Islamic Unity Vital for Defeating Islamophobia
By: Seyyed Ali Shahbaz
மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ
جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;
நீங்கள் பிரிந்தும்
விடாதீர்கள்; (3:103)
இங்கு எல்லாம் வல்ல படைப்பாளனின் வார்த்தைகள் மிகத் தெளிவாக உள்ளன. ஈமான்
கொண்டோர் பிரிவுகளாகப் பிளவுபடாமல், உறுதியான உம்மாவாகப் பிணைந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட புனித குர்'ஆன் வசனம் தொடர்ந்தும்
இவ்வாறு கூறுகிறது:
وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً
فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ
وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ
كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை)
நினைத்துப் பாருங்கள்; நீங்கள்
பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய்
ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை
மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன்
உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன்
ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
குறிப்பிட்ட புனித குர்ஆனின் வசனம் எந்த மயக்கமும் அற்ற மிகத்தெளிவான
ஒன்றாகும். மனிதகுலம்
முழுவதற்குமான மகோன்னத நபித்துவத்தை நிறைவுசெய்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது 23
வருட நபித்துவ வழிகாட்டலுக்குப் பின்
முஸ்லிம்களை இருட்டில் விட்டுவிட்டு செல்லவில்லை.
காத்தமுன் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தில் தனது
உம்மத்தை நோக்கி இவ்வாறு கூறினார்கள்:
إنّي تاركٌ فيكُم الثَقَلَيْن كتابَ الله وَعِتْرَتي أهلَ بَيْتي ما
إِنْ تَمَسَّكْتُمْ بهما لَنْ تَضلُّوا أبَداً وإنّهما لَنْ يَفْتَرِقا حَتى
يَرِدا عَلَيَّ الحَوْضَ
"நான் உங்கள்
மத்தியில் பெறுமதிமிக்க இரு விடயங்களைவிட்டுச் செல்கிறேன். அவையாவன அல்லாஹ்வுடைய
வேதமும், எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துமாகும்.
அவ்விரண்டையும் நீங்கள் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும்
வழிதவறமாட்டீர்கள். இவ்விரண்டும் ஹவ்ழுல் கௌஸர் (எனும் சுவனத்தின் நீர்தடாகத்தில்
நீர் அருந்த) என்னிடம் வரும்வரை ஒன்றைவிட்டு ஒன்று பிரியமாட்டாது".
(ஆதாரம்: ஜாமிஉத் திர்மிதி, சுனனுத் தாரமீ, முஸ்னத் அஹமத்
மற்றும் அல்-முஸ்தத்ரக் லில் ஹாகிம்)
ஷீஆ - சுன்னாஹ் பேதமின்றி அனைத்துத்
தரப்பினராலும் பதியப்பட்டுள்ள நபிகளாரின் இந்த பிரபலமான ஹதீஸ் "அல்லாஹ்வின்
கயிறு" என்பதன் வரைவிலக்கணத்தை சந்தேகமற தெளிவுபடுத்துகிறது.
ஒரு இழை கயிறு என்று அழைக்கப்படுவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம்,
இது அரபு, தமிழ் அல்லது
ஆங்கிலம் உட்பட எந்த மொழியின் அகராதிகளின்படி, கயிறு என்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுதியான இழைகள்
ஒன்றோடொன்று இறுக்கமாக முறுக்கப்பட்ட அல்லது ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்
என்பது தெளிவு.
ஆகவே, சன்மார்க்க
விரிவுரையாளர்களது விளக்கங்களின் அடிப்படையில், அல்லாஹ்வின் கயிறு என்பது புனித குர்ஆனும்
ஆசீர்வதிக்கப்பட்ட அஹ்ல் அல்-பைத்தும் ஆகும். அவை இரண்டும் மனிதகுலத்தின்
இரட்சிப்புக்காக இறுக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன என்று குறிப்பிட்ட ஹதீஸ் கூறுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வழிகாட்டுதலுக்கு திருக்குர்ஆன் மட்டும் போதுமானது அஹ்ல் அல்-பைத்தின் அவசியமற்றது
என்று யாராவது கூறினால், இந்த ஹதீஸின்
அடிப்படையில் அவர் தவறான பாதையில் இருக்கின்றார் என்றே அர்த்தப்படும். அவ்வாறானோர்
நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் மற்றும் றஸூலுக்கும் கீழ்ப்படியாதோர் ஆகும்.
இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சொர்க்கத்தை நோக்கிய நேரான மற்றும் சரியான பாதையை கடைபிடித்தல், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக,
நடைமுறை வழிகாட்டிகளின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றுவது அவசியம், அவர்கள் இறை நியதிக்கமைய
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் தவறுகளில் இருந்து
தூய்மைப் படுத்தப்பட்டவர்கள்.
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, இஸ்லாம்
வெறுமையாவதிலிருந்து காப்பாற்றப்படுவதற்காகவும் அதன் தெய்வீக
உள்ளடக்கங்களிலிருந்து பயன்பெறுவதற்காகவும், புனித குர்'ஆணை கிஞ்சத்தும் பிசகாமல் தம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட அஹ்ல் அல்-பைத்
இனது வழிகாட்டல், நாம் வழி தவறி
செல்வதில் இருந்து எம்மைக் காப்பாற்றுகிறது. இமாம்களின் ஞானம், அறிவு, இறையச்சம், வழிபாடு, பொறுமை, வீரம், பேச்சாற்றல்,
சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, அரசியல் சாமர்த்தியம், நிர்வாகம்,
நீதி உணர்வு, சுய தியாகம் ஆகியவற்றால் அஹ்ல் அல்-பைத் இன் வாழ்க்கை
நிறைந்துள்ளது; இதற்கு கர்பலா
முதன்மையான உதாரணம்.
அதனால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிரியாவிடை ஹஜ் யாத்திரையின் போது அரஃபா தினத்தன்று (9வது துல்-ஹஜ்) அரஃபா சமவெளியில் கருணை மலையில் (ஜபல் அர்-ரஹ்மா) தனது பிரசங்கத்தில் தொடங்கி, அவரது வாழ்க்கையின் கடைசி தருணம் வரை ஹதீஸ் தக்கலைனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஹிஜ்ரி 10, துல்-ஹஜ் 18 அன்று கதீர்-கும் நிகழ்வு, அதற்கு சிகரம்தொட்ட தருணமாக இருந்தது.
எனவே, இஸ்லாமிய ஒற்றுமை
வாரத்தை அனுஷ்டிக்கும் நாம், இஸ்லாத்தின்
அனைத்து பிரிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான
ஒரே இடம், அனைத்து பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
தக்கலைனின் தளமாகும் என்று நம்புகிறோம். அல்லாஹ்வின் உறுதியான கயிறு என்பது அனைத்து
மனிதகுலத்திற்கும் அல்லாஹ்வினால் வெளிப்படுத்தப்பட்ட இறுதி வார்த்தை (புனித
குர்ஆன்) மற்றது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அஹ்ல்-பைத் ஆகும்.
இஸ்லாமிய ஒற்றுமை வாரம் என்பது அஹ்லுஸ்ஸுன்னாஹ் மற்றும் அஹ்லுஸ் ஷீஆ முஸ்லிம்களால் ரபி அல்-அவ்வல்
மாதத்தின் இரண்டு தேதிகளை முறையே 12-17
ஆகிய தினங்களை உள்ளடக்கிய நாட்களை காருண்ய
தூதரின் பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றனர்.
சுன்னத் வல் ஜமாத்தினர் றஸூலுல்லாஹ்வினது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் அவருடன்
பழகிய நபித் தோழர்களின் அறிவிப்பின்படி, ரபீயுல் அவ்வல் 12ம் நாளை றஸூலுல்லாஹ்வின் பிறந்ததினமாக கருதும் அதே
வேளை ஷியா முஸ்லிம்கள் அஹ்ல்
அல்-பைத், குடும்ப அறிவிப்பின்படி
ரபி அல்-அவ்வல் 17 அன்று றஸூலுல்லாஹ்வின்
பிறந்ததினமாக கருதுகின்றனர்.
ஆயினும்கூட, அனைத்து
இஸ்லாமியர்களும், அவர்களது
சிந்தனைப் பள்ளி எதுவாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் ஒரே படைப்பாளனான அல்லாஹ்வையே வணங்குகிறார்கள், மேலும் இஸ்லாத்தின் உலகளாவிய பணியின் இறுதி
மற்றும் முத்திரை தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கருதுகின்றனர். மேலும்,
அவர்கள் புனித குர்ஆனை அனைத்து மனிதகுலத்தின்
வழிகாட்டுதலுக்கான இறுதி வெளிப்பாடாகக் கருதுகின்றனர்.
அனைத்து முஸ்லிம் பிரிவுகளுக்கும் ஐந்து நேர தொழுகையின் போது முன்னோக்கும்
கிப்லா மக்காவில் உள்ள புனித காபா ஆகும். மேலும், அவர்கள் துல்-ஹஜ் மாதத்தின் அதே தினங்களில் வருடாந்திர ஹஜ் புனித
யாத்திரை மேற்கொள்கின்றனர், மேலும் ஒவ்வொரு
ஆண்டும் ரமலான் மாதத்தில் கடமையான நோன்புகளை ஒன்றாகவே கடைப்பிடிக்கின்றார்கள்.
இந்த மறுக்க முடியாத உண்மைகளின் அடிப்படையில், பிற மதங்களின் பல்வேறு பிரிவுகளைப் போலல்லாமல், முஸ்லிம்களிடையே பெரிய வேறுபாடுகளைக் காண
முடியாது. சுன்னி அல்லது
ஷியா முஸ்லிம்களில், இரண்டாம் நிலை விடயங்களில் மட்டுமே வேறுபாடுகள்
காணப்படுகின்றன, அந்த வேறுபாடுகள்
கூட பகுத்தறிவுடன் கையாளப்பட்டால், இஸ்லாமிய உலகின்
ஒருமைப்பாட்டுக்கு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் தடைகள் எதுவும் கிடையாது.
எனவே, இஸ்லாமியப்
புரட்சியின் தந்தை, இமாம் கொமெய்னி
(ரஹ்), 1979ம் ஆண்டில்,
முஸ்லிம் உம்மா அற்பமான வேறுபாடுகளில்
சிந்தனையை சிதறடிக்காமல் இருப்பதற்காக, அவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இஸ்லாமிய ஒற்றுமை வாரத்தைத்
பிரகடனப்படுத்தினார், அன்று தொடக்கம்
ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகம் முழுவதும் ஒற்றுமையின் செய்தியை பரப்பி வருகிறது.
முஸ்லிம்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுபட விடவே கூடாது என்று திட்டமிட்டு இஸ்லாம் விரோத
சக்திகள் முஸ்லிம்களின் பெயராலேயே பல பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, போஷித்து வருகின்றன என்பது ரகசியமல்ல. ஆனாலும்
சில முஸ்லிம்கள் அப்பாவித்தனமாக அவர்களின் சதித்திட்டங்களில் சிக்கிவிடுகின்றனர்
என்பது கவலைக்குரிய விடயமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்குப்பின் உம்மத்திற்கு என்ன நேரிடும் என்பதை
நன்கு அறிந்திருந்தார்கள், பல
சந்தர்ப்பங்களில் தனது தோழர்களிடம் பின்வருமாறு வலியுறுத்தினார்கள்::
“எனது அஹ்லுல் பைத்தின்
அந்தஸ்து நூஹு நபி (அலை) அவர்களின் ஓடத்தைப் போன்றது. அதில் ஏறியவர்கள்
காப்பாற்றப்பட்டனர், பின்தங்கியவர்கள் நீரில் மூழ்கினர்.”
(கடற்பயணம் செல்வோருக்கு)
நட்சத்திரங்கள் வழிகாட்டிகளாய் அமைந்துள்ளது போன்று, எனது அஹ்ல்-பைத்
பூமியிலுள்ள மக்களுக்கு வழிகாட்டிகளாய் உள்ளனர்."
"உடலுக்குத்
தலையும், தலைக்கு கண்களும் இருப்பது போல என் அஹ்லுல் பைத் உங்களுக்கு
இருக்கட்டும், ஏனென்றால் தலையின்றி உடல் செயல்படாது; கண்கள் இன்றி
தலையை வழிநடத்த முடியாது."
முஸ்லிம்களின் எதிர்காலமும் அவர்களது சுபீட்சமும் இஸ்லாமிய ஒற்றுமையிலேயே
தங்கியுள்ளது.
https://kayhan.ir/en/news/107581/islamic-unity-vital-for-defeating-islamophobia
No comments:
Post a Comment