Waiting for Others to Solve Problems Harmful
இஸ்லாமியப் புரட்சியின்
தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி செவ்வாயன்று,
ஜனாதிபதி செய்யத் இப்ராஹீம் ரயீஸி மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்களை சந்தித்து உரையாற்றுகையில்
உள்நாட்டு உற்பத்தியை பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக விவரித்தார், உள்நாட்டு உற்பத்திக்கு ஏதேனும் தடையாக இருந்தால் அதை
அகற்ற நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.
ஆயதுல்லா காமனெய் ஜனாதிபதி
இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்தித்து, பொருளாதாரமே நாட்டின் முதன்மையான முன்னுரிமை என்று கூறினார், இருப்பினும் (இதனால் ஏற்படக்கூடிய) அறிவியல், பாதுகாப்பு அல்லது சமூக மற்றும் கலாச்சார பாதிப்புகள்
போன்ற பிற அம்சங்களை புறக்கணிக்கக்கூடாது, என்றும் அறிவுறுத்தினார்.
பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, தனிநபர் வருமான வளர்ச்சி மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை
குறைத்தல் போன்ற முக்கிய பொருளாதார குறியீடுகளை "கவனமாக மற்றும் தொடர்ந்து"
கண்காணிக்குமாறு தலைவர் அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்தார்.
விவசாய உற்பத்தியின்
முக்கியத்துவத்தை தலைவர் சுட்டிக்காட்டினார்,
உக்ரைனில் இடம்பெறும் போரை அடுத்து (உலகின்) உணவு நெருக்கடியை மேற்கோள் காட்டி, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் கோதுமை போன்ற அடிப்படை தேவைகளின் உற்பத்தியில்
தன்னிறைவு தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
"இன்று உலகின் ஒரு மூலையில் போர் ஒன்று நடந்துகொண்டு
இருக்கிறது மற்றும் உணவுப் பாதுகாப்பு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. கோதுமை, மக்காச்சோளம்,
கால்நடை தீவனம் போன்றவற்றில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
வலியுறுத்தி வந்தோம். ஈரானில் சிலர் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். ஆயினும், இது (சுய தேவையில் தன்னிறைவு)
எவ்வளவு முக்கியமானது என்பது இன்று உலகில் உள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.”
ஆயதுல்லா காமனெய் வீட்டுவசதியை
சுட்டிக்காட்டி, வீட்டு நிர்மாண துறையில்
உள்ள தளர்ச்சியானது வாடகை அதிகரிப்புக்கும் வீட்டு விலை அதிகரிப்புக்கும் காரணமாக அமைத்துள்ளது என்றும் இதனால் பலர் கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். என்றும் கூறி, இதில் முக்கிய கவனம்
செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பாரிய இயற்கை
மற்றும் மனித வளங்கள் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முயற்சிகளை தலைவர் வலியுறுத்தினார்.
பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு
நிலையங்களை நிர்மாணித்தல், சுரங்கத் தொழில்களில்
மதிப்பு கூட்டுதல் சங்கிலியை நிறைவு செய்தல் மற்றும் மூலப்பொருட்களின் விற்பனையைத்
தடுப்பது, இன்னும் முக்கியமான வடக்கு-தெற்கு
மற்றும் கிழக்கு-மேற்கு வழித்தடங்களை முன்னேற்றுவதன் அவசியத்தை தலைவர் எடுத்துரைத்தார்.
சர்வதேச போக்குவரத்துக்கான திறன், மற்றும் கடல்களில் கிடைக்கும்
இணையற்ற வளங்கள் ஊடாக வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் போன்ற அம்சங்களையும் தலைவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்
நிர்வாகத்தின் வெற்றிகளில் நீதியை நிலைநாட்டல்,
ஆடம்பரத்தைத் தவிர்த்தல், ஒடுக்கப்பட்டவர்களை ஆதரித்தல்
மற்றும் திமிர்பிடித்த சக்திகளை எதிர்த்தல் போன்ற இஸ்லாமியப் புரட்சி மற்றும் இஸ்லாத்தின்
முழக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததுள்ளதானது முக்கியமானது என்று இஸ்லாமிய புரட்சியின்
தலைவர் ஆயதல்லா காமனெய் கூறினார்.
"புதிய நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்று, நம்மைப் பற்றி வெளியில் உள்ள மற்றவர்கள் என்ன முடிவு
செய்வார்கள் என்பதை தொடர்ந்து எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கும் சமூகத்தின் நிலையை
நீக்கியுள்ளது. ஆகவே, இந்த நிர்வாகம் உள்நாட்டு
திறன்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றில் செயல்பட்டு
வருகிறது,'' என்றார்.
ஆயத்துல்லா காமனெய் மேலும்
தனதுரையில் “சிலர் எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு 'குறிப்பிட்ட' நாட்டுடன் கண்டிப்பாக
உறவு வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் இவ்வாறு செய்வது நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் செயலாகும். நாட்டின்
பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிறர் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்காக காத்திருப்பது
தவறான அணுகுமுறையாகும் என்று வலியுறுத்தி கூறினார்.
https://kayhan.ir/en/news/106367/waiting-for-others-to-solve-problems-harmful
No comments:
Post a Comment