Friday, December 30, 2022

ஈரானைப் பற்றி நீங்கள் இதுவரை அறியாத விடயங்களும் அதற்கு எதிரான சதிகளும்

Things You Didn't Know About Iran and Conspiracies Against It

By Ali Abadi


ஈராக்கிய இஸ்லாமிய எழுத்தாளரும், பல புத்தகங்களை எழுதியவருமான அலி அல்-முஃமினின் இடுகை ஒன்றில் ஈரானிய மக்கள் பெறும் "அதிசயத்தக்க அரசாங்க நிவாரணங்கள்" பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் ஈரானின் மஷ்ஹத் நகரில் வசித்து வரும் இவர் ஈரானிய தாயிடமிருந்து ஈரானிய குடியுரிமையைப் பெற்ற ஈராக்கிய இளைஞன் ஆவார். அவர் தனது அனுபவத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்.

ஈராக்கியரான இவர் முன்பு ஸ்டாக்ஹோமில் மூன்று ஆண்டுகள் மற்றும் துபாயில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் ஈரானின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சேவைகளைப் பற்றி விவரிக்கையில்,

ஈரானிய அரசு தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 300,000 டொமன்கள் (சுமார் $8) நிதியுதவி வழங்குகிறது. குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கும் ஒருவர் மாதத்திற்கு 1,500,000 டோமன்களைப் பெறுகிறார், இது 40 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் நாணயமாகும். இந்த தொகை அவருக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளின் செலவுகளையும் ஈடுகட்ட போதுமானது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • 1- தடங்கலற்ற மின்சாரத்திற்கான கட்டணம்: மாதத்திற்கு 120,000 டோமன்கள், இது 3.00 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் நாணயம்.
  • 2- தண்ணீருக்கான கட்டணம்: மாதத்திற்கு 80,000 டோமன்கள், இது 2.10 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 3-      சமையல் எரிவாயுக்கான கட்டணம், அதாவது, வீட்டின் குழாய் வழியாக வழங்கப்படும் எரிவாயு, சராசரியாக மாதத்திற்கு 110,000 டோமன்கள், இது 3 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 4-   உள்ளூர் மற்றும் தேசிய பயன்பாடு உட்பட லேண்ட்லைன் தொலைபேசி கட்டணங்கள்: மாதத்திற்கு 30,000 டோமன்கள், இது 0.80 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 5-      வரம்பற்ற வைஃபை கட்டணம்: மாதத்திற்கு 90,000 டொமன்கள், இது 2.60 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 6-      மூன்று தொலைபேசி லைன்களுக்கான கட்டணம் - அவருக்கு, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகனுக்கு: சராசரியாக மாதத்திற்கு 90,000 டொமன்கள், இது 2.60 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 7- மூன்று மொபைல் லைன்களுக்கான வரம்பற்ற இணையத்திற்கான கட்டணம் - அவருக்கு, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகனுக்கு: மாதத்திற்கு 60,000 டொமன்கள், இது 1.80 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 8-      அவர்களின் காருக்கான பெட்ரோலின் மானிய விலை (டேங்கை நான்கு முறை நிரப்புதல்): சராசரியாக மாதத்திற்கு 420,000 டோமன்கள், இது 11 அமெரிக்க டொலருக்கு சமம்.    மேலதிக பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள். ஈரானிய அரசாங்கம் ஒவ்வொரு தனிப்பட்ட காருக்கும் மாதத்திற்கு 60 லிட்டர்களை லிட்டருக்கு 1,500 டோமன்கள் என்ற குறைக்கப்பட்ட விலையில் வழங்குகிறது, இது உலகில் பெட்ரோலின் அதிகுறைந்த விலை. (பெட்ரோல் உற்பத்தி செய்யும் அண்டை அரபு நாடுகளில் கூட விலை இதைவிட அதிகம்).
  • 9-  ஐந்து நபர்களுக்கான உடல்நலக் காப்பீட்டுத் தொகைகள்: மாதத்திற்கு 300,000 டொமன்கள், 8 அமெரிக்க டொலருக்கு சமம். (காப்பீடு அனைத்து செயல்பாடுகள், சிகிச்சைகள், மருந்து, எக்ஸ்ரே மற்றும் பிற மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது.)

இவ்வாறு, மின்சாரம், தண்ணீர், எரிவாயு, தகவல் தொடர்பு, இணையம், உடல்நலக் காப்பீடு மற்றும் பெட்ரோல் உட்பட அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட ஒரு குடிமகன் ஒவ்வொரு மாதமும் செலவிடும் மொத்தத் தொகை சுமார் 1,300,000 டொமன்கள் ஆகும், இது 34 அமெரிக்க டொலருக்கு சமம்.

இதன் பொருள் ஈரானிய அரசால் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு பல்வேறு சேவைகளுக்கான அவரது செலவுகளை விட அதிகம். ஓர் அரசு இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது வளர்ந்த மேற்கத்திய மற்றும் பணக்கார அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் மிகவும் அரிதான ஒன்றாகும். இவற்றைத் தவிர, கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு அரசு உதவி வழங்குகிறது.

மக்கள் நலன் மீது இவ்வாறெல்லாம் அக்கறை செலுத்தும் ஒரு நாட்டில் சில ஈரானியர்கள் தங்கள் நாட்டின் நிலைமைக்கு எதிராக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? என்று சிலர் மனதில் கேள்வி எழுவது நியாயமானதே.

இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த நான்கு தசாப்தங்களாக ஈரானுக்கு எதிரான தொடர் பிரச்சாரம், கடுமையான பொருளாதாரத்தடை, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற இன்னோரன்ன எதிர் நடவடிக்கைகள் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இஸ்லாத்தின் அடிப்படையிலான சில ஒழுக்கக்கட்டுப்பாடுகளும் ஈரானில் உள்ளன. இவ்வாறிருக்கையில், மேலைத்தேய தாராண்மைவாத கொள்கையினால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று மேற்குலக ஊடகங்கள் செய்யும் விஷமப் பிரச்சாரம், வெளிநாட்டு வாழக்கை முறையை முன்னுதாரணமாகக் கருதும் சில மேட்டுக்குடி ஈரானிய மக்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளது. அவ்வாறானோருக்கு மேற்கத்தேய ஊடகங்கள் வழங்கி வரும் ஆதரவு, ஈரானின் உண்மை நிலையை அறிய முடியாதவாறு உலக மக்களையும் தடுமாறச் செய்துள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க முற்றுகையால் சுமத்தப்பட்ட அழுத்தங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ள போதிலும், மக்களுக்கு நிலையான சேவைகளை வழங்குவதில் ஈரான் மிகவும் உறுதியாகவும் உள்ளது..

நாட்டு மக்களுக்கு ஈரானிய அரசாங்கம் என்ன என்ன சேவைகளை வழங்குகிறது என்பதை அறியாத சிலரால் இன்று கண்டிக்கப்படுகிறது. ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் தொடக்கத்திலிருந்தே, இஸ்லாமிய நோக்கங்களுக்கிணங்க நாட்டில் வறுமையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து, சேவை மட்டத்தில் அதன் மக்களுடன் இணக்கமான உறவை கையாண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த உண்மை, ஆனால் ஓர் அரசால் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஈரானிய எதிர்ப்பு பிரச்சாரம் பின்வரும் தலைப்புகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது நாம் அவதானிக்கின்றோம்:

·         ஈரானில் உள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சனையின் மீது இலக்கு வைக்கப்பட்ட பிரச்சார யுத்தத்தை நடத்தி, அதை பெரிதுபடுத்துதல், ஈரானிய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர் போன்ற உணர்வுகளை அதிகப்படுத்துதல் மற்றும் அவ்வாறான கதையை ஊக்குவித்தல்

·        அபிவிருத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி அல்லது சாதனைகளை இழிவுபடுத்துதல் அல்லது சிறுமைப்படுத்துதல் அல்லது ஈரானிய அரசு வழங்கும் சேவைகளை மட்டம் தட்டுதல்.

·         பிராந்தியத்திலேயே ஈரானிய மக்கள் தான், குறிப்பாக பெண்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்ற உண்மையை மறைத்து,  ஈரானிய பெண்கள் பல துறைகளில் (நிர்வாகம், சட்டமியற்றுதல், அறிவியல், கலை மற்றும் விளையாட்டு) முக்கிய இருப்பைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை மறைத்து துர்பிரசாரங்களை மேற்கொண்டு வருதல். மக்கள் ஆட்சேபனைகளை எழுப்பும் பல பிரச்சினைகளை கையாளும் போது ஈரானிய ஆட்சி நெகிழ்வுத்தன்மையைக் கடைபிடிப்பதையும், அதை சரிசெய்யும் திறனையும் கொண்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பயனுள்ளது.

·         ஈரானிய மக்கள் படும் கஷடத்திற்கு அமெரிக்கா அல்ல, ஈரானே காரணம்; முன்னைய ஆட்சியாளர்களில் அரசியல் "நெகிழ்வு" இல்லாததால் தான்  இந்த நிலை, அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கினால் அல்ல என்று கூறும் அளவிற்கு மூளைச்சலவை செய்வது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களே பொறுப்புக்கூற வேண்டும், ஆக்கிரமிப்பாளன் அல்ல என்ற மனநிலையை ஏற்படுத்துவது.

·         ஈரான் மேற்குல நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடல்ல, சர்வதேச அளவில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகத்திற்கு வெளியே உள்ளது. ஈரான் மேற்குலக தரநிலைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்பதுதான் இவர்களது எதிர்பார்ப்பு. இவர்களது ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, ஈரான் சுதந்திரமாக செயல்படுவதே ஈரானிய மக்களுக்கு தேவையான மருந்துகள் கூட சென்றடைவதைத் தடுக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குவது..

பாலஸ்தீன் மீட்புக்காக செலவுசெய்தல், லெபனானிலும் பலஸ்தீனிலும் போராட்டக்குழுக்களுக்கு ஆதரவு வழங்குதல், அவற்றுக்காக செலவு செய்தல் ஈரானின் செல்வத்தை வீணடிக்கும் செயல் என்று மனதில் பதியச் செய்தல். ஈரானுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத லெபனான் மற்றும் காஸாவில் போராட்டக்குழுக்களை ஆதரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை, ஆகவே "லெபனானும் வேண்டாம், காஸாவும் வேண்டாம்" என்ற கோஷத்தை ஒலிக்கச் செய்தல்.

லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்ட குழுக்களுக்கு ஈரானின் ஆதரவு, ஈரானுக்கு எதிரான கடுமையான அச்சுறுத்தல்களை முறியடித்தது என்பது இந்த "லெபனானும் வேண்டாம், காஸாவும் வேண்டாம்" என்ற சூத்திரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அறியமாட்டார்கள்.

ஈரான் பல திட்டங்களில் வெற்றிகரமான முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், இஸ்லாமிய குடியரசு சில விஷயங்களில் தவறான பொருளாதார நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே, இமாம் செய்யிதலி காமனெய் பலமுறை இதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமாக, அனுபவத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்; அது நம்பிக்கையை மீட்டெடுக்கும். ஈரானை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு எதிரிகள் உள்நுழையக்கூடிய ஓட்டைகளை கண்டறிந்து அடைக்க வேண்டும்.

எனினும், பரந்து விரிந்து வாழ்ந்தாலும், தங்கள் நாட்டைப் பற்றிய தவறான பிம்பத்தால் ஏமாற்றப்பட்ட ஈரானியர்கள் சிலர் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாதது. அமெரிக்கமயமாக்கலாக மாறியுள்ள உலகமயமாக்கல் என்பது, தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய ஈரானியர்களின் சுயாதீனமான அனுமானங்களைக் காட்டிலும் உயர்வானது எனும் மாயை, மேற்குலகின் கலாச்சாரம் மற்றும் ஈரானின் யதார்த்தத்தைப் பற்றிய அதன் கற்பனையான பார்வைக்கு நெருக்கமாகத் தோன்றும் பொய்யான பார்வை மற்றும் கனவுகள் கொண்ட ஒரு கலவையான யதார்த்தமாகும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்..

இங்கு, ஈரானிய ஊடகங்களும், கலாச்சார விவகாரங்களில் அக்கறை கொண்ட அதிகாரிகளும் பொதுச் சிந்தனையை சரிசெய்வதில் முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர். தற்புகழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக இலக்கை நோக்கிய ஊடகத்தை வளர்த்து, மேற்கத்திய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இலக்காகக்கூடிய, வெளிநாட்டு ஊடகங்களால் மூளைச்சலவை செய்யக்கூடிய நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

https://messageofwisdom.blogspot.com/2022/12/irans-wonders-and-intensive-propaganda.html?m=1


No comments:

Post a Comment