Comparison of Rights of Women in the Islamic Republic of Iran and Modern Western Liberal Countries
மூலம்: டாக்டர் ஷெர்வின் ஷெர்மா
لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ
ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு;
(புனித குர் ஆன் 4:32)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்: "அறிவைத்
தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் முஸ்லிம் பெண் மீது கடமையாகும்."[1]
இஸ்லாமிய போதனைகள், சட்டங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் எந்தவொரு சமூகத்திலும் வாழும் பெண்களுக்கு கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கைக்கான முழுமையான அமைப்பை வழங்குகிறது. இந்த தெய்வீக அமைப்பு பெண்களை எந்த விதமான அநீதியிலிருந்தும் பாதுகாக்கிறது, எல்லா அம்சங்களிலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது, எந்தவொரு துறையிலும் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் அவர்களால் முடிந்த அளவில் சமூகத்திற்கு சேவை செய்ய அனுமதிக்கிறது.
பெண்கள் மகள்களாகவும் சகோதரிகளாகவும் நேசிக்கப்படுவதோடு, தாய் மற்றும் மனைவியாக மிகவும் கண்ணியப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தின் அச்சாணியாக தங்கள் பங்கைச் செயல்படுத்தவும் அதிகாரம் பெற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள்தான் உண்மையான குடும்பத்தை உருவாக்குபவர்கள் - குடும்பமே ஒரு வளமான ஆரோக்கியமான சமுதாயத்திற்கு கல்வி கற்பதற்காக அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான மனிதர்களின் முதல் பள்ளியாகும்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது, இஸ்லாமிய அமைப்பில் பெண் குழந்தைகள் அதிக இரக்கத்துடனும், அன்புடனும், அக்கறையுடனும் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் இயற்கையான உடல், மன மற்றும் உணர்ச்சித் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி ஆண்களைப் போல் கல்வி கற்கிறார்கள். அவர்களின் உயிரியல் மற்றும் உளவியல் தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்கள் பெரியவர்களாக தங்கள் எதிர்கால பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு தயாராக உள்ளனர்.
அவர்களின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.[2] அவர்களின் கல்விக்கு வரம்புகள் மற்றும் தடைகள் கிடையாது, மேலும் அவர்கள் உயர்கல்வியில் இப்போது ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற திறமையான நிபுணர்களாக பெண்களுக்கு இஸ்லாமிய அமைப்பில் சமமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளாக பங்களிக்கின்றனர். சமூக, கலாச்சார மற்றும் அரசியல் களங்களில் முக்கிய தலைமைப் பாத்திரங்களை வகிக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒரு இலட்சிய இஸ்லாமிய சமுதாயத்தில், பெண்கள் ஆண்களை விட மிகவும் சக்திவாய்ந்தவர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களால் மிகவும் மாறுபட்ட பாத்திரங்களை வகிக்க முடியும் என்பதால் அவர்கள் சமூகத்தை, அதன் இதயமான வீடு மற்றும் குடும்பம் எனும் ராஜ்யத்தில் இருந்து ஆள்கிறார்கள்.
ஒரு ஆரோக்கியமான குடும்பம்
அதன் ஸ்தாபனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள் இல்லாமல் சாத்தியமில்லை. ஆரோக்கியமான
குடும்பம் இல்லாமல் சந்ததியினரைப் பராமரித்தல் மற்றும் வளர்த்தல் மற்றும்
ஆரோக்கியமான சமூக உருவாக்கம் சாத்தியமற்றது. இஸ்லாம் மதம் பெண்களுக்கான உரிமைகளை
முழுமையாக வழங்குகிறது.
வரலாற்று ரீதியாக, இஸ்லாம் தான் முதலில் பெண்களுக்கு வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் கண்ணியத்தை வழங்கியது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கி.பி.610ல் இஸ்லாத்தைப் போதிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், பெண் குழந்தை பிறந்தால் அதை சிலர் உயிருடன் புதைக்கும் அளவுக்கு அரேபிய தீபகற்பம் “ஜாஹிலியா” (அறியாமை) நிலையில் இருந்தது.
கருத்தியல் புரட்சியை மட்டுமல்ல, குறிப்பாக அந்த அறிவிலி சமூகத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சமூக, அறிவுசார், கலாச்சார, நிதி மற்றும் நீதி என ஒரு ஒட்டுமொத்த புரட்சியைக் கொண்டு வந்தது.
