The keys to the Islamic Republic's permanency: "Islamic" and "Republic"
இமாம் கொமெய்னியின் (ரஹ்)
மறைவின் 32 வது ஆண்டு நினைவையிட்டு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஞாபகார்த்த நிகழ்ச்சியில் ஒரு நேரடி தொலைக்காட்சி உரையில், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் காமேனி இஸ்லாமிய குடியரசின் நிரந்தரத்திற்கான
திறவுகோல் "இஸ்லாமிய" மற்றும் "குடியரசு" என்ற இரண்டு சொற்களில்
உள்ளது என்பதை வலியுறுத்தினார். ஒரு இஸ்லாமிய குடியரசு என்ற இந்த யோசனையை இமாம் கொமெய்னி
(ரஹ்) அவர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தினார் என்பதும், அந்தக் கோட்பாட்டை உணர்ந்து கொள்வதற்கான அடிப்படை இஸ்லாம் மற்றும் மக்களைப் பற்றிய
அவரது ஆழ்ந்த அறிவு என்பதும் மறைந்த இமாமின் மிகப்பெரிய செயல் என்று இமாம் கமேனி கூறினார்.
உண்மையில், உலகின் வேறு எந்த அரசியல் அமைப்பையும் விட இஸ்லாமிய குடியரசின் வீழ்ச்சி குறித்து பல கணிப்புகள் செய்யப்பட்டிருந்தன என்று இமாம் கமேனி குறிப்பிட்டார். “புரட்சியின் முதல் நாளிலிருந்து, இந்த முறையைப் புரிந்து கொள்ளவும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களும், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், இருந்த இஸ்லாம் விரோத சக்திகளும் இஸ்லாமிய குடியரசு இரண்டு மாதங்களுக்கும் மேலாக வாழ முடியாது என்று கூறினர், அவர்கள் விதித்த கெடுக்கள் ஆறு மாதங்கள், அல்லது ஒரு வருடம், என்றும் அவர் குறிப்பிட்டார். இமாம் கொமெய்னியின் (ரஹ்) அவர்களின் தீர்க்கமான தன்மை மற்றும் சக்தி மற்றும் புனித பாதுகாப்பில் ஈரானிய தேசத்தின் வெற்றி ஆகியவற்றின் காரணமாக அந்த கோஷம் குறைந்தது, ஆனால் அது இமாமின் மறைவுக்குப் பிறகு மீண்டும் எழுந்தது. கடைசியாக, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய குடியரசு அதன் 40 வது ஆண்டு நிறைவைக் காணாது என்று ஒரு உயர் பதவியில் இருந்த அமெரிக்க அதிகாரி கூறி இருந்தார். உலகில் வேறு எந்த அரசியல் அமைப்பின் வீழ்ச்சியையும் அழிவையும் பற்றி இதுபோன்ற பல கணிப்புகள் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை.”
அவர் மேலும் கூறுகையில்,
“இருப்பினும், புரட்சியோ அல்லது இமாம் கொமெய்னி (ரஹ்)
அவர்களினால் நிறுவப்பட்ட அமைப்பு கவிழ்க்கப்படவில்லை
என்பது மட்டுமல்லாமல், அது நாளுக்கு நாள் மிகவும் சக்திவாய்ந்ததாகிவிட்டது.
நெருக்குதல்களுக்கு சரணடையவுமில்லை பின்வாங்கவும் இல்லை. மேலும் அது எவ்வளவு சுதந்திரமானது
என்பதை நிரூபிப்பதில் வெற்றி நடை போடுகிறது.”
"இஸ்லாமிய" மற்றும் "குடியரசு" என்பனவே இஸ்லாமிய புரட்சியின்
உயிர்வாழ்வைக் தக்கவைக்கும் இரண்டு முக்கிய கூறுகள் என்றும் அவர் கூறினார். கிழக்கு
மற்றும் மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு அரசியல் கோட்பாடுகளுக்கு முகங்கொடுத்து,
இஸ்லாமிய குடியரசு கோட்பாட்டை வகுத்ததே இமாம் கொமெய்னி
(ரஹ்) அவர்களின் மிகப்பெரிய சாதனையாகும் என்று இமாம் கமேனி சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஆதாரங்களை மேற்கோள் காட்டி,
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இஸ்லாமிய குடியரசு என்பது
மேற்கத்திய தத்துவத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட ஒரு யோசனை அல்ல என்பதை வலியுறுத்தினார்.
மாறாக, இது இமாம் கொமெய்னி (இறைவன்
அவர் மீது அருள்பாலிக்கட்டும்) அவர்களுக்கு இஸ்லாத்தில் இருந்த ஆழ்ந்த புரிதலை அடிப்படையாகக்
கொண்ட ஒரு புதிய கோட்பாடாகும், என்றார்.
இமாம் கொமெய்னியின் அவர்களின் காலத்தில் ஈரானின் ஜனாதிபதியாக
இருந்த, புரட்சியின் தற்போதைய தலைவர்
மேலும் கூறுகையில், “இமாம் நம்பிய இஸ்லாம் ஆணவ சக்திகளுக்கு
எதிரானது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டிற்கு எதிரானது.
இது எதிரியின் முன் மண்டியிடுவதை தடுக்கிறது. இமாம் நம்பிய இஸ்லாம் ஊழலுக்கு மற்றும் நியாயமற்ற சலுகைகளை வழங்குவதற்கும் எதிரானது.
சில துறைகளில் ஊழல் தொடர்பாக சில நேரங்களில் வெளிப்படும் விஷயங்கள் நிச்சயமாக இஸ்லாத்துக்கு
முரணானது. இஸ்லாமிய அரசாங்கம் ஊழலை எதிர்த்துப் போராடும் அரசாங்கம். இஸ்லாம் வறிய மக்களுக்காக
போராடும் அதேவேளை வர்க்க ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் மார்க்கமாகும்."
தேர்தல்களில் பங்கேற்பதின் முக்கியத்துவத்தை விவரிகையில், பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழி என்று நன்கு அறியப்பட்ட முறைமையை தேர்வு செய்வதிலும் “மற்றவர்கள் பங்கேற்க ஊக்குவிப்பதற்கும் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும், சகலரும் அதில் பங்கேற்க வேண்டும்.” (இம்மாதம் இஸ்லாமிய குடியரசில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது). "தேர்தல்களில் பங்கேற்பது புனித வசனத்தின் வெளிப்பாடாகும் என்று அவர் கூறினார்,"
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ
ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர 103: 2-3.
சரியான தலைவர் ஒருவரை ஒருவரை தேர்வு செய்ய கவனமாக இருக்க
வேண்டியதன் அவசியத்தையும், வேட்பாளர்களின் கடந்தகால செயல்திறனில்
கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்திய அவர்,
“ஒருவரின் வெறுமனே வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நம்ப
முடியாது.
அணுசக்தி பிரச்சினை தொடர்பாக,
தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன,
வார்த்தைகளை விட நடவடிக்கைகள் எப்போதுமே சொற்களை விட எப்போதுமே
மகிகைத்து நிற்கின்றன என்றும் ஒருவர் வழங்கும் வெறும் வாக்குறுதிகளை நம்ப முடியாது
என்றும் நான் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.”
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியாத
வாக்குறுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட இமாம் கமேனி அவர்கள் முன் இன்னொரு முக்கியமான
கோரிக்கையை வைத்திருந்தார், “ஒவ்வொரு வேட்பாளரும் சமூக நீதிக்காகவும்,
ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கு இடையிலான இடைவெளியைக்
குறைக்க பாடுபட வேண்டும்."
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழி உள்நாட்டு
உற்பத்தியை வலுப்படுத்துவதாகும் என்று கூறிய இஸ்லாமிய புரட்சியின் தலைவர்,
“ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும்,
உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கும்,
கடத்தல் மற்றும் தேவையற்ற இறக்குமதியை எதிர்த்துப் போராடுவதற்கும்
உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டை அவர்கள் இப்போது கூற வேண்டும், ஏனெனில் அவர்கள் வென்ற பிறகு
சொன்னதை செய்யாவிட்டால், மேற்பார்வை அமைப்புகள் அதுதொடர்பாக அவர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம்.”
தனது உரையின் முடிவில், சில வேட்பாளர்களின் தகுதி உறுதிப்படுத்தப்படாத பிரச்சினையில் இமாம் கமேனி தொட்டுக்காட்டி
பேசினார். “வடிகட்டும் செயல்பாட்டில்,
தகுதி உறுதிப்படுத்தப்படாதவர்களில் சிலர் நியாயமற்ற முறையில்
நடத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார், சிலர் தொடர்பாக அல்லது அவர்களது குடும்பத்தினர் தொடர்பாக
சில விஷயங்கள் கூறப்பட்டன, அவை உண்மையற்றவை. இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கௌரவமான, மதிப்புமிக்க குடும்பங்கள் உள்ளன.
சில அறிக்கைகள் பின்னர் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டன. இருப்பினும், அக்குற்றச்சாட்டுக்கள் இணையத்தில்
வெளியிடப்பட்டன. இதைத்தான் நான் சொல்கிறேன்.
தனிநபர்களின் நற்பெயர்களைப் பாதுகாப்பது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். சில விஷயங்கள்
சில தனிநபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கூறப்பட்டன, ஆனால் இவை பின்னர் தவறானவை என்று
நிரூபிக்கப்பட்டன. அவர்கள் இதற்கு ஈடுசெய்து அந்த நபர்களின் மரியாதையை மீட்டெடுக்க
வேண்டும். இதைச் செய்ய இந்த அமைப்புகளை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தலைவர் கூறினார்.
https://english.khamenei.ir/news/8520/The-keys-to-the-Islamic-Republic-s-permanency-Islamic-and
No comments:
Post a Comment