Monday, September 7, 2020

மக்கா இமாமின் உரை சியோனிச ஆட்சியுடன் சவுதி உறவுகளை இயல்பாக்குதலுக்கு முன்னோடி

 Mecca Sermon Hints at Saudi Normalization With Zionist Regime

மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் ஆற்றிய குத்பா உரை சியோனிச ஆட்சியுடன் சவுதி உறவுகளை இயல்பாக்குதலுக்கு முன்னோடியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக ஊடகங்களில் விவரிக்கப்படுகின்றது.

சுதைஸ் கடந்த வெள்ளிக்கிழமை அவரது குத்பா பிரசங்கத்தில் முஸ்லிமல்லாதவர்களுதானான உரையாடலையும் தயவையும் யூதர்களைப் பற்றி சிலாகித்தும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சியோனிச ஆட்சி இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கான திட்டங்களை அறிவித்த நான்கு வாரங்களுக்குள், சவூதி அரேபியாவும் இதைப் பின்பற்றுமா என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், இவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

ஒருவருக்கொருவர் உறவு பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் ஆரோக்கியமான பரிவர்த்தனைகளுடன் இணைந்திருப்டது தொடடர்பாக இருதயத்தில் தவறான எண்ணங்கள் கொல்வதைத் தவிர்க்குமாறு இமாம் வழிபாட்டாளர்களை கேட்டுக்கொண்டார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக முன்வைத்து, முஸ்லிமல்லாதவர்களுடன் நல்ல உறவைப் பேணுவதில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"ஆரோக்கியமான மனித உரையாடலை புறக்கணிக்கும்போது, அது நாகரிகங்களின் மோதலுக்கு இட்டுச் செல்வதாகவும் மேலும் வன்முறை, ஒதுக்கல் மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் முடியும்" என்று சுதைஸ் கூறினார்.

குறிப்பிட்ட இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்தன, பல பயனர்கள் இஸ்லாத்தின் புனிதமான மஸ்ஜிதின் தளத்தை தவறாக பயன்படுத்தியதாக சுதைஸ் மீது குற்றம் சாட்டினர்.

அல்-குத்ஸில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜிதின் நிலையைப் பற்றி குறிப்பிடுகையில் சுதைஸ் "அது கைதியாக பிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

"இது இஸ்லாமிய மக்களுக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கும் ஒரு பிரச்சினை, தோன்றும் புதிய போராட்டங்களுக்கு மத்தியில் அதை மறந்துவிடக் கூடாது" என்றும் அவர் வழிபாட்டாளர்களிடம் கூறினார். "இது மனதில் வைக்கப்பட வேண்டும், ஆனால் ஊடகங்களில் மிகைப்படுத்தல்கள் இல்லாமல் அது விமர்சிக்கப்பட வேண்டும்" என்றார்.

இந்நிலையில், சியோனிச ஆட்சிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவு இயல்பாக்க ஒப்பந்தம் இஸ்லாத்தின் மூன்றாவது புனித தளமான அல்-அக்ஸாவின் முக்கிய நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா, சியோனிச ஆட்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின் தெளிவற்ற சொற்கள், யூதர்களின் பிரார்த்தனைக்காக அல்-அக்ஸா கதவுகளைத் திறந்து இறுதியில் நிலைமையை மாற்றுவதற்கான ஒரு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கடந்த வாரம் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது யூதர்கள் இந்த தளத்தை அணுக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், சியோனிச ஆட்சிக்கும் அல்-குத்ஸில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் புனித தளங்களின் உத்தியோகபூர்வ பாதுகாவலரான ஜோர்டானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

தனது பிரசங்கத்தின் முடிவில், "அல்-அக்ஸா புனித மஸ்ஜிதை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டு", அதை "மறுமை நாள் வரை கண்ணியத்துக்குரிய இடமாக" வைத்திருக்குமாறு இறைவனை வேண்டினார்.

அவரது இந்த இரட்டை நிலைப்பாடு சமூக ஊடக பயனர்களால் கடுமையாக விமர்சிக்கடுகிறது, அவர்களில் பலர் பாலஸ்தீன் விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினர்.

சுதைஸ் இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது இது முதல் முறை அல்ல.

2017 ஆம் ஆண்டில், “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மற்றும் சவுதி அரேபியா ஆகியவை உலகை அமைதிக்கு வழிநடத்துகின்றன" என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதற்காகவும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் உள்ள ஒரு மசூதியில் அவர் ஆற்றிய உரையின் போது "யெமனிலும் கட்டாரிலும் உள்ள உங்கள் சகோதரர்களை நீங்கள் புறக்கணித்து அவர்கள் பட்டினி கிடக்கும் போது அமைதி குறித்து எங்களுக்கு எவ்வாறு பாடம் நடத்த முடியும்?" என்று அங்கு ஒரு பார்வையாளர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் திக்குமுக்காடிப்போனார்.

சவுதி அரேபியாவுக்கு சியோனிச ஆட்சியுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை என்று கூறப்பட்டாலும் பாரசீக வளைகுடா அரபு ஆட்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் சியோனிச ஆட்சியுடன் பெருகிய முறையில் பொது உறவுகளைக் வளர்த்து வருகின்றன. சவூதி அரசின் அங்கீகாரமின்றி இவ்வாறு இடம்பெறுகின்றது என்று நம்புவதிற்கில்லை.

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் சியோனிச பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க வாஷிங்டன் டி.சி.க்கு திட்டமிட்டிருந்த பயணத்திலிருந்து, அச்சத்தின் காரணமாக விலகியதாக, மிடில் ஈஸ்ட் ஐ (Middle East Eye) சஞ்சிகை முன்பு வெளிப்படுத்தியது.

டிரம்பும் அவரது மருமகனும் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னரும் ஒரு இளம் அரபு 'சமாதானத்தை விரும்பும் இளவரசராக' பின் சல்மானின் இமேஜை கட்டியெழுப்புவதற்கு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சியோனிச ஆட்சிக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு பிராந்திய ஆதரவை உயர்த்துவதற்கும் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று மிடில் ஈஸ்ட் ஐ (Middle East Eye) இடம் தெரிவிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

http://kayhan.ir/en/news/82516/mecca-sermon-hints-at-saudi-normalization-with-zionist-regime

இது இவ்வாறிருக்கையில், ஈரானிய மஜ்லிஸ் சபாநாயகரின் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிராந்திய நாடுகளும் இஸ்லாமிய உம்மாவும் பாலஸ்தீனப் பிரச்சினையை தங்களது முக்கிய முன்னுரிமையாகக் கருதுவதாகவும், புனித குத்ஸ் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பிரதேசங்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவதாகவும் கூறினார். .

அண்மையில் பெய்ரூட்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் தலைவர்களின் சந்திப்பு பாலஸ்தீனத்தின் எதிர்காலத்திற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்றும், இனவெறி, குற்றவியல் மற்றும் பயங்கரவாத ஆக்கிரமிப்பு ஆட்சியின் பிடியிலிருந்து பாலஸ்தீனிய பிரதேசங்களை விடுவிப்பதற்கான முயற்சி என்றும் அமீர்-அப்துல்லாஹியான் கூறினார்.

பாலஸ்தீனிய இன்திபாதாவை ஆதரிப்பதற்கான நிரந்தர செயலகத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் அமீர்-அப்துல்லாஹியான், பாலஸ்தீனியர்களின் விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்பின் இயக்கவியல் ஆகியவை நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ட்ரம்பின் சதி திட்டத்தை தோற்கடிக்கும் என்றும் கூறினார்.