இஸ்லாத்தின் போதனைகளின் அடிப்படையில், பெண் பிள்ளைகள்
மற்றும் தாய்மார்கள் மிகவும் மதிக்கப்பட்டனர், பெண்களுக்கு சொத்துரிமை,
வாரிசுரிமை,
வணிகம் மற்றும்
தொழில் செய்ய, மற்றும் ஆண்களைப் போலவே அறிவைப் பெறவும்
உரிமையுடையவர்களானார்கள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணத்திற்கு
கட்டாயப்படுத்த முடியாது, விவாகரத்து உரிமையம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் இழைப்போர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர், மேலும் அவர்கள்
தங்கள் ஆண் சகாக்கள் போன்றே அனைத்து சமூக செயல்களிலும் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர்.
அந்த காலத்தில், பெண்களுக்கு உரிமைகள் வழங்காத இருண்ட காலத்தில் ஐரோப்பா மூழ்கியிருந்தது. ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, மேற்கில் நவீனமயமாக்கல் மற்றும் தொழில்புரட்சியின் தொடர்ச்சிக்குப் பிறகும் கூட, பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, கருத்துக் கூறும் உரிமை, உயர்கல்வி தொடரும் உரிமை, விவாகரத்து பெறும் உரிமை போன்ற எந்த அமைப்பும் இருக்கவில்லை. வாரிசுரிமையைப் பெறுவதற்கும் சொத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கும் அவர்கள் தகுதியற்றவர்களாக காணப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் நிர்வாக உரிமை மறுக்கப்பட்டது.
அமெரிக்காவில் பெண்களின் வாக்குரிமை இயக்கங்கள் கடும் போராட்டங்கள் காரணமாக 1920 இல் அமெரிக்க அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெறும் வெற்றிக்கு வழிவகுத்தது.[3]
ஐரோப்பிய நாடுகளில் 1918க்குப் பிறகு தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், சமூக நிகழ்வுகளில் அவர்கள் சட்டப்பூர்வமாக பங்கேற்கவும் உரிமை வழங்கப்பட்டது.[4],[5]
பின்னர், பல தசாப்தகால அரசியல் அழுத்தத்திற்குப் பிறகு, 1937 இல் முதன்முறையாக ஆண்களைப் போலவே பெண்களுக்கும் விவாகரத்து மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. இறுதியில் பெண்கள் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே ஹார்வர்ட் போன்ற மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து முதல் தொகுதி பெண் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் என்ற பிரபலமான முழக்கம் கேட்கப்படும் நவீன மேற்கத்திய சமூகங்களில், பெண்கள் தாராளவாதிகளாகக் கருதப்படும் இடங்களில், சம்பளம் மற்றும் சலுகைகளில் இன்னும் கடுமையான மற்றும் அடக்குமுறை ஏற்றத்தாழ்வுகள் உள்ளன - பெண்கள் மலிவான தொழிலாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அமெரிக்காவில் பாலின ஊதிய இடைவெளி இன்னும் உள்ளது. அமெரிக்காவில் 1979 இல் ஆண்களை விட பெண்களுக்கு 38.5% குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது, அமெரிக்காவில் பெண்களுக்கு சராசரியாக 18% குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது, ஐரோப்பாவில் இது ஆண்களை விட 22.3% குறைவாக உள்ளது.[6],[7]
கூடுதலாக, கர்ப்ப காலத்தில், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு, தாய்மார்களாக
அவர்களின் பங்கு புறக்கணிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரு
தாய்க்கு சராசரியாக 3.7 மாத ஊதியத்துடனான பிந்தைய பிரசவ விடுமுறையை
(பிரசவத்திற்குப் பிறகு) வழங்குகின்றன. நான்கு ஐரோப்பிய நாடுகளில் இது 6 முதல் 12 மாதங்கள் ஆகும்,
அதே சமயம்
கிட்டத்தட்ட பாதி ஐரோப்பிய நாடுகளில் பிரசவத்துக்கான விடுமமுறை பெற்றோருக்கு (தாயோ
அல்லது தந்தையோ) 11 மாதங்களுக்கு வழங்கப்படும், இதன்போது பூரண ஊதியம்
வழங்கப்படுவதில்லை.
