Wednesday, May 19, 2021

யுத்தத்தின் வலி என்னவென்று இஸ்ரேலுக்கு இப்போது புரிந்திருக்கும்

 Israel now understands the pain of war


பயந்துபோன எனது 6 வயது மகனைப் பார்த்துக்கொண்டு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன், அவன்  காதுகளுக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு, இஸ்ரேலின் குண்டுவெடிப்பின் சத்தங்களைத் தடுக்க முயற்சிக்கிறார், எனது இரண்டு மகள்கள், 13 மற்றும் 10 வயது மற்றும் எனது மனைவி அதிர்ச்சியினால் உறைந்துபோயுள்ளனர். இந்த முகங்கள் இப்போது எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரியாத கவலையைக் காட்டுகின்றன. எனது இரண்டு மூத்த மகன்கள், 16 மற்றும் 15, திகைத்து, அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் காசா பகுதியில் முந்தைய மூன்று தாக்குதல்களின் நினைவுகளையும், நாங்கள் இழந்த குடும்ப உறுப்பினர்களையும் நினைவுபடுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். காஸா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினதும் உணர்வுகள் இவை.


பாலஸ்தீனியர்களான நாங்கள் பல தசாப்தங்களாக அவமானம், அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்களுடனேயே வாழ்ந்து வருகிறோம். 1948 இல், நாங்கள் எங்கள் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம்; 600 க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன; பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நிலைக்குழையப்பட்டனர் . கிட்டத்தட்ட எட்டு இலட்சம் பேர் உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர்.

இந்த அநியாயம் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன்னாலேயே நடந்தது. எங்கள் அசல் தாயகத்தின் ஐந்தில் ஒரு ஒரு பகுதியை ஒரு இறையாண்மை கொண்ட அரசாக எங்களுக்கு தருவதாக வாக்குறுதியளித்தனர். இரு மாநிலம் என்ற தீர்வை, வேறு வழியின்றி, பாலஸ்தீனியர்கள் 1990 களில் நம்பினர்.


இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வாக்குறுதியளிக்கப்பட்ட பாலஸ்தீன மாநிலத்தின் இன்றைய நிலைமைகளைப் பார்க்கிறோம், பாலஸ்தீனிய வீடுகளின் இடிபாடுகளில் கட்டப்பட்ட குடியேற்றங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான யூத குடியேற்றவாசிகளால் மேற்குக் கரை என்று பிரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம், நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீன மக்கள் நரகத்தில் வாழ்கின்றனர். இந்த நிலையை உருவாக்கியோர் யார்?

காஸா பகுதி 14 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகையின் கீழ் இருப்பதையே காண்கிறோம், இங்கு சகல அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது; அது மட்டுமல்லாமல், சனநெருக்கமான இந்த சிறிய பகுதியில் மூன்று பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது, அழித்தது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிழக்கு ஜெருசலம், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் புனிதமான தலமாகும்.அங்குள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, ஆக்கிரமித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

ஒரு வாரத்திற்கு முன்பு, பாலஸ்தீனிய குடும்பங்களின் அதிகமான வீடுகளை கைப்பற்ற முயன்ற இஸ்ரேலிய குடியேறிகள் ஷேக் ஜர்ராவைத் தாக்கத் தொடங்கினர். எல்லோரும் அதைப் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் யாரும் தலையிடவில்லை.

புனிதமான ரமலான் மாத மாலை ஒன்றில், (முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலமான) அல்-அக்ஸாவில் பிரார்த்தனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன வழிபாட்டாளர்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு செய்தது. இதன்போது இஸ்ரேல் அதன் இராணுவ சக்தியை மிருகத்தனமாக பயன்படுத்துவதை அனைவரும் பார்த்கொண்டு இருந்தார்கள். அதைத் தடுத்த நிறுத்த எவரும் முன்வரவில்லை.

ஷேக் ஜர்ரா மற்றும் புனித அல்-அக்ஸா வளாகத்தின் இஸ்ரேல் மேற்கொண்ட வன்முறைக் காட்சிகள் வரலாற்று பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாமல், உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பாலஸ்தீனியர்களின் உள்ளங்களில்  நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச்செய்துள்ளன.


இந்த சம்பவங்கள் எம்மை பொறுமையின் எல்லையைக் கடக்கச் செய்தன. அக்கா, ஜாஃபா, நஸரத் மற்றும் மேற்குக் கரையில் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம், ஜெரூஸலத்தில் நடந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டன. யுத்தத்தின் வலி என்னவென்று இஸ்ரேலுக்கு இப்போது புரிந்திருக்கும்.

டாக்டர் யாசர் அபு ஜமீ

https://www.counterpunch.org/2021/05/17/this-must-end/


No comments:

Post a Comment