்த பழைய வீட்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அதன் அற்புதமான காற்று
கோபுரம். நான்கு பக்கங்களிலும், உள் மற்றும் வெளிப்புற முற்றங்களால்
சூழப்பட்டுள்ளது. போரோஜெர்டி மாளிகை அக்கால அரசர் மற்றும் அரசவையினர் தங்குவதற்கான
முக்கிய மாளிகைகளில் ஒன்றாகும்.
The Historical Bazaar of Kashan: கஷானின் வரலாற்று பஜார்: |
கஷானின் பஜார் ஈரானின் கஷான்
நகரின் மையத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது செல்ஜுக் காலத்தில்
கட்டப்பட்டு, சஃபாவிட் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக
கருதப்படுகிறது. பஜாரில் பிரமிக்கத்தக்க கட்டிடக்கலை உள்ளது.
நகரின் பிரதான வாயிலுக்கு அருகாமையில்
இருந்ததாலும், நகரின் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றியதாலும், பஜாருக்குச் சென்ற வணிகர்கள்
வழக்கமாக இந்த இடத்தில் இளைப்பாறி செல்வது வழக்கம்.
Tabatabaei House: தபதாபாய் வீடு: |
தபதாபாய் வீடு அதன் சிறப்பு அழகு
காரணமாக ஈரானிய வீடுகளின் மணமகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடு பொருஜெர்டி வீட்டிற்கு
அருகாமையில் அமைந்து உள்ளது. நான்கு முற்றங்களைக் கொண்டுள்ள இந்த வீடு, மத்திய முற்றம் வெளிப்புற முற்றம்
மற்றும் இரண்டு உட்புற முற்றங்களை கொண்டதாகும்.
இந்த கட்டிடம் இயற்கை குளிரூட்டல்
மற்றும் வெப்பநிலை சரிசெய்தல் ஆகியவற்றுடன் மற்றொரு முக்கிய நன்மை காணாட் எனப்படும்
நிலத்தடி நீர் சுரங்கத்தை எளிதாக அணுகுவது மற்றும் பூகம்பத்திற்கு எதிராக தாக்குப்பிடித்து
நிற்கும் அமைப்பு கொண்டது.
வீட்டின் உட்புறப் பகுதியானது
மையத்தில் ஒரு எளிய ஐந்து- கதவுகள் கொண்ட அறை மற்றும் வீட்டின் இருபுறமும் இரண்டு முற்றங்களைக்
கொண்டுள்ளது, காற்றை உள்ளே ஈர்க்கும் அடித்தளங்களைக் கொண்டுள்ளது. இது தபதாபாய் குடும்பத்தின்
வசிப்பிடமாகவும் இருந்தது. வீட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள முற்றங்கள் பெரியதாகவும்
அதிக அறைகளைக் கொண்டதாகவும் இருக்கும். உட்புறப் பகுதியின் கீழ், காற்றுப் உள்ளீர்ப்பு வசதிக்காக துளையிடப்பட்ட கூரை, இரு பக்க சுவர்கள் மற்றும் ஒரு குளம் இருப்பது போன்ற அதன் தனித்துவமான
பண்புகளைக் கொண்ட ஒரு பெரிய அடித்தளத்தைக் கொண்டுள்ளது இந்தக் கட்டடம்.
https://en.mehrnews.com/news/185036/Kashan-historical-city-of-carpets-and-pottery