அமெரிக்காவில், ஃபெடரல் அரசாங்கம்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊதியம் இல்லாத 12 வார மகப்பேறு விடுப்பை
மட்டுமே வழங்குகிறது, மேலும் அந்த காலகட்டத்திற்கு அப்பால் எந்த விடுமுறையும்
சட்டப்பூர்வமாக வேலை நிறுத்தத்திற்கு வழிவகுக்கும்! ஹார்வர்ட் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வெளியிடப்பட்ட
சமீபத்திய மதிப்பாய்வில், முன்னணி பல்கலைக்கழகங்களின் வல்லுநர்கள் குறைந்தபட்சம் 12
வாரங்களுக்கு தேசிய ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக் கொள்கையைப்
பரிந்துரைத்துள்ளனர்.[8]
மொத்தத்தில், அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் உள்ள இந்த மோசமான சூழ்நிலையைப் பாருங்கள், தொழில்பார்க்கும் பெண் ஒருவர் தாயான புதிதில், தன் குழந்தையைப் பராமரிக்க விடுமுறை
எடுத்துக்கொண்டால் அவரின் வருமானம் மேலும் குறையும்.[9]
மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு எதிரான இந்த அநியாயமான பாலின சார்பு ஊதிய-இடைவெளி அமைப்பில் பலர் ஒற்றைத் தாய்களாக உள்ளனர், மற்றவர்கள் (திருமண பந்தத்திலன்றி), ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர்.[10]
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் சம்பாதிப்பதற்கும் குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பதற்கும் தங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. இது பெரும்பாலும் வேலை நேரம் குறைப்பு அல்லது முழுமையாக வேலை இழப்புக்கு வழிவகுக்கிறது.
குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு தாயின் பொருள் வளங்களுக்கான அணுகலைக் குறைக்கலாம் மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதிப்புகளுடன் ஊதியம் பெறும் வேலையின் உளவியல் நன்மைகளையும் குறைக்கலாம்.[11]
பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பல பெண்கள் கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை மற்றும் உடல் நோய் உள்ளிட்ட மோசமான மன ஆரோக்கியத்தை அனுபவிக்கின்றனர். முதுகுவலி, தலைவலி, சோர்வு, பாலியல் தொடர்பான கவலைகள், பெரினியல் வலி மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் இவர்கள் மத்தியில் பொதுவானவை.
ஆறு மாத கால
மகப்பேறு விடுமுறை குறிப்பிடத்தக்க வகையில் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது
மற்றும் தாய்மார்கள் ஓய்வெடுக்கவும், கர்ப்பம் மற்றும்
பிரசவத்திற்கு பின் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கும் நேரத்தை
வழங்குகிறது, நெருங்கிய கூட்டாளியின்
வன்முறையைக் குறைக்கிறது, குழந்தையுடனான
பிணைப்பு அதிகரிக்கிறது மற்றும் குழந்தை வளர்ச்சியை மேம்படுத்துகிறது, குழந்தை இறப்பு மற்றும் தாய் ஆகியோரின் இறப்பு வீதத்தைக்
குறைக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. தொடர் மருத்துவ பராமரிப்பு
மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்கவும் வழிவகுக்கிறது.[12]
தீவிரவாத வஹாபி வழிபாட்டு முறை மற்றும் அதன் பல்வேறு பதிப்புகள் நடைமுறையில் உள்ள சில நாடுகளிலும் சமூகங்களிலும் இஸ்லாத்தின் பெயரால் பெண் கல்வியை தடைசெய்துள்ளது.
சமூகத்தில் பெண்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதைக் கடுமையாகத் திணிக்கும்
கருத்துக்களுக்கு மாறாக, ஈரான் இஸ்லாமியக்
குடியரசு முஹம்மது நபி (ஸல்) மற்றும் அவரது சந்ததியான அஹ்ல் உல்-பைத் (AS) ஆகியோரால் வழங்கப்பட்ட இஸ்லாத்தின் அசல்
போதனைகளின் அடிப்படையில் பெண்களின் நிலையை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, ஈரானின் இஸ்லாமிய சமூகத்தில்
பெண்கள் அதிக தொழில்நுட்பத் துறைகள் முதல் அரசியல் வரை அனைத்துத் துறைகளிலும்
மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர். நவீன ஈரானிய
சமுதாயத்தின் சமூக மற்றும் கலாச்சார சூழல் பெண்கள் எந்த துறையிலும் உயர்கல்வியை
தொடர உதவுகிறது. உண்மையில், இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் பெண்களுக்கான
சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் முழுமையான அமைப்பை உருவாக்கிய ஒரே நாடு ஈரான்
இஸ்லாமிய குடியரசு மட்டுமே.
