Addressing the challenges facing the Muslim world
இஸ்லாத்துக்கு எதிரான சதிகளை முறியடிப்பதற்காக, மதவாத கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன், இஸ்லாமிய பிரிவினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற அல்-அஸ்ஹரின் தலைமை ஷெய்க் ஷேக் அகமது எல்-தய்யிப் அழைப்புவிடுத்துள்ளார்.
Sheikh Ahmed el-Tayyeb |
ஷெய்க் அஹ்மத்
முஹம்மது அல்-தைய்யிப் அவரது முன்னோடி டாக்டர் முஹம்மது சயீத் தந்தாவியின்
மறைவுக்குப் பிறகு மார்ச் 2010
இல் அல்-அஸ்ஹரின்
தலைமை ஷெய்க்காக நியமிக்கப்பட்டார், சன்னி இஸ்லாமிய உலகத்தால் இஸ்லாமிய நீதித்துறைக்கான அதி
உயர் அதிகாரியாகக் கருதப்படுகிறார்.
இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான ஈரானின் உலக மன்றத்தின் பொதுச் செயலாளர், ஷேக் அஹ்மத் எல் தய்யிப், மூத்த சன்னி அறிஞரை ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, உள்-முஸ்லிம் உரையாடலுக்கான சமீபத்திய திட்டத்தைப் பாராட்டியுள்ளார்.
Hujjat-ul-Islam Hamid Shahriari |
ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம்
ஹமித் ஷஹ்ரியாரி, பெய்ரூட்டை
தளமாகக் கொண்ட சாட்டிலைட் சேனலான அல்-மயாதீனுக்கு அளித்த பேட்டியில், ஷியா-சுன்னி
உரையாடலுக்கான எகிப்திய அறிஞரின் முன்மொழிவைத் தொடர்ந்து அல்-அஸ்ஹர்
பல்கலைக்கழகத்தின் முஃப்தியை ஈரானுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஷெய்க் அஹ்மத்
முஹம்மது அல்-தைய்யிபின் உரைக்கு பதிலளித்த ஈரானிய இஸ்லாமிய அறிஞர், “இஸ்லாமிய உலகில்
பாதுகாப்பும் அமைதியும் நிலவ வேண்டும், இந்த குறிக்கோளை அடைவதற்கு முஸ்லிம்களுக்கு இடையேயான
உரையாடல் அவசியமாகும்" என்று
ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஹமித் ஷஹ்ரியாரி தெரிவித்தார்.
இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான உலக மன்றத்தின் பொதுச் செயலாளர், இஸ்லாமிய உரையாடலின் முதல் அடிப்படையைக் கண்டறியும் முயற்சியில் ஈரானுக்கு வருமாறு அல் அஸ்ஹர் தலைமை முஃப்திக்கு அழைப்பு விடுத்தார். அதேசமயம் முஸ்லிம்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவிப்பதற்காக கெய்ரோவிற்கு வருகைதர ஈரானிய இஸ்லாமிய ஒற்றுமை மையம் தயாராக இருப்பதாகவும் ஷஹ்ரியாரி கூறினார்.
”அல்-அஸ்ஹரின்
தலைமை முப்தியுடனான உரையாடலுக்கு நாங்கள் திறந்த மனதுடன் தயாராய் இருக்கின்றோம்; இஸ்லாத்தின்
எதிரிகளால் ஊக்குவிக்கப்படும் விரோத சதிகளுக்கு எதிராக எந்த அழைப்பையும் நாம்
தவறவிட மாட்டோம், அது வருடாந்திர அழைப்பானாலும் சரிய. ஈரான் உலகில் இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுத்து வருகிறது”
என்று ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஷஹ்ரியாரி மேலும் கூறினார்,
இஸ்லாமிய
சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான உலக மன்றத்தின் பொதுச் செயலாளர் அல்-மயாதீன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின் போதே இக்கருத்தைத்
தெரிவித்தார்.
மேலும்
ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஹமித் ஷஹ்ரியாரி, சிரியாவின் அவ்காஃப் அமைச்சர் முகமது அப்துல் சத்தாருடன்
ஒரு சந்திப்பில், இஸ்லாமிய
உலகிற்கு எதிரான சதிகளை முறியடிக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்
அறிஞர்களிடையே ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதாக தக்ரிப் செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள்
மற்ற நாடுகளில் உள்ள சன்மார்க்க நிறுவனங்கள், கலாச்சார மற்றும் அறிவியல் மையங்கள் மற்றும்
செமினரிகளுக்குச் சென்று முஸ்லிம் உலகப் பிரச்சினைகள் குறித்து அறிஞர்களுடன்
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்”.
ஈரான் இஸ்லாமிய
குடியரசில் பல்வேறு பிரிவுகளின் சகவாழ்வை சுட்டிக்காட்டிய ஷஹ்ரியாரி, பல்வேறு
சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கையைக் காட்டுவதற்கு
ஈரான் நாட்டை ஒரு முன்மாதிரியாக குறிப்பிட்டார்.
ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம்
ஷஹ்ரியாரி, இஸ்லாமியர்களுக்கு
எதிரான பிரச்சாரத்தை முறியடிப்பதற்கான சிறந்த வழி, பல்வேறு நாடுகளில் உள்ள முஸ்லிம் அறிஞர்களிடையே
ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும், பல்வேறு நாடுகளில் உள்ள ஷீஆ-சுன்னி அறிஞர்களின் ஒன்றுகூடலை
முன்மொழிவதும் ஆகும். இதற்கு களமமைக்கை ஈரான் இஸ்லாமிய குடியரசு எப்போதும் தயாராக
உள்ளது என்றார்.
இஸ்லாத்தின்
புனிதத்துவத்தைக் கெடுப்பதற்கென்றே திமிர்பிடித்த சக்திகளின் சிந்தனையில் உருவான
ஒன்று தான் ஐ.எஸ்.ஐ.எஸ்
தாயேஷ் தக்ஃபிரி
பயங்கரவாதக் குழு இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன்
திமிர்பிடித்த சக்திகளின் சிந்தனையில் உருவான ஒன்று என்று ஷஹ்ரியாரி சாடினார்.
அவர் குர்ஆன்
வசனங்களைக் குறிப்பிட்டு,
எதிரிகளுடனான
மோதலையும், முஸ்லிம்களுடனான
நட்புறவையும் ஒரு இஸ்லாமிய தேசத்திற்கான இரண்டு முக்கிய அளவுகோல்களாகக்
குறிப்பிட்டார்.
இஸ்லாத்தின்
இமேஜைக் கெடுக்கும் நோக்கத்துடன் திமிர்பிடித்த சக்திகளின் சிந்தனையில் உருவான
தாயேஷ் பயங்கரவாதக் குழுவாக்கும். "ஆணவ சக்திகள் இஸ்லாத்தின் பிம்பத்தை
வன்முறையாக உருவாக்கி அவற்றின் இஸ்லாமோஃபோபியா திட்டத்தை முன்னெடுக்க
எண்ணுகின்றன" என்றார்.
அவர் இஸ்ரேலிய
சியோனிச ஆட்சியை நாத்திகர்களின் உண்மையான வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டி, "அதன் ஆட்சியின்
அடித்தளம் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் சூழ்ச்சிகளை அடிப்படையாகக்
கொண்டது" என்றும் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய படைகளையும் அதற்கு துணைபோகும்
அமெரிக்க அரசையும் முஸ்லிம்களின் உண்மையான எதிரிகள் என்றும் அழைத்தார்.
அவர் இஸ்ரேலிய
ஆட்சியை போர்வெறியின் உண்மையான உதாரணம் என்று குறிப்பிட்டார், மேலும் இந்த
ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் சூழ்ச்சிகளை அடிப்படையாகக்
கொண்டது" என்று குறிப்பிட்டார்.
ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம்
ஷாஹ்ரியாரி, இஸ்லாமிய
சமூகங்களுக்கு எதிரான இன்னபிற விரோத சக்திகளின் இளைய தலைமுறையினரின் மனதை தவறாக
வழிநடத்தும் முயற்சிகளை கண்டித்தார். இந்த சூழ்ச்சிகளுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும்
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார்.
இஸ்லாமிய
சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான உலக மன்றத்தின் பொதுச்செயலாளர், இஸ்லாமியர்களிடையே
நட்புறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இஸ்லாமிய உலகில் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதையும் புனித
குர்ஆனின் முக்கிய பரிந்துரைகளாக வலியுறுத்தி தனது கருத்துக்களை முடித்தார்.
"ஒற்றுமையை
அடைவதன் மூலம் முஸ்லிம் உலகில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும்", லெபனான் முப்தி
மூத்த லெபனான் முஃப்தி ஷெய்க் காஸி ஹுனைனா பல்வேறு இஸ்லாமிய குழுக்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் நீண்ட கால மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து உலகில் இஸ்லாமிய ஒற்றுமையை அடைவதற்கு பிரிவினருக்கிடையே உரையாடலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
Sheikh Qazi Hunainah |
ஷெய்க் காஸி
ஹுனைனா, ஒரு நேர்காணலில், கருத்துகளின்
பன்முகத்தன்மை இஸ்லாத்தின் உள்ளார்ந்த பகுதியாகவும், அவை சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின்
ஆசீர்வாதமாகவும் இருப்பதாகவும் தக்ரிப் செய்தி நிறுவனம் (TNA) நடத்திய
நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
"இஸ்லாத்தில்
கருத்தியல் முரண்பாடு மற்றும் ஃபிக்'ஹ் பன்முகத்தன்மை
அனுமதிக்கப்படுகிறது, ஆனால்
முஸ்லிம்களிடையே போருக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுக்கும் முரண்பாடுகளே
அனுமதிக்கப்படாதது" என்று அவர் கூறினார்.
மேலும் அவர்
"முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக மோதல்கள் தொடர்கின்றன என்பதை நாம் ஒப்புக் கொள்ள
வேண்டும்; மேலும் இஸ்லாமிய
குழுவினரிடையே உரையாடலும் புரிந்துணர்வும் இந்த மோதல்கள் அனைத்தையும் முடிவுக்குக்
கொண்டுவரும், எனவே, இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமை என்பது ஒரு இஸ்லாமிய
பிரிவு அதன் சிந்தனைகளை மற்ற குழுக்களின் மீது திணிப்பதாகவோ அல்லது எல்லா
சிந்தனைப்பள்ளிகளும் ஒன்றாக மாற வேண்டும் என்பதாகவோ ஆகாது" என்றும்
குறிப்பிட்டார்.
"புனித மக்காவில்
வெவ்வேறு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளை பின்பற்றுபவர்கள் ஹஜ் செய்வதை நாங்கள்
காண்கிறோம். இது முஸ்லிம்கள் அவரவர் இருக்கும் வழியை ஒப்புக்கொள்வதற்கான அருகாமையின் ஒரு
பகுதியாகும், இங்கு முரண்பாடுகளின் பால் கவனம் செலுத்தப்படுவதில்லை, எவரும் பிற
குழுக்களின் வித்தியாசமான கிரியைகள் காரணமாக எவரையும் அவமதிப்பதும் இல்லை"
என்று ஷேக் காசி ஹுனைனா கூறினார்.
மறைந்த இமாம்
கொமெய்னி (ரஹ்) அவர்கள் வெளியிட்ட ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) பற்றியும்
குறிப்பிட்டார், இது மஸ்ஜித்
அல்-ஹராமில் சுன்னி இமாம்களுக்குப் பின்னால் ஷியா வழிபாட்டாளர்கள் தொழுகையை
பின்தொடர கட்டாயப்படுத்துகிறது.
ஆகவே, அருகாமை என்பது
இஸ்லாமிய உம்மா மத்தியில் உள்ள தொடர்புகளை புதுப்பித்து, முஸ்லிம்களை
ஒழுங்கப்படுத்தி முஸ்லிம் உலகு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகம்கொடுக்க
ஒத்துழைப்பை அதிகரிப்பதாகும்.
ஷியா-சுன்னி
சர்ச்சைகளை முன்னிலைப்படுத்தி, குழப்பங்களை ஏற்படுத்தும் எதிரிகளைப் பற்றி
சன்னி அறிஞர் எச்சரிக்கிறார்.
ஈரானின்
கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள சன்னி சமூகத்தின் பிரார்த்தனைத் தலைவர் மமுஸ்தா மொல்லா
அஹ்மத் ஷெய்க்கி, ஷீஆ மற்றும் சன்னி முஸ்லிம்களை சகோதரர்கள்
என்று அழைத்தார் மற்றும் இஸ்லாமிய பிரிவினர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை
முன்னிலைப்படுத்தி குழப்பங்களை விதைப்பவர்களைக் கண்டித்தார்.
Mamusta Molla Ahmad Sheikhi |
மூத்த சுன்னி
அறிஞர் மமுஸ்தா மொல்லா அஹ்மத் ஷெய்க்கி, தக்ரிப் செய்தி நிறுவனத்திற்கு (டிஎன்ஏ) அளித்த பேட்டியில், ஷியா மற்றும்
சன்னி சமூகங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை என்றாலும், எதிரிகள் இந்த
சர்ச்சைகளை பெரிதுபடுத்தி இப்பிரிவினர் மத்தியில் சண்டையை மூட்டிவிட
முயற்சிக்கின்றனர், என்றார்.
"இஸ்லாமிய ஈரானை
எவ்வழியிலாவது தனிமைப்படுத்த வேண்டும் என்ற எதிரிகளின் திட்டங்கள் அனைவருக்கும்
தெளிவாகத் தெரியும்; மேலும் எதிரிகளின் ஆதரவுடன் புரட்சிக்கு எதிரான
முகவர்கள் நாட்டில் பாதுகாப்பின்மையைப் ஏற்படுத்தி, இந்த சதித்திட்டங்களுக்கு
தங்களைத் தாங்களே ஆளாக்கிக் கொள்கிறார்கள்."
“சிரியா, ஈராக் மற்றும்
ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட அதே கதியை ஈரானிலும் ஏற்படுத்தி, இஸ்லாமியர்களின்
நிலப்பரப்பு மற்றும் அதிகாரத்தை குறைக்கும் அல்லது தம்வசமாக்கும் முயற்சியில்
இஸ்லாமிய புரட்சியின் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர்
மேலும் தெரிவித்தார்.
இன மற்றும் மத
உணர்வைத் தொட்டு சமூக மற்றும் உளவியல் பாதுகாப்பின்மையைக் கொண்டுவருவதற்காகவும், ஷியா மற்றும்
சன்னி பிரிவினரை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்க தூண்டுவதற்காகவும் எதிரிகள்
தொடுத்துள்ள முன்னோடியில்லாத ஊடகப் போரைக் கண்டித்தார்.
முஸ்லிம் உலகம்
சியோனிசத்திற்கு எதிராக முழு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
இந்தோனேசிய பல்கலைக்கழக
பேராசிரியர், இஸ்லாமிய உலகை
அச்சுறுத்தும் சவால்கள் குறித்து எச்சரித்தார் மற்றும் முஸ்லிம்கள் சியோனிசம்
பற்றி முழுமையாக அறிந்திருப்பதை பாராட்டினார்.
Shafiq A. Mughni |
இந்தோனேசிய தேசிய
இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷபிக் ஏ. முக்னி, IQNA க்கு அளித்த
பேட்டியில், பாலஸ்தீன நிலங்களில் நிலவும் சியோனிசவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு
வரும் அநீதியை இஸ்லாம் உலகம் முழுமையாக புரிந்து கொண்டுள்ளது என்று தக்ரிப் செய்தி
நிறுவனம் (TNA) தெரிவித்துள்ளது.
சில முஸ்லிம்
நாடுகள் இஸ்ரேலிய ஆட்சியுடன் இயல்பு நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையிட்டு
அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், "பாலஸ்தீன நிலங்களில் நிலவும் அநீதி
அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது; எனவே, நாம் மத்திய கிழக்கில் நீதியை நிலைநாட்ட வேண்டும் மற்றும்
பாலஸ்தீனியர்களின் இரத்தம் சிந்தப்படுவதை தடுக்க வேண்டும், என்றார்.
பிரிவினைவாதமும், இஸ்லாமிய
விழுமியங்களைக் கற்பிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி முறை இல்லாமையும் மற்றும்
வெளிநாட்டு எதிரிகளின் சதியும் இஸ்லாமிய உலகிற்கு மூன்று முக்கிய சவால்களாக அறிஞர்
குறிப்பிட்டுக் காட்டினார்.
இஸ்லாமிய
உலகிற்கு சவால் விடும் முதல் முக்கியப் பிரச்சினையாக இருப்பது முஸ்லிம்களிடையே
இருக்கும் பிரிவினை என்று குறிப்பிட்ட ஷபீக் முக்னி, இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாப்பதில் அனைத்து
முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"இஸ்லாம் என்பது
முஸ்லிம்களுக்கு மட்டும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு மதம் அல்ல, ஒட்டுமொத்த மனித
இனத்தின் மகிழ்ச்சிக்கான மார்க்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்" என்று அவர்
கூறினார்.
”இஸ்லாமிய
கொள்கைகளை கற்பிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த கல்வி முறை இல்லாதது முஸ்லிம்களுக்கு
இரண்டாவது முக்கிய பிரச்சனையாகும்” என்றும்
பேராசிரியர் குறிப்பிட்டார்.
"அவர்களின் சுயநலத்திற்கு
உத்தரவாதம் அளிப்பதற்காக முஸ்லிம்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான வழிகளைத்
தொடர்ந்து பின்பற்றும் பல வெளி சக்திகள் உள்ளன, மேலும் இது அனைத்து
முஸ்லிம்களுக்கும் சவால் விடும் மூன்றாவது முக்கிய பிரச்சனையாகும்" என்றும்
அவர் குறிப்பிட்டார்.
முதன்முறையாக
வருடாந்திர சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்ட ஷபிக் ஏ. முக்னி, ஈரான் இஸ்லாமிய
குடியரசு தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில், நூற்றுக்கணக்கான
இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலகம் முழுவதும் முஸ்லிம்கள்
முகம்கொடுத்துள்ள சமீபத்திய சவால்கள் குறித்து விவாதிக்க ஒன்றுகூடிய போதே மேற்கண்ட
கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஷீஆ - சுன்னா என்று தெளிவாக எழுதிய நீங்கள் சுன்னிகளின் அறிஞர்கள் என்று நீங்கள் கருதுபவர்களை மாத்திரம் சன்னி அறிஞர் என்று எல்லா இடங்களிலும் எழுதியதிலேயே விளங்குகின்றது உங்களின் இலட்சனை.
ReplyDelete