Imam Khomeini, the founder of the Islamic Republic, delivered a revolutionary Christmas message to Christians in 1979.
இமாம் கொமெய்னி 1979ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின்
போது விடுத்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தியில், அன்பையும் அமைதியையும் பரப்பிய மற்றும் நீதியை நிலைநாட்ட தீவிர
முயற்சிகளை மேற்கொண்ட சர்வவல்லமையுள்ள இறைவனின் தூதராக இயேசு நாதர் இருந்தார் என்று
கூறினார்.
ஈரானின் அனைத்து மத சிறுபான்மையினரும் தங்கள் மத மற்றும் சமூக
நடவடிக்கைகளைச் செய்ய சுதந்திரம் உடையவர்கள் என்று இமாம் கொமெய்னி வலியுறுத்தினார்,
மேலும் இஸ்லாமியக் குடியரசு அவர்களின்
உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதை அதன் கடமையாகக் கருதுகிறது; ஈரானிய முஸ்லிம்களைப் போலவே அவர்களும்
ஈரானியர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள். (Sahifeh-ye-Imam, Vol.4, page 419)
இஸ்லாமிய அரசாங்கம் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில்
ஒரு ஜனநாயக அரசாங்கம் என்றும், அதன் கீழ், அனைத்து மத சிறுபான்மையினருக்கும் சமமான முழுமையான சுதந்திரம் உள்ளது என்றும்,
ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை
தெரிவிக்க முடியும் என்றும் இமாம் கோமேனி கூறினார். ( Sahifeh-ye-Imam,
Vol.4, பக்கம் 390)
இமாம் கொமெய்னி, இயேசு நாதரைப் பின்பற்றுபவர்களையும், கிறிஸ்தவ உலகத்தையும் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சி
பெறுமாறும், காலனித்துவ மற்றும் சுரண்டும் சக்திகளின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை எதிர்கொள்வதற்கு
ஏகத்துவக் கொடியின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்தார்.
டிசம்பர் 24, 1979 அன்று உலக கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி இமாம்
கொமெய்னி வெளியிட்ட மிகவும் பிரபலமான செய்திகளில் இதுவும் ஒன்றாகும். வரலாற்றுச் செய்தியில்
கூறப்பட்ட சில விடயங்கள் பின்வருமாறு:
உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிறிஸ்தவ நாடுகளுக்கும்,
ஈரானிய கிறித்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள்.
ஏசு கிறிஸ்து ஒரு சிறந்த தூதராக இருந்தார், அவரது நோக்கம் நீதியையும் கருணையையும்
நிலைநிறுத்துவதாகும், மேலும் அவர் தனது பரலோக வார்த்தைகளாலும் செயல்களாலும் கொடுங்கோலர்களைக் கண்டித்து
ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தார்.
பாதிரியார்களே, மதகுருமார்களே, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களே, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக உலகில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு
உங்கள் ஆதரவை வழங்குங்கள், இறைவனுக்காகவும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்காகவும், ஈரானில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும்,
அடக்குமுறையாளர்களைக் கண்டித்தும்
உங்கள் தேவாலயங்களில் ஒரு முறை மணியோசை எழுப்புங்கள்
நீதிக்காகப் பசியாகவும் தாகமாகவும் இருப்பவர்கள், நீதிக்காகப் போராடுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.
இயேசு கிறிஸ்து மற்றும் அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்கு
எதிராக செயற்படும், தேசங்களின் உரிமைகளை பறிக்கும் ஒடுக்குபவர்களுக்கும் மற்றும் அவர்களது ஒற்றர்களுக்கும்
கேடுதான்.
கிறிஸ்துவின் தேசமே, இயேசுவைப் பின்பற்றுபவர்களே, எழுந்து, இறைவனின் ஆவியானவரான இயேசு கிறிஸ்துவின் கண்ணியத்தையும்,
கிறிஸ்தவ தேசத்தையும் பாதுகாத்து,
தெய்வீக போதனைகளின் எதிரிகளையும்,
தெய்வீக கட்டளைகளை நிறைவேற்றுங்கள்; உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் மற்றும் அதன் மதகுருமார்கள்
பற்றிய தவறான எண்ணத்தை ஊட்ட எதிரிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
தேவாலயங்களில் வல்லரசுகளின் தலைவர்களின் பிரசன்னம் அல்லது அவர்களின்
உளவாளிகள் மற்றும் அவர்களுக்காக துரோகமிழைப்போர் செய்யும் பிரார்த்தனைகளால் ஏமாந்துவிடாதீர்கள்.
இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தெய்வீக போதனைகளுக்கு எதிரான,
மக்களை அடக்கி ஆள அதிக பலம் அல்லது
உலகின் மேலாதிக்கத்தை பெறவேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வேண்டுவதில்லை.
அடக்குமுறையாளர்களின் இந்த பாசாங்குத்தனத்தால் ஈரானிய தேசம் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது.
மேலும், உலகில் ஒடுக்கப்பட்டவர்களே, அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட உறுதி கொள்ளுங்கள், மேலும், உலகில் ஒடுக்கப்பட்டவர்களே, அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட எழுந்து ஒன்றுபடுங்கள், ஏனெனில் பூமி இறைவனுடையது, அதன் வாரிசுகள் ஒடுக்கப்பட்ட
மக்களே அன்றி வேறில்லை.
====
ஈரானில் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்றாகும். அவர்களின் மத விதிகளின்படி தமது வாழ்க்கையையே அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது. கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் ஆர்மீனிய மரபுவழி ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பின்பற்றும் ஆர்மீனியர்கள் அல்லது கிழக்கின் அசிரிய தேவாலயத்தைப் பின்பற்றும் அசீரியர்கள். ஆவர் .ஆர்மீனியர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள், அவர்கள் எபிபானியையும் (Epiphany), மற்ற கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இருப்பினும், இந்த பண்டிகை நிகழ்வின் அரவணைப்பும், அழகும் ஆண்டின் கடைசி மாதத்தில் குளிர்காலத்தின் உறையும் குளிரையும் பொருட்படுத்தாது அடுத்த மாதம் ஜனவரி 6 ஆம் திகதி வரை அனைவரையும் ஈர்த்துவிடும்.
இத்தினத்தை குறிக்குமுகமாக கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மிகவும் உற்சாகமாக கழிப்பர். கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வர்.
ஈரானின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 1% க்கும் குறைவானவர்கள் என்றாலும், மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பு ரீதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முஸ்லிம்களுடன் ஒருபோதும் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவர்களது மதத்தைப் பின்பற்ற பூரண உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பல கிறிஸ்த்தவ தேவாலயங்கள் அரச செலவில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment