Monday, November 28, 2022

பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச ஒருமைப்பாடு

 The International Day of Solidarity with the Palestinian People

- தாஹா முஸம்மில் 

ஐக்கிய நாடுகள் சபை 1977 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் தேதியை பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினமாக அறிவித்தது. 1947 ஆம் ஆண்டு இதே நாளில்தான் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பாலஸ்தீன இரண்டாக பிரிக்கும் தீர்மானத்தை (தீர்மானம் 181) ஏற்றுக்கொண்டது, இந்தத் தீர்மானம் பாலஸ்தீனில் ஒரு அரபு நாடு மற்றும் ஒரு யூத அரசை நிறுவும் நோக்கம் கொண்டதாகும்.

1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மேலும் பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது. பாலஸ்தீனர்கள் சுயநிர்ணய உரிமை, இறையாண்மை மற்றும் தாங்கள் இடம்பெயர்ந்த தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான எந்த அடிப்படை உரிமைகளை இன்னும் பெறவில்லை.

பாலஸ்தீன மக்களின் இன்றைய நிலைமை மற்றும் நீடித்த பாதுகாப்பற்ற, அச்சம் மிகு நிலையாக மாறியுள்ளது. எந்த ஒரு தீர்வுக்கும் இஸ்ரேல் இணக்கப்பாட்டுக்கு வருவதாகத் தெரியவில்லை. சர்வதேச சட்டங்களுக்கு அல்லது ஐ.நா. தீர்மானங்களுக்கோ கட்டுப்படுவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய கூட்டாளிகளோ இஸ்ரேலின் எந்த அத்துமீறல் நடவடிக்கைகளையும் கண்டுகொள்வதில்லை.

மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள், அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டு, தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து மோசமான மனிதாபிமான மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தலை தொடர்ந்து எதிர்கொள்வதுடன், பலருக்கு மின்சாரம், சுத்தமான தண்ணீர், சுகாதாரம், போதிய தங்குமிடம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லை. மில்லியன் கணக்கானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது அருகிலுள்ள ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் பல தசாப்தங்களாக அகதிகளாக வாழ்கின்றனர். பதிவுசெய்யப்பட்ட பாலஸ்தீனிய அகதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முகாம்களில் வாழ்கின்றனர், மேலும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் ஏற்கனவே மோசமடைந்து வரும் மனிதாபிமான மற்றும் சமூக பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

நாம் அறிந்த வரையில், பாலஸ்தீன மக்கள்அபகரிக்கப்பட்ட தமது பூர்வீக பூமியை மீட்டெடுப்பதற்காகவும் போராடி வரும் அதேசமயம், இஸ்ரேல் பலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்குவதிலும் எல்லைகளை விஸ்தரிப்பதிலும் குறியாக இருக்கிறது. இஸ்ரேல் எப்போதும் அமெரிக்க ஆதிக்கத்தில் இருப்பதால் இது எப்போதும் கவலை மற்றும் சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

பலஸ்தீனர்களுடன் ஒருமைப்பாட்டுத் தினமென்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய தினமல்ல..... அது அடக்குமுறைக்கு எதிரான, சுதந்திரத்தை மதிக்கும் அனைத்து மக்களினது தினமாகும். தமது விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்.

புனித பூமியான பலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இஸ்ரேலிய ராணுவம் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காத யூத வெறியர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும்வயோதிபர்களையும் அப்பாவிப் பெண்களையும் மிருகத்தனமாக கொன்று குவித்து வருகின்றனர். அமெரிக்காவின் தலைமையில் இஸ்லாம் விரோத சக்திகள் அனைத்தும் இதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன. ஐ.நா.சபையும் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கிறது என்பது வெளிப்படை. ஐ.நாவை  நம்பி எந்தப்பிரயோசனமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளின் ஒன்றுபட்ட செயற்பாடே இதற்கான ஒரே தீர்வு என்பது தெளிவு.

இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராக பலஸ்தீனர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளது. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆண்கள்பெண்கள்சிறுவர்கள்வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர். பலஸ்தீனியர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பலஸ்தீனர்களுடனான ஒருமைப்பாட்டுத் தினமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

பலஸ்தீன் போராட்டத்திற்கு ஆதரவான சிறப்பு கட்டுரைகள்ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நகரங்களில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்களும் சியோனிஸத்துக்கு எதிரான யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் நம்முடைய பகுதிகளில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. பலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும் வெறும் பலஸ்தீன பிரச்சனை அல்லது அப்பிராந்தியத்தின் பிரச்சனை என்ற அளவில் சுருக்குவதற்கான சூழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள அரபுத் தலைவர்களே, “எமக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

பலஸ்தீன் பூமி நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம்பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம்நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்றுவோம்.

அன்றைய தினம் பலஸ்தீன போராட்ட வரலாறுபைத்துல் முகத்தஸ் வரலாறுஇஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வோம். புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம்.

பலஸ்தீனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.





No comments:

Post a Comment