ஈரான் இஸ்லாமிய குடியரசில், இஸ்லாமிய
சட்டங்களின்படி, பெண்களுக்கு
எல்லா நிலைகளிலும் - அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர்களின் பாரபட்சமான சூழ்நிலைக்கு
முற்றிலும் மாறாக - ஆண்களுக்கு நிகரான சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், கர்ப்பிணித்
தாய்மார்களுக்கு 9 மாதங்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது, அதே சமயம் இரட்டைக் குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால், குறிப்பிட்ட விடுமுறை 1 வருடம் ஆகும், மேலும் அவர்கள் தங்கள்
குழந்தைக்கு 1 வருடம் தாய்ப்பால் கொடுக்க தினமும் 2 மணிநேரமும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை தினமும் 1 மணிநேரமும் வழங்கப்படுகிறது. தந்தைக்கு குழந்தை பிறந்தவுடன் 10 நாட்கள்
ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது, மேலும் இரட்டைக்
குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் விடுமுறை ஒரு மாதம் வரை
நீடிக்கும்.[13]
நவீன சமூகங்களில், மேற்கத்திய தாராளவாத அல்லது கிழக்கு பாரம்பரிய கலாச்சாரம், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள், பழைய பாணி கடுமையான மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் கொடூரமான நெறிமுறைகள் ஆகியவற்றின் பெயரால் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
முஹம்மது நபி (ஸல்) மற்றும் அவரது ஆசீர்வதிக்கப்பட்ட அஹ்ல் உல்-பைத் (AS) பெண்பாலினத்தைப் பொறுத்தமட்டில் பல “ஹதீஸ்கள்” (மரபுகள்) உள்ளன. புனித குர்ஆனின் "ஆயத்துக்கள்" (வசனங்கள்) மற்றும் "ஹதீஸ்கள்" இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையில் கணவன் மற்றும் மனைவியின் உயர் நிலை மற்றும் பங்கை தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
தாராளவாத
மேற்கத்திய சமூகங்களில் ஆண் மற்றும் பெண் பாலின சமத்துவம் என்று அழைக்கப்படுவது
ஒரு பொதுவான சுலோகம் என்றாலும்,
மதிப்பாய்வு செய்யப்பட்ட
பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி, மரபணுவிலிருந்து உளவியல்
மற்றும் பாலினம் தொடர்பான மருத்துவக் கோளாறுகள் வரை பல்வேறு அம்சங்களிலிருந்து
பாலின வேறுபாடுகளை உள்ளதை நிரூபிக்கிறது. இந்த
கட்டுரைகளும் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட அறிவியல் புத்தகங்களும் பெண்களும்
ஆண்களும் சமமானவர்கள் அல்ல, அவர்கள் எல்லா அம்சங்களிலிருந்தும்
வேறுபட்டவர்கள் என்பதை நிரூபிக்கின்றன, எனவே பாலினம் - குறித்த
இஸ்லாத்தின் சட்டங்கள், போதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கான காரணத்தை முழுமையாக நியாயப்படுத்துகின்றன.
இஸ்லாமிய "இஜ்திஹாத்" (புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பகுத்தறிவு) அடிப்படையில், ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் நவீன புரட்சிகர மற்றும் முற்போக்கான சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் பற்றிய வழிகாட்டுதல்களை விளக்கி செயல்படுத்தியுள்ளது. பெண்கள் தங்கள் திறமைகள், ஆர்வங்கள், பாத்திரங்கள், பொறுப்புகள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரம் பெறுகிறார்கள். அவர்கள் இன்றைய ஈரானில் கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். ஈரான் இஸ்லாமியக் குடியரசில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாத்தின் போதனைகளின்படி பெண்களின் உரிமைகள் நிறுவப்பட்டுள்ளன.
மேற்கத்திய நவ நாகரீகத்தில் போதையுற்று மயங்கிக்கிடக்கும் அறிவுஜீவிகள் கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மற்றும் இராணுவ
ரீதியாகவும், பெரும்பாலும் வளரும் நாடுகளில், மேற்குலகு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை உணர்த்த வேண்டும். மேற்கத்திய
சமூகங்களில் வாழ்பவர்கள் தாராளமய வாழ்க்கை முறை என்ற பெயரில் பெண்கள் 'நவீன அடிமைத்தனத்தால்' பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதன்பால் அவர்களில் கவனத்தை செலுத்தவேண்டும்.
சுருக்கமாக, நவீன மேற்கத்திய
வாழ்க்கை முறையானது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல்
துன்புறுத்தல்கள் அதிகரிக்கவும், எல்லா
இடங்களிலும் அதிகரித்து வரும் வணிகங்களை நடத்துவதற்கும் பொருட்களை விற்பனை
செய்வதற்கும் விளம்பரங்கள், திரைப்படங்கள்
மற்றும் ஊடகங்களில் பெண்களின் உடல் அங்கங்களை மற்றும் நிர்வாணம் ஆகியவை
பெண்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளன. மேலும் திருமணத்தை விட
இணைந்து வாழ்வது விரும்பப்படும் இடத்தில், முறைகேடான பிறப்பு, சட்டவிரோத
கருக்கலைப்பு, டீன் ஏஜ்
கர்ப்பம் மற்றும் ஒற்றைப் பெற்றோர் குடும்பம் ஆகியவை சாதாரணமாகக் கருதப்படுகின்றன,
இன்னும், மேற்குலகில் வேலை நிலைமைகளில்
பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பாலியல்
துன்புறுத்தல்கள், கொடுமைப்படுத்துதல்
பணியிட சூழல், நியாயமற்ற
சம்பளம், அடக்குமுறையான மகப்பேறு
விடுமுறை நிலைமைகள் மற்றும் மிகக் குறைந்த சலுகைகள் ஆகியவை சமூகத்தின் கலாச்சார
மற்றும் சட்ட அமைப்பின் ஒரு பகுதியாகவே உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------
(Endnotes)
1 Bihar al-Anwar, vol. 1,
p. 177; vol. 2, p. 32; vol. 70, p. 68
2 For example, females
outnumber males in Iran’s 2017 university entrance exam. Tehran Times, Sept 16,
2017 <https://tinyurl.com/4bmhpnzh>
3 M.J. Johnson: The Woman
Suffrage Movement in the United States - Routledge (2022).
4 After long nationwide
struggle for their rights, for the first time in USA history, women were
allowed to vote in Montana in 1914. For a history of women’s struggle to vote
at state level in the USA, please see: Women in Congress: The Women’s Rights
Movement, 1848–1917.
<https://history.house.gov/Exhibitions-and-Publications/WIC/Historical-Essays/No-Lady/Womens-Rights/>.
5 S.L. Poulson. Suffrage:
The Epic Struggle for Women’s Right to Vote - ABC-CLIO, (2020).
6 For details see: Quick
Facts about Gender Wage Gap:
<https://www.americanprogress.org/article/quick-facts-gender-wage-gap/>.
7 European Union’s Gender
Pay Gap Statistics, see:
<https://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php?title=Gender_pay_gap_statistics>.
8 Niel, V. et al: The
Impact of Paid Maternity Leave on the Mental and Physical Health of Mothers and
Children: A Review of the Literature and Policy Implications - Harvard Review
of Psychiatry, 2020; 28(2): 113-126.
9 Aitkena, Z. et al: The
Maternal Health Outcomes of Paid Maternity Leave: A Systematic Review - Social
Science & Medicine, 2015; 130: 32-14.
10 Living with a male
partner without marriage: Male partner has legally no responsibility to
financially support mother and child.
11 Ibid: Ref. # 6
12 G. Kaufman: Fixing
Parental Leave: The Six Month Solution - New York University Press (2020).
13 Islamic Research
Center of the Iranian Parliament (Majlis); for more details about laws, see:
<https://rc.majlis.ir/fa/news/show/1660022> (last accessed: 1/10/2022)
No comments:
Post a Comment