Wednesday, September 21, 2022

முஸ்லிம் உலகை பெருமைப் படுத்தும் இஸ்லாமிய ஈரான்

 Iran’s deterrence power thanks to remarkable defense advances

ஏகாதிபத்தியவாதிகளாலும் அரபு பிற்போக்குவாத ஆட்சியாளர்களாலும் தூண்டப்பட்ட சதாம் ஹுசைனின் ஈரான் மீதான எட்டு ஆண்டுகால அழிவு யுத்தம் 1980 செப்டம்பர் மாதம் 22ம் திகதி ஆரம்பித்தது. இந்த படையெடுப்பை நினைவுகூரும் வகையில். ஈரான் இஸ்லாமிய குடியரசு மோதலின் கசப்பான மற்றும் கெளரவமான நினைவுகளை ஈரானிய சமுதாயத்திற்கு நினைவூட்ட ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் 22ம் திகதியில் இருந்து புனித பாதுகாப்பு வாரத்தைக் அனுஷ்டிக்கிறது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு இந்த யுத்தம் வழங்கியது எனலாம்.

வுகணை, ரேடார், கடல்சார் பாதுகாப்பு, லேஸர் கருவிகள், கவச வாகனங்கள் மற்றும் ட்ரோன் தொடர்பான மேம்பட்ட அமைப்புகள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து தயாரிப்பதில் ஈரானின் சாதனைகள் அதன் தற்காப்பு சக்தியை சிறந்ததாக ஆக்கியுள்ளன.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ராணுவ விமானப்படைத் தளபதியின் கூற்றுப்படி, ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) உற்பத்தி செய்யும் துறையில் ஈரான் 100% தன்னிறைவை அடைந்துள்ளது.

Brigadier General Hamid Vahedi 

"Kaman-12" மற்றும் "Kaman-22" என பெயரிடப்பட்ட இரண்டு அதிநவீன ட்ரோன்களை தயாரிப்பதில் ஈரானிய விமானப்படை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று பிரிகேடியர் ஜெனரல் ஹமிட் வாஹிதி கூறுகின்றார்.

மேம்பட்ட UAV களை உற்பத்தி செய்யும் துறையில் ஈரான் சிறந்த பலம்வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், இந்த திறன் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானிய ஆயுதப் படைகளின் பிரதம தளபதியான ஆயதுல்லா செய்யதலி காமனெய், ஆகஸ்ட் 31, 2016 அன்று, "கொடுமைப்படுத்துதல் மற்றும் மேலாதிக்க சக்திகள் நிறைந்த உலகில், அறநெறிகள், மனசாட்சி மற்றும் மனிதநேயம் எதுவும் இல்லை. நாடுகளின் மீது படையெடுப்பதற்கும் அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் அவை வெட்கப்படுவதில்லை, அதனால் எமது தற்காப்பு மற்றும் தாக்குதல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முற்றிலும் இயல்பானது மற்றும் நியாயமானது, ஏனெனில் இந்த நாடுகள் எமது நாட்டின் பலத்தை உணராத வரை, எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை."

"தேசம், நாடு மற்றும் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க, தற்காப்புத் திறனுக்கு மேலதிகமாக தாக்குதல் திறனையும் அதிகரிக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

"நாட்டின் பாதுகாப்புத் தொழில்துறையானது முன்னேற்றத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்; அது பாதுகாப்புத் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவு சார்ந்த நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு ஆகும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Major General Hossein Salami

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி ஏப்ரல் 19, 2022 அன்று, ஈரானிய இராணுவம் மற்றும் IRGC ஆகிய இரண்டிலும் ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் துறையில் சாதனைகள் மிகச் சிறந்தவை என்று கூறினார், சைபர் போர் போன்ற இன்னும் சிலவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

தளபதி, கடந்த செப்டம்பர் 6 அன்று பிறிதொரு வைபவத்தில் உரையாற்றுகையில், ஈரான் இப்போது வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை நிர்மாணிப்பதில் உலக வல்லரசுகளுடன் பொருந்துகிறது சிலவற்றில் அவற்றையும் மிஞ்சுகிறது என்று கூறினார்.

"இன்று, அமெரிக்கா தனது எந்த திட்டத்தையும் (எம்மை மீறி) பிராந்தியத்தில் செயல்படுத்த முடியாது, அதன் திட்டங்கள் தோல்வியில் முடிவடைகின்றன." ஈரான் பாதுகாப்புக்காக ஏனையோரில் தங்கியிருந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்றும் இஸ்லாமிய குடியரசு நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்நாட்டு வளங்களை மட்டுமே நம்பியுள்ளது என்றும் ஜெனரல் சலாமி கூறினார்.

"பல தொழில்நுட்பங்களில் நாங்கள் முதல் இடத்தில் இருக்கிறோம், வான் பாதுகாப்புத் துறையில் கூட, சில வல்லரசுகள் நமது ஆயுதங்களை வாங்கும் நிலையில் உள்ளன; மற்றும் கூட்டு ஒத்துழைப்பை அவை நாடும் அளவுக்கு உலகின் தலைசிறந்த சக்திகளை நாம் விஞ்சிவிட்டோம்," என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"நவீன அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு இன்று, பைசிக்கல்களை தயாரிப்பது போலவே எளிதாகியுள்ளது; இன்று நிலையான மற்றும் அசையும் இலக்குளை எங்கள் ஆயுதங்களின் மூலம் 100% துல்லியமாக தாக்கி அழிக்க முடியும், மேலும் எங்கள் ட்ரோன்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விரும்பும் எந்த புள்ளியையும் துல்லியமாக குறி வைக்கக் கூடியவை," என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Major General Mohammad Hossein Baqeri

ஆகஸ்ட் 31, 2022 அன்று, ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹுசைன் பாகரி, ஈரானிய வான்வெளியின் பாதுகாப்பானது உலக பாதுகாப்பு அரங்கில் தடுப்பு சக்தியின் சின்னமாகும் என்று கூறினார்.

நாட்டின் அதிநவீன பாதுகாப்பு வலையமைப்பினால் ஈரானிய வான்பரப்பை பாதுகாக்க முடிந்துள்ளது மற்றும் சர்வதேச அரங்கில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தடுப்பு சக்தியானது எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க முழுமையாக தயாராக உள்ளது.

தேசிய வான் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஜெனரல் பாகரி விடுத்த செய்தியில், “நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வலையமைப்பின் தீர்க்கமான மற்றும் மூலோபாயப் பங்கில் இருந்து பயனடைந்ததுடன், வான் பாதுகாப்புப் படையினால் ஈரானிய வான்வெளியின் பாதுகாப்பை முழுமையான விழிப்புணர்வுடன் பாதுகாக்க முடிந்தது.

இஸ்லாமிய ஈரானின் பாதுகாப்பை உறுதிசெய்து பெருமை சேர்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் அனைத்து வான் பாதுகாப்புப் படையின் தளபதிகள், மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவர் தேசிய வான் பாதுகாப்பு தினத்தை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

எக்ததார் (வலிமை) 1401 ஈரானிய உள்நாட்டு ராணுவ பயிற்சிகள்


ஈரானிய இராணுவத்தின் தரைப்படையானது செப்டம்பர் 7, 2022 அன்று மத்திய ஈரானில் இரண்டு நாள் எக்ததார் (வலிமை) 1401 பயிற்சிகளைத் தொடங்கியது, நாட்டின் மத்தியப் பகுதியில் துரித எதிர்வினைப் படைகள் மற்றும் ஹெலிகாப்டர்களின் குழுக்கள் இணைந்து ஒரே இரவில் ஹெலிபோர்ன் நடவடிக்கைகளைக் கொண்டிருந்தன.

ஈரானிய இராணுவ தரைப்படையானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மூலோபாய ஏவுகணையை (SSM) சோதித்தது, இது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. ஃபத்ஹ் (வெற்றி) 360 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, எக்ததார் 1401 பயிற்சியின் இரண்டாம் கட்டத்தில் ஏவப்பட்டது.

ஈரானிய இராணுவப் பிரிவுகளும் உள்நாட்டு தயாரிப்பான ஃபஜ்ர்-5 ஏவுகணைகளை ஏவியது. இந்த ஏவுகணை 75 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது என்றும், 90 கிலோகிராம் எடையுள்ள வெடிமருந்துகளுடன் 175-கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

ஃபத்ஹ் 360 ஏவுகணை மணிக்கு 3,704 கிலோமீட்டர் வேகத்தில் சென்று மூலோபாய இலக்குகளைத் தாக்கும் வல்லமைக்கு கொண்டது, மேலும் அதன் வேகத்தை மணிக்கு 5,000 கிமீ ஆக அதிகரிக்க முடியும், அதே நேரத்தில் செயற்கைக்கோள்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, விரைவான வழிசெலுத்தல் மற்றும் எதிரி இலக்குகளுக்கு எதிராக வேகமாகத் தாக்கக்கூடிய வல்லமை கொண்டதாகும்.

காஸ்பியன் கடலில் நிலையான பாதுகாப்பு கடற்படை பயிற்சிகள்


ஈரானிய கடற்படை "நிலையான பாதுகாப்பு" வருடாந்திர பயிற்சிகளை ஜூலை 9, 2022 அன்று காஸ்பியன் கடலில் இரண்டாவது நாளாக நடத்தியது. உள்ளூர் நிபுணர்களின் அயரா முயற்சிகள் மூலம் டமவந்த் போர் கப்பல் (அழிப்பான்) காஸ்பியன் பிராந்தியத்தில் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது.

காத்தமுன் நபி - 17 ஈரானிய உள்நாட்டு கூட்டு பயிற்சிகள்


இஸ்லாமிய புரட்சி காவலர் படை (ஐ.ஆர்.ஜி.சி) 2021 டிசம்பர் 24 அன்று, காத்தமுன் நபி - 17 கூட்டு பயிற்சிகளின் இறுதி கட்டத்தில் சுமார் 16 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியது.

ஐ.ஆர்.ஜி.சி விமானப்படை யாசின் நீண்ட தூர குண்டுகளை இணைத்து ஸ்டாண்ட்-ஆஃப் தாக்குதலில் பயிற்சி செய்வதற்காக காத்தமுன் நபி - 17 போர் விளையாட்டுகளின் போது SU-22 போர் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தியது.

பெரிய அளவிலான ட்ரோன் பயிற்சிகள்


ஈரான் இஸ்லாமிய குடியரசு இராணுவம் ஆகஸ்ட் 24, 2022 அன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் பயிற்சிகளைத் தொடங்கியது, 150 க்கும் மேற்பட்ட புதிய மேம்பட்ட ட்ரோன்கள் இதன்போது பயன்படுத்தப்பட்டன.

முஹாஜிர்-6 ISTAR விமானங்களுக்கு கூடுதலாக உள்நாட்டு தயாரிப்புகளான யாசிர், சாதிக், யஸ்டான், மற்றும் அபாபீல்-3 தந்திரோபாய கண்காணிப்பு ஆளில்லா வான்வழி வாகனங்கள், பெலிகன் செங்குத்து டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் கடற்படை ட்ரோன்கள், வெவ்வேறு தளங்களிலிருந்து பறந்து ஈரான் முழுவதும் நாட்டின் எல்லைகளை கண்காணிப்பதில் ஈடுபட்டன.

IONS (IMEX 2022) கடற் படை கூட்டு பயிற்சி


இந்தியப் பெருங்கடல் கடற்படை சிம்போசியம், பொதுவாக IONS (IMEX 2022) என்று அழைக்கப்படுகிறது, மார்ச் 29, 2022 அன்று, இந்திய கோவா துறைமுகத்தில் ஈரான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகள் சில இதில் பங்கேற்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஈரானிய DENA அழிப்பான் இந்த பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

2022 கடற்பாதுகாப்பு பெல்ட் கூட்டு பயிற்சிகள்


ஈரானிய, ரஷ்ய மற்றும் சீன கடற்படைகள் இணைந்து தங்களது மூன்றாவது இராணுவ பயிற்சியை இந்தியப் பெருங்கடலில் ஜனவரி 21, 2022 அன்று நடத்தியது.

ஈரானிய கடற்படை, இஸ்லாமிய புரட்சி காவலர்கள் (ஐ.ஆர்.ஜி.சி) கடற்படை, சீன கடற்படை மற்றும் ரஷ்ய கடற்படை கப்பல்கள் இணைந்து இந்தியப் பெருங்கடலில் தமது வான்வழி மற்றும் கடற் பிராந்திய பாதுகாப்பு பயிற்சியில் பங்குகொண்டன.

Chief Commander of Iran’s Army Navy Force Rear Admiral Shahram Irani

ஈரான் இராணுவ கடற்படை தலைமை தளபதி ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் ஈரானி சமீபத்தில் புதிய ஏவுகணை அமைப்புகள், நவீன ஆயுதங்கள் மற்றும் போர் கப்பல்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

புனித பாதுகாப்பு வாரத்தின் போது நாட்டின் வான், மண் மற்றும் கடல் பாதுகாப்பு உபகரணங்கள் சில ஈரானின் இராணுவ கடற்படையில் இணையும் என்று அவர் கூறினார்.

புனித பாதுகாப்பு வாரத்தில் சில புதிய ஏவுகணை அமைப்புகள் வெளியிடப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Commander of Iran’s Army Air Defense Force Brigadier General Alireza Sabahifard

சமீபத்தில், ஈரானின் இராணுவ விமான பாதுகாப்பு படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலிரெஸா சபாஹிஃபார்ட், உள்நாட்டு தயாயாரிப்பான 300 கி.மீ.  சென்று தாக்கக்கூடிய Bavar-373 விமான பாதுகாப்பு அமைப்பின் இறுதி சோதனை அடுத்த சில நாட்களில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

Bavar 373 வான் பாதுகாப்பு விமானம் தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் நிபுணத்துவமும் நாட்டினுள் பூர்வீகமாக இருக்கின்றன, என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Commander of Iran’s Islamic Revolution Guards Corps (IRGC) Navy Rear Admiral Alireza Tangsiri

மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சியின் (ஐ.ஆர்.ஜி.சி) கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலிரெஸா தங்சிறி (Alireza Tangsiri),  ஐ.ஆர்.ஜி.சி கடற்படை படைகள் ஆண்டு இறுதி வரை பல்வேறு காலங்களில் பல்வேறு இராணுவ சாதனைகளை வெளியிடும் என்று கூறினார்.

ஆக்கம்: Amin Mohammadzadegan Khoyi

தமிழில்: தாஹா முஸம்மில் 

https://en.mehrnews.com/news/191448/Iran-s-deterrence-power-thanks-to-remarkable-defense-advances

 

 

No comments:

Post a Comment