Wednesday, October 5, 2022

ஈரானில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது...? விளக்கிக் கூறுகிறார் இஸ்லாமிய புரட்சியின் தலைவர்

Recent bitter events in Iran are a US plot:

It is not about hijab, it is about a strong, independent Iran


ஈரானில் இடம்பெற்ற சமீபத்திய கசப்பான நிகழ்வுகள் அமெரிக்காவின் சதி: இது ஹிஜாப் பற்றியது அல்ல, இது வலுவான, சுதந்திரமான ஈரானைப் பற்றியது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் பயிலுனர்களுக்கான கூட்டு பட்டமளிப்பு விழாவில் ஆயுதப் படைகளின் பிரதம தளபதி இமாம் காமனெய் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்கள்:

"நாட்டில் அண்மையில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களின்போது, சட்ட அமலாக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பாசிஜ் துணை ராணுவ தன்னார்வப் படை மற்றும் ஈரானிய தேசத்தவர்கள் மற்றவர்களை விட அதிகமாக பாதிப்புக்குள்ளாகினர். இதற்கு முன் இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்ததைப் போலவே இந்த நிகழ்விலும் ஈரானிய தேச மக்கள் மிகவு உறுதியாக இருந்தனர், இனிமேலும் அவ்வாறே இருப்பர்."

"இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் உயிரிழந்தது கவலைத் தரும் விடயமாகும், இது எங்கள் இதயங்களையும் உறுத்துகிறது. ஆனால் இந்த சம்பவத்தின் எதிர்வினை சாதாரணமானதோ அல்லது இயல்பானதோ அல்ல. எந்த விசாரணையும் இன்றி, என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியாமல், பாதுகாப்பின்மையை உருவாக்க சில தீய சக்திகளின் தூண்டுதலால் சிலர் தெருக்களில் இறங்கினர். குர்ஆனை எரித்தனர். அவர்கள் ஹிஜாபை கழட்டியெறிந்தனர். பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் (ஹுசைனியாக்கள்) மற்றும் பொதுமக்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இவை திட்டமிடப்பட்ட கலவரங்கள். “இந்த இளம்பெண்ணின் சம்பவம் நடக்கவில்லை என்றால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நாட்டில் பாதுகாப்பின்மை மற்றும் கலவரத்தை ஏற்படுத்த வேறு ஒரு காரணத்தை உருவாக்கி இருப்பார்கள்”

இஸ்லாமிய புரட்சியின் தலைவர், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளில் வெளிநாட்டினர் ஆற்றிய பங்கு பற்றிப் குறிப்பிட்டார். "ஈரானில் சமீபத்திய கலவரங்களும் அமைதியின்மையும் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் என்று நான் வெளிப்படையாகக் கூறுகிறேன்; அபகரிக்கும், போலியான சியோனிச ஆட்சி; அவர்களின் கூலிப்படையினர்; அவர்களுக்கு உதவிய வெளிநாட்டில் உள்ள சில தேசத்துரோக ஈரானியர்கள் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய கலவரங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை மக்களுக்கு நினைவூட்டுகையில். “உலகில் பல கலவரங்கள் நடக்கின்றன. அவ்வப்போது, ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில், பாரிஸில் பெரும் கலவரங்கள் நடக்கின்றன. ஆனால் அமெரிக்க அதிபரோ அல்லது அமெரிக்க பிரதிநிதிகள் சபையோ கலவரக்காரர்களை ஆதரித்து எப்போதாவது அறிக்கை வெளியிட்டதுண்டா? நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்று அவர்கள் செய்தி அனுப்பியதாக ஏதேனும் பதிவு உள்ளதா? அமெரிக்க முதலாளித்துவத்துடன் தொடர்புடைய வெகுஜன ஊடகங்களும், சவுதி போன்ற பிராந்தியத்தில் உள்ள சில அரசாங்கங்கள் போன்ற அமெரிக்க கைக்கூலிகளும் அந்நாடுகளில் கலவரக்காரர்களை ஆதரிப்பதாக வெளியான ஏதேனும் பதிவுகள் உள்ளதா? கலகக்காரர்களின்  இணையத்திற்கான வன்பொருள் அல்லது மென்பொருளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்ததற்கு ஏதேனும் பதிவுகள் உள்ளதா? ஆனால் ஈரானுக்கு எதிரான இத்தகைய கலவரங்களை ஊக்குவிப்பதற்கான ஆதரவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன.

ஒரு யுவதியின் மரணத்திற்கு அமெரிக்க அதிகாரம் வருத்தப்படுவது போன்று நடிப்பது நயவஞ்சகமாகும். (ஈராக், லிபியா, சிரியா, ஆபிகானிஸ்தான் போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த அமெரிக்க அதிகாரத்திற்கு இந்த யுவதியின் உயிர் ஓர் பொருட்டே அல்ல). இஸ்லாமிய ஈரானில் கொந்தளிப்பை உருவாக்க ஒரு காரணம் கிடைத்துள்ளதையிட்டு அவர்கள் குதூகலிக்கிறார்கள்.

"நாட்டில் கலவரம் மற்றும் அமைதியின்மையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வெளி நாடுகளின் நோக்கம் என்ன? எமது நாடு ஒரு விரிவான மற்றும் பலவாய்ந்த சக்தியாக முன்னேறி வருவதை அவர்கள் உணர்கிறார்கள், இந்த வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை."

குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் ஈரானின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் பிரச்சினைகளை தோற்றுவித்து, நாட்டின் அதிகாரிகளின் கவனத்தை அதன்பால் திருப்பி, இஸ்லாமிய ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கும் திட்டங்களை வடிவமைத்துள்ளன. இது குறித்து தலைவர் கூறியதாவது, “அவர்கள் வடமேற்கிலும் மற்றும் தென்கிழக்கிலும் வாழும் ஈரானிய மக்களை தவறாக எடைபோட்டுள்ளனர். நான் பலூச் மக்கள் மத்தியில் வாழ்ந்துள்ளேன், அவர்கள் இஸ்லாமிய குடியரசிற்கு மிகவும் விசுவாசமான மக்கள், குர்திஷ் மக்களும் அவ்வாறே; அவர்கள் தங்கள் தாயகத்தையும் இஸ்லாத்தையும் மிகவும் நேசிக்கின்றனர். வழிதவறிய இந்த கலகக்காரர்கள் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, எதிரிகளின் திட்டம் ஒருபோதும் பலிக்காது.

இமாம் கமேனி மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா இஸ்லாமிய குடியரசிற்கு மட்டும் எதிரானது அல்ல சக்திவாய்ந்த, சுதந்திரமான ஈரானுக்கு எதிரானது. "பால் கறக்கும் பசுவைப் போல் தங்கள் கட்டளைகளுக்கு அடிபணிந்த பஹ்லவி காலத்து ஈரானை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்" என்றும் அவர் விளக்கினார்.

ஒரு இளம் பெண்ணின் மரணமோ அல்லது ஹிஜாப் அல்லது முழுமையற்ற ஆடையோ இங்கு பிரச்சினை அல்ல. ஹிஜாபை சரியாகப் பேணாத பல பெண்கள் இஸ்லாமிய குடியரசின் உறுதியான ஆதரவாளர்களாக உள்ளனர், மேலும் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர். இன்றைய பிரச்சினையும் விவாதமும் இஸ்லாமிய ஈரானின் சுதந்திரம், எதிர்ப்பு சக்தி, வலிமை மற்றும் அதிகாரம் பற்றியதாகும்.

இஸ்லாமியப் புரட்சித் தலைவர், நாட்டில் சமீபத்தில் நடந்த கலவரங்களுக்குக் காரணமானவர்கள் குறித்தும் பேசினார். கலவரங்களை உருவாக்குபவர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியானோர் அல்ல; இணையத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து உற்சாகத்தால் தெருவில் இறங்கும் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். சில புணருத்தாபன நடவடிக்கை மூலம், இந்த மக்களுக்கு அவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்த முடியும். முனாஃபிக்கீன், பிரிவினைவாதிகள், முடியாட்சிவாதிகள் மற்றும் வெறுக்கப்பட்ட சவாக்கின் குடும்பங்கள் உறுப்பினர்களின் போன்ற இஸ்லாமிய குடியரசின் வெறுப்புக்கு ஆளானவர்களில் எஞ்சியவர்களான தெருக்களுக்கு வரும் மற்றவர்களும் உள்ளனர். பொது சொத்துக்களை சேதப்படுத்துவதிலும், பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதிலும் அவர்கள் எவ்வளவு பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதன் விகிதத்தில் நீதித்துறை அவர்களின் தண்டனையை தீர்மானிக்க வேண்டும்.

புரட்சித் தலைவர் குறிப்பிட்ட மற்றொரு பிரச்சினை அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்காவின் நிலை மிக மோசமானது. [அந்த நாட்டில்] கல்விக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இஸ்லாமிய ஈரானில் "உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு" ஒரு பெரிய நன்மை என்பதை இமாம் கமேனி வலியுறுத்தினார்.  “எங்கள் பாதுகாப்பு மற்றவர்களை நம்பாமல் நாட்டின் வளங்களைக்கொண்டு முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து கொண்டு மற்றவர்கள் அளிக்கும் பாதுகாப்பிலிருந்து இந்தப் பாதுகாப்பு முற்றிலும் வேறுபட்டது. பால் கறக்கும் பசுவாக நாம் இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.”

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்பு அல்லாஹ்வின் சக்தியை நம்பியதன் விளைவாகும் மேலும் காலத்தின் இமாமின் ஆசீர்வாதமும் அதற்குண்டு. மேலும், “ஒருவர் அந்நிய சக்திகளை நம்பினால், அதே அந்நிய சக்திகள் ஒரு நாள் அவர்களை கைவிட்டு விடும். ஏனென்றால் அந்த அந்நிய சக்திகளின் நோக்கம் பாதுகாப்பு வழங்குவதல்ல, அவற்றால் பாதுகாக்கவும் முடியாது.

இஸ்லாமியப் புரட்சித் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் இராணுவ கல்விச்சாலைகள் மற்றும் ஆயுதப்படை அமைப்புகளில் பல ஆயிரம் இளைஞர்கள் எவ்வாறு ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் இணைகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார். இது ஆர்வமூட்டும் பெரும் பலம்வாய்ந்த மற்றும் நல்ல செய்தியாகும், இது நாட்டிற்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருகிறது என்று அவர் கூறினார். மேலும், "பல்வேறு அறிவியல் துறைகளிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும், நாட்டின் ராணுவப் படைகளிலும் ஈரானிய இளைஞர்கள் சிறந்து விளங்குவது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது" என்றார்.


இஸ்லாமியப் புரட்சித் தலைவர் இமாம் காமனெய் அவர்களின் உரைக்கு முன், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் பாக்கரி நாட்டின் சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிப் பேசுகையில், "அறியாமை அல்லது பாதுகாப்பின்மையை உருவாக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் சிலரின் இயக்கங்கள், சத்தியத்தின் முன்னால் கெளரவமான ஈரானின் பெருமைமிக்க தேசாபிமான மக்கள் இயக்கத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். மேலும், "முன்நோக்கு மற்றும் செயலூக்கமான எதிர்ப்பு சக்தி மூலோபாயத்தை செயல்படுத்துவதில் மக்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் தீவிரமாக பங்கேற்பதில் ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும்" என்றும் அவர் கூறினார்

https://english.khamenei.ir/news/9182/Recent-bitter-events-in-Iran-are-a-US-plot-It-is-not-about-hijab


No comments:

Post a Comment