Saudi Atrocities in Yemen - Does your conscience not prick...?
- தாஹா முஸம்மில்
இரண்டு
புனிதத்தலங்களைக் கொண்டுள்ளது என்பதற்காக சவூதி செய்யும் அநியாயங்களையும்
அட்டூழியங்களையும் மறைக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். மீறி
செய்தால் சவூதி அரசு மீது காழ்ப்புணர்ச்சி என்கின்றனர்.
அல்லாஹ்வின்
பின்வரும் வசனத்தை அவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா ...?
முஃமின்களே!
நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ
அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி
கூறுபவர்களாகவும் இருங்கள்;.
(நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக
இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ்
அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி
விடாதீர்கள்;. மேலும் நீங்கள்
மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக
அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (குர்'ஆன் 4:135)
இஸ்லாமிய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்படுகின்றன - பலஸ்தீன், ஆப்கனிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, எகிப்து, யெமன், பாகிஸ்தான், சூடான், நைஜீரியா, சோமாலியா என்று பட்டியல் நீளுகிறது. எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இங்கெல்லாம்
மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் - எமது உடன்பிறப்புக்கள் - கொல்லப்பட்டுவிட்டார்கள்; ஏனென்று கேட்பதற்கு நாதியில்லை. பின்னணி
காரணங்களை சிந்திப்பதற்கு எவருமில்லை.
யெமன் என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஒரு வறிய, பலம் குன்றிய நாடு. இருந்தாலும் அம்மக்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அந்த அப்பாவி மக்களை கொண்று குவிக்க சவுதிக்கு எப்படித்தான் மனசு வந்ததோ...?
ரசூலுல்லாஹ்
ஆசீர்வதித்த நாட்டிற்கு சவூதி செய்யும் அநியாயம்
யெமன் தற்போது
உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது
உங்களுக்குத் தெரியுமா?
சுமார் 16 மில்லியன்
பொதுமக்கள் பஞ்சத்தால் அவதிப்படுகின்றனர்- ஆனால் மிக மோசமானது, சுமார் 2.1 மில்லியன்
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல், பொருளாதார சரிவு மற்றும் மோசமான சுகாதார சூழல் யெமனில்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய காரணங்களாக உள்ளன. பாதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. 2020 இல் 16% உடன்
ஒப்பிடுகையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து
குறைபாடு 2021 இல் 22% ஆக உயர்வடைந்தது.
யெமன் போர்
எப்படி தொடங்கியது?
அரபு வசந்த
எழுச்சிக்குப் பின்னர் 1990
ஆம் ஆண்டு முதல்
அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை 2011 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்து யெமனின்
அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த
அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடி தேர்தல் ஒன்றை நடத்தி புதிய அரசொன்றுக்கு
வழிவிடப்போவதாக உறுதியளித்து, இரண்டாண்டு காலத்துக்கு யெமனின் இடைக்கால ஜனாதிபதியானார்.
கொடுத்த வாக்குறுதிகள்
எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 2014 ஆம் ஆண்டில், பரவலான ஊழல் மோசடி, வேலையில்லா
திண்டாட்டம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை யெமன் முழுவதும்
அமைதியின்மைக்கு வழிவகுத்தது, இது புரட்சியாக மாறியது. மக்கள் செல்வாக்கைக் கொண்டிருந்த
ஹூதிகள் முன்னாள் ஜனாதிபதி சலேயின் உதவியுடன் 2014 செப்டம்பர் மாதம் சனாவிற்குள் நுழைந்து மன்சூர் ஹாதியை
வீட்டுக் காவலில் வைத்தார்கள்.
இந்த ஆட்சி
கவிழ்ப்பானது சவூதி அரேபியாவின் நீண்டகால திட்டத்திற்கு விழுந்த பேரிடியாக
அமைந்தது. 2015 ஆம் ஆண்டில், மன்சூர் ஹாதியை
மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும் குறிக்கோளுடன், சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்
இணைந்து ஒன்பது அரபு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும்
கனடா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்தன.
ஈரான் ஹூதிகளை
ஆதரிக்கிறது என்று குற்றம்சாட்டி மார்ச் 2015 இல்,
சவூதி தலைமையிலான
கூட்டணி கண்மூடித்தனமாக பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பைக்
குறிவைத்தது வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது மட்டுமல்லாமல் யெமனுக்கு
எதிராக கடற்படை முற்றுகையையும் விதித்தது.
யெமனில் போரை
நடத்த சவுதி அரேபியாவின் நோக்கம் என்ன?
யெமன் பிரதேசத்தின்
பாப் எல்-மண்டேப் ஜலசந்தி செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் ஒரு
முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையாகும். சவுதி ஆட்சியாளர்கள்
இந்த ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய விரும்பினர். இந்த கடல்
பாதையானது சவூதி அரேபியாவிற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பீப்பாய்கள்
எண்ணெயை நகர்த்துவதற்கு உதவுகிறது மற்றும் உலகின் எண்ணெய் விநியோகத்திற்கு மிகவும்
முக்கியமானது. அதுமட்டுமல்லாமல், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகள் சவுதி அரேபியாவின் தெற்கு
எல்லையின் கட்டுப்பாட்டை அதன் வசம் வைத்திருப்பதையிட்டும் சவுதி தலைவர்கள் பீதியடைந்தனர்.
யெமன் போரை
அப்போதைய சவூதி பாதுகாப்பு அமைச்சரும் இப்போதைய பட்டத்து இளவரசருமான முகமது பின்
சல்மான் அதிகாரத்தை பலப்படுத்தவும் தேசிய அங்கீகாரம் பெறவும் தனது அரசியல்
அபிலாஷைகளை எட்டவும் பயன்படுத்திக்கொண்டார். மேலும், யெமன் மீதான கட்டுப்பாடு சவுதி அரேபியாவின்
தெற்கு எல்லையிலிருந்து யெமனின் கிழக்கு மாகாணமான அல் மஹ்ரா வழியாக இந்தியப்
பெருங்கடலுக்குள் எண்ணெய்க் குழாய் அமைக்க அனுமதிக்கும்; ஈரானின் எல்லையான
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை சவுதி அரேபியா
நம்பியிருப்பதை இந்த குழாய் எளிதாக்கும்.
இந்த மோதலில்
அமெரிக்காவின் பங்கு என்ன?
சவுதி தலைமையிலான
கூட்டணியின் யெமன் மீதான போர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் இருந்து
கிட்டத்தட்ட அசைக்க முடியாத இராணுவ ஆதரவையும் ஆயுத விற்பனையையும் பெற்றுள்ளது. 2015 இல், ஒபாமா நிர்வாகம் யெமன்
மீதான கூட்டணியின் போருக்கு இராணுவ ஆதரவுக்கான சவுதி அரேபியாவின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்டார். ஆயுத விற்பனையில் பில்லியன் கணக்கான டாலர்கள் கறக்கலாம் என்பது
அவர்களது திட்டம். மேலும்,
சாவது
முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஏன் தயக்கம் காட்டப்போகிறார்கள். வான்வழித் தாக்குதல்களை நடத்தும் போர் விமானங்களுக்கான
பராமரிப்பு மற்றும் புலனாய்வுப் பகிர்வு மற்றும் யெமனின் வான் மற்றும் கடல்
முற்றுகையைச் செயல்படுத்துதல் ஆகியவை தற்போதைய ஆதரவில் அடங்கும்
ஏன் அமெரிக்கா
வரலாற்று ரீதியாக சவுதியை ஆதரித்து வருகிறது?
1945 ஆம் ஆண்டில், அமெரிக்க
ஜனாதிபதி ரூஸ்வெல்ட், சூயஸ் கால்வாயில்
ஒரு கடற்படை கப்பலில் வைத்து அப்போதைய மன்னர் அப்துல் அஸீஸைச் ரகசியமாக
சந்தித்தார் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமெரிக்க-சவூதி கூட்டுறவுக்கு
இணங்கினார். இவர்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ், சவுதி அரேபியா அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்ட
சவுதி எண்ணெய்க்கான அணுகலை அமெரிக்காவிற்கு வழங்கும்; அதற்கு ஈடாக
சவூதி அமெரிக்க பாதுகாப்பு உதவியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய புரட்சி
ஈரானின் கரையைக் கடக்காமல் பார்த்துக்கொள்ள, சவுதியின் தயவு அமெரிக்காவுக்கு எப்போதும் தேவைப்பட்டது.
ஆகவே, இந்தப்
பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டனர்.
"New America" என்ற சிந்தனைக் குழுவின் தரவுகளின்படி, அமெரிக்கா யெமனில் 376 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதனால் பல நூறு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
யெமன் மீதான
சவுதி அரேபியாவின் முற்றுகை அங்குள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு எவ்வாறு
பங்களிக்கிறது?
ஏறக்குறைய ஏழு
ஆண்டுகளாக, சவூதி அரேபியா யெமன்
மீது வான் மற்றும் கடல் முற்றுகையை விதித்துள்ளது, இதனால் யெமனில் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட
அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சவுதியின் இந்த மனிதாபிமானமற்ற யுத்தம் காரணமாக 2021 ஆம்
ஆண்டின் இறுதி வரை, குறைந்தது 377,000 அப்பாவி
பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 16 மில்லியனுக்கும் அதிகமான யெமன் மக்கள்
பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர், 60% க்கும் அதிகமான
இறப்புகள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து கிடைக்காமல் போனதால்
ஏற்பட்டவை என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. Brookings
Institution Senior Fellow Bruce Riedel, நடந்து கொண்டிருக்கும்
சவுதி முற்றுகையை "பொதுமக்களை கொல்லும் இராணுவ நடவடிக்கை" என்று
விவரித்துள்ளார்.
வணிக மற்றும்
மனிதாபிமான பொருட்களின் நுழைவு மீதான சவுதி அரேபியாவின் கட்டுப்பாடுகள் யெமனில்
மனிதாபிமான நெருக்கடியின் முக்கிய காரணி ஆகும். அங்கு இந்த ஆண்டு 400,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும்
அபாயத்தில் உள்ளனர், மேலும் நாடு
"நவீன வரலாற்றில் மிகப்பெரிய மனித பேரவலத்தை நோக்கி தள்ளப்படுகிறது."
ஜனவரி 2021 முதல், சவூதி அரேபியா
எரிபொருள் இறக்குமதியை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது, இது உணவு
ஏற்றுமதி மற்றும் மருத்துவமனைகள் செயல்படும் திறனை பெரிதும்
மட்டுப்படுத்தியுள்ளது.
யெமனின் சனா
விமான நிலையத்தை சவூதி அரேபியா வான்வழி முற்றுகையிட்டதன் மனிதாபிமான தாக்கம் என்ன?
யெமனின் முக்கிய
சர்வதேச விமான நிலையமான சனா விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வணிக
விமானங்கள் செல்வதை 2016 முதல் சவுதி
அரேபியா தடுத்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மோசமான நோய்வாய்ப்பட்ட யெமன்
குடிமக்களின் மருத்துவ வெளியேற்றத்தைத் தடுத்துள்ளன மற்றும் முக்கிய மருந்துகள்
மற்றும் மருத்துவப் பொருட்களை நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்தன.
துரதிர்ஷ்டவசமாக, புற்றுநோய் போன்ற
நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்ட பல யெமனியர்கள் தேவையில்லாமல்
பாதிக்கப்பட்டு உயிரைக் காக்கும் மருத்துவ வெளியேற்றங்கள் மற்றும்
மருந்துகளுக்காகக் காத்திருந்து இறந்துவிட்டனர்.
மனித இனத்துக்கு
எதிரான இந்தக் கொடூரச் செயலை தட்டிக் கேட்பதற்கு எவரும் இல்லை, கண்டிப்பதற்கு
யாரும் இல்லை. பிராந்தியத்தில், கடும் பொருளாதார கஷ்டத்துக்கு மத்தியிலும் இஸ்லாமிய ஈரான்
மட்டும் தன்னால் இயன்ற மனிதாபிமான உதவிகளை எமன் மக்களுக்கு செய்து வருகிறது.
பலஹீனமான
ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின்
பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ)
"எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை
வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை
அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும்
அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
நம்பிக்கை
கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள்
ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே
(முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் -
நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
(குர் ஆன் 4:75-76)
No comments:
Post a Comment