பாலஸ்தீனிய குழுக்கள் ஒற்றுமையும் எதிர்ப்பின் செயல்பாட்டில் கவனம் செலுத்துவதும் ஆக்கிரமிப்பாளருடனான சமரசத்தை ரத்துசெய்து, புதிய பிரபலமான இன்திபாதாவைத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சியோனிச அபகரிப்பாளர்கள் புரிந்துகொள்ளும் ஒரே மொழி எதிர்ப்பு மற்றும் சக்தியின் மொழி என்பது அனைத்து பாலஸ்தீனியர்களுக்கும் தெளிவாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

பிராந்தியத்தை சீர்குலைப்பதில் சியோனிஸ்டுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை முறியடிப்பது பற்றி குறிப்பிடுகையில், கடந்த 40 ஆண்டுகளில் ஈரான் பாலஸ்தீனிய மக்களுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் சளைக்காது ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார்.

https://en.irna.ir/news/84028814/Palestine-main-priority-of-Muslim-World-Official

இதனைத் தொடர்ந்து லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் பொதுச்செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் பணியகத் தலைவர் மற்றும் பெய்ரூட்டில் உள்ள அவரது துணைத் தலைவர் சலே அல்-அரோரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


தங்கள் பொதுவான எதிரியான சியோனிச ஆட்சியின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தமக்குள் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக லெபனான் அரபு மொழி ஆன்லைன் செய்தித்தாள் எல்னாஷ்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் "பாலஸ்தீனம், லெபனான் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் சமீபத்திய அரசியல் மற்றும் இராணுவ முன்னேற்றங்களை உள்ளடக்கியது" என்று ஹிஸ்புல்லாஹ் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

ஹிஸ்புல்லாஹ் அறிக்கை "அனைத்து அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு சியோனிச எதிர்ப்பு அச்சின் வலிமையை" மீண்டும் வலியுறுத்தியது. இது ஹிஸ்புல்லாஹ்விற்கும் ஹமாஸுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவது, சில அரபு ஆட்சிகளுக்கும் சியோனிச ஆட்சிக்கும் இடையில் வளர்ந்து வரும் தொடர்பு இயல்பாக்கும் போக்கு மற்றும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

பாலஸ்தீனர்கள் மற்றும் பரந்த முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எதிர்ப்பு முன்னணியின் உறுதியும் வலிமையும் தேவை என்பதை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஒரு அறிக்கையில், இரு குழுக்களின் உறவுகள் "நம்பிக்கை, சகோதரத்துவம், ஜிஹாத் (இறை  பாதையில் போராட்டம்), பொதுவான உடன்பாடுகள் மற்றும் அவர்களுக்கு இடையே [இருக்கும்] ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளின் விரிவாக்கம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன" என்று ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தது.

இவ்விரு இயக்கங்களும் அந்தந்த நாடுகளில் சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக காசா பகுதியை ஹமாஸ் பாதுகாக்கிறது. டெல் அவிவ் பாலஸ்தீன நிலப்பரப்பை இடைவிடாத தாக்குதல்கள், மூன்று முழுமையான போர்கள் மற்றும் 2007 முதல் முடக்கப்பட்ட முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது.

2000 களில் லெபனானை குறிவைத்து சியோனிச ஆட்சி மேற்கொண்ட இரண்டு போர்களை ஹிஸ்புல்லாஹ் எதிர்த்துப் போராடியது, ஒவ்வொரு முறையும் சியோனிச ஆக்கிரமிப்பு ஆட்சியின் இராணுவத்தை பின்வாங்குமாறு செய்தது.

அனைத்து பாலஸ்தீனிய பிரிவுகளின் கூட்டத்திற்காக இஸ்மாயீல் ஹனியே 27 ஆண்டுகளில் முதல் முறையாக லெபனான் தலைநகருக்கு பயணம் செய்துள்ளார். லெபனான் 174,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய அகதிகளைக் கொண்டுள்ளது.

பாலஸ்தீனிய பிரிவுகளுக்கிடையேயான இந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்க ஏற்பாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சியோனிச ஆட்சி இடையே தொடர்பு இயல்பாக்கலுக்கிடையே இடம்பெறுகின்றன.

அனைத்து பாலஸ்தீனிய பிரிவுகளும் ஐக்கிய அரபு எமிரேட்-சியோனிச ஒப்பந்தத்தை ஏகமனதாக கண்டித்துள்ளன, இது ஒடுக்கப்பட்ட தேசத்தின் முதுகில் குத்திய செயலாகவும், ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீனிய போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாகவும் விவரித்தது.

http://kayhan.ir/en/news/82518/hezbollah-hamas-stress-unity-against-zionist-regime

 

No comments:

Post a Comment