Thursday, November 23, 2023

போர் நிறுத்தம் தோல்வியுற்றால், பிராந்திய போர் ஏற்படக்கூடும் - அமீர்-அப்துல்லாஹியன்

If ceasefire fails, regional war likely - Amir-Abdollahian

யுத்தம், போர்நிறுத்தம் மற்றும் மாறிவரும் பிராந்திய நிலைமை தொடர்பாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் அல்-மயாதீன் செய்தி தளத்திற்கு 2023-11-22 வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ,


பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்த தன்னால் முடிந்ததைச் சிறந்தமுறையில் செய்ய வேண்டும். இல்லையென்றால், போர்நிறுத்ததின் தோல்வி ஒரு முழுமையான பிராந்தியப் போருக்கு வழிவகுக்கும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காஸா மீதான போர் நீடித்தால், அது புதிய முனைகளுக்கு விரிவடைவதற்கு வழிவகுக்கும் என்பதை விடுதலை போராட்டக்குழுக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுன; லெபனானியர்கள், சிரியர்கள், ஈராக்கியர்கள் மற்றும் யெமனியர்கள் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை என்று ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் புதன்கிழமை அல் மயாதீனிடம் தெரிவித்தார்.

சமீபத்திய பிராந்திய நிலைமைத் தொடர்பான ஆலோசனைகளுக்காக தற்போது தற்போது லெபனான் வந்து  இருப்பதாக அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்தார். லெபனான் அதிகாரிகளுடன் போர் நிறுத்தம், போர், பாலஸ்தீனத்தின் எதிர்காலம், மாறிவரும் பிராந்திய நிலைமை, போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் நடத்தை மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து விவாதித்ததாக அவர் கூறினார்.

"சியோனிஸ்டுகளின் அத்துமீறல்களை விடையிறுக்கும் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் 6 வாரங்களுக்குப் பிறகு இப்பகுதி சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறது," என்று குறிப்பிட்ட அவர் இஸ்ரேலை அணு நிராயுதபாணியாக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.

போர்நிறுத்தம் தொடர்பாக குறிப்பிடுகையில், அது தொடரவில்லை என்றால், பிராந்தியத்தின் சூழ்நிலைகள் மாறும், மேலும் போர் விரிவடையும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "அது விரிவடைவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் சகல தெரிவுகளும் மேசையில் உள்ளன," என்றார்.

போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு தெஹ்ரான் சர்வதேச தரப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், போரின் முடிவு விடுதலை போராட்ட அணிகளுக்கு சாதகமாக அமையும் றன்று அவர்களிடம் குறிப்பிட்டதாகவும் அமீர்-அப்துல்லாஹியன் கூறினார்.

கடினமான மற்றும் சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கட்டார் மற்றும் எகிப்திய மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்டுள்ள 4 நாள் மனிதாபிமான இடைநிறுத்தம் குறித்த சமீபத்திய அறிவிப்பை பல சர்வதேச அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் சிறார்களை (19 வயதிற்குட்பட்டவர்கள்) விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 50 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறார்களை (19 வயதிற்குட்பட்டவர்கள்) விடுவிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்குகிறது.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா துணை பொதுச் செயலாளரும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளருமான மார்ட்டின் கிரிஃபித்ஸ், இடம்பெயர்ந்த காஸா மக்கள் வடக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை "நம்பிக்கையுடன்" அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ஐ.நா கொண்டுள்ளது என்றும், "வசதிகளை சரிசெய்ய நாங்கள் வடக்கிற்கும் செல்ல முடியும்" என்றும் தெரிவித்தார்.

குண்டுவீச்சுகளை தெற்கே நகர்த்துவதற்கான இஸ்ரேலின் விருப்பத்தை க்ரிஃபித்ஸ் வெளிப்படுத்தினர், அது முன்னர் காஸா மக்களை அங்கு செல்லுமாறு அறிவுறுத்தியது. அவர் வடக்கை "பாழடைந்த பகுதியாக்கினர். இது மீண்டும் தெற்கில் நிகழும் என்று நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்," என்றும் க்ரிஃபித்ஸ் தெரிவித்தார்,

"தெற்கில் ஒரு பெரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும், மேலும் எங்கள் கிடைத்து வரும் யுத்தநிறுத்தின் ஒவ்வொரு கணத்தையும் நாம் பயன்படுத்த வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய எதிர்ப்பு குழுக்களுக்கு ஈரான் ஆதரவு

இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் காஸாவில் ஹமாஸை ஒருபோதும் ஒழிக்க முடியாது, அது பாலஸ்தீனத்திலேயே இருக்கும். ஹமாஸ் ஒரு சட்டபூர்வமான புரட்சிகர இயக்கம், அது மிகவும் யதார்த்தபூர்வமானது என்பதால் தொடர்ந்து வாழும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

போர்நிறுத்தம் எவ்வாறு எதிர்ப்பு குழுக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்த நுண்ணறிவை வழங்கிய போதிலும், அமீர்-அப்துல்லாஹியன், இந்த விஷயத்தில் கட்டாருடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

"போராட்டக் குழுக்கள் எங்கள் சார்பாக செயல்படவில்லை, அவை தங்கள் நாடுகள் மற்றும் அரபு தேசத்தின் நலன்களுக்காக செயல்படுகின்றன," என்று அவர் கூறினார்.

"ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக சுயாதீனமாக செயல்படும் பிரிவுகள் உள்ளன, ஈரானின் உத்தரவுகளையும் நிர்வாகத்தையும் அவை பின்பற்றவில்லை" என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஈராக் தனது சுதந்திரத்தை பாதுகாக்கவும், தனது சகோதரர்களை பாதுகாக்கவுமே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்குகிறது,” என்று அமீர் அப்துல்லாஹியன் வலியுறுத்தினார்.

https://english.almayadeen.net/news/politics/exclusive--if-ceasefire-fails--regional-war-likely---amir-ab 

No comments:

Post a Comment