Sayyed Nasrallah: On the Lebanese front, all options are on the table, Keeping secrets is the secret to success
28 நாட்களுக்குப் பிறகு, சையத் ஹசன் நஸ்ரல்லா காஸா மற்றும் மத்திய கிழக்கில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி பேச மௌனம் கலைத்தார்.
ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா அவர்கள் நவம்பர் 3, 2023
அன்று ஆற்றிய உரை (ஜைனப் டெர்மோஸ்
அவர்களால் அல் மயாதீனுக்காக தொகுக்கப்பட்டது.)
ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா, "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்
(Operation
Al-Aqsa Flood) 100% ஒரு பாலஸ்தீனிய
முடிவு, மற்றும் அதன் நிறைவேற்றம் 100% பாலஸ்தீனிய முடிவு, "அதன் தொடக்கக்காரர்கள்
அதை மற்ற பாலஸ்தீன பிரிவுகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து கூட மறைத்தனர்,
அவர்கள் அவ்வாறு செய்ததை எவரும் பொருட்படுத்தவில்லை" என்று கூறினார்.
அல்-குத்ஸுக்கு செல்லும் பாதையில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை கௌரவிக்கும்
வகையில் நடைபெற்ற நிகழ்வில், சையத் நஸ்ரல்லா, "இந்த ரகசியம் காத்தல் தான் ஆச்சரியப்படத்தக்க
அதன் குறிப்பிடத்தக்க வெற்றியை உறுதி செய்தது, மேலும் இந்த நடவடிக்கையே ஒன்றுக்கு மேற்பட்ட
போர்முனைகள் மற்றும் போர்க்களங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.
"ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் (Operation Al-Aqsa Flood)” பற்றி யாருக்கும் தெரியாது என்பதான் இந்த போர் முற்றிலும்
பாலஸ்தீனியமானது மற்றும் பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது
என்பதற்கான தெளிவான ஆதாரமாகும், மேலும் இது எந்தவொரு பிராந்திய அல்லது சர்வதேச அமைப்புக்கும்
எந்த தொடர்பும் இல்லை" என்று தலைவர் உறுதிப்படுத்தினார்.
"இந்த போர் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டது" இது "இறைவனுக்காக
நிலைநிறுத்தப்பட்ட பாதையில் போராடுவதற்கான தெளிவான மற்றும் தூய்மையான எடுத்துக்காட்டுகளில்
ஒன்றாகும்" என்று வலியுறுத்தினார்.
ஹெஸ்புல்லா தலைவரின் கூற்றுப்படி, "அல்-அக்ஸா
புயலில் கட்டவிழ்ந்து வரும் நிகழ்வுகளே ஈரானுக்கு எதிர்ப்பு பிரிவுகள் மீது எந்த ஆணையும் இல்லை என்பதற்கான தெளிவான
சான்றுகள்" மற்றும் "உண்மையான முடிவுகளை எடுப்பவர்கள் எதிர்ப்பின்
தலைவர்கள் மற்றும் அதன் சுதந்திரப் போராட்ட வீரர்கள்."
இந்த சூழலில், சையத் நஸ்ரல்லா, "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் (Operation
Al-Aqsa Flood) இஸ்ரேலிய அமைப்பின்
பலவீனத்தையும் இயலாமையையும் மேலும் அம்பலப்படுத்தியது" என்றும், இது உண்மையில்
"சிலந்தி வலையை விட பலவீனமானது" என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் நோக்கத்தை முழு உலகமும் பார்க்கும் வகையில்
ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் மீண்டும் முன்னணிக்குத் தள்ளியது என்று அவர் தொடர்ந்து
கூறினார்.
ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்திற்கு முன் என்ன நடந்தது?
இந்த சூழலில், சையத் நஸ்ரல்லா அக்டோபர் 7 க்கு முன்னர் பாலஸ்தீன மக்கள் அனுபவித்த
கஷ்டங்களை எடுத்துரைத்தார், "குறிப்பாக பெஞ்சமின் நெதன்யாகுவின் பாசிச, முட்டாள்தனமான,
கொடூரமான மற்றும் அசுரத்தனமான அரசாங்கத்தின் கீழ் பாலஸ்தீனத்தில் கடந்த [சில] ஆண்டுகளில்
நிலைமைகள் மிகவும் கடினமாக இருந்தன."
"நீங்களும் முழு உலகமும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனிய மக்களின்
துன்பங்களை நன்கு அறிவீர்கள்" என்று அவர் மேலும் கூறினார், இருப்பினும், "தீவிரவாத அரசாங்கம் கைதிகளுக்கு எதிரான அதன் தன்னிச்சையான நடவடிக்கைகளை
தீவிரப்படுத்தியது," ஏற்கனவே மோசமான மனிதாபிமான நிலைமையை மேலும்
மோசமாக்கியது.
"காஸாவில் வசிக்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் [20
ஆண்டுகளுக்கும் மேலாக] கடினமான நிலைமைகளை அனுபவித்து வருகின்றனர்" என்று கூறினார்.
இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கவாதக் கொள்கைகளையும் எதிர்ப்புத் தலைவர் சுட்டிக் காட்டினார், இது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வலுக்கட்டாயமாக இடம்பெயர்வதற்கான அபாயங்களை மேலும் அதிகரித்தது.
ஆக்கிரமிப்பால் நடத்தப்பட்ட அதிகரித்த அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக் கொள்கைகளையும்
அவர் சுட்டிக் காட்டினார், இது "அபகரிக்கும் நிறுவனத்தை [அதன் மையத்தை] மற்றும்
திமிர்பிடித்த ஆதரவாளர்கள், குறிப்பாக வாஷிங்டன் மற்றும் லண்டன்" ஆகிவற்றை உலுக்கக்கூடிய
ஒரு பெரிய நிகழ்வு".
காஸா மீதான போரில் அமெரிக்காவின் பங்கு
காஸா முனை மீதான மிருகத்தனமான போரில் அமெரிக்காவின் பங்கு குறித்து, சையத்
நஸ்ரல்லா தெளிவுபடுத்தினார், அக்டோபர் 7 அன்று ஒரு பலமான அடியைப் வாங்கிய பின்னர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக பைடன்
நிர்வாகம் "அதன் ஜனாதிபதி, செயலாளர்கள் மற்றும் தளபதிகளை அனுப்புவதற்கு அவசரம் காட்டியது" என்று தெளிவுபடுத்தினார்.
ஆக்கிரமிப்பை ஆதரிப்பதற்கான வாஷிங்டனின் அவசரம் அதன் "பலவீனத்தை"
வெளிப்படுத்துகிறது என்று உறுதிப்படுத்தினார்.
மோதல்களின் முதல் நாளில் அமெரிக்காவிடமிருந்து 10 பில்லியன் டாலர் உதவியைக் கோரியதைக்
கருத்தில் கொண்டு அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான "இஸ்ரேலின்" திறனை
அவர் கேள்விக்கு உட்படுத்தினர். "இஸ்ரேலுக்கு" உதவுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட
பாலஸ்தீனத்திற்குச் சென்ற ஏராளமான அமெரிக்க இராணுவ அதிகாரிகளையும், ஆக்கிரமிப்பிற்கு
அனுப்பப்பட்ட ஏராளமான ஆயுதங்களையும் அவர் சுட்டிக்காட்டினார், இவை அனைத்தும்
"இஸ்ரேல்" சுயாதீனமாக "அதன் காலில் நிற்க முடியாது" என்பதைக் காட்டுகின்றன.
சையத் நஸ்ரல்லாவின் கூற்றுப்படி, "காஸாவில் நடப்பது அமெரிக்காவின் பாசாங்குத்தனத்துடன்
கூடிய இந்த கொலைகள் அனைத்திற்கும் அமெரிக்காவின் நேரடி பொறுப்பை
வெளிப்படுத்துகிறது, மேலும் இது எங்கள் பிராந்தியத்தில் அவர்கள் விதைத்த
அபகரிப்பு நிறுவனத்தின் மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான தன்மையையும்
பிரதிபலிக்கிறது."
"காஸாவில் நடந்து வரும் போருக்கு வாஷிங்டன் முற்றிலும் பொறுப்பு, அதே
நேரத்தில் "இஸ்ரேல்" என்பது மனிதர்களைக் கொல்லும் ஒரு கருவி
மட்டுமே என்றும், "காஸாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துவதைத்
தடுக்கும், எந்தவொரு போர்நிறுத்த முடிவையும் நிராகரிக்கும் பக்கமே அமெரிக்கா
உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தினார்.
உண்மையில், காஸாவில் போரை நடத்துபவர்கள் அமெரிக்கர்கள்தான் " அதுவே ஈராக்
மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு தளங்கள் மீது தாக்குதல்களைத்
தொடங்க ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பைத் தூண்டியது", இது
"ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான முடிவு" என்று விவரித்தார்.
இஸ்ரேலின் தவறுகள் தொடர்கின்றன
"இஸ்ரேலியர்கள் செய்த மற்றும் தொடர்ந்து செய்யும் மிகப்பெரிய தவறுகளில்
ஒன்று, அவர்களால் அடைய முடியாத அல்லது தொலைநோக்கற்ற நீண்டகால இலக்குகளை நிர்ணயிப்பதாகும்."
சையத் நஸ்ரல்லா ஹமாஸை ஒழிப்பதற்கான இஸ்ரேலிய நோக்கத்தை 2006 இல்
"லெபனானில் எதிர்ப்பை நசுக்குதல்" மற்றும் கடத்தப்பட்ட இரண்டு இஸ்ரேலிய
கைதிகளை மீட்டெடுப்பது என்ற அவர்களின் நோக்கத்துடன் ஒப்பிட்டார், "பேச்சுவார்த்தைகளிலோ அல்லது [கைதிகள்] பரிமாற்றத்திலோ ஈடுபடாமல், தாக்க முற்பட்டு தோல்வியைத் தழுவினர்".
2006-ம் ஆண்டு தோல்வியடைந்த நிலையில் செய்தது போன்ற தவறுகளை செய்த இஸ்ரேலியர்கள்,
இன்று காஸாவில் மீண்டும் தவறுகளைச் செய்கின்றனர், அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை,
தம்மை தகவமைத்துக் கொள்வதுமில்லை என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
காஸாவில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை "இஸ்ரேல்" கொலை
செய்வதும், அத்துடன் ஒட்டுமொத்த குடியிருப்பு முகாம்களையும்
அழிப்பதும் ஆக்கிரமிப்பு அனைத்து சிவப்பு கோடுகளையும் கடக்க தயாராக இருப்பதைக்
காட்டுகிறது.
சையத் நஸ்ரல்லா பாலஸ்தீன எதிர்ப்பு போராளிகள் எடுத்து வரும் வீரமான
நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். "ஒரு எதிர்ப்புப் போராளி முன்னேறி ஒரு
டாங்கியின் மீது வெடிகுண்டை வைத்தால், இஸ்ரேலிய எதிரி இந்த
திறமையான போராளிகளை எவ்வாறு சமாளிப்பார்?"
"காஸாவிலிருந்து மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் மற்றும் தினசரி வரும்
காட்சிகளையும், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆண்கள், பெண்கள்
மற்றும் குழந்தைகள் இடிபாடுகளின் கீழ் இருந்து வெளியே வரும் காட்சிகளையும், அவர்கள் இன்னும் எதிர்ப்புக்கு ஆதரவை வெளிப்படுத்தும் காட்சிகளையும்" அவர்
எடுத்துரைத்தார்.
இந்த சம்பவங்கள் "பொதுமக்களைக் கொல்வதன் மூலமும் படுகொலைகளைச் செய்வதன்
மூலமும் நீங்கள் எந்த இலக்குகளையும்
அடைய முடியாது என்பதையே சியோனிஸ்டுகளுக்கு தெளிவாகக் கூறுகின்றன."
வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகள், அனுதாபங்கள்
சையது நஸ்ரல்லா வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அல்-அக்ஸா
வெள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகின் எந்த இடத்திலும் இறந்த ஒவ்வொரு
தியாகியின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்தார்.
உலகில் இணையற்ற காஸாவின்
புகழ்பெற்ற மக்களுக்கும் தலைவர் அஞ்சலி செலுத்தினார், "காஸா மக்களின் மகத்துவம், உறுதி மற்றும் பொறுமையை எந்த வார்த்தைகளும் வெளிப்படுத்த முடியாது, இது மேற்குக் கரை
மக்களுக்கும் பொருந்தும்" என்று கூறினார்.
மேலும், அல்-அக்ஸா பிளட் நடவடிக்கையில் இணைந்து கொண்ட ஈராக்
மற்றும் ஏமன் படைகளுக்கு அவர் நன்றி கூறினார்.
https://english.almayadeen.net/news/politics/sayyed-nasrallah--us-is-preventing-ceasefire-in-gaza
தமிழில்: தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment