Gone are the days of threatening the world with weapons
- தாஹா முஸம்மில்
ஜெனரல் காஸிம் சுலைமானி பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகில் ஜனவரி 3, 2020, அதிகாலை வேளையில் அமெரிக்க ட்ரான் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
சிரியாவையும் ஈராக்கையும் துண்டாடும் நோக்கத்துடன் அமெரிக்க சியோனிச
கூட்டணியால் உருவாக்கப்பட்டதே ISIS எனும் பயங்கரவாத
அமைப்பு என்பதை ஆரம்பத்தில் பலர் அறிந்திருக்கவில்லை. சவூதி அரேபியாவும் அதற்கு
தாராளமாக நிதி உதவி வழங்கியது.
இஸ்லாமிய கிலாஃபா ஒன்றை அமைப்பதற்கான ஒரு போராட்டக்குழுவாகவே பலரும் அதை
நினைத்திருந்தனர். காலப்போக்கில் அதனது பயங்கவாத நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக
துளங்க தொடங்கின. எனினும் அதன் உண்மை சொரூபம் தெரிய வரும் போது காலம்
கடந்திருந்தது. ஆனால் ஈரான் இஸ்லாமிய குடியரசு ISIS இன் இயல்தன்மையை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டது.
திடீரென தோன்றிய ஒரு போராட்டக்குழு, அதி நவீன ஆயுதங்களுடன், ராணுவரீதியாக
பலம் பெற்றிருந்த ஈராக், சிரியா ஆகிய
நாடுகளின் சில பிராந்தியங்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி
அமைப்பதானது, அமேரிக்கா,
இஸ்ரேல் போன்றவற்றின் துணையின்றி நடப்பது
முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும்.
ISIS பயங்கரவாத தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே ஈராக் மற்றும்
சிரிய அரசாங்கங்கள் ஈரானின் உதவியை நாடின. இவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நன்கு
உணர்ந்திருந்த ஈரானும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியது. இதற்கு
ஜெனரல் காஸெம் சுலைமானி மிகைத் திறமையாக தலைமை
வகித்து, இப்பிராந்தியத்தில் ISIS
தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ISIS ஒழிக்கப்பட்டதானது
எண்ணெய் வளம் கொண்ட இப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்
அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்திற்கு கிடைத்த பெரும் தோல்வியாகும். இதை சகித்துக்கொள்ள முடியாத அமேரிக்கா ஈரான் இஸ்லாமியக் குடியரசைப்
பழிவாங்க எண்ணியது. அமெரிக்க மற்றும் சியோனிசத்தின் சதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று, அந்த சதியை முறியடித்த அந்த செயல் வீரரான ஜெனரல் காஸெம்
சுலைமானியை கோழைத்தனமான முறையில் பழிவாங்கியது.
தூதுவனாகச் செல்லும் ஒருவரை கொலைசெய்வது மிகவும் இழிவான செயலாகும். அந்த
இழிவான செயலை செய்யும்படி நானே உத்தரவிட்டேன் என்று ட்ரம்ப் பெருமையடித்தது, அதைவிட கேவலமானது.
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதக் குழுவானது இப்பகுதியில் செயல்பட்ட சியோனிஸ்ட் மற்றும்
அமெரிக்க கூலிப்படையினராகும், அது தோன்றிய
வேகத்திலேயே அழிந்து போகும் என்று அமெரிக்க சியோனிச கூட்டணி ஒருபோதும்
எண்ணியிருக்கவில்லை. இப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எல்ஊடாக தமது ஆதிக்கம் நிலைபெற வேண்டும்
என்று அவர்கள் விரும்பினர். போராட்டத்தில் காயமடைந்தவர்களை, இஸ்ரேலிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சையளித்ததானது ISIS அமெரிக்க, சியோனிச கூலிப்படை என்பதற்கு உறுதியான
சாட்சியாகும்.
பிராந்தியத்தில் இவ்வாறான குழப்பங்கள், போர் சூழல் மற்றும் பாதுகாப்பின்மையால் பயனடைபவர்கள்
முதலில் சியோனிஸ்டுகள் பின்னர் அமெரிக்கர்கள் மட்டுமே; ஈராக், சிரியா, லெபனான், யெமன் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பாதுகாப்பற்ற
சூழல் தொடருமாயின் பிராந்தியத்தில் உள்ள எவரும் அதனால் பயனடைய மாட்டார்கள்.
தமது சதித்திட்டங்களை செயல்படுத்த சொந்த நாட்டவர்களையே பலியிட தயங்காத
ஏகாதிபத்திய கும்பல் தமது திட்டங்கள் தவிடுபொடியாக காரணமாக நின்ற ஒரு சிறந்த
மனிதரை பழிவாங்க நினைத்தது.
தியாகி சுலைமானி ஒரு தனித்துவமானவர், துணிச்சலான தளபதி என்று சிலர் நினைக்கிறார்கள், அது உண்மைதான், ஆனால் அவர் மக்களின் உள்ளங்களில் நிலைத்திருக்க அது மட்டும் காரணமல்ல, எல்லா சூழலிலும் அவருடைய விவேகம் முக்கியமானது.
அவர் விவேகமுள்ள மனிதர், விஷயங்களைப்
பகுப்பாய்வு செய்து அதன் உண்மைத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்வதில் விற்பன்னர்,
அவர் பிராந்தியத்தின் மற்றும் உலக அரசியலை
மிகச்சரியாக புரிந்து கொண்டவர், மேலும் அவர்
தீவிர போக்கை கடைபிடித்த ஒருவரல்ல,
வலது அல்லது இடது சாய்வு அவரிடம் இருக்கவில்லை.
எந்தப்பிரிவினரும் தியாகி சுலைமானியை சொந்தம் கொண்டாட முடியாது, தியாகி சுலைமானி ஒரு தேசிய ஹீரோ மற்றும் முழு
ஈரானிய தேசத்திற்கும், பிராந்திய
நாடுகளுக்கும், புரட்சிகர
முஸ்லிம்களுக்கும் ஒரு கௌரவ சின்னம். எதிரிகள் இந்த
மனிதரை எம்மிடம் இருந்து பிரித்துவிட்டால் தமது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள
இருக்கும் தடை நீங்கிவிடும் என்று தப்புக்கணக்குப் போட்டனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாற்றமாக இந்த
தேசிய நாயகன் ஒரு நித்திய நாயகனாக மாறினார், ஈரானிய வரலாற்றில் தியாகி
சுலைமானி சிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
பிராந்தியத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்ட பெரும் முயற்சிகளை
மேற்கொண்ட ஒருவராகும், அதனால் முழு பிராந்திய மக்களும் தியாகி
சுலைமானிக்கு நிறைய கடமைப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஆணவ சக்தியாலும் சியோனிசத்தாலும் பயிற்றுவிக்கப்பட்ட கொடூரமான
ஐ.எஸ்.ஐ.எல் பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க விரும்பியது.
மற்றும் அமெரிக்கா, சியோனிசம்
மற்றும் பிராந்தியத்தில் தங்கள் மக்களின் நலன்களை பணயம் வைத்த அரபுத் தலைவர்கள் தங்கள்
கூட்டு சதிகளை முறியடித்ததற்காக தியாகி சுலைமானியை பழிவாங்கினார்கள்.
சுலைமானி மற்றும் அல்-முஹந்திஸ் ஆகியோரின் உயிர்த்தியாகம் ஈரான் மற்றும்
ஈராக்கிய மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமெரிக்க வெறுப்பை அதன் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றது
எனலாம்; மில்லியன் கணக்கானோர்
இவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டதானது, வெள்ளை மாளிகையில் இருப்போருக்கு செருப்பால் அடித்தது
போலாகும்.
இந்த சம்பத்தின் பின்னர் அமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற
வேண்டும் என்ற ஈராக் பாராளுமன்றத்தின் முடிவு ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்களால்
எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவாகும்.
மேலும் சுலைமானியைக் கொன்று பிராந்தியத்தில் தமக்கிருந்துவரும் தடையை உடைப்பதே
எதிரியின் குறிக்கோளாக இருந்தது, ஆனால் நடந்ததோ
முற்றிலும் முரணானது; அது
பிராந்தியத்தில் அமெரிக்க எதிர்ப்பின் உணர்வை மென்மேலும் அதிகரித்தது.
சுலைமானியின் உயிர்த்தியக்கத்திற்குப் பின் அப்பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கர்கள் முழுமையாக
வெளியேறும் வரை அவர்கள் மீதான வெறுப்பு அதே உற்சாகத்துடன் தொடரும் என்பதை
பிராந்திய மக்கள் மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளனர். சுலைமானியின் தியாகத்திற்குப் பிறகு, “சுலைமானியின் கையைத் துண்டித்தால், நாங்கள் உங்கள் கால்களைத் துண்டிப்போம் என்பதை
மக்கள் மீண்டும் வலியுறுத்தினர். நீங்கள் இங்கிருந்து முற்றாக வெளியேறும் வரை எமது
எதிர்ப்பை தொடர்வோம் என்று மக்கள் சபதம் எடுத்தனர்".
பிற நாடொன்றுக்கு சமானத் தூதராக செல்லும் ஒருவரைக் கொல்லும் ட்ரம்பின் இந்த
முட்டாள்தனமான மற்றும் இழிவான செயலின் விளைவுகளில் ஒன்று, நீதி நியாயத்தில் நம்பிக்கைக்கொண்ட மக்கள் மனதில் இருந்த
கொஞ்சநஞ்ச மரியாதையையும் அமெரிக்க நிர்வாகம் கெடுத்துக் கொண்டது எனலாம். இப்போது ட்ரம்ப்
வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளார். ஆயுதங்களைக் காட்டி உலகை
அச்சுறுத்திய காலம் மலையேறிவிட்டது;
ஈராக்கில் இருந்த
அமெரிக்க ராணுவ தளமொன்றை ஈரான் தாக்கி அழித்த சம்பவம் ஞாபகம் இருக்கும்.
அமெரிக்காவின் பச்சோந்தித்தனத்தை உலகம் நன்றாக புரிந்துகொண்டுள்ளது. பின்வரும்
காலம் ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்டப்பட்டு, பிராந்திய
மற்றும் உலகளாவிய கௌரவமான ஸ்திரத்தன்மைக்கு ஒரு சிறந்த காலமாக அமையும் என்று நம்பலாம்.
No comments:
Post a Comment