Nezami Ganjavi; Poet for all humanity
12 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பாரசீக முஸ்லிம் கவிஞரான நிஸாமி கஞ்சவி அவர்களின் இயற் பெயர் ஜமால் அத்-தீன் அபு முஹம்மத் இப்னு-யூசுஃப் இப்னு-சாக்கி என்பதாகும். இவர் பாரசீக இலக்கியத்தில் மிகப்பெரிய காதல் காவியக் கவிஞராகக் கருதப்படுகிறார்.
பாரசீக இலக்கிய மரபின் ஜாம்பவான்களில் ஒருவரான கவிஞர் நிஸாமி கஞ்சவி, கோஸ்ரோ மற்றும் ஷிரின் கவிதைத் தொகுப்பில் மெல்லிசை காதல் மற்றும் பாடல் வரிகளை எழுதியவர்.
அவர் பாரசீக காவியத்திற்கு ஒரு புதிய பேச்சுவழக்கு மற்றும் யதார்த்தமான பாணியைக் கொண்டு வந்தார், மேலும் அவரது பாரம்பரிய முறை ஈரான், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், குர்திஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றால் பரவலாகப் பின்தொடரப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஒரு கதைக் கவிஞராக அவர் ஈரானின் வீர பாரம்பரியத்தின் கவிஞரும், 'ஷாஹ்னமா' (அரசர்களின் புத்தகம்) ஆசிரியருமான அபுல்-காசிம் பிர்தௌஸி துசி (சுமார் 940-ca. 1020) மற்றும் திவான்-இ கபீர் (கிரேட் திவான்) மற்றும் கிதாப்-ஐ மஸ்னவி ம’னவி (ஆன்மீக ஈரடி கவிதை) மற்றும் ஆன்மீக கதைக் கவிதையின் வடிவங்களை நடைமுறையில் வரையறுத்த ஜலாலுதீன் ரூமி (1207-1273) ஆகியோருக்கு இடைப்பட்டவராக நிஸாமி கஞ்சவி கருதப்படுகிறார்..
பிர்தௌஸி மற்றும் ரூமி ஆகியோரைவிட விட நிஸாமியின் கதைக் கவிதை மிகவும் விரிவானது. அது மனித உறவுகளின் காதல் பரிமாணங்களையும் வீரத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. நிச்சயமாக, ஆழ்ந்த ஆன்மிக உணர்வு அவரது கவிதைகளில் பரவியுள்ளதைக் காணலாம், இருந்தாலும் அவரது ஆக்கங்கள் ரூமியைப் போல, அவர் தனது படைப்பின் முழு கவனத்தையும் இருப்பின் ஆழ்நிலை பரிமாணத்தின் தூண்டுதலாக இருக்கவில்லை என்பது உண்மையே.
நிஸாமி கவிதை மொழியின் ஒப்பீட்டு விரிவாக்கத்தையும் கொண்டு வந்தார். ஈரானில் அரசவைக் கவிதையின் பாடல் வரிகளை, அதன் சொல்லாட்சி நுணுக்கம் மற்றும் உருவக அடர்த்தியுடன், கதை வடிவத்துடன் வழங்கிய முதல் கவிஞர்களில் அவரும் ஒருவர், மேலும் அவரது கதை மொழி மேடையில் அது சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளைப் போலவே உள்ளது.
நிஸாமியைப் பொறுத்தவரை, பிரசங்கம் அல்லது சொல்லாக்கம் அல்லது குறிப்பாக, கவிஞரின் துல்லியமான, அழகான மற்றும் சுட்டும் மொழி, அவரது பிரதான அல்லது முக்கிய அக்கறை கிட்டத்தட்ட தெய்வீக கவியின் அந்தஸ்தில் உள்ளது.
அவர் தனது புத்தகங்களில் உரைநடை வடிவமைத்தல் மற்றும் கல்வி செயல்பாடு குறித்து மீண்டும் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் அவரது கவிதைகள் தெளிவான ஒழுக்க வழிகாட்டுதலின் ஆதாரமாக உள்ளது மட்டுமல்லாமல் அவரது காலத்திற்கு ஏற்ற ஒரு புரட்சிகரமான மொழியை வலியுறுத்துகிறார். மக்ஸான் அல்-அன்சார் (ஆன்மிக இல்லத்தின் பொக்கிஷம்) நூலில் "இருப்பின் முதல் வெளிப்பாடு பேச்சு .... பேச்சு இல்லாமல் உலகத்திற்கு குரல் இல்லை." அவர் என்று எழுதுகிறார்,
ஐந்து பொக்கிஷங்கள்
பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிஸாமியால் இயற்றப்பட்ட கம்சே (ஐந்து பொருள்கள் கொண்ட தொகுதி) அல்லது பாஞ் Gகஞ்சி (ஐந்து பொக்கிஷங்கள்) என அறியப்படும் ஐந்து நீண்ட கவிதைகள், நேர்த்தி, குணாதிசயத்தின் செழுமை மற்றும் விவரிப்பு ஆகியவற்றிற்கு தங்கள் காலத்திலேயே புதிய தரங்களை அமைத்தன. பல நூற்றாண்டுகளாக பாரசீக மொழியில் எழுதும் கவிஞர்களாலும் பாரசீக மொழியினால் ஆழமாக தாக்கம் பெற்ற உருது மற்றும் ஒட்டோமான் துருக்கியம் போன்ற மொழிகளில் அவை பரவலாகப் பின்பற்றப்பட்டன.
இலக்கிய உலகில் நிஸாமி முக்கியமானவராக கருதப்பட்ட போதிலும், அவரது ஆரம்ப வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாது. ஈரானின் முன் நவீனக் கவிஞர்களைப் பொறுத்தவரையில் நிஸாமியின் வாழ்க்கையைப் பற்றி சமகால ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அவ்வப்போது தோன்றும் அவரது வாழ்க்கை வரலாற்று அறிவிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் வசீகரமான புனைகதைகளே. அவரது கவிதைகளில் மட்டுமே நம்பகமான வாழ்க்கை வரலாற்று தகவல்கள் உள்ளன.
நிஸாமி. அவர் கஞ்சாவில் நகர்ப்புற பின்னணியில் பிறந்தார். அவர் தனது முழு வாழ்க்கையையும் அதே பிராந்தியத்தில் கழித்ததாக தெரிகிறது, ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கேயே உயிர் நீத்தார். ஈரான் அல்லது மத்திய தரைக்கடல் முதல் மத்திய ஆசியா வரையிலான இஸ்லாமிய உலகம் பெரும் கலாச்சார மறுமலர்ச்சி காலகட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் நிஸாமி வாழ்ந்தார்.
அரேபிய மற்றும் பாரசீக இலக்கியங்கள் மற்றும் வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட பிரபலமான மற்றும் உள்ளூர் மரபுகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார் என்பது மட்டுமல்லாமல், கணிதம், வானியல், ரசவாதம், மருத்துவம், தாவரவியல், குர்ஆன் விளக்கவுரை போன்ற பல்வேறு துறைகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்றிருந்தார் என்பதை அவரது கவிதைகள் காட்டுகின்றன. மற்றும் இஸ்லாமிய கோட்பாடு மற்றும் சட்டம், ஈரானிய தொன்மங்கள் மற்றும் புனைவுகள், வரலாறு, நெறிமுறைகள், தத்துவம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை, இசை மற்றும் காட்சி கலைகள் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
அவரது வலுவான சமூக உணர்வு மற்றும் வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட வரலாற்று பதிவுகள் பற்றிய அறிவு, அத்துடன் அவரது செழுமையான பாரசீக கலாச்சார பாரம்பரியம், இஸ்லாத்திற்கு முந்தைய மற்றும் இஸ்லாமிய ஈரானை ஒன்றிணைத்து ஒரு புதிய இலக்கிய சாதனையை உருவாக்குகிறது. அக்கால ஈரானிய கலாச்சாரத்தின் விளைபொருளாக இருந்து, அவர் இஸ்லாத்திற்கு முந்தைய மற்றும் இஸ்லாமிய ஈரானுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்கினார், அதுமட்டுமல்லாமல் ஈரானுக்கும் முழு பண்டைய உலகத்திற்கும் இடையே ஓர் உறவை உருவாக்கினார்.
நிஸாமி பெரும்பாலும் "கம்சே" (ஐந்து பொருள்கள் கொண்ட தொகுதி)க்காக அறியப்படுகிறார், அதன் இரண்டு பிரதிகள் ஈரானில் பாதுகாக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் 2011 இல் யுனெஸ்கோவின் உலகப் பதிவேட்டின் நினைவகப் பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளன.
"கம்சே" என்பது மஸ்னவி செய்யுள் வடிவில் எழுதப்பட்ட மொத்தம் 30,000 ஜோடிகளுடன் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆகும்.
இந்த கவிதைகளில் மக்ஸான் அல்-அஸ்ரார் என்ற உபதேசப் படைப்பு அடங்கும். குஸ்ரோ மற்றும் ஷிரின், லைலா மற்றும் மஜ்னுன் மற்றும் ஹப்ட் பைகார் ஆகிய மூன்று பாரம்பரிய காதல் கதைகள்; அத்தோடு எஸ்கந்தர்-நாமே, இது அலெக்சாண்டரின் சாகசங்களைப் பதிவு செய்கிறது.
ஈரானிய நூலகங்களில் "கம்சே" இன் பல்வேறு பதிப்புகள் உள்ளன, ஆனால் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் மத்திய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பதிப்புகள் மற்றும் தெஹ்ரானில் உள்ள ஷஹீத் முதஹ்ஹரி பள்ளி மற்றும் மசூதியின் நூலகம் ஆகியவற்றில் உள்ளவை யுனஸ்கோவால் பதிவு செய்யப்பட்டவை.
https://en.mehrnews.com/news/184717/Nezami-Ganjavi-Poet-for-all-humanity
No comments:
Post a